அத்தியாயம் 2
ஆஸ்திரேலியாவில் மிகப் பிரபலமான ஹைவே ரோட்டில் தன்னுடைய காரில் சீல் பாய்ந்து கொண்டிருந்தான் அவன். ஸ்டேரிங்கில் தாளம் தட்டியவாறு ஏதோ ஒரு இங்கிலீஷ் பாடலை ஹம் செய்தவாறு அந்தப் பயணத்தை ரசித்தவாறு சென்று கொண்டிருந்த அவனின் மொபைலில் எமர்ஜென்சி அலெட் வந்து கொண்டே இருந்தது தொடர்ந்து.
அந்தக் காரில் ஒலித்துக் கொண்டிருந்த இசையில் அதைக் கவனிக்காதவன் எதிர்ச்சியாக தன்னுடைய மொபைலை எடுக்க அதுவோ பக்கத்து இருக்கையில் வைப்ரேட் ஆகிக்கொண்டே இருந்தது. சட்டென எடுத்துப் பார்த்தவன் விழிகளோ அதிர்ந்தன.
“சிட்..” என்று தன்னுடைய வலது கையை மடக்கி ஸ்டேரிங்கில் ஒரு குத்து விட்டவன் காரை யூடன் போட்டு அதி வேகமாக விரைந்தான் ஆஸ்திரேலியாவில் இருக்கும் விமான நிலையத்திற்கு.
அவன் விஹான்.
பத்தே நிமிடத்தில் அந்த விமான நிலையத்திற்கு வந்தவன் தன் தாயை தேடி அலைந்தான்.
முகம் முழுவதும் அவ்வளவு இறுக்கம் தன்னுடைய கூர் விழிகளை அந்த இடம் முழுவதும் அலைய விட்டான் தன் தாயை தேடி.
பின்பு அங்கு இருக்கும் எமர்ஜென்சி அறையில் தன் தாய் இருப்பதை பார்த்தவன் நொடியும் தமக்காமல் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தவன் தன் தாயின் அருகில் சென்றான்.
“அம்மா அம்மா என்ன ஆச்சு உங்களுக்கு..” என்று அவரை உழுக்க இவ்வளவு நேரமும் தன்னுடைய மூச்சை பிடித்து வைத்திருந்த சித்ராவோ பெரிய மூச்சாக வெளியே விட்டவர் எழுந்து அமர்ந்தார்.
அவர் நெஞ்சை பிடித்துக் கொண்டு கீழே விழவும் அங்கு இருக்கும் எமர்ஜென்சி குழுவும் இவரை கொண்டு வந்து முதலுதவி செய்து கொண்டிருக்க இவருடைய உடலோ எவ்வித ஒத்துழைப்பும் தராமல் இருக்க அங்கு உள்ள மருத்துவர்களோ என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது தான் உள்ளே நுழைந்தான் விஹான்.
அவனைப் பார்த்ததுமே சித்ரா எழுந்து அமர விஹான் உட்பட டாக்டர் செவிலியர்கள் என அனைவருமே வியப்பில் ஆழ்ந்தனர்.
“ஏன்டா அம்மா சாக கிடக்கிறேன்னு உனக்கு மெசேஜ் வந்ததுமே வர வேண்டாம் எவ்வளவு நேரமாடா மூச்சை பிடிச்சு வச்சிருக்கறது இன்னும் கொஞ்ச நேரம் நீ வராம இருந்திருந்தா மூச்சை பிடிச்சு வச்சியே நான் செத்துப் போயிருப்பேன்..” என்று மூச்சு வாங்க பேச விஹானுக்கோ கோவம் கட்டுக்கடங்காமல் வந்தது. ஆனாலும் தன் தாயிடம் அதை காட்டிக் கொள்ளாமல் அவரை முறைத்தவாறே நின்று கொண்டிருந்தான்.
“என்ன அப்புறமா முறைச்சுக்கோ சரி சரி வா பிளைட்டுக்கு டைம் ஆச்சு போகலாம்..” சென்று அங்கிருந்த அனைவருக்கும் ஷாட் கொடுத்த சித்ரா மகனின் கையை இறுகப்பற்றியவாறு பிலைட் ஏற நடந்து சென்றார் என்று சொல்வதை விட மகனை இழுத்துக் கொண்டு ஓட்டப்பந்தயத்தில் ஓடுவது போல ஓடிச் சென்றார் சித்ரா.
