அத்தியாயம் 21
மீனா இறந்த பிறகு மூன்று வருடங்களாக அவளுடைய ஊரில் அவளுடைய அறையில் நாட்களை கழித்த விஹானோ தன் தந்தையின் உடல்நிலை பாதிப்பால் ஆஸ்திரேலியா வந்தவன் முழுவதுமாக தன் தந்தையின் தொழிலை பொறுப்பு எடுத்துக்கொண்டு சிறப்பாக நடத்தி வருகிறான்.
தன்னுடைய ஆபிஸில் தன்னுடைய கேபினில் அமர்ந்து வேலை பார்த்துக் கொண்டிருந்த விஹானக்கு ஒரு போன் கால் வர அதை எடுத்து காதில் வைத்தவன்,
“ ஹலோ சார் நீங்க கொடுத்த பெயிண்டிங் வேலையெல்லாம் முடிஞ்சது எல்லாமே பிரேம் போட்டாச்சு நீங்க வந்து வாங்கிக்கிறீங்களா இல்ல நாங்க உங்க இடத்துக்கு கொரியர் அனுப்பவா” என்று அவர் கேட்க அந்த ஒரு நிமிடம் கொரியர் என்ற அந்த வார்த்தையில் மீனாவின் நினைவு தோன்ற வலியோடு கலந்த புன்னகை அவன் வதனத்திலோ தோன்றி மறைந்தது.
“ இல்ல வேண்டாம் நானே வந்து கலெக்ட் பண்ணிக்கிறேன்” என்றவன் ஃபோனை வைத்துவிட்டு தன்னுடைய டேபிளில் உள்ள மீனாவின் புகைப்படத்தை கையில் எடுத்தவன்,
“ மீனா நீ உயிரோடு இருக்கும்போது உன்னோட திறமையை வெளி உலகத்துக்கு காட்டாம வேஸ்ட் பண்ணிட்ட பரவால்ல. இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகல இந்த உலகத்துல நீ உயிரோடு இல்லை என்றாலும் உன்னோட ஓவியங்கள் மூலமா நீ வாழனும். இன்னும் ரெண்டு நாள்ல சிங்கப்பூர்ல நடக்கப்போற டிராயிங் எக்சிபிஷன்ல உன்னோட ஓவியங்களை வைக்கப் போறேன் கண்டிப்பா எல்லாருக்கும் பிடிக்கும் உன்னோட ஓவியங்கள் ஃபர்ஸ்ட் பிரைஸ் வாங்கும் அதை பார்த்து நீயும் சந்தோஷப்படுவ நானும் சந்தோஷப்படுவேன்”
என்று அவளுடைய போட்டோ உடன் பேசியவன் அந்த போட்டோவிற்கு ஒரு முத்தம் வைத்து தன்னுடைய கார் சாவியை எடுத்துக்கொண்டு எஜுபிஷனுக்காக ரெடி செய்யப்பட்ட மீனாவின் ஓவியங்களை வாங்க சென்றான்.
***
“அம்மா இதுதானே அப்பா” என்று விழி மீனாவின் அறைக்குச் சென்று அவளுடைய தலையணையின் கீழ் இருந்த புகைப்படத்தை எடுத்து வந்து மீனாவிடம் காட்ட அதை பார்த்ததும் மீனாவுக்கோ தூக்கி வரி போட்டது.
முதலில் தன் மகள் இதை எப்படி பார்த்தாள் என்றால் இன்னொன்று தன் குழந்தை வளர்ந்து கொண்டு வருகிறது இதுநாள் வரை தன் குழந்தை குழந்தையாக மட்டுமே இருக்கிறாள் என்று நினைத்திருந்தவளுக்கோ விழியின் ஒவ்வொரு செயல்களும் அவளின் வளர்ச்சியை அவளுக்கு உணர்த்தியது.
இது நாள் வரை கேள்விகள் கேட்காதவள் இனி கேள்விகளை மட்டுமே கேட்கப் போகிறாள் என்று தாயவள் அறியவில்லை.
அதோடு அவள் கேட்கும் கேள்விகளுக்கும் தான் பதில் சொல்ல முடியாமல் திணறப் போகிறாள் என்றும் அறியவில்லை.
