தேடித் தேடி தீர்ப்போமா

4.4
(9)

அத்தியாயம் 20

ஆஸ்திரேலியா வந்த விஹான் ஹாஸ்பிடலில் அட்மிட் செய்யப்பட்டிருக்கும் தன்னுடைய தந்தையை நேராக பார்க்க வந்தவன் தந்தையின் நலம் விசாரித்து விட்டு வீடு வந்தான்.
உள்ளே வந்தவன் தன்னுடைய அறைக்குச் சென்று அலைச்சலின் காரணமாக குளித்து முடித்து தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வந்தவன் தன்னுடைய பெட்டியை திறந்து அதில் அங்கு ஊரில் மீனாவின் அறையில் இருந்த அவளுடைய புகைப்படங்களையும் அவள் தன் கைப்பட வரைந்த அவனுடைய வரைபடங்களையும் இன்னும் சில வரைபடங்களையும் ஒன்று விடாமல் அனைத்தையும் எடுத்து வந்து விட்டான்.
இப்பொழுது அவளுடைய போட்டோ எல்லாத்தையும் எடுத்து அவனுடைய அறை முழுவதும் மாட்டத் தொடங்கினான்.
தன்னுடைய அறையில் எங்கு திரும்பி பார்த்தாலும் தன்னுடைய மீனாவின் பிம்பமே தெரிய வேண்டும் என்று நினைத்தானோ என்னவோ ஒரு இடம் விடாமல் அனைத்து இடத்திலும் அவளுடைய புகைப்படத்தை மாட்டினான்.
பின்பு மீனாவை அவன் முதன்முதலில் பார்க்கும் போது அவள் அணிந்திருந்த தாவனியை தன்னுடைய பெட்டியில் இருந்து எடுத்தவன் அதை தன் கைகள் கொண்டு தடவி பார்த்தான்.
அவனுடைய நினைவு அன்று முதன் முதலில் பார்த்த மீனாவின் முகம் நினைவு வந்தது.
எவ்வளவு அழகு அவள்.
அவனுக்கோ அன்றே அவளை பிடித்து விட்டது.
தன்னுடைய தாயைப் போலவே இருந்த அவளை அவனுக்கு மிகவும் பிடித்தது.
ஆனாலும் தன் தாயின் வழி உறவுகளை வெறுக்கிறேன் பேர்வழி என்று அவளை கிட்டவே நெருங்க விடவில்லை அவன்.
அதை ஒவ்வொரு நிமிடமும் இப்பொழுது நினைத்து வருந்துகிறான் விஹான். இப்பொழுது வருந்தி என்ன பயன்.
***
“ஹேய் மீனா டீச்சர் வராங்க எல்லாரும் அமைதியா இருங்க” என்று அங்கு வேலை செய்யும் ஒரு பெண் ட்ராயிங் கிளாஸுக்கு வந்திருக்கும் அனைத்து பிள்ளைகளையும் அமைதி படுத்தினாள்.
ஆம் அந்த ஊரில் ட்ராயிங்க்கு என்று ஒரு பெரிய ஸ்கூலே உண்டு.
மீனாவின் திறமையை பார்த்தவர்கள் அவளையே வரும் பிள்ளைகளுக்கு கற்பிக்க வேண்டுதல் விடுக்க அவளும் தனக்கு பிடித்த ஓவியக்கலையை அங்கு வரும் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க முன்வந்தாள்.
அங்கு ஸ்கூட்டியில் தன்னுடைய விழியை முன்னுக்கு நிறுத்தி வான கலரில் ஒரு காட்டன் புடவையில் கழுத்தில் மஞ்சள் கயிறுடன் நெற்றி வகுட்டில் குங்குமத் திலகத்துடன் சர்வ லட்சணமாக வந்த மீனாவை பார்த்த அந்தப் பெண்ணோ,
“ எவ்வளவு அழகு இந்த மீனா டீச்சர் அவங்க புருஷன் கொடுத்து வச்சவரு” என்று பெருமூச்சு விட்டாள்.
பெண்களே பொறாமைப்படும் அளவிற்கு இருந்தது மீனாவின் அழகு.
“குட் மார்னிங் டீச்சர்” என்று அங்கு உள்ள பிள்ளைகள் அனைவரும் ஒன்று போல் எழுந்து நின்று சொல்ல உள்ளே வந்த மீனாவும் புன்னகைத்தவள்,
“ குட் மார்னிங்” என்று சொல்ல விழியும்,
“ குட் மார்னிங்” என்று சொன்னாள்.
பின்பு வழக்கம் போல தன்னுடைய ட்ராயிங் கிளாஸை ஆரம்பித்தாள் மீனா.
விழியோ தனக்கும் ஒரு நோட்டை எடுத்துக்கொண்டு அங்கு பிள்ளைகளோடு பிள்ளையாக அமர்ந்தவள் தன் தாய் நடத்தும் பாடத்தை தன்னுடைய குண்டு விழிகளால் பார்த்தபடி கவனித்துக் கொண்டிருந்தது.
