அத்தியாயம் 22
இந்த மூன்று வருடங்களாக மீனா அந்த ஊரை விட்டு எங்குமே செல்லவில்லை. காரணம் தன்னை தெரிந்தவர்கள் தன் குடும்பத்தை தெரிந்தவர்கள் யாரேனும் தன்னை பார்த்து அடையாளம் கண்டு விட்டால் வீட்டில் சொல்லி விடுவார்கள்.
அவளுக்கு அவளுடைய வீட்டிற்கு செல்லவே பிடிக்கவில்லை.
எப்பொழுது விஹான் தன் தங்கையை விரும்புகிறேன் என்று சொன்னானோ அன்றே அவள் மனதோடு மரித்து விட்டாள்.
மனது முழுவதும் விஹானை நினைத்துக் கொண்டு அவன் தன் தங்கையின் கழுத்தில் தாலி கட்டுவதை தாங்க முடியவில்லை.
பல போன மனதானது அவனை மறக்க மாட்டேன் என்று அடம் பிடித்தது.
அதனால் தான் அந்த வீட்டை விட்டு கிளம்ப முடிவெடுத்தாள்.
அன்று மீனா கல்யாணத்துக்கு முதல் நாள் அங்கு மாடியில் விஹானும் லல்லுவும் தனிமையில் பேசிக் கொள்வதை மீனா எதிர்ச்சியாக பார்க்க நேர்ந்தது.
அதை பார்த்தவளுக்கோ சொல்லொணா துயரம் அவளை ஆட்கொண்டது.
சொல்லாத காதலுக்கு மதிப்பில்லை தான்.
ஆனால் நினைவு தெரிந்த நாள் முதல் அவனை தனக்கானவன் என்று நினைத்து வாழ்ந்து வந்தவளுக்கு அவனை இன்னொரு பெண்ணுடன் இவ்வளவு நெருக்கமாக பார்க்க முடியவில்லை.
அந்த சமையம் திடமான ஒரு முடிவு எடுத்தாள் மீனா.
இனி தன்னுடைய வாழ்நாள் முழுவதும் விஹானையோ தன் தங்கையையோ பார்க்கக் கூடாது என்ற முடிவுக்கு வந்தாள்.
அது அவர்கள் மீதுள்ள வெறுப்பு அல்ல.
அவளால் அவர்களை எதிர்கொள்ள முடியவில்லை.
ஒருவேளை தன்னையும் மீறி ஏதாவது உளறிவிட்டால் அவர்களுடைய வாழ்க்கையும் பாழாய் போய்விடும்.
அதனால் தற்பொழுது வீட்டில் உள்ள அனைவருக்கும் தான் மும்பை செல்வதாக சொல்லியவள் உடனே கிளம்பி விட்டாள்.
ட்ரெயினில் கண்ணீரோடு அமர்ந்திருந்தவளை இடையில் அவளது பக்கத்து இடத்தில் வந்து அமர்ந்தாள் நிறை மாத கர்ப்பிணிப் பெண் ஒருத்தி.
அந்தப் பெண்ணுக்கு ஒரு 19 வயது தான் இருக்கும்.
கல்லூரி படிக்கும் பெண் அவள்.
கல்லூரியில் தன்னுடன் படிக்கும் சக மாணவனை விரும்பிய அந்தப் பெண்ணோ அவனுடன் நெருக்கமாகவும் இருக்க விளைவு வயிற்றில் உருவானது கரு.
சிறிது நாட்களுக்கு அவளுக்கு எதுவுமே தெரியவில்லை.
எப்பொழுதும் போல இருந்தாள் அந்த பெண்.
ஒரு கட்டத்தில் தான் கருவுற்று இருக்கிறோம் என்று தெரிய வந்த பொழுது அவளுடைய காதலனுடன் அதை சொல்ல அவனோ அவளை ஏளனமாக பார்த்தவன் அதற்கு தான் பொறுப்பேற்க முடியாது என்று சொல்ல,
இவளுக்கோ அவனுடைய இந்த பதிலில் என்ன செய்வது என்று தெரியவில்லை.
