அத்தியாயம் 10
ஒரு வாரம் கழித்து தன் விழியிடம் இருந்து வந்த கொரியரை கையில் வைத்திருந்தவனுக்கோ சந்தோஷம் தாளவில்லை.
அதில் அவள் குறிப்பிட்ட வாக்கியங்களைத் தடவி பார்த்தவன்,
“ இல்ல விழி உன் மேல கோபம் எல்லாம் இல்ல தினமும் வந்த கொரியர் இன்னைக்கு ஏன் வரலைன்னு தான் அன்னைக்கு ரொம்ப கவலை பட்டேன். ஆனா தொடர்ந்து இந்த ஒரு வாரமும் உன் கிட்ட இருந்து எந்த கொரியரும் வரலை. அப்போதான் நான் எந்த அளவுக்கு உன்னை நினைச்சுகிட்டு இருக்கேன்னு புரிஞ்சுது சீக்கிரம் என் கண்ணு முன்னாடி வா விழி.
நான் இன்னும் இங்க எத்தனை நாள் இருப்பேன்னு கூட தெரியாது சோ ப்ளீஸ் சீக்கிரமே என்கிட்ட வந்துரு அப்படியே உன்ன தூக்கிட்டு போயிடுவேன்” என்று கூறிக் கொண்டவன் அந்த வரைபடத்தை விழியாக நினைத்தவன் தலைக்கு மேலே பிடித்து தன் முகத்தோடு அழுத்தி நச்சு என்று இச்சிட்டான் விஹான்.
வெளியே செல்ல தன்னுடைய இருசக்கர வாகனத்தில் வந்த லல்லுவோ விஹானை பார்த்தவள்,
“என்ன விஹான் ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க போல என்ன விஷயம்” என்று கேட்டாள்.
அவனோ அவளைப் பார்த்து,
“ ஆமா லாலி ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன்” அதைக் கேட்ட அவளின் முகத்திலும் புன்னகை அரும்ப,
“ ஹப்பா அப்படியே உங்க முகம் ஜொலிக்குது என்ன விசயம் என்கிட்ட சொல்லலாம்னா சொல்லுங்க இல்லனா வேண்டாம்” என்று விட்டாள் லல்லு.
அதற்கு லேசாக புன்னகைத்தவன்,
“ சாரி லாலி இது என்னோட பர்சனல்” என்றான்.
அவளும் மேற்கொண்டு அவனிடம் எதுவும் பேசவில்லை.
“ஓஓ இட்ஸ் ஓகே நீங்க ஹேப்பியா இருக்கீங்கள்ள அது போதும் சரி ஓகே விஹான் எனக்கு டைம் ஆச்சு நான் கிளம்புறேன் நீங்க என்ஜாய் பண்ணுங்க பாய்” என்று அவ்விடம் விட்டு கிளம்பினாள்.
அப்பொழுது அவனுடைய அப்பா அவனுக்கு அழைப்பு எடுத்தார்.
சந்தோஷ மனநிலையில் இருந்த விஹானோ தன்னுடைய மொபைலை எடுத்து தந்தையை வீடியோ காலில் கண்டவன்,
“ டாட்” என்று கத்தி அழைக்க அங்கு விக்ரமோ அவனுடைய இந்த கத்தலில் சற்று திடுக்கிட்டவர் அவனுடைய முகத்தைப் பார்க்க அவனுடைய மகிழ்ச்சி இவரையும் தொற்றிக் கொண்டது.
“ வாட் மை சன் டுடே ரொம்ப ஹாப்பியா இருக்க போல என்ன விஷயம்” என்று கேட்க அவனும் வெட்கப்பட்டவன் தன்னுடைய முகத்தை மறைக்க அவருக்கே புரிந்து விட்டது.
தன் மகன் தன்னை போலவே அந்த குடும்பத்து பெண்ணிடம் தலைக் குப்புற விழுந்து விட்டான் என்று.
அதனால் மேற்கொண்டு அவனிடம் எதுவும் கேட்கவில்லை.
ஆனால் அவனை வம்பு இழுக்க எண்ணினார் விக்ரம்.
“ ஓகே மை சன் நீ உடனே கிளம்பி இங்க வா நான் வந்து உங்க அம்மா கூட இருக்கேன் என்னால அவ இல்லாமல் இருக்க முடியல” என்று சொல்ல விஹானோ அவர் எப்படி சொல்லவும்,
“ டாட்” என்று அதிர்ச்சியாகினான்.
