அத்தியாயம் 23
சிங்கப்பூர் விமான நிலையத்தில் கால் பதித்தார்கள் விஹானும் மீனாவும்.
அங்கு உள்ள பிரபலமான பைவ் ஸ்டார் ஹோட்டலுக்கு வந்தவர்கள் மீனாவுக்கும் விழிக்கும் ஒரு அறை, ரஞ்சனிக்கு ஒரு அறை என்று புக் செய்து கொண்டார்கள்.
“ மீனா நீங்க உங்க ரூமுக்கு போய் நல்லா ரெஸ்ட் எடுங்க டிராவல் பண்ண டயர்ட் இருக்கும் நாளைக்கு மார்னிங் ஓவிய கண்காட்சி நடக்கிற இடத்துக்கு போய் ரெஜிஸ்டர் பண்ணிட்டு அதுக்கப்புறம் நாளைக்கு நாம சிங்கப்பூர் சுத்தி பார்க்க போவோம்.
ரிஜிஸ்டர் பண்ண அடுத்த நாள் தான் எக்ஸிபிஷன் நடக்கப்போகுது சோ நாளைக்கு நாம நல்லா என்ஜாய் பண்ணலாம். என்ன விழி உனக்கு ஓகேவா” என்று மீனாவிடம் ஆரம்பித்து விழியிடம் முடித்தாள் ரஞ்சனி.
ரஞ்சனிக்கு விழியை ரொம்ப பிடித்திருந்தது.
பிளைட்டில் வரும் பொழுது விழி தங்களை கடந்து போகும் மேகங்களையும் கடலையும் என ஒவ்வொன்றையும் பார்த்து தன் தாயிடம் சந்தோசமாக சொல்லிக் கொண்டு வர அவளுடைய கிள்ளை மொழியின் பேச்சு சிக்கிக்கொண்டாள் ரஞ்சனி.
“ ம்ம் ஓகே ஆன்ட்டி நல்லா என்ஜாய் பண்ணலாம். மீனாம்மாவும் விழியும் எப்பவோ ரெடி அப்படித்தானம்மா” என்று மீனாவிடம் கேட்க மீனாவும் ஆம் என தலையசைத்து புன்னகைத்தாள்.
“ சரி சரி ஓகே நீங்க ரெண்டு பேரும் போயி நல்ல ரெஸ்ட் எடுங்க நானும் கொஞ்சம் போய் ரெஸ்ட் எடுக்கிறேன் கொஞ்ச நேரத்துல நான் உங்க ரெண்டு பேருக்கும் வந்து சாப்பிட கூட்டிட்டு போறேன் பாய்” என்று அவர்களிடம் விடைபெற்ற ரஞ்சனியோ தன்னுடைய அறைக்குச் சென்று விட்டாள்.
இங்கு மீனாவும் விழியும் தங்களுடைய அறைக்கு வந்தார்கள்.
விழியை குளிக்க வைத்து மீனாவும் குளித்து முடித்தவள் நன்றாக ஓய்வெடுக்க ஆரம்பித்தார்கள்.
அதேபோல மீனா தங்கி இருந்த அதே ஃபைவ் ஸ்டார் ஹோட்டலுக்கு வந்தான் விஹான்.
தன்னுடைய அறைக்கு வந்த விஹானோ வாஷ்ரூம் போய் தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வந்தவன் ஒரு டீ கப் ஒன்றை எடுத்து கொண்டு பால்கனிக்கு வந்தவன் பரந்து விரிந்து இருந்த வானத்தை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான்.
சிறிது நேரம் அங்கேயே நின்று மீனாவின் நினைவுகளில் உழன்று கொண்டிருந்தவனை அவனுடைய அன்னையின் போன் கால் அழைத்தது.
போனை எடுத்து காதில் வைத்தவன்,
“ எஸ் மாம்” என்க,
உடனே சித்ராவோ,
“ எங்க கண்ணா இருக்க” என்று கேட்க,
“ என்னம்மா சிங்கப்பூர் போறேன்னு சொல்லிட்டு தானே வந்தேன் இப்ப எங்க இருக்கேன்னு கேட்டா என்ன அர்த்தம்” என்று தன் குரலை உயர்த்த,
“ இப்ப ஏன்டா கத்துற ஏதோ ஒரு ஃப்ளோர்ல கேட்டுட்டேன் சரி விடு. சரி சிங்கப்பூர்ல இருந்து வரும் போது அம்மாவுக்கு ஏதாவது வாங்கிட்டு வாடா” என்று ஆசையாக கேட்க இவனோ,
“ ஹான் ஒரு பாட்டில் விஷம் வாங்கிட்டு வரேன் சரியா” என்க,
அந்தப் பக்கம் இருந்த சித்ராவுக்கோ மினி ஹார்ட் அட்டடைக்கே வந்துவிட்டது அவனுடைய பதிலில்,
“ டேய் என்னடா விஷம் வாங்கிட்டு வரேன்னு சொல்ற விட்டா நீயே ஊத்தி விட்டுடுவ போல” என்று சொல்ல விஹானோ வாய் வரைக்கும் வந்த இரண்டு ஆங்கில கெட்ட வார்த்தைகளை முழுங்கியவன் தன்னை நிதானப்படுத்திக் கொண்டு,
“ அம்மான்னு பார்க்குறேன் மரியாதையாக போன வெச்சுடுங்க” என்று சொல்ல,
“ ஏண்டா நான் என்னடா பண்ணேன்”
என்று முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு கேட்க,
“ என் வாழ்க்கை இப்படி ஆனதுக்கு முழு காரணமே நீங்கதான்”
என்று சொல்ல அதைக் கேட்ட சித்ராவுக்கோ முகம் வாடியது.
