அத்தியாயம் 11
விழியை எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டும் என்று முடிவோடு இருந்த விஹானோ மறுநாள் வரும் கொரியர் காரரை காண்பதற்காக மிகுந்த ஆவலோடு காத்திருந்தான் அவரிடம் அவளைப் பற்றி விசாரிப்பதற்கு.
அவன் எதிர்பார்த்தது போலவே மறுநாளும் வந்தது. அந்த கொரியர் காரரும் வந்தார்.
அவரைப் பார்த்ததும் அவருடைய அருகில் வந்த விஹானோ,
“ சீக்கிரம் குடுங்க” என்று கையை நீட்ட அந்த கொரியர் காரரும் அவனுக்கென வந்த கொரியரை அவனுடைய கையில் கொடுத்துவிட்டு புன்னகைத்து விட்டு அவ்விடம் விட்டு அகல எத்தனிக்க, அவனோ அவரைத் தடுத்து நிறுத்தியவன்,
“ சார் இந்த கொரியர் எங்கிருந்து வருதுன்னு உங்களுக்குத் தெரியுமா ?” என்று கேட்க அவரோ,
“ தம்பி இது இந்த ஊர்ல இருந்து தான் வருது பா ஆனா எங்க இருந்துன்னு எனக்குத் தெரியாது.
நீங்க வேணும்னா கொரியர் ஆபீஸ்ல போய் கேளுங்க” என்று கூறினார்.
அதற்கு அவனும்,
“ சர் ஆபீஸ் எங்க இருக்குன்னு சொல்லுங்க நானே போய் பாத்துக்கிறேன்” என்றவன் அவரிடம் அட்ரசை வாங்கிக் கொண்டு உடனே அங்கு கிளம்பினான்.
அப்பொழுது இத்தனை நாள் அவனிடம் பேச முடியாது தவித்த மீனுவோ அப்பொழுதுதான் அவனிடம் பேச வேண்டும் என்று அவனை அழைக்க,
விஹானோ அவளுடைய அழைப்பில் நின்றவன் பொறுமையின்றி அவளிடம் என்ன என்று கேட்க அவளோ,
“அ அத் அத்தான் நான் உங்ககிட்ட” என்று நாக்கு தந்தி அடிக்க கூற வந்தவளை, இவள் இப்போதைக்கு நம்மிடம் சொல்ல மாட்டாள் என்று நினைத்தவன்,
“ மீனா இங்க பாரு எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு நான் உடனே கிளம்பி ஆகணும் நான் வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம் உன்கிட்ட என்னனு கேட்கிறேன் சரியா” என்று உடனே கிளம்பி விட்டான்.
மீனுவுக்கோ அவள் மீதே அளவு கடந்த கோபம் வந்தது.
தன்னால் இந்த ஜென்மத்தில் அவனிடம் தன் காதலை கூற முடியாதோ என்ற யோசனையே வந்து விட்டது அவளுக்கு.
ஆனால் பாவம் அவளும் என்னதான் செய்வாள்.
எவ்வளவோ முயன்று அவனிடம் இன்று சொல்லிவிடலாம் என்று ஆசையாக வந்தவள் வழக்கம் போல அவன் முன் பேச்சு வராமல் திணற அவனோ நிக்க கூட நேரம் இல்லாமல் சென்று விட்டான்.
இங்கு கொரியர் ஆபீசுக்கு வந்த விஹானோ அவள் அனுப்பிய கொரியரை அங்கு உள்ள அதிகாரியிடம் காட்டியவன்,
“ இந்த கொரியர் எங்கிருந்து அனுப்பி இருக்காங்கன்னு சொல்றீங்களா” என்று கேட்டான்.
அவரோ அதை வாங்கி பார்த்தவர்,
“ சார் இதை ஒரு பொண்ணு தான் கொண்டு வந்து கொடுத்துட்டு போனாங்க கொஞ்ச நேரம் தான் இருக்கும்” என்று சொல்ல இவனுடைய கண்களோ மின்னின.