விக்ரமிடமிருந்து இப்படி ஒரு வார்த்தையை அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
பேய் அறைந்தார் போல மாறிய அவனுடைய முகத்தைக் கண்ட விக்ரமோ சத்தமாக சிரித்தார்.
அதன் பிறகுதான் அவர் தன்னை கிண்டல் செய்கிறார் என்று புரிந்து கொண்டான் விஹான்.
பின்பு தன்னுடைய காதல் கதையை தன் தந்தையிடம் பகிர்ந்து கொண்டான்.
அதைக் கேட்ட விக்ரமோ சற்று அதிர்ச்சி கலந்த ஆச்சரியம் அவர் முகத்தில் தென்பட்டது.
“ என்ன டேட் யோசிக்கிறீங்க”
“ இல்ல விஹான் உன் முகத்தை பார்த்ததும் நீ காதல்ல விழுந்துட்டேன்னு நினைச்சேன் அதுவும் அந்த வீட்டு பொண்ணுங்க யாரு மேலையோ லவ் வந்துட்டுன்னு நினைச்சேன் ஆனா இப்படி யாருன்னே தெரியாத ஒரு பொண்ணு மேல காதல் வந்துருக்கும்னு நான் நினைச்சு கூட பார்க்கல டா”
“ நானே எதிர்பார்க்கலை டாட் என் விழி என்ன இப்படி மாத்திட்டா”
“ சரி விஹான் அந்த பொண்ணை எப்படி கண்டுபிடிக்க போற” என்றார் விக்ரம்.
“ டாட் எனக்கு ஒருத்தர் மேல டவுட் இருக்கு அது மட்டும் கன்ஃபார்ம் ஆச்சுன்னா சொல்றேன்”
“ யாரு அந்த வீட்டு பொண்ணா இல்ல வேற யாருமா”
“ ஆமா டாட் இந்த வீட்டு பொண்ணு மேல தான் எனக்கு டவுட் ஆனா இன்னும் கன்ஃபார்ம் ஆகல”
“ இது உன் அம்மாவுக்குத் தெரியுமா”
“இல்ல டாட் அம்மாவுக்குத் தெரியாது”
“ இந்த விஷயம் அவளுக்குத் தெரிஞ்சா ரொம்ப சந்தோஷப்படுவாடா”
“ என்ன டாட் நானே இன்னும் விழி யாருன்னு தெரியாம இருக்கேன் இந்த நேரத்துல அம்மா கிட்ட எப்படி சொல்ல முடியும்.
அதோட உங்க பொண்டாட்டி இங்க வந்த பிறகு என்ன எங்க கவனிக்கிறாங்க ஆனா நம்ம கூட என்னதான் அவங்க இத்தனை வருஷம் சந்தோஷமா இருந்தாலும் அவங்க குடும்பத்தை பிரிஞ்ச ஏக்கம் ரொம்ப அதிகமாவே இருந்து இருக்கு டாட்” என்று விஹான் சொல்ல விக்ரமோ ஆமோதிப்பதாக தலை ஆட்டினார்.
இப்படியே தந்தையும் மகனும் சிறிது நேரம் உரையாடிவிட்டு விஹான் வீட்டின் உள்ளே வர அப்பொழுது மீனுவோ தன்னுடைய கையில் புக்கை வைத்துக்கொண்டு அதில் எதையோ தேடிக் கொண்டு வந்ததால் எதிரே வந்த விஹானை பார்க்காமல் அவன் மீது மோதி விட்டாள்.
அவள் மோதிய வேகத்தில் விஹானின் கையல் இருந்த அந்த வரைபடமோ கீழே விழ போக சட்டென சுதாரித்தவன் அதை இறுக்கமாக பிடித்துக் கொண்டு மீனுவை கோபமாக ஏறிட்டான்.
அவளோ எப்பொழுதும் போல அவனை பார்த்ததும் பதட்டபட்டவள் அவனிடம் சாரி சொல்வதற்காக வாயைத் திறக்க போக விகானோ தன்னுடைய கையை அவளுடைய வாயின் மேல் பதித்தவன்,
போதும் நிப்பாட்டு இப்ப என்ன சொல்ல போற சாரி மன்னிச்சிடுங்க தெரியாம பண்ணிட்டேன் இதைத் தானே சொல்ல போற வேண்டாம்மா தாயே நீ எதுவும் சொல்ல வேண்டாம் நான் தான் தெரியாம உன் மேல வந்து மோதிட்டேன் நானே உன்கிட்ட சாரி சொல்லிக்கிறேன் போதுமா” என்றவன் தன்னுடைய சந்தோஷ மனநிலையை கெடுக்க விரும்பாமல் அவளிடம் இருந்து விலகிச் சென்று விட்டான்.