அதற்கு இதுவே எடுத்துக்காட்டு என்பது போல இருந்தது விழியின் செயல்.
“ அம்மா சொல்லுங்கம்மா இதுதானே என்னோட அப்பா” என்று ஆசையாக அந்த புகைப்படத்தை பார்த்து கேட்க,
மீனாவோ திக்கித் திணறி என்ன சொல்ல என்று யோசித்தவள் அவள் ஆம் என்று சொல்லி விட மாட்டாளா என எதிர்பார்ப்புடன் அவள் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த குழந்தையை கண்டு லேசாக மலர்ந்தவள் “ஆம்” என தலையை ஆட்டினாள்.
அவ்வளவுதான் விழி ஹேப்பி அண்ணாச்சி.
அன்றைய இரவு முழுவதும் தன் தந்தை இப்போது அழைக்க மாட்டாரா அப்போது அழைக்க மாட்டாரா என்று விழி விழித்துக் கொண்டு இருந்தாள்.
நேரம் ஆக ஆக அந்த சிறு குழந்தைக்கோ தூக்கம் கண்களை சுழற்ற தன் தந்தையிடம் பேச வேண்டும் என்ற அவளின் ஏக்கம் மட்டும் கொஞ்சம் கூட குறையவே இல்லை.
அதை பார்த்துக் கொண்டிருந்த மீனாவுக்கோ மிகவும் கஷ்டமாக இருந்தது.
உடனே விழியின் அருகில் வந்தவள்,
“ மீனுக்குட்டி அப்பாவுக்கு இன்னைக்கு ரொம்ப வேலை இருக்கும் போல அதான் இன்னும் போன் பண்ணல நீ தூங்குடா தங்கம்”
“ இல்லம்மா எனக்கு தூக்கம் வரல இங்க பாருங்க” என்று தன்னுடைய கோழிக் குண்டு கண்களை சிமிட்டி சிமிட்டி அவளைப் பார்த்து சிரித்தது விழி.
அவளுக்கோ மேலும் மேலும் சங்கடமாகி போனது.
விழியை தூக்கி தன் மடியில் படுக்க வைத்து தட்டிக் கொடுத்தவள்,
“இங்க பாரு செல்லம் நீ இப்படி தூங்காம இருக்கேன்னு உங்க அப்பாவுக்கு தெரிஞ்சா ரொம்ப வருத்தப்படுவார் அதோட என்னையும் ரொம்ப திட்டுவாரு. ஏன் என் விழி குட்டி இப்படி தூங்காம இருக்காங்க அவ உடம்பு கெட்டுப்போகாதா நீ என்ன பார்த்துக்கிட்டு இருக்க அப்படின்னு ரொம்ப திட்டுவாரு அம்மா அப்போ பாவம் இல்லையா மீனுக்கும் டி” என்று மீனா பாவமாக சொல்ல, விழியோ தன்னுடைய குட்டி விரலை நாடியில் தட்டி விழிகளை அங்கிட்டும் இங்கிட்டும் உருட்டியவாறு யோசித்தவள்,
“ ஆமா இல்ல அப்பா உன்ன தான் திட்டுவாங்க என்ன செய்யலாம் சரி மீனா அம்மாவுக்காக பாப்பா இப்ப தூங்குறேன். ஆனா அப்பா போன் பண்ணதும் நீங்க என்ன எழுப்பி விடனும் சரியா” என்று விழி கேட்க மீனாவோ,
“ சரி கண்டிப்பா அம்மா உன்னை எழுப்புறேன் இப்ப தூங்குங்க தங்கம்”
என்று விழியின் நெற்றியில் முத்தம் பதித்து தன் நெஞ்சோடு அணைத்து கொண்டு அவளை தூங்க வைக்க விழியோ தானும் மீனாவின் முதுகில் தட்டிக் கொடுக்க அவளையும் அறியாமல் மீனாவும் உறங்கிப் போனாள்.
மீனா டிராயிங் எக்சிபிஷனுக்காக ஓவியங்கள் அனைத்தையும் தயார் செய்ய ஆரம்பித்தாள்.