ஏற்கனவே இறுக்கமாக இருந்த தன் முகத்தை மேலும் இறுக்கமாக வைத்துக் கொண்ட விஹானோ இனி தன்னுடைய அன்னையிடமிருந்து தப்பிக்க முடியாது என்று எண்ணியவன் பல்லைக் கடித்துக் கொண்டு ஓட்டமும் நடையுமாக அவர் பின்னால் சென்றான்.
விஹானுக்கு அன்னை வழி சொந்தக்காரர்களை பிடிக்கவே பிடிக்காது.
விஹானுக்கு ஒரு பதினைந்து வயது இருக்கும் போது தன்னுடைய தாய் தந்தையிடம் அவன் சண்டைக்குச் சென்றான் ஏன் தனக்கு சொந்த பந்தங்கள் என்று யாரும் இல்லை பாட்டி தாத்தா அம்மா வழியிலும் இல்லை அப்பா வழியிலும் இல்லை என்று. அதற்கு அவனிடம் அவனுடைய அப்பா ரகுவோ தங்களுடைய காதல் கதையையும் இங்கு ஆஸ்திரேலியா வந்ததும் கூறினார்.
மேலும் தன் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த சித்ராவின் பிறந்த வீட்டையும் பற்றி கூறியிருந்தார்.
ஆகையினால் விஹானுக்கு அவர்களை சுத்தமாக பிடிக்காமல் போய்விட்டது. ஏனென்றால் அவன் பார்த்து வளர்ந்த அவனுடைய அப்பா மிகவும் நல்லவர். அவனுக்கு ரொம்பவும் பிடிக்கும் அவனுடைய அப்பாவை. அப்படி இருக்கும் போது அவரை பிடிக்காமல் போன சித்ராவின் குடும்பத்தை இனி எனக்கும் பிடிக்காது என்று ஒதுக்கி வைத்து விட்டான்.
இப்படி இருக்கையில் சித்ரா தன்னுடைய பிறந்த வீட்டை பார்க்க போக தன் மகனையே உடன் அழைக்க அவனுக்கு வந்ததே கோபம்.
“இப்ப எதுக்காக நீங்க அங்க போறீங்க இத்தனை வருஷமா நீங்க உயிரோட இருக்கீங்களா இல்லையான்னு தெரிஞ்சுக்க விரும்பாதவங்களை இப்ப நீங்க போய் ஏன் பார்க்கணும் வேண்டாம்மா நீங்க போகக்கூடாது..” என்று ஆர்ப்பாட்டம் செய்தான்.
அதற்கு சித்ராவோ,
“விஹான் அப்படி எல்லாம் சொல்லாத பா எனக்கு என் அம்மா அண்ணன் அண்ணி அவங்க பசங்க எங்க ஊரு எல்லாத்தையும் பார்க்கணும்னு ரொம்ப ஆசையா இருக்கு.. இன்னும் எத்தனை காலத்துக்கு நான் இருக்க போறேன்னு தெரியல..”
“அம்மாஆஆ..” என்று கத்தினான் விஹான்.
“இருடா நான் சொல்றதைக் கேளு முதல்ல அதுக்காக நான் சாகாம உயிரோடவே இருக்க போறேனா என்ன..” அவர் இப்படி சொல்லும் போதும் கைமுஷ்டியை இறுக்கியவன் பல்லை கடித்துக் கொண்டு தன்னுடைய முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டான்.
“அதனால எனக்கு இப்பவே அவங்க எல்லாரையும் பார்க்கணும்னு ஆசையா இருக்குடா.. உங்க அப்பா என்னடான்னா என்னை தனியா விடமாட்டேங்குறாரு.. அவர கூட வாங்கன்னு சொன்னாலும் வரமாட்டேன்னு சொல்றாருடா நீயாவது என்கூட வாயேன்டா..” என்று மகனிடம் கெஞ்சினார்.
அவனுக்கோ சுத்தமாக விருப்பமில்லை அங்கு வருவதற்கு. ஆனாலும் தன் அன்னையை அங்கு தனியாக அனுப்பவும் மனமில்லை அந்த பாசக்கார மகனுக்கு.
என்ன செய்ய என்று யோசித்தவன் வெகு நேரங்களுக்கு பிறகே தான் உடன் வருவதாக சம்மதித்தான். அவ்வளவுதான் சித்ரா தன்னுடைய வயதை மறந்து சோபாவில் துள்ளி குதித்தார்.