உடனே ஒரு சில பெண்கள் முட்டாள் தனமாக தற்கொலை செய்வதைப்போல தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தவளோ தன்னுடைய வயிற்றில் ஒரு குழந்தை இருக்கிறதே என்று யோசித்தவள்,
தான் செய்த தவறுக்கு அந்த சிறு உயிரை பலி கொடுக்க விரும்பவில்லை அந்தப் பெண்.
நாட்கள் செல்ல அவளுடைய வயிறும் பெரிதாக ஆரம்பித்தது.
அப்பொழுது அவளுடன் இருக்கும் சக மாணவிகள் அவளிடம் என்ன என்று விசாரிக்க வயிற்றில் கட்டி என்று சொல்லி சமாளித்தாள்.
எவ்வளவு காலம்தான் அவர்களிடம் இந்த பொய்யை கூறுவது இன்னும் சிறிது நாட்களில் குழந்தை பிறந்து விடும் அதன் பின்பு உண்மை அனைவருக்கும் தெரிந்து விடும் என்று நினைத்தவள் இங்கையே இருந்தால் அவள் பல கேள்விகளை எதிர் கொள்ள வேண்டி வரும் என்று நினைத்தவள் யாருக்கும் தெரியாத இடத்திற்கு செல்ல வேண்டி தன்னுடைய நிறைமாத வயிற்றோடு மீனா சென்ற அதே ரயிலில் அவளுக்கு பக்கத்தில் வந்து அமர்ந்தாள்.
அவளைப் பார்த்ததும் மீனா இவ்வளவு சிறிய வயதில் நிறைமாத வயிற்றோடு இந்தப் பெண் தனியாக வந்திருக்கிறாளே என்று தன் நிலையை மறந்து அந்த பெண்ணுக்காக வருந்தினாள்.
“ எக்ஸ்க்யூஸ் மீ சிஸ்டர் உங்க கூட யாரும் வரலையா உங்க வயிற்றை பார்த்தா எப்ப வேணாலும் டெலிவரி ஆகும் போல இருக்கு ஆனா தனியா வந்து இருக்கீங்க” என்று வினவ அந்த பெண்ணும் இவளை பார்த்ததும் என்ன நினைத்தாலோ தன்னுடைய வாழ்க்கையில் நடந்ததை அவளிடம் சொல்ல, அவளுக்கோ அதைக் கேட்டு ஆத்திரமாத்திரமாக வந்தது.
அவளுடைய காதலனை கண்டம் துண்டமாக வெட்டி போடும் அளவுக்கு கோபம் வந்தது.
அப்பொழுதுதான் அந்த கோரச் சம்பவம் நடந்தேறியது.
டிரெயின்கள் இரண்டும் மோதிக்கொண்டதில் இவர்கள் இருந்த பெட்டியோ தலைகீழாக விழுந்தது.
நள்ளிரவில் நடந்த விபத்தினால் பல உயிர்கள் பலியாகின.
அந்த சமயம் இந்த கர்ப்பிணி பெண்ணுக்கும் பலத்த அடி ஏற்பட்டது. மீனாவுக்கும் அதே போல தலையில் பலத்த அடி ஏற்பட்டது.
சிறிது நேரத்தில் தன்னை சமாளித்துக் கொண்டவள் தன் அருகே இருந்த அந்த பெண்ணை பார்க்க அவளோ வலியில் துடித்துக் கொண்டிருந்தாள்.
“ ஹேய் எழுந்திரு ட்ரெயின் தீப்பிடிக்குது” என்று அவளைக் கைப்பிடித்த எலுப்ப முயன்றாள் மீனா.
அந்தப் பெண்ணுக்கோ இடுப்பில் பலமான அடி ஏற்பட்டதால் அவளால் தன்னுடைய உடம்பை கொஞ்சம் கூட நகர்த்த முடியவில்லை.