அதேபோல அவர்கள் இருவரும் சிங்கப்பூர் செல்லும் நாளும் வந்தது.
ஸ்கூல் மேனேஜ்மென்டில் அவளை இங்கிருந்து அழைத்துச் செல்வது முதல் திரும்ப கொண்டு வந்து விடும் வரை அவளுக்கு ஒரு கைடாக ஒரு பெண் ஏற்பாடு செய்யப்பட்டாள்.
அவள் பெயர் ரஞ்சனி.
ஏர்போர்ட்டுக்கு நேரமே வந்தவள் மீனாவின் என்னை பிரின்ஸ்பல் கொடுத்திருக்க அவளுக்கு அழைத்த ரஞ்சனியோ,
“ஹலோ மேடம் நான் ரஞ்சனி பேசுறேன் நான் ஏர்போர்ட்டுக்கு வந்துட்டேன் நீங்க எங்க வந்துட்டு இருக்கீங்க” என்று கேட்க மீனாவோ,
“ இதோ பக்கத்துல வந்துட்டோம் ரஞ்சனி. இன்னும் ஒரு ரெண்டு நிமிஷத்துல நாங்க அங்க இருப்போம்” என்று சொன்ன மீனா சொன்னது போலவே இரண்டு நிமிடங்களுக்குள் ஏர்போர்ட்டின் உள்ளே வந்தவள் ரஞ்சினியை தேட அவளோ இவர்களை பார்த்ததும் கையசைத்து தன்னருகே வருமாறு அழைத்தாள்.
இவர்கள் வந்ததும் ஏர்போர்ட்டில் அனைத்து செக்கிங் முடிந்து பிலைட்டுக்காக வெயிட்டிங் ஏரியாவில் காத்துக் கொண்டிருக்க அங்கு விழியோ ஒவ்வொன்றையும் பார்த்து சந்தோஷப்பட்டு கொண்டிருந்தது.
அங்கு மிலிட்டரி ஆபீஸர் ஒருவர் கையில் கண்ணுடன் நின்று கொண்டிருக்க அதை பார்த்த விழியோ உடனே தன் தாயிடம்,
“ அம்மா நம்ம அப்பாவும் இப்படி தானே கைல கண்ண வச்சுட்டு இருப்பாங்க” என்று கேட்க இவளோ திருத்திருவென்று விழித்தவள், விழியிடம் ஆம் என்று சொல்ல,
“ நான் போயி அந்த அங்கிள் கிட்ட அப்பாவை பத்தி கேட்டுட்டு வரவா” சென்று அந்த சிறு குழந்தை கேட்க இவளோ,
“ அச்சச்சோ இல்ல விழிமா நம்ம அப்பாவை பற்றி இவங்களுக்கு தெரியாது அவங்க வேற ஒரு ஊர்ல இருக்காங்க” என்று சொல்ல,
“ ஏன்மா இந்த அங்கிளும் மிலிட்டரி தானே நம்ம அப்பாவும் மிலிட்டரி தானே அப்போ அந்த அங்கிளுக்கு தெரிந்திருக்கும் தானே” என்று கேட்க மீனாவோ,
“ அப்படி இல்லடா அங்க நிறைய பேர் இருப்பாங்க எல்லாத்துக்கும் உங்க அப்பாவை தெரிந்து இருக்கும் என்று சொல்ல முடியாது இல்ல”
“ ஓ அப்படியா சரி ஓகே” என்று அமைதியாக அமர்ந்து அந்த மிலிட்டரி ஆபீஸரையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
அப்பொழுது அந்த மிலிட்டரி ஆபிசர் அங்கிருந்து நகரும் பொழுது அவருடைய பென் ஒன்று கீழே விழ அவரையே பார்த்துக் கொண்டிருந்த விழியின் கண்களில் தப்பாமல் விழுந்தது அந்த காட்சி.
உடனே குடுகுடு என்று ஓடியவள் அந்தப் பென்னை எடுத்து அவரை அழைத்து அவர் கையில் கொடுக்க அவரும் அதை அவளிடம் இருந்து வாங்கியவர்,
“ தேங்க்யூ டியர்” என்று சொல்ல விழியோ தன்னுடைய குண்டு கன்னங்கள் விரிய அழகாக சிரித்தது.