“ நான் பாட்டுக்கு இங்க நிம்மதியா இருந்தேன் நீங்கதான் என்ன உங்க ஊருக்கு கூட்டிட்டு போனீங்க அதுக்கு பிறகு என்னெல்லாமோ நடந்துட்டு என் லைப்பே டோட்டலா போயிட்டு மா” என்று அழுக ஆரம்பித்தான் அந்த ஆறடி ஆண்மகன்.
இங்கு சித்ராவோ தன் மகனை எப்படி தேற்றுவது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தார்.
“விஹான் கண்ணா இங்க பாருடா நீ அழக்கூடாது உன் வாழ்க்கை இதோடு முடிஞ்சிடக் கூடாது டா நீ முதல்ல மாதிரி சந்தோஷமா இருப்படா கண்ணா, அழாதடா அம்மாவுக்கு ஒரு மாதிரி இருக்குடா” என்று மகன் அழுவதை தாங்க முடியாமல் அந்த தாயும் கண்ணீர் வடித்தார்.
“ நான் ஃபோனை வைக்கிறேன் நீங்க ஃபீல் பண்ணாதீங்க” என்றவன் உடனே அழைப்பை துண்டித்து விட்டான்.
இங்கு சித்ராவோ அவன் ஃபோனை வைத்ததும் நேராக பூஜை அறைக்குள் நுழைந்தவர்,
“அம்மா தாயே என் புள்ள மீனாவை மறக்க முடியாமல் தினமும் ரொம்ப கஷ்டப்படுறான் நானும் நாள் போகப் போக சரியாகிடுவான்னு நினைச்சேன் ஆனா அவன் மனசு கொஞ்சம் கூட மீனாவை மறக்கல. சீக்கிரம் அவன் சரியாகனும் பழையபடி என் புள்ளையை நான் சந்தோஷமா பார்க்கணும் அதுக்கு அவன் வாழ்க்கையில் கூடிய சீக்கிரம் ஒரு பொண்ணு வரணும் நீங்க தான் மனசு வைக்கணும்மா” என்று வேண்டுதல் வைக்க,
அங்கு சிங்கப்பூரில் ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் தூங்கிக் கொண்டிருந்த மீனாவுக்கோ புறை ஏறியது.
தூக்கத்திலிருந்து விழித்தவள் இருமியவாறு எழும்பி தண்ணீரை எடுத்துக் குடிக்க அவளுடைய விலகளில் விழித்த விழியோ அவள் இருமுவதை பார்த்து,
“ அம்மா என்னாச்சு உங்களுக்கு ஏன் அழறீங்க” என்று கேட்க அவளோ தண்ணீரை குடித்தவள்,
“ அம்மாவுக்கு ஒன்னும் இல்லடா தங்கம் ரொம்ப இருமல் வந்துச்சா அதான் கண்ணீர் வந்துட்டு இப்ப சரியாகிடும் நீ படு” என்று குழந்தையை தூங்க வைத்தாள்.
சிறிது நேரம் கழித்து அவர்கள் அறையைத் தட்டினாள் ரஞ்சனி.
நல்ல தூக்கத்தில் இருந்த மீனாவும் எழுந்து வந்து கதவைத் திறந்து ரஞ்சனியை உள்ளே அழைத்தாள்.
உள்ளே வந்த ரஞ்சனியோ,
“ என்ன மீனா நல்ல தூக்கமா டைம் ரொம்ப ஆக்கிட்டு நைட்டு சாப்பிட வேண்டாமா நான் ஆர்டர் பண்ணிட்டேன் இன்னும் கொஞ்ச நேரத்துல இங்க வந்துடும். எங்க மை ஏஞ்சல் விழிக்குட்டி” என்று கேட்டவாறே வந்தவள் அங்கு கட்டிலில் விழி தூங்கிக் கொண்டிருக்க அவள் தூங்கும் அழகை ரசித்தாள் ரஞ்சனி.
அவளுடைய நெற்றியில் இதழ் பதித்த ரஞ்சனியோ,
“ மீனா விழிய எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அவளை எனக்கு கொடுத்திறீங்களா” என்று மீனாவிடம் கேட்டே விட்டாள்.