“ஆஆஆ அக்கா என்னால எழுந்துக்க முடியல அம்மாஆஆஆ வயிறு வலிக்குது” என்று தன்னுடைய வயிற்றைப் பிடித்துக் கொண்டு அலறினாள்.
மீனாவோ,
“ அச்சச்சோ இந்த பொண்ணுக்கு லேபர் பெயின் வந்துட்டு போல இப்ப நான் என்ன செய்வேன்” என்று புலம்பியவள் தன்னால் முடிந்தவரை அவளை எழுப்ப போராடினாள்.
நாலு எலும்பும் அரை கிலோ சதையும் வைத்துக் கொண்டு அவளாலும் எவ்வளவு நேரம் தான் போராட முடியும்.
ஒரு கட்டத்தில் மூச்சு வாங்க அவள் அருகில் அமர்ந்தவள்,
“ இங்க பாருமா கொஞ்சம் முயற்சி பண்ணு இல்லைன்னா நம்ம இங்கையே செத்துருவோம்” என்று மீனா சொல்ல அந்த பெண்ணுக்கோ இடுப்பில் ஏற்பட்ட வலியாலும் கூடவே வந்த பிரசவ வலியாலும் துடித்துக் கொண்டிருந்தவள்,
“ அக்கா நான் எவ்வளவோ முயற்சி பண்றேன் என்னால முடியல எனக்கு என்ன ஆனாலும் பரவால்ல என் குழந்தையை மட்டும் காப்பாத்துங்க அக்கா ப்ளீஸ்” என்று மீனாவிடம் கையெடுத்து கும்பிட்டாள்.
மீனா டாக்டருக்கு படித்ததால் அந்தப் பெண்ணுக்கு டெலிவரி பார்க்க முன்னுக்கு வந்தாள்.
இங்கு இந்த பெண்ணுக்கு இவள் ஒரு மருத்துவராக பிரசவம் பார்த்துக் கொண்டிருக்க அங்கு மோதப்பட்ட இரண்டு டிரெயின்களும் கொஞ்சம் கொஞ்சமாக எரியத் தொடங்கின.
இவர்களுடைய பெட்டியும் நெருப்புக்கு இறையாக ஆரம்பித்த சமயம் இந்த உலகுக்கு வந்தாள் விழி.
தன் கையில் ஏந்திய அந்த சிறு மொட்டை அந்தப் பெண்ணுக்கு காட்ட ஐயோ பாவம் குழந்தை அவள் வயிற்றை விட்டு வெளி வரவும் அந்தப் பெண்ணின் இறுதி மூச்சு வெளிவரவும் சரியாக இருந்தது.
தன் காதலன் ஏமாற்றிய வழியில் தற்கொலை செய்து கொள்ள முயன்ற அந்தப் பெண்ணோ இனி தன் வயிற்றில் இருக்கும் குழந்தைக்காக வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டவளோ குழந்தையை இந்த உலகுக்கு கொண்டு வந்த உடன் அவளுடைய உயிரோ இந்த உலகை விட்டு பிரிந்து சென்றது.
அவள் இறந்து விட்டதை உறுதிப்படுத்திய மீனாவோ ஒரு நிமிடம் ஆடித்தான் போனாள்.
சற்று நேரம் பிரம்மை பிடித்தவள் போல் அமர்ந்திருந்தவளை விழியின் அழுகை சத்தம் அவளை நிகழ் உலகத்திற்கு கொண்டு வந்தது.
அப்பொழுதே அவளுக்கு அங்கு இருக்கும் சூழ்நிலை புரிய சுதாரித்தவள் குழந்தையை பாதுகாப்பாக ஒரு துணியை எடுத்து சுத்தியவள் அந்தப் பெட்டி முழுவதும் எறிவதற்குள் அங்கிருந்து தப்பிச் சென்றாள்.
