அத்தியாயம் 18
“மீனுவ வர சொல்லலாம்பா நீ இப்படி அவளை நினைச்சு உருகுறது தெரிஞ்சா உடனே ஓடோடி வந்துருவா” என்று பாட்டி சொல்ல விஹானின் முகமோ பளிச்சிட்டன.
ராமச்சந்திரனும் பத்மாவும் கூட லல்லுவின் திருமணத்தில் இப்படி ஒரு பிரச்சனை ஏற்பட்டு விட்டதே என்று முதலில் வருந்தியவர்கள் கூட தங்களுடைய மூத்த பெண்ணின் காதல் கதையை கேட்டவர்களோ இவர்கள் இருவர்தான் சேர வேண்டும் என்று விரும்பினார்கள்.
லல்லுவோ தன்னுடைய விஷயத்தில் விஹானின் மேல் அவளுக்கு கோபம் தான்.
ஆனால் தான் சிறு வயது முதல் முகம் கூட பார்க்காமல் காதலித்து வந்த தன்னுடைய காதலனை எந்தப் பெண் இன்னொரு பெண்ணிற்கு தாரம் வார்ப்பாள். ஆனால் இவள் வார்த்து விட்டாளே.
அவளுடைய காதல் உயர்ந்தது தான். என்று நினைத்தவள் நேராக விஹானிடம் வந்து,
“ எனக்கு உங்க மேல அளவு கடந்த கோபம் இருந்தது. என் அக்காவோட காதல் எங்கே அவளை இழந்துட்டேனோ அப்படின்னு உங்களோட இந்த துடிப்பு இதெல்லாம் பார்க்கும்போது உங்க மேல உள்ள கோபம் போயிட்டு விஹான். நீங்க ஆசைப்பட்ட உங்க விழி உங்களுக்கு கிடைக்க வாழ்த்துக்கள்” என்று சொல்ல விஹானோ, “சாரி லாலி” என்று சொல்ல லல்லுவோ,
“ விஹான் உங்களுக்கு ஒரே ஒரு அட்வைஸ் பண்றேன் தப்பா எடுத்துக்காதீங்க எந்த ஒரு மனுஷனுக்கும் வாழ்க்கையில பொறுமைங்கிறது ரொம்ப அவசியம் பாத்தீங்களா உங்களோட அவசரத்தால என்ன எல்லாம் நடந்திருக்குன்னு நீங்க கொஞ்சம் பொறுமையா இருந்திருந்தால் இந்த ஓவியம் எப்பவோ உங்க கைல கிடைச்சிருக்கும் எல்லாமே சரியா நடந்திருக்கும். நானும் வீணா ஆசைகள் இருக்க மாட்டேன்” என்று சொன்னவளோ இரண்டு சொட்டு கண்ணீர் விட்டாள் இத்தோடு எல்லாம் முடிந்தது என.
அவள் அழுகவும் அவளுடைய கையைப் பிடிக்க வந்த விஹானின் கையை தடுத்தவள்,
“ இல்லை பரவால்ல நான் சரியாகிவிடுவேன் நீங்க உங்க விழிய பார்க்க போங்க” என்றாள் லல்லு. அனைவரின் முகத்திலும் புன்னகை அரும்பியது அவளுடைய இந்த தெளிவான பேச்சில்.
உடனே பாட்டி மீனுவின் நம்பரை விஹானிடம் கொடுத்து,
“ இந்தாப்பா நீயே அவளுக்கு போன் பண்ணி கூப்பிடு ரொம்ப சந்தோஷப்படுவா” என்று சொல்ல அவனும் புன்னகைத்தவன் அவளுடைய நம்பரை வாங்கி உடனே அழைத்துப் பார்க்க அதுவோ தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளது என வந்தது.
மீண்டும் ஒருமுறை அழைத்துப் பார்த்தான். திரும்பவும் அதையே சொல்ல,
“ பாட்டி இது மீனாவோட நம்பர் தானா சரியான நம்பரா?” என்று பாட்டியிடம் கேட்க பாட்டியும்,
“ ஆமாப்பா இது மீனுவோட நம்பர் தான் என்ன ஆச்சு” என்று கேட்க,
“ இல்ல பாட்டி கால் போகல வேற நம்பர் எதுவும் இருக்கா”
“ இது ஒரு நம்பர் தான்பா இருக்கு இரு நான் வேணா கால் பண்ணி பார்க்கிறேன்” என்றவர் மீனாவுக்கு அழைப்பு எடுக்க இந்த முறை ஸ்விட்ச் ஆஃப் என்று வந்தது.