அவரிடம்,
“ அந்த பொண்ணு எப்படி இருப்பாங்க ஏதாவது சொல்லுங்க” என்று கேட்க,
“ அய்யோ சார் அந்த பொண்ணோட முகம் ஞாபகம் இல்ல சார் ஆனா அந்த பொண்ணு எல்லோ கலர் துப்பட்டா போட்டு இருந்துச்சு இப்போ போய் ஒரு பத்து நிமிஷம் தான் இருக்கும் நீங்க வேணா இந்த இடத்தை சுத்தி கொஞ்சம் தேடி பாருங்க ஒரு வேளை உங்களுடைய லக்கி டைம் அவங்க இங்க இருந்தாலும் இருக்கலாம்” என்று சொல்ல இவனும்,
“ஹான் ஓகே சார்” என்றவன் நொடியும் வீணாக்காமல் உடனே அந்த இடத்தை விட்டு அகன்றவன் அங்கு சுற்றி இருக்கும் இடங்களில் அந்த எல்லோ கலர் துப்பட்டாவை அணிந்த பெண்ணை வலைவீசி தேடாத குறை தான்.
அவனுடைய கண்களோ அங்கு இருக்கும் அனைத்து பெண்களையும் பார்த்துக் கொண்டிருந்தன.
அவன் தேடிய அந்த எல்லோ துப்பட்டாவோ அவனுடைய கண்களில் சிக்கவே இல்லை.
பொறுமை இழந்த விஹானோ,
“ச்சை என்னடா இது? எங்க தேடியும் காணோம் ஏன் விழி இப்படி பண்ற நா எப்படிடி உன்னை கண்டுபிடிக்க போறேன் கொல்றடி ராச்சசி” என்று கண்களை மூடி தன்னை ஒரு நிலை படுத்த, அங்கு தூரத்தில் இருந்து கேட்கும் இருசக்கர வாகனத்தின் ஹாரன் சத்தம் இவன் காதில் கேட்க,
சட்டென கண்களைத் திறந்தவன் விழிகளிலோ வந்து விழுந்தாள் அந்த மஞ்சள் நிற துப்பட்டாவின் சொந்தக்காரி.
இவனுக்கோ அவளைப் பார்த்ததும் கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை.
இன்ப அதிர்ச்சியில் சற்று நிமிடம் உரைந்து நின்று விட்டான்.
தன்னுடைய விழியை கண்டு விட்டான் அவன்.
வானத்தையே வளைத்தது போல இருந்தது அவனுக்கு.
அங்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த அந்தப் பெண்ணின் முகம் கொஞ்சம் கொஞ்சமாக இவனுக்கு தெரிய வர இவனுடைய முகமோ கொஞ்சம் கொஞ்சமாக மலர ஆரம்பித்தது.
ஏனென்றால் அந்த மஞ்சள் நிற துப்பட்டா அணிந்த பெண் வேறு யாரும் இல்லை லல்லுவேதான்.
தனக்கு இத்தனை நாட்களாக மறைந்திருந்து கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிய விழி லல்லுவா..
அவனுடைய சந்தேகம் ஊர்ஜிதம் ஆகியது.
“ லாலி நீ தானா அந்த விழி. நீ தானா என்ன இத்தனை நாள் ஏங்க வச்ச விழி நீதானா லாலி கூடவே இருந்து என்ன இன்ச் பை இன்ச் ரசித்திருக்க ஆனா ஒரு வார்த்தை என்கிட்ட சொல்லாம மறைச்சிட்டல்ல ஆனா பாத்தியா எப்படியோ அந்த விழி நீதான்னு கண்டுபிடிச்சிட்டேன். என்கிட்டயே ஆட்டம் காட்டுகிறாயா நீ? பார்த்துக்கிறேன்” என்றவன் சந்தோஷ மனநிலையோடு வீட்டிற்கு வந்தான்.