ஆனால் இங்கு பாவப்பட்ட ஜீவன் மீனுவோ அவனுடைய கை அவளுடைய வாயின் மேல் பதியவும் கரண்ட் ஷாக் அடித்தது போல அப்படியே நின்று விட்டாள்.
சும்மாவே அவன் முன்னால் அவளுக்கு பேச்சு வராது.
அவனுடைய இந்த செய்கையில் இன்னும் சற்று நேரம் அவன் இங்கே இருந்திருந்தால் அவளுக்கு மூச்சு நின்றிருக்குமோ என்னவோ.
அவன் அவளை விட்டு கடந்ததும் பெருமொச்சொன்று வெளியேற்றியவளுக்கோ கண்கள் கலங்க ஆரம்பித்தன.
அவனை எப்போது பார்த்தாலும் அவளுக்குள் உண்டாகும் இந்த தடுமாற்றத்தை நினைத்தவளுக்கோ கண்ணீர் கசிந்தன.
‘ ஏன் எதனால் என்னால் அவரிடம் நார்மலாக இருக்க முடியவில்லை.
இப்படியே இருந்தாள் என்னுடைய காதலை அவரிடம் நான் எப்படி கூறுவது.
அவர் இங்கு வந்து எத்தனை நாட்கள் ஆகிறது? ஆனாலும் என்னால் அவரிடம் கொஞ்சம் கூட நெருங்கவே முடியவில்லை’ என்று நினைத்து வருந்தியவளுக்கோ என்ன செய்வது என்று தெரியவில்லை.
மீனுவின் இந்த சொல்லாத காதல் வஹானுக்கு தெரிய வருமா பார்ப்போம்.
இங்கே மீனுவிடமிருந்து தன்னுடைய அறைக்கு வந்த விஹானோ விழியே எவ்வாறு கண்டுபிடிப்பது என்று யோசித்தவனுக்கு சட்டென ஒரு ஐடியா வந்தது.
லல்லுவின் அறைக்குச் சென்று பார்த்தல் ஏதாவது குழு கிடைக்குமா என்று நினைத்தவன் யாருக்கும் தெரியாமல் லல்லுவின் அறைக்கு போக அதுவோ திறக்க மாட்டேன் என்று அடம் பிடித்து.
தன்னுடைய காலை தூக்கி அந்தக் கதவில் ஒரு உதை உதைத்தவன்,
“ ச்சை இப்படி முதல் ஐடியாவே ஃப்ளாப் ஆகிட்டே” என்றவன் திரும்ப தன்னுடைய அறைக்குச் சென்று விட்டான்.
அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்தான் விஹான்.
கொரியர் காரரிடம் விசாரிக்கலாமா என்று யோசித்தவன்,
“ ஹான் அதுதான் சரி இதுல அவள பத்தின எந்த ஒரு அட்ரஸும் இல்ல அவர் கிட்ட கேட்கலாம்.
அட ச்ச இத நான் வந்த ரெண்டு மூணு நாள்லயே அவர்கிட்ட கேட்டிருந்தா எப்பவோ கண்டுபிடிச்சி இருக்கலாம் ஆனா எனக்கு ஏன் இது தோணாம போச்சு.
இதுல நான் ஒரு பெரிய பிசினஸ் மேன் வேற.
ஒரு சின்ன குழு இதைக் கூட என்னால கண்டுபிடிக்க முடியல. அது சரி எவ்வளவு பெரிய பிசினஸ்மேனா இருந்தாலும் காதல்னு வரும்போது எல்லாரும் முட்டாள் ஆகிறதுல தப்பே இல்ல.
சரி இப்பவாவது தோணுச்சே ஐயோ இதுக்கும் நான் நாளைக்கு வரைக்கும் வெயிட் பண்ணனும்.
ஓகே இத்தனை நாள் வெயிட் பண்ணிட்டோம் இன்னும் ஒரு நாள் தானே வெயிட் பண்றேன் என்னோட விழிய கண்டுபிடிக்கிறேன்.”
மாயக்காரி விஹானிடம் சிக்குவளா ?