உடனே பாட்டியின் முகம் வாட பத்மா அவரின் அருகில் வந்தவர்,
“ என்னாச்சு அத்தை மீனு போனை எடுக்கலையா” என்று பதட்டமாக கேட்க, பாட்டியோ,
“ இல்ல பத்மா போன் சுவிட்ச் ஆப்னு வருது” என்று சொல்ல ராமச்சந்திரனோ,
“ இருங்க நான் ட்ரை பண்ணி பாக்குறேன்” என்றவர் தானும் தன்னுடைய மூத்த மகளுக்கு அழைப்பு எடுத்தார்.
இவர்கள் இருவருக்கும் போகாத அழைப்பு இவருக்கு மட்டும் போய்விடவா போகிறது. அதேபோல சுவிட்ச் ஆஃப் என்று வர அவருடைய முகமும் தொங்கிப் போனது.
சுற்றி இருந்த அனைவருக்கும் கொஞ்சம் பயம் பிடிக்க ஆரம்பிக்க, லல்லுவோ,
“ இப்ப என்ன நடந்து போச்சுன்னு எல்லாரும் இப்படி இருக்கீங்க போன் சுவிட்ச் ஆப்னு தானே வருது ஒரு வேளை சார்ஜ் இல்லாம கூட போன் சுவிட்ச் ஆப் இருக்கலாம் கொஞ்ச நேரம் வெயிட் பண்ணி பார்க்கலாம் மீனுவே நம்மளுக்கு கால் பண்ணலாம்ல” என்று சொல்ல அவள் சொல்வதிலும் ஒரு நியாயம் இருக்க அனைவரும் ஆமோதித்தார்கள்.
அப்பொழுது அவர்களது அனைவரின் தலையிலும் இடியை இறக்கும் வகையில் ராமச்சந்திரனுடைய தொலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது. திரையில் புது எண்ணாக இருக்க யோசித்த ராமச்சந்திரனோ ஒருவேளை தங்களுடைய மகள் தான் அழைக்கிறாளோ என்று நினைத்து உடனே ஆன் செய்து காதில் வைக்க அந்தப் பக்கம் என்ன கூறப்பட்டதோ தெரியவில்லை. நெஞ்சை பிடித்துக் கொண்டு அப்படியே சரிந்து விட்டார் ராமச்சந்திரன்.
அங்கு இருந்த அனைவரும் என்னவாயிற்று என்று அதிர்ச்சியுடன் நிற்க, பத்மாவோ அவரின் அருகில் வந்தவர்,
“ என்னங்க என்னாச்சு யாரு போன்ல ஏன் இப்படி பித்து பிடிச்ச மாதிரி உட்கார்ந்து இருக்கீங்க” என்று அவரைப் பிடித்து உழுக்க ராமச்சந்திரனோ தன்னுடைய தலையில் அடித்துக் கொண்டு அழுக ஆரம்பித்தார்.
“ ஐயோ என் பொண்ணு என் பொண்ணு என்ன விட்டு போயிட்டாளே நான் என்ன செய்வேன் நான் யாருக்கு என்ன பாவம் பண்ணேன் என் பொண்ணு இப்படி என்னை விட்டுப் போயிட்டாளே” என்று அழுக சுற்றி இருந்த அனைவரும் பதறித்தான் போனார்கள் மீனாவுக்கு என்னவாயிற்று என்று.
“என்னங்க சொல்றீங்க நம்ம பொண்ணுக்கு என்ன ஆச்சு ஏன் இப்படி அழுகுறீங்க எனக்கு நெஞ்செல்லாம் பதறுது என்னன்னு சொல்லுங்க” என்று பத்மா பதரியவாறு கேட்க ராமச்சந்திரனோ,
“ நம்ம பொண்ணு போன ட்ரெயின் ஆக்சிடென்ட் ஆகிட்டாம். நம்ம பொண்ணு நம்மள விட்டு போயிட்டான்னு சொல்றாங்க நம்மள உடனே அங்க வர சொல்றாங்க” என்று ராமச்சந்திரன் சொல்ல அனைவருக்கும் அது பேர் அதிர்ச்சியாக இருந்தது. விஹானுக்கோ சொல்லவே வேண்டாம் அவனுடைய நிலையை.
