அத்தியாயம் 16
“இப்பதாம்மா ஆஃபிஸுக்கு வந்தேன் அதுக்குள்ள போன் பண்ற கொஞ்ச நேரம் கழிச்சு நானே உனக்கு போன் பண்றேன்” என்ற தன் மனைவியுடன் போனில் உரையாடியவாறு உள்ளே வந்தார் அந்த கொரியர் மேனேஜர்.
தன் எதிர்பட்ட சுந்தரத்திடம் தலையாட்டி விட்டு உள்ளே வந்தவர் கையொப்பம் இடுவதற்கு ரிஜிஸ்டரை எடுக்க அதுவோ அவருடைய கை நழுவி கீழே விழுந்தது.
“ என்னடா இது இன்னைக்கு காலையில இருந்து ஒரே அபசகுனமா இருக்கு”
என்று சலித்தவாறே கீழே குனிந்தவர் அந்த ரெஜிஸ்டரை எடுக்க அந்த ரிஜிஸ்டர் உடன் ஒரு கொரியர் கவரும் அவருடைய கையில் சிக்கியது.
அதை என்ன என்று எடுத்து பார்த்தவரோ,
“ இது அந்த பொண்ணு கொண்டு வந்து கொடுக்கிற கொரியர் ஆச்சே” என்று யோசித்தவர் அங்கு தன்னுடைய வண்டியை எடுத்து கொண்டிருந்த சுந்தரத்தை அழைத்தார்.
மேனேஜர் அழைக்கவும் உள்ளே வந்த சுந்தரமும் அவரிடம் என்ன என்று கேட்க, அதற்கு அவரோ,
“ சுந்தரம் இது அந்த பொண்ணு கொண்டு வந்து கொடுக்கிற கொரியர் இது ஏன் இன்னும் இங்கேயே இருக்க டேட்ட பார்த்தா 15 நாளைக்கு முன்னாடி இருந்த மாதிரி இருக்கு” என்று சொல்ல, அதற்கு சுந்தரமோ,
“ ஆமா சார் நீங்க சொல்றது கரெக்ட் தான் நான் இந்த போஸ்ட் வந்த உடனே கொண்டு போய் கொடுக்கப் போனேன். ஆனா அவரு அங்க இல்ல வேற யார்கிட்டயும் கொடுக்கக் கூடாதுன்னு நான் திரும்பவும் இங்கேயே கொண்டு வந்து வச்சிட்டேன். ஆனா எனக்கே தெரியாம அது எப்படியோ இங்க மிஸ் ஆயிட்டு நானும் அடுத்த நாள் வந்து அதை தேடி பார்த்தேன் கிடைக்கல சார்” என்றார் சுந்தரம்.
“ என்ன சுந்தரம் இப்படி பொறுப்பில்லாம இருக்கீங்க இது தான் உங்களுக்கு லாஸ்ட் வார்னிங் இனி இப்படி ஒரு விஷயம் நடக்க கூடாது. புடிங்க உங்களுக்கு எந்த வேலை இருந்தாலும் முதல்ல இதை போய் நீங்க டெலிவரி பண்ணிட்டு தான் வேற இடத்துக்கு போகணும்” என்றார் மேனேஜர்.
சுந்தரமும் சரி என்று அந்த கொரியரை கையில் வாங்கி அவர் விஹானின் வீட்டை நோக்கி புறப்பட்டார்.
மும்பை செல்லும் தொடர் வண்டியில் ஜன்னல் ஓர இருக்கையில் மீன் போன்ற கண்களில் நீர் வழிய அதைத் துடைக்க கூட மனமின்றி ஜன்னல் கம்பிகளின் ஊடாகத் தெரிந்த இடங்களைப் பார்த்துக் கொண்டு வந்தாள் மீனா.
சுக்கு நூறாக உடைந்த தனது மனதை எப்படி சரி கட்ட போகிறோம் என்று தெரியவில்லை அவளுக்கு.