அன்றைய நாள் வழக்கம் போல அப்படியே செல்ல மாலைப்பொழுதும் வந்தது.
விழியை கூட்டிக்கொண்டு அங்கிருந்து நகர போனவளை அழைத்ததார் அந்த ஸ்கூலின் பிரின்ஸ்பல்.
“மீனா டீச்சர் கொஞ்சம் ஆபீஸ் ரூமுக்கு வாங்க உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்” என்றார் அவர்.
“ ஓகே மேடம் வரேன்” என்றவள்,
“ விழி இந்த ஆண்ட்டி கூட நீ விளையாண்டுக்கிட்டு இரு அம்மா போயிட்டு வந்துடறேன்” என்று சொல்ல அதுவும் தன்னுடைய இரு சைடும் போடப்பட்டிருக்கும் குடும்பி ஆட தலையை ஆட்டி சம்மதம் சொன்னது.
பிறகு மீனா பிரின்ஸ்பல் அறைக்கு வந்தவள்,
“ சொல்லுங்க மேடம்” என்று கேட்க, அதற்கு அந்த பிரின்ஸ்பல்,
“ அம்மாடி மீனா சிங்கப்பூர்ல டிராயிங் எக்சிபிஷன் நடக்கபோகுதுமா நீ ஏன் அங்க போக கூடாது அங்க போனா கண்டிப்பா உன்னோட ஓவியங்கள் ரொம்ப நல்லா இருக்கும் கண்டிப்பா நீ அங்க வின் பண்ணுவ” என்று சொல்ல சலிப்பாக தன்னுடைய முகத்தை திரும்பியவள்,
“ வேண்டாம் மேடம்” என்று சொல்ல அந்த பிரின்ஸ்பல்,
“ என்னமா நீ உனக்குள்ள எவ்ளோ திறமை இருக்கு நீ அதை வேஸ்ட் பண்ற ஏற்கனவே இதே மாதிரி ரெண்டு மூணு தடவை நான் உன்கிட்ட சொல்லிட்டேன் ஆனா நீ எதுக்கும் போக மாட்டேன்னு சொல்ற நீ இப்படியே செஞ்சினா உன்னோட திறமை இந்த ஸ்கூல் ஓட மட்டுமே நின்னு போயிடும் உனக்கு இருக்கிற டேலண்டுக்கு நீ இன்னும் முன்னுக்கு வரனும்மா இந்த எக்சிபிஷனுக்கு மட்டும் நீ கலந்துக்கிட்டேன்னா உனக்கு அது எவ்வளவு நல்லது தெரியுமா. நம்ம ஸ்கூல் மேனேஜ்மென்டே அதுக்கு ஏற்பாடு செய்யும் நீ போறேன்னு ஒரு வார்த்தை மட்டும் சொன்னா போதும் அவங்க இப்பவே ரெடியா இருக்காங்க என்னம்மா சொல்ற கொஞ்சம் யோசிச்சு பாரு”
“ இல்ல மேடம் என்னால என் குழந்தையை விட்டுட்டு எங்கேயும் போக முடியாது என்னோட ஹஸ்பண்டும் இதுக்கு சம்மதிப்பாரா என்னன்னு தெரியல அதுவும்போக எனக்கு இதுல எந்த இன்ட்ரஸ்ட்டும் இல்ல மேடம் என்ன விட்டுடுங்க”
“ இங்க பாரு மீனா நீ உன் குழந்தையும் கூட்டிட்டு போகலாம் அதுக்கு எந்த தடையும் கிடையாது” என்று பிரின்ஸ்பல் சொல்லிக் கொண்டிருக்க தன் தாயை தேடி வந்த விழியின் காதில் இந்த வார்த்தைகள் விழ உடனே ஓடிவந்த விழியோ,
“ அம்மா நானும் வாரேன் எங்க போறோம்” என்று சொல்ல விழியின் இந்த வார்த்தையில் புன்னகைத்த பிரின்ஸ்பலோ,
“ அப்புறம் என்ன மீனா உன் குழந்தையே வாரேன்னு சொல்லிட்டா அப்புறம் உனக்கு என்ன பிரச்சனை நீ சரின்னு மட்டும் சொல்லுமா.. உன் ஹஸ்பண்ட் கிட்ட பேசணுமா நான் பேசுறேன் அவரோட நம்பர் இருந்தா குடும்மா” என்று கேட்க மீனாவோ,
“ இல்ல மேடம் அவரு இங்க இல்ல ஆர்மில இருக்காரு நம்ம நெனச்ச நேரம் எல்லாம் அவர்கிட்ட பேச முடியாது அவருக்கு எப்போ டைம் கிடைக்குதோ அப்பதான் பேசுவார் அவர் பேசும்போது நானே சொல்லிக்கிறேன் மேடம்” என்றாள் மீனா.
“ அப்போ சிங்கப்பூரில் நடக்கிற இந்த போறதுக்கு உனக்கு ஓகே தானே நான் மேனேஜ்மென்ட் கிட்ட சொல்லட்டுமா” என்று சந்தோஷமாக கேட்க விழியோ,
“ ஹைய் சிங்கப்பூரா வாவ் அம்மா நாம சிங்கப்பூர் போறோமா” என்று ஆசையாக கேட்க அந்த பிஞ்சு குழந்தையின் முகத்தில் தெரியும் சந்தோஷத்தை கெடுக்க விரும்பாதவள், ஆம் என்று தலையாட்ட உடனே பிரின்ஸ்பல்,