தட்டு தடுமாறி குழந்தையை கையில் தூக்கிக் கொண்டு ஓடியவளுக்கோ தலையில் ஏற்பட்ட காயத்திலிருந்து ரத்தம் வந்து கொண்டிருக்க ஒரு கட்டத்தில் சுயம் இழந்தவள் காட்டுக்குள் மயங்கி சரிந்தாள்.
அப்பொழுது கூட குழந்தையை மிகவும் பாதுகாப்பாக தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள்.
அதுவும் இனி இவள் தான் தன் தாய் என்று உணர்ந்ததோ என்னவோ சுகமாக அவளுடைய மார்புக்குள் துயில் கொண்டது.
மறுநாள் காலையில் மயக்கம் தெளிந்து எழுந்த மீனாவோ,
“ அய்யோ என் குழந்தை என் குழந்தை” என்று கத்த,
“ பொண்ணு எழுந்துட்டியா பயப்படாதே இந்தா இருக்காள் உன் குழந்தை குழந்தை பசியில ரொம்ப நேரமா அழுதுகிட்டே இருந்தது உன்ன பார்த்தா நீ மயக்கம் தெளியாம இருந்தா மா அதான் ஆபத்துக்கு பாவம் இல்லன்னு என் பொண்ணு இப்பதான் குழந்தை பெத்து இருக்கா அவகிட்ட கொடுத்து பசி யாத்திட்டு கொண்டு வந்தேன்ம்மா இப்போ உனக்கு எப்படி இருக்கு”
என்றவாறு விழியை மீனாவின் கையில் கொடுத்தார் அந்த மருத்துவச்சி.
காட்டில் மயங்கி விழுந்தவளை அங்கு உள்ள பழங்குடியினர் பார்த்து தூக்கிக் கொண்டு வந்து அங்கு உள்ள மருத்துவச்சியிடம் ஒப்படைத்தனர்.
தன் கையில் குழந்தையை வாங்கியவள், “ரொம்ப நன்றிமா கொஞ்சம் பரவாயில்லை ஆனா தல தான் கொஞ்சம் வலி இருக்கு” என்றாள் மீனா.
“கவலைப்படாதம்மா நான் மறந்து வச்சு நல்லா கேட்டு இருக்கேன் ரெண்டு நாளுக்குள்ள நீ முழுமையா சரியாகிடுவ இருமா நான் உனக்கு சாப்பிட ஏதாவது எடுத்துட்டு வரேன்”
அதன் பிறகு இரண்டு நாட்கள் அங்கிருந்தவள் பக்கத்து ஊருக்கு விழியுடன் வந்தாள்.
இனி தான் தன் வாழ்க்கையை எப்படி வாழ போகிறோம் என்று நினைத்து ஊரை விட்டு தன் குடும்பத்தை விட்டு வந்தவளுக்கோ அந்த கடவுள் விழியை அவளோடு இணைத்து விட்டார்.
கழுத்தில் தாலி இல்லாமல் அருகில் கணவனும் இல்லாமல் கையில் ஒரு குழந்தையோடு இருக்கும் பெண்ணை இந்த சமூகம் பலவிதமாக சித்தரிக்கும்.
அதிலிருந்து தப்பிக்க வேண்டும் என்றால் ஒரு வழி தான் இருக்கிறது என்று நினைத்தவள் அருகில் ஒரு கோவிலுக்கு சென்றவள் வேண்டுதலுக்காக கட்டப்பட்டிருக்கும் ஒரு மஞ்சள் கயிறை எடுத்து அந்த நிலையிலும் கூட தன்னுடைய காதலன் விஹானை நினைத்துக் கொண்டு தனக்குத்தானே தாலியை கட்டிக் கொண்டாள்.
அதேபோல நெற்றி வகுட்டில் குங்குமமும் வைத்துக்கொண்டவளுக்கோ கண்கள் கலங்கின விஹானை நினைத்து.