உடனே தன் தந்தைக்கு அழைப்பு எடுத்தவன்,
“ டாட் என்னோட சந்தேகம் கன்பார்ம் ஆகிட்டு டாட் அவள் தான் அது அவளே தான் டாட் நான் கண்டுபிடிச்சிட்டேன் என்னோட விழிய கண்டுபிடிச்சிட்டேன். யார் தெரியுமா அம்மாவோட அண்ணனோட இரண்டாவது பொண்ணு லாலி அவ தான் என் விழி” என்று சந்தோஷமாக தன் தந்தையிடம் கூறினான்.
அவரோ மகனுடைய சந்தோஷத்தில் பூரிப்படைந்தவர்,
“ குட்லக் மை சன் நீ எப்பவும் சந்தோஷமா இருக்கணும் அதுதான் இந்த அப்பாவுக்கு வேணும்” என்றவர் வைத்துவிட்டார்.
அப்பொழுது அவனுடைய அறைக் கதவு தட்டப்பட்டது.
“ யாரு உள்ள வாங்க” அவன் அனுமதி தரவும் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்த மீனுவோ அவன் முன்னே வந்தவள்,
எதுவும் சொல்லாமல் தன் கையில் வைத்திருந்த சோளத்தை அவனிடம் கொடுக்க அவனோ,
“ இல்ல மீனா எனக்கு இன்னைக்கு இது வேண்டாம் இதைவிட ஒரு பெரிய ஹேப்பினஸ் எனக்கு இன்னைக்கு கிடைச்சிருக்கு சோ நான் ரொம்ப ஹேப்பியா இருக்கேன் நீ கொண்டு போ”
என்றான்.
மீனுவின் முகமோ சட்டென வாடியது.
இத்தனை நாட்களாக விஹான் ஆசையாக அன்று கேட்டதிலிருந்து மீனு தினமும் மக்காச்சோளம் கொண்டு வந்து கொடுப்பாள்.
ஆனால் இன்று அவன் வேண்டாம் என்று சொன்னது அவளை மிகவும் தாக்கியது.
பொதுவாக அனைவரும் சந்தோஷமாக இருக்கும் பொழுது தனக்கு பிடித்த பொருளை வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள்.
ஆனால் இவன் என்ன ரகமோ சோகத்தில் இருக்கும்போது கூட வேண்டாம் என்று கூறியது இல்லை.
சந்தோஷத்தில் இருக்கும் போது வேண்டாம் என்று கூறுபவனை என்ன சொல்வது.
இப்படியே அன்றைய நாள் கழிய விஹான் லாலி எப்போது வருவாள் எப்போது அவளைக் காணலாம் என்று ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தான்.
லல்லுவோ அன்றைய இரவு வெகு நேரத்திற்கு பிறகு தான் வீட்டிற்கு வந்தாள்.
வெகு நேரம் வேலை செய்ததன் காரணமாக மிகுந்த டயர்டாக வந்தவள் வண்டியின் கீயையும் அவளுடைய ஹேண்ட் பேக்கையும் அங்கு உள்ள சோபாவில் போட்டுவிட்டு அப்படியே சற்று நேரம் அதில் அமர, அப்பொழுது அவளின் முன்னே டீ கப்பை நீட்டியவாறு வந்து நின்றான் விஹான்.
இந்த இரவு நேரத்தில் இப்படி ஒரு கோணத்தில் விஹானை பார்த்தவளுக்கோ அதிர்ச்சியாக இருந்தது.
ஆனாலும் அவளுக்கு இந்த நேரம் அந்த டீ தேவையாக இருந்தது.
அதனால் எதைப் பற்றியும் யோசிக்காமல் அவனுக்கு நன்றி கூறியவள் அந்த டீயை வாங்கி பருக ஆரம்பித்தாள்.