அவள் செல்லும் அந்த தொடர் வண்டியோ நேராக செல்லும் தண்டவாளத்தில் தன்னுடைய பயணத்தை மேற்கொள்ள இவளுக்கோ ஒரு நிமிடம் அந்த வண்டியில் இருந்து கீழே விழுந்து தன்னுடைய உயிரை விட்டுவிடலாமா என்று கூட எண்ணினாள் அந்த பேதையவள். அவளுக்கு ஒன்று மட்டும் புரியவில்லை. தான் அனுப்பிய வரைபடங்கள் அவனை சிறிதும் பாதிக்கவில்லையா? தன்னால் அவன் முன்னே நேரடியாகத் தான் தன்னுடைய காதலை கூற முடியவில்லை என்று நினைத்தவள் தன்னுடைய வரைபடங்கள் மூலமாக அவனுக்கு தூது அனுப்பலாம் என்று தான் அவனுக்கு வரைபடங்கள் அனுப்பினாள்.
ஆனால் அது கூட அவனிடத்தில் சிறிது ஒரு பாதிப்பை கூட ஏற்படுத்தவில்லையே என்று யோசித்தவளுக்கோ தன் மீதே வெறுப்பு தான் அதிகமாகியது.
கையில் அவனுடைய போட்டோவை வைத்துக் கொண்டு அவனுடைய முகத்தை தன்னுடைய கரங்களால் தடவியவாறே அவளுடைய விழி நீரில் அவனுடைய போட்டோவிற்கு அர்ச்சனை செய்து கொண்டிருந்தாள் மீனா.
இங்கே மீனுவின் அறையில் தன்னுடைய வரைபடங்களை பார்த்த விஹானோ பேரதிர்ச்சியாகி நின்றான். அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை.
தனக்கு வரைபடங்களை அனுப்பியது லல்லு என்று நினைத்து அவளை விடிந்தால் திருமணம் செய்யும் அளவிற்கு வந்து விட்டான்.
ஆனால் இப்பொழுது அவன் நேசித்த அந்த ஓவியக்காரி விழி லல்லு இல்லை மீனா என்று தெரிய வர அவனால் அந்த சமயம் மூச்சு கூட விட முடியவில்லை.
எங்கே தவறு நடந்தது.
தான் எங்கே பிழை விட்டோம் என்று யோசித்தான்.
ஆனால் அன்று அந்த கொரியர் காரர் சொன்ன அன்று அந்த மஞ்சள் துப்பட்டா லாலி தானே போட்டு இருந்தாள். அப்புறம் எப்படி இது மீனுவாக இருக்க முடியும் என்று யோசித்தவனுக்கோ விடை தான் கிடைத்த பாடில்லை.
ஒரு பக்கம் அந்த விழி எவ்வாறு லாலியாக மாறிப் போனாள். இன்னொரு பக்கம் விழி தான் மீனாவா என்று மாறி மாறி நினைத்தவனோ அப்படியே அந்த அறையில் அமர்ந்து விட்டான்.
எவ்வளவு நேரம் போனதோ தெரியவில்லை.
அனைத்தையும் பார்த்தவனுக்கோ தலை சுற்றிப் போனது.
இத்தனை காதலை வைத்துக் கொண்டு என்னிடம் எதற்காக நேரடியாக கூறாது விட்டாள்..?
ஒரு தடவையாவது ஒரே ஒரு தடவையாவது என்னிடம் அவளுடைய மனதில் இருக்கும் காதலைப் பற்றி கூறி இருந்திருக்கலாமே அப்படி கூறியிருந்தால் நான் இப்படி கை அறுந்த நிலையில் நிற்க வேண்டிய நிலைமை வந்தே இருக்காதே..
வெறும் ஓவியங்கள் மட்டும் காதலை சொல்லிவிட போதுமா..
அந்த காதலை தூது அனுப்பிய காரிகை யார் என்பது எனக்கு தெரிய வேண்டாமா..?
நான் எப்படி சிந்திக்காமல் திருமணம் வரை முடிவெடுத்து இருந்தேன். சூழ்நிலை என்னை மாற்றி புரிய வைத்து விட்டதா..