அதைப் பார்த்தவனோ தலையில் அடித்துக் கொண்டு,
“அம்மா நீங்க சின்ன பாப்பா கிடையாது கீழ விழுந்துடாதீங்க வாங்க முதல்ல..” என்று அவருக்கு கை கொடுத்து இறக்கி விட்டான்.
அதேபோல இன்று இருவருமே ஏர்போர்ட் வந்து பிளைட்டுகாக காத்துக் கொண்டு இருக்க சித்ராவோ தன்னுடைய பிறந்துவிட்டு சொந்தங்களைப் பார்க்க போகிறோம் என்ற ஆனந்தம் கூத்தாட வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நேரம் விஹானோ தான் வரவில்லை என்றால் அன்னை போகமாட்டார்,
இதை வீட்டிலையே சொன்னால் இன்னும் தர்க்கம் செய்வார் என்று யோசித்தவன் பிளைட் கிளம்பும் நேரம் ஏர்போர்ட்டில் இருந்து நைசாக நழுவி விட்டான்.
சுற்றி எங்கிலும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சித்ராவோ தன்னுடைய மகனை பார்க்க அவன் அங்கு இருந்தால் தானே அவன் அப்பொழுதே சிட்டாக பறந்து விட்டான் என்பதை லேட்டாக புரிந்து கொண்ட சித்ராவோ,
“அடப்பாவி மகனே இப்படி திட்டம் போட்டு வந்து என்னை ஏமாத்திட்டு போயிட்டானே இப்ப நான் என்ன செய்வேன் பிளைட்டுக்கு வேற டைம் ஆகுது நான் எங்கன்னு போய் தேடுவேன்..” என்று யோசித்துக் கொண்டிருந்தவருக்கு திடீரென பல்ப் எரிய உடனே தன்னுடைய பிரம்மாயுதத்தை பயன்படுத்தினார் சித்ரா.
வேற என்ன ஹார்ட் அட்டாக் வந்தது போல நடித்தார் வெகு நேரம் மூச்சை பிடித்து வைத்து கொண்டு. அதனாலையே விஹானின் தொலைபேசிக்கு எமர்ஜென்சி அலர்ட் வர அவனும் தன்னுடைய அன்னையின் பிளான் தெரியாமல் வசமாக வந்து மாட்டிக்கொண்டான்.
இங்கோ ராமச்சந்திரன் தன் தங்கையின் வரவை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்க அந்த மிகப்பெரிய கேட் கதவு திறக்க ஆவலாக தன் தங்கைதான் வருகிறாள் என்று எட்டிப் பார்த்த ராமச்சந்திரனோ சலிப்பாகத் தலையை குனிந்தார்.
அவரது எண்ணத்தை பொய்யாக்கிக் கொண்டு வந்தது என்னவோ வீரநடை போட்டு வந்த அவருடைய இரண்டாவது மகள் லல்லு.
“என்னப்பா உங்க பாசமலர் தங்கச்சி இன்னுமா வரல..” என்று இகழ்ச்சியாக லல்லு கேட்க இவரும்,
“வந்துருவாங்கமா அவங்க வர இன்னும் நேரம் இருக்கு தானே நான்தான் என் தங்கச்சியை பார்க்கணும் என்கிற ஆர்வத்துல வாசல்லயே காத்துகிட்டு இருக்கேன்..” என்றார்.
“ம்ம் ம்ம் நீங்க காத்துகிட்டே இருங்க அவங்க வருவாங்களான்னு பார்க்கலாம்..” என்று சொல்லிக் கொண்டே உள்ளே சென்றாள்.
அவளுக்கோ இதில் பங்கெடுக்க எல்லாம் நேரம் இல்லை அதோடு விருப்பமும் இல்லை எனலாம்.
அவளைப் பொறுத்தவரை யார் அவர்கள் அவர்களுக்காக நான் ஏன் என் சொந்த வேலைகளை விட்டு இவர்களுக்காக மெனக்கிட வேண்டும். என்னால் முடியாது.
நீங்கள் இருந்தால் இருந்து கொள்ளுங்கள் என்னை இதில் வற்புறுத்தாதீர்கள் என்று செல்லும் ரகம் அவள்.
விமானத்தின் உள்ளே தன்னுடைய தாயை முடிந்த மட்டும் முறைத்து பார்த்துக் கொண்டு இருந்தான் விகான்.