அவனோ அவள் டீ குடிக்கும் அழகை பார்த்தவாறே அவள் அருகில் அமர்ந்து அவளையே விடாமல் பார்த்து ரசித்து கொண்டிருந்தான்.
இன்ச் பை இன்ச்சாக தலை முதல் கால் வரை அவளைத் தன் கண்களால் வருடிக் கொண்டிருந்தான் விஹான்.
லல்லுவோ அவன் கொடுத்த டீயை பருகியவள் அப்பொழுதுதான் நிமிர்ந்து விஹானைப் பார்த்தாள்.
அவள் எப்போது தன்னை பார்ப்பாள் என்று ஆசையாக பார்த்துக் கொண்டிருந்த விஹானோ அவள் பார்த்ததும் தன்னுடைய இரு புருவங்களையும் மேலே உயர்த்தினான்.
இவளோ விஹான் ஏன் இன்று வித்தியாசமாக நடந்து கொள்கிறார் என்று புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
உடனே விஹான் அவளுடைய கையைப் பிடித்தவன்,
“ லாலி நாளைக்கு நீ ஃப்ரீயா”
என்று கேட்க அவளோ சற்று திடுக்கிட்டவள்,
“ ஏன் எதுக்கு கேட்கிறிங்க விஹான்” என்றாள்.
“ இல்ல நீ நாளைக்கு ஃப்ரீயா இருந்தா என்கூட கொஞ்சம் வெளிய வரியா உன்கிட்ட கொஞ்சம் பேசணும்”
என்றான் விஹான்.
லல்லுவோ விஹான் தன்னிடம் என்ன பேச போகிறார் என்று யோசித்தவள் அதை அவனிடம் காட்டிக் கொள்ளாமல்,
“ ஓகே விஹான் நாளைக்கு இயர்லி மார்னிங் நான் கொஞ்சம் பிஸி ஒரு பத்து மணிக்கு மேல நான் ப்ரீயா தான் இருப்பேன் நான் உங்களுக்கு இன்பார்ம் பண்றேன் அதுக்கு அப்புறம் போகலாம் ஓகேவா” என்றாள் லல்லு.
“ம்ம் ஓகே எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல போகலாம் நீ உன்னோட வேலை முடிஞ்சதும் எனக்கு இன்பார்ம் பண்ணிடு நானே வந்து உன்னை பிக்கப் பண்ணிக்கிறேன்” என்றான் விஹான்.
அவனுடையக் கூற்றில் ஆச்சரியமாக அவனைப் பார்த்தவள்,
“ என்ன விஹான் சொல்றீங்க நீங்க என்ன பிக்கப் பண்ண வரிங்களா உங்களுக்கு இங்க இடங்கள் எல்லாம் தெரியுமா?” என்று ஆச்சரியமாக கேட்டாள்.
அவனோ, “ யா எனக்கு கொஞ்சம் கொஞ்சம் தெரியும் அப்புறம் இருக்கவே இருக்கு google மேப் வேறென்ன வேணும் இல்லைன்னா உனக்கு போன் பண்ணா நீ எனக்கு சொல்ல மாட்டியா லாலி. ஓ செட் என்கிட்ட தான் உன் நம்பர் இல்லையே உன்னோட நம்பர் தரியா” என்று அவளிடம் நம்பரை கேட்டான்.
அவளும் தன்னுடைய மொபைல் நம்பரை அவனுக்கு கொடுக்க அவனும் அவனுடைய நம்பரை அவளுக்கு கொடுத்தான்.
“ சரி ஓகே விஹான் எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு நான் போய் ரெஸ்ட் எடுக்கிறேன் நாம நாளைக்கு பார்க்கலாம்” என்று தன் அறைக்கு சென்று விட்டாள்.
இங்கு விஹானுக்கோ சொல்லவே வேண்டாம்.
நாளைக்கு அவளிடம் எப்படி ப்ரபோஸ் செய்வது என்று சிந்திக்க தொடங்கினான்.