ஏண்டி ஏன் என்கிட்ட ஒரு தடவை கூட உன்னோட காதல நீ சொல்லவே இல்ல. என தவிப்பாக மனதிற்குள் கதறியவனுக்கோ விழிகளில் இருந்து கூட கண்ணீர் வழியத் தொடங்கி இருந்தது.
இரவு முழுவதும் அவனோ அந்த சிந்தனையிலேயே கழித்து விட்டான்.
அதிகாலை முகூர்த்தம் என்பதால் அனைவரும் எழும்பி திருமணத்துக்கு ஏற்பாடு செய்ய அந்த சத்தத்தில் விஹானோ திடுக்கிட்டு எழுந்தவன், ஒரு முடிவை எடுத்தவனாக நேராக லாலியை தேடி சென்றான்.
எதிர்ப்பட்ட யாரையும் கருத்தில் கொள்ளாமல் அங்கு மணப்பெண் அறையில் முழு அலங்காரத்துடன் இருந்த லாலியிடம் வந்தவன்,
“ எல்லாரும் கொஞ்சம் வெளியே போங்க நான் லாலிகிட்ட பேசணும்” என்று சொல்ல அங்கு உள்ள பெண்களோ புன்னகைத்தவர்கள்,
“ மாப்பிள்ளை அவசரத்தை பாருங்க” என்று மெதுவாக சொல்ல.
அதில் பத்மாவோ,
“ மாப்பிள்ளை இன்னும் கொஞ்ச நேரத்துல முகூர்த்தம் கொஞ்சம் காத்திருங்க அதுக்கப்புறம் நீங்க இவகிட்ட எவ்வளவு நேரம் வேணாலும் பேசலாம்” என்று நேரம் காலம் தெரியாமல் அவர் வேறு கேலி செய்ய,
இவனோ பல்லை நரகவென கடிப்பவன் சத்தமாக,
“ உங்க எல்லாரையும் வெளிய போங்கன்னு சொன்னேன் அது கேக்குதா இல்லையா” என்று கத்தினான்.
அந்த சத்தத்தில் அங்கு உள்ள அனைவரும் சற்று ஆடிப் போய் நிற்க வெளியே இருந்த அவனுடைய
மொத்த குடும்பமும் அங்கு வந்து நிற்க அவனுக்கோ எரிச்சலாக இருந்தது. ஆனாலும் அவன் அவனுடைய முடிவில் தெளிவாக இருந்தவன்,
“ உங்க எல்லாரையும் வெளிய போங்கன்னு சொன்னேன் திரும்பத் திரும்ப என்னை கத்த வைக்காதீங்க மரியாதையா எல்லாரும் போங்க” என்று காட்டுக்கத்தல் கத்த, லல்லுவை தவிர அனைவரும் வெளியே சென்றார்கள்.
உடனே கதவை தாழிட்டவன் அவளின் அருகே வந்து ஒரு பெருமூச்சை எடுத்து விட்டு தன்னை சமப்படுத்திக் கொண்டு அவளிடம் மிகப் பொறுமையாகவே கேட்டான்.
“லாலி உனக்கு ட்ராயிங் தெரியுமா?” என்று கேட்க அவளோ
“ஏன் விஹன் இப்போ இதை கேட்கிறீங்க” என்று கேட்க,
அவனோ,
“ லாலி ப்ளீஸ் உனக்கு தெரியுமா தெரியாதா அதை மட்டும் சொல்லு” என்றான் பல்லை கடித்துக் கொண்டு.
அவளோ,
“ கொஞ்சம் கொஞ்சம் தெரியும் விஹான் ஆனா ப்ரொபஷனலா ட்ராயிங் பண்ண எனக்கு தெரியாது” என்று சொன்னாள்.
“ சரி கொஞ்ச நாள் முன்னாடி நீ வண்டில போகும்போது ஒரு எல்லோ கலர் துப்பட்டா போட்டு இருந்தியே நீ ஏன் அன்னைக்கு போட்ட “ என்று கேட்க,
அவனுடைய இந்த அர்த்தம் மற்ற கேள்விகள் லல்லுவுக்கும் சற்று கோபம் துளிர்த்தது.