அவன் கையால் தன் கழுத்தில் ஏற வேண்டிய தாலி, அவன் கையால் தன் நெற்றி வகுட்டில் இடப்படும் திலகம்.
ஆனால் அவன் நினைவோடு அவளே அவளுக்கு சூடிக் கொள்ளும் நிலைமை வரும் என அவள் கனவில் கூட நினைக்கவில்லை.
தன் விதியை நொந்து கொண்டவள் விழியை தூக்கிக் கொண்டு பக்கத்து ஊருக்கு சென்றவள் வீடு தேட தொடங்கினாள்.
ஆனால் பாவம் அவளுக்கு வீடு கொடுக்கும் நல்ல உள்ளம் தான் கிடைக்கவில்லை.
ஒரு நாள் முழுவதும் கையில் குழந்தையோடு வீடு தேடி அலைந்தவளோ இடை இடையே குழந்தையின் பசியை மற்றும் போக்கியவள் தன்னை பற்றி கவனிக்காததால் அவளுடைய உடலும் சோர்வு கொண்டது.
இனி முடியாது என்பது போல ஒரு வீட்டின் முன்னே அமர்ந்துவிட்டாள்.
அப்பொழுது அந்த வீட்டின் உள்ளே இருந்து ஒரு வயதான அம்மா ஒருவர் வெளியே வந்தவர் இவளை பார்த்து,
“ அட யாருமா நீ கையில பிள்ளையோட வேற இருக்க யாருமா நீ” என்று விசாரிக்க தான் வீடு தேடி வந்ததை அவரிடம் கூற அவரும்,
“ என்னமா நீ மட்டும் தான் வந்திருக்க உன் புருஷன் எங்க” என்று கேட்க,
“ பாட்டிமா அவரு மிலிட்டரியில் வேலை பார்க்கிறார் எப்பவாவது தான் வருவாரு அதனாலதான் நான் மட்டும் வந்தேன் ப்ளீஸ் பாட்டிமா இங்க நிறைய இடத்துல நான் வீடு கேட்டேன் ஆனா யாருமே வீடு இல்லை என்று சொல்லிட்டாங்க பொழுது வேற இருட்ட ஆரம்பிச்சுட்டு நான் இந்த ஊருக்கு புதுசு கையில பிள்ளையோட எங்க போறதுன்னு தெரியலை பாட்டிமா உங்களுக்கு ஒன்னும் பிரச்சனை இல்லன்னா இன்னைக்கு நைட்டு மட்டும் நான் இங்கே இருந்து கிட்டுமா” என்று கேட்க, அந்த பாட்டியம்மாவிற்கோ இவளை பார்க்க பாவமாக இருந்தது.
உடனே “இங்க பாருமா நீ இன்னைக்கு ராத்திரி மட்டும் இங்கு இருக்க வேண்டாம் நான் உனக்கு வீடு தரேன் நீ இங்கேயே இருந்துக்கோ” என்று பாட்டி சொல்ல அவளுக்கோ நிம்மதியாக இருந்தது.
இப்பொழுது அவளுக்கு தங்க வீடும் கிடைத்தது. அதேபோல நாட்கள் செல்ல செல்ல தன்னுடைய ட்ராயிங் மூலமாக தனக்கென ஒரு வேலையும் தேடிக் கொண்டாள் மீனா.
அவளுடைய எண்ணங்களோ தான் தன்னுடைய குழந்தை அவ்வளவே இப்பொழுது வரை இருந்து கொண்டிருந்தது. இனி கடவுள் அவள் தலையில் என்ன எழுதி இருக்காரோ பார்ப்போம்.
சிங்கப்பூரின் ஏர்போர்ட்டில் மீனாவை ஏற்றி வந்த விமானமும் வந்தடைய விஹானை ஏற்றி வந்த விமானமும் வந்தடைந்தது.
Superb epiiiiii ❤️❤️❤️❤️❤️❤️ lovlyyyyyyyyyy intresting…….