அவளுடைய சிரிப்பை ஒரு கணம் பிரமித்து பார்த்த அந்த ஆபிஸரோ,
“உங்க பேர் என்ன ஏஞ்சல்” என்று கேட்க அவளோ, “ விழி” என்று சொல்ல அவரும்,
“ வாவ் நைஸ் அழகான தமிழ் பெயர் உங்கள மாதிரியே ரொம்ப அழகா இருக்கு” என்று சொல்ல அதற்கு புன்னகைத்த விழியோ,
“ தேங்க்யூ அங்கிள்” என்று சொல்லிய விழியோ அவரையே பார்த்துக் கொண்டிருந்தது.
அதை கவனித்த அந்த ஆபிஸரோ,
“ என்னமா என்ன அப்படியே பாத்துக்கிட்டு இருக்கிங்க ஏதாவது வேணுமா” என்று கேட்க அவளோ கேட்கலாமா வேண்டாமா என்று யோசித்து விட்டு தன் தந்தையைப் பற்றி கேட்க ஆவலாக இருப்பவளோ உடனே அவரிடம் கேட்டு விட்டாள்.
“அங்கிள் எங்க அப்பாவும் உங்களை மாதிரி மிலிட்டரி தான் உங்களுக்கு எங்க அப்பாவ தெரியுமா?” என்று ஆசையாக கேட்டது.
அவருக்கோ அந்த குழந்தை இப்படி கேட்கும் என்று எதிர்பார்க்காதவர்,
“ இங்க பாருங்க விழி ஏஞ்சல் உங்க அப்பா ஆர்மில இருக்கலாம் அங்க நிறைய பேர் இருப்பாங்க உங்க அப்பா யாருன்னு எனக்கு தெரியாதடாம்மா ஆனா இதுக்கப்புறம் நான் போகும் போது உங்க அப்பாவ பார்த்தேன்னா கண்டிப்பா உங்க பொண்ணு என்கிட்ட உங்கள பத்தி கேட்டாங்கன்னு சொல்லுவேன் சரி உங்க அப்பா பேர் என்ன எப்படி இருப்பார்” என்று கேட்டார் அவர்.
இவளோ, “ அப்பா பேரு ஐயோ நான் அம்மாகிட்ட கேட்கவே இல்லையே ஆனா அங்கிள் என்கிட்ட அப்பாவோட போட்டோ இருக்கு நீங்க பாக்குறீங்களா” என்று சொல்லியவள் தன்னுடைய குட்டி பேங்கில் இருந்து அவளுடைய அப்பாவின் போட்டோவை காட்டினாள்.
அதை பார்த்த அந்த ஆபிஸரோ,
“ ம்ம் பார்க்க ஹீரோ போல இருக்காரு கண்டிப்பா அடுத்த தடவை நான் உங்க அப்பாவ பார்த்தேன்னா சொல்றேன் சரியா இப்போ அங்கிளுக்கு டைம் ஆச்சு நான் போயிட்டு வரேன் மா” என்றவர் அவளிடம் கையசைத்து விட்டு கிளம்பி விட்டார்.
அவளும் திரும்ப தன் தாயிடம் வந்தவள்,
“அம்மா அம்மா நான் அந்த அங்கிள் கிட்ட கேட்டேன் அப்பாவ பத்தி அந்த அங்கிளும் சொன்னாரு அடுத்த தடவை அப்பாவ பார்த்தாங்க அப்படின்னா என்ன பத்தி சொல்லுவாங்களாம்” என்று சந்தோஷமாக தன் தாயிடம் சொல்லியது.
அவர்கள் செல்ல வேண்டிய பிளைட்டும் வந்து விட அவர்களுடைய சிங்கப்பூர் பயணம் இனிதாக தொடங்கியது.
Wowwwwwwww sooooo cutee vizhii ……. Lovlyyyyyyyyyy epiiiiii waiting for nxt epiii ❤️❤️❤️❤️