“ ரொம்ப சந்தோஷம் மீனா கண்டிப்பா இந்த எக்சிபிஷன்ல நீதான் வின் பண்ணுவ ஏன்னா உன் திறமை மேல எனக்கு அவ்வளவு நம்பிக்கை இருக்கு நான் இப்பவே மேனேஜ்மென்ட் கிட்ட விஷயத்தை சொல்லிடறேன் இன்னும் ரெண்டு நாள்ல நீங்க சிங்கப்பூர் கிளம்பற மாதிரி இருக்கும் அடுத்த வாரம் அங்க எக்ஸிபிஷன் நடக்கும் இங்கு இருந்து நீ அங்க போயி எக்சிபிஷன்ல கலந்து திரும்ப வர வரைக்கும் எல்லாத்தையுமே நம்ம மேனேஜ்மென்ட் பார்த்துப்பாங்க நீங்க எதை பத்தியும் கவலைப்படாதீங்க எக்ஸிபிஷன்ல கலந்துக்கிட்டு அப்படியே விழி குட்டிய கூட்டிட்டு நல்லா சுத்தி பாத்துட்டு என்ஜாய் பண்ணிட்டு வாங்க” என்றார் பிரின்ஸ்பல்.
சரி என்றவள் தன் குழந்தையை கூட்டிக்கொண்டு அங்கிருந்து கிளம்பி விட்டாள்.
வீட்டிற்கு வந்தவளுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.
தான் அவசரப்பட்டு விட்டோமோ என்று குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்த மீனாவை விசித்திரமாக பார்த்துக் கொண்டிருந்தாள் விழி.
“ அம்மா அப்பா எப்ப போன் போடுவாங்க நான் பார்த்ததே இல்ல ஆனா நீங்க இன்னைக்கு அந்த பிக் ஆன்ட்டி கிட்ட அப்பா போன் போடும்போது சொல்லிக்கிறேன்னு சொன்னீங்க” என்று கேட்க அதற்கு அவளோ,
“ஆமா விழிமா அப்பா போன் பண்ணும் போது நீங்க தூங்கிருவீங்க அதனால அம்மா உங்களை எழுப்ப மாட்டேன் அப்பாவுக்கு அங்க ரொம்ப வேலை அதனால நேரம் கிடைக்கும் போது தான் பேசுவாங்க அந்த நேரம் நீங்க தூங்கி கிட்டு இருப்பீங்க அப்புறம் எப்படி பாப்பாவுக்கு தெரியும்” என்று சொன்னாள் மீனா.
“ ஓ அப்படியா சரி அப்பா எப்படி இருப்பாங்க விழி பாப்பாவ கேட்பாங்களா” என்று ஆசையாக கேட்டது அந்த குட்டி குழந்தை.
“ ஆமா செல்லம் அப்பா போன் பண்ணும் போதெல்லாம் உங்களை கேப்பாங்க பாப்பா என்ன செய்றாங்க சாப்பிட்டாங்களா? தூங்குகிறாங்களா என்று கேட்பாங்க” என்று சொன்னாள் மீனா.
அதற்கு புன்னகைத்த விழியோ,
“ அச்சோ அப்பா பாவம் அப்பா போன் பண்ணும் போது நான் எப்போ பாரு தூங்கிகிட்டே இருந்திருக்கேன் அதனால தான் அப்பா கிட்ட விழியாள பேச முடியல இனி முழிச்சிருக்கேன் அப்பா பேசும்போது நானும் பேசுவேன். அம்மா அப்பா எப்படி இருப்பாங்க” என்று கேட்டது விழி.
முதன் முதலாக தன் தந்தையை பார்க்க எண்ணி ஆசையாக கேட்டது அந்த குழந்தை விழி.
அவளோ விழி இப்படி உடனே தன் தந்தையை பார்க்க கேட்பாள் என்று நினைக்காதவள் என்ன சொல்ல என்று திணறிக் கொண்டிருக்க அப்பொழுது விழியே,
“ அம்மா இவர்தானே என்னோட அப்பா” என்று தன் கையில் ஒரு போட்டோவை வைத்து காட்டியது விழி.
அதைப் பார்த்து அதிர்ந்து போனாள் மீனா.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.4 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

1 thought on “தேடித் தேடி தீர்ப்போமா”

  1. Wowwwww lovlyyyyyyyyyy flashback sekram solungaaa…….. Waiting…… Nxt epiii quickly upload nxt intresting……

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!