“ என்ன பைத்தியக்காரத்தனமா கேக்குறீங்க என்னைக்கு எப்போ அப்படியே நான் அந்த துப்பட்டா போட்டு இருந்தாலும் அதனால என்ன ஒரு துப்பட்டா போட்டது தப்பா” என்று கேட்க,
இவனோ அவளுடைய கோபத்தை பொருட்படுத்தாதவன் அன்றைய நாளை குறிப்பிட்டு சொல்ல,
அவளோ,
“ அதுவா அது அன்னைக்கு நானும் மீனுவும் மார்க்கெட்டுக்கு போனோம் மீனுதான் அவளை அங்க விட்டுட்டு போக சொன்னா அன்னைக்கு மீனு தான் எல்லோ சுடிதார் போட்டிருந்தா. அவளோட பேக்கை வண்டில வச்சிட்டு போயிட்டா அதை எடுத்து கொண்டு போய் அவகிட்ட கொடுக்கும் போது என்னோட ஹில்ஸ் தடுக்கிச்சு அப்போ கீழ விழ போகும்போது சப்போர்ட்டுக்காக அங்கு உள்ள கடை சுவர்ல சாய்ந்து நின்னேன். அப்போ அந்த சுவர்ல இருந்த ஆணியில என்னோட வலது பக்க சோல்டர் பக்கத்துல டிரஸ் கிழிஞ்சிருச்சு அதனால அவளோட துப்பட்டாவை என்கிட்ட கொடுத்தா” என்று சொன்னாள்.
இவனும் மீண்டும்,
“ சரி அன்னைக்கு நான் உனக்கு ப்ரொபோஸ் பண்ணும் போது ஐ லவ் யூ விழி என்று சொன்னேன் அன்னிக்கும் நீ ஏன் அமைதியா இருந்த” என்று இவன் கேட்க அதற்கு அவளோ,
“இதுல என்ன இருக்கு பொதுவா எல்லாரும் பிரண்ட்ஸா இருக்கட்டும் லவ்வர்ஸ் இருக்கட்டும் ஏன் கல்யாணம் பண்ண புருஷன் பொண்டாட்டி கூட இருக்கட்டும் எல்லாத்துக்கும் ஒரு செல்லப் பேரு வச்சிருப்பாங்க இல்ல அதே மாதிரி நீங்க எனக்கு வச்சிருக்கீங்கன்னு நினைச்சேன் அதனால் எதுவும் சொல்லல” என்று சொல்ல விஹானோ மொத்தமாக உடைந்தான்.
இவன் ஒவ்வொரு கேள்வியாக கேட்கும் போது அவளிடம் வந்த பதில்களோ இவனை சுக்கு நூறாக நொறுக்கியது. சட்டென அங்கிருந்து எழுந்தவன் தன்னுடைய கைமுட்டியை மடக்கி அங்கு உள்ள டேபிளில் மாறி மாறி குத்தினான் தன்னுடைய கோபம் குறையும் அளவிற்கு.
“விஹான் ஏன் இப்படி பைத்தியம் மாதிரி நடந்துக்கிறீங்க” என்று அவனுடைய ரத்தம் வடிந்த கையை பிடித்தவாறு லல்லு கேட்க,
“ ஐ அம் சாரி லாலி நான் ஏமாந்துட்டேன் நான் ஏமாந்துட்டேன் என்னோட விழி நீ இல்ல மீனா என்னால உன்னை கல்யாணம் பண்ணிக்க முடியாது என்ன மன்னிச்சிடு” என்று சொன்னவன்,
“நான் என் மீனாவைத் தேடி போறேன் என்றவன் அவ்விடம் விட்ட அகன்றான். பாவம் அவன் அறியவில்லை அவன் தேடும் மீனா அவனுக்கு கிடைப்பாளா என்று.
Wowwwww awesome epiii lovlyyyyyyyyyy… Waiting for nxt epiii quickly upload waiting…….