‘எப்படி நடந்தது என் மீனா என்ன விட்டு போயிட்டாளா இல்ல அப்படி இருக்காது அப்படி மட்டும் நடக்கவே கூடாது என் மீனாவுக்கு எதுவும் ஆகி இருக்கக் கூடாது’ என்று வேண்டிக் கொண்டிருந்தான்.
அதன் பிறகு அனைவரும் அந்த போலீஸ்காரர் சொன்ன இடத்திற்கு மொத்த குடும்பமும் கிளம்பியது.
மும்பைக்கு சற்று தொலைவில் உள்ள ஒரு ஊரில் இரவு மீனு சென்ற பயணிகள் ரயிலும் ஒரு சரக்கு ரயிலும் ஒரே தண்டவாளத்தில் நேருக்கு நேராக மோதி இருந்தது.
அதில் பல உயிர்கள் பலியாகி இருக்க மீனாவும் அதில் அடக்கம்.
விபத்து நடந்த உடனே தகவல் தெரிவிக்கப்பட்டு தீயணைப்புத்துறையினர் வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்க அப்பொழுதுதான் ஒவ்வொருவர்களுக்காக அழைத்து விஷயம் தெரிவிக்கப்பட்டது.
மீனுவின் பேக்கில் இருந்த ஃபைலில் அவளுடைய அப்பாவின் நம்பரை பார்த்து தான் அவருக்கு அழைப்பு எடுத்து கூறியிருந்தார்கள்.
மொத்த குடும்பம் அந்த இடத்திற்கு வந்து பார்க்க, பார்க்கவே அவ்வளவு கோரமாக இருந்தது அந்த விபத்து. அதில் தன்னுடைய மகள் எப்படியாவது உயிர் தப்பி இருக்க வேண்டும் என்று குடும்பமே கடவுளை வேண்டிக் கொண்டிருந்தது.
தங்களுக்கு அழைப்பு எடுத்த அந்த அதிகாரியிடம் வந்தவர்கள் மீனாவைப் பற்றி விசாரிக்க அவரோ,
சார் இதுல நிறைய பேர் இறந்துட்டாங்க பல பேரோட அடையாளங்கள் கூட தெரியல இந்த பேக்ல இந்த பைல் இருந்தது இது உங்க பொண்ணோடது தானான்னு பாருங்க” என்று மீனாவின் பேக்கை ராமச்சந்திரனிடம் கொடுக்க அவரோ அதை வாங்கி ஆராய்ந்தவர் கலங்கியவாரே,
“ இது என் பொண்ணோடது தான் சார்” என்று சொல்ல,
“ சாரி சார் ஹாஸ்பிடல்ல நிறைய பேர் உயிருக்கு போராடிகிட்டு இருக்காங்க நிறைய பேர் இந்த விபத்துல எரிஞ்சும் போய்ட்டாங்க உங்க பொண்ணு இருந்த பெட்டியில யாருமே உயிரோட இல்ல சார்” என்று சொன்னார் அந்த அதிகாரி.
எப்படியாவது தங்கள் மகள் உயிரோடு இருக்க மாட்டாளா என்று கொஞ்சம் இருந்த நம்பிக்கையோடு வந்த குடும்பத்தினர்களோ இந்த வார்த்தையில் ஆடித்தான் போகினர்.
தங்களுடைய மகளை இனி பார்க்கவே முடியாதா என்று குடும்பமே அங்கு ஒப்பாரி வைக்க ஆரம்பித்தனர். விஹானோ,
“ஏன் மீனா என்கிட்ட காதலை சொல்லாம பிரிஞ்சு போயிட்டு என்ன தவிக்க விட்ட இப்போ உன் காதல பத்தி தெரிஞ்சுக்கிட்டு உன்ன பாக்கலாம்னு நினைக்கும்போது என்னை விட்டு ஒரேடியா போயிட்டியா ஏன் மீனா நான் என்ன பாவம் செய்தேன் எனக்கு ஏன் இந்த தண்டனை என்ன இப்படி உருகி உருகி காதலிச்சுட்டு இப்படி என்னை தனியா தவிக்கவிட்டு போயிட்டியே டி நான் இனி என்ன செய்வேன் எனக்கு என் மீனா வேணும் எனக்கு என் மீனா வேணும் திரும்பி வந்துவிடு மீனா என்னால நீ இல்லாம வாழ முடியாது ப்ளீஸ் எனக்காக வந்துரு.. ஆஆஆஆஆஆஆஆஆஆ”
செத்துபோன மீனா எப்படி வருவா கோபால்?