மீனாவோ அவளுடைய கூற்றில் லேசாக புன்னகைத்தவள்,
“ என்னோட உலகமே என் விழிக்குட்டி தான் உங்களுக்கு கொடுத்துட்டா நான் என்ன செய்வேன்” என்று சொல்ல சிரித்தாள் ரஞ்சனி.
“ சரி மீனா எக்சிபிஷனுக்கு வைக்கிற பெயிண்டிங் எல்லாம் இப்பவே எடுத்து வச்சிடுங்க மார்னிங் ரெஜிஸ்டர் பண்ணும் போது எல்லாத்தையும் கொடுக்கணும்” என்று ரஞ்சனி சொல்ல அப்பொழுது அவர்களுக்கு என ஆர்டர் செய்த டின்னர் வந்தது.
“ஓகே மீனா சாப்பிட்டு எடுத்து வைக்கலாம் வாங்க நானும் உங்களுக்கு ஹெல்ப் பண்றேன் நான் சாப்பாடு எல்லாத்தையும் எடுத்து வைக்கிறேன் நீங்க விழிய எழுப்பி கூட்டிட்டு வாங்க” என்றாள்.
மீனாவோ சரி என்றவள் விழியை எழுப்பி கூட்டிட்டு வந்தாள்.
பின்பு மூவரும் தங்களுக்கான இரவு உணவை உண்டு முடித்தனர்.
பின்பு ஓவியங்களை மூவரும் எடுத்து வைக்க ஆரம்பித்தனர்.
இங்கு விஹானோ தன் மனக் கவலையை தாயிடம் கொட்டியவன் அன்றைய இரவு நிம்மதியாக தூங்கிப் போனான்.
மறுநாள் பொழுது விடிய மீனா விழி ரஞ்சனி மூவரும் சொன்னது போலவே ஓவியக் கண்காட்சி நடக்கும் இடத்திற்கு சென்றவர்கள் மீனாவின் பெயரை ரெஜிஸ்டர் செய்துவிட்டு அவர்கள் கொண்டு வந்த ஓவியங்களையும் அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு சுற்றிப் பார்க்க சென்றார்கள்.
அங்கு ரொம்பவே ஃபேமஸான ‘சிங்கப்பூர் ஜூ’ என்று இன்னும் பல இடங்கள் என இவர்கள் ஒரு பக்கம் அன்றைய நாளை சந்தோஷமாக கழித்துக் கொண்டிருக்க,
இங்கு விஹானோ மீனாவின் பெயிண்டிங்கை எடுத்து வந்தவன் ரிஜிஸ்டர் செய்வதற்காக அங்கு உள்ள பெண்ணிடம் அனைத்து விவரங்களையும் கேட்டுக்கொண்டு “விழி” என்ற பெயரில் ரிஜிஸ்டர் செய்ய சொல்ல, அந்த பெண்ணோ,
“ சார் ஆல்ரெடி இதே நேம்ல வேற ஒருத்தர் ரிஜிஸ்டர் செஞ்சிருக்காங்க இந்த பெயர் தானா இல்ல நீங்க மாத்தி ஏதும் கொடுக்கிறீர்களா” என்று இவனிடம் கேட்க,
“ வாட் ஆல்ரெடி இதே நேம்ல ரிஜிஸ்டர் ஆகி இருக்கா எப்படி? நீங்க இன்னொரு தடவை நல்லா செக் பண்ணி பாருங்க” என்று இவனும் அந்த பெண்ணிடம் சொல்ல,
அந்த பெண்ணோ,
“ இல்லை சார் நான் நல்லா செக் பண்ணிட்டு தான் சொல்றேன் விழி என்ற பேர்ல ஆல்ரெடி இன்னைக்கு மார்னிங் தான் ரெஜிஸ்டர் ஆகியிருக்கு. அவங்களோட சாப்ட் காப்பி கூட இருக்கு சார். நீங்க வேற பேர்ல ரிஜிஸ்டர் பண்ணனும்னா சொல்லுங்க” என்றாள் அந்த பெண்.
“என்ன மேடம் இப்படி சொல்றீங்க என்னோட பெயிண்டிங்ஸ்ல எல்லாத்துலயுமே விழின்னு தான் இருக்கு. ரிஜிஸ்டர்ல எப்படி வேற பேர் கொடுக்க முடியும். நீங்க சொன்ன அந்த விழி என்ற பேர்ல ரிஜிஸ்டர் ஆனவங்களோட சாப்ட் காப்பிய நான் பார்க்கலாமா எனக்கு என்னவோ வேற யாரோ ஏமாற்றுகிறார்களோன்னு தோணுது” என்றான் விஹான்.
அந்த பெண்ணோ,
“ எப்படி சார் இவ்வளவு உறுதியாக சொல்றீங்க” என்று கேட்க,
“ மேம் ப்ளீஸ் எனக்கு உறுதியா தெரியும் விழிங்கிற பேர்ல என்கிட்ட இருக்கிறது தான் லாஸ்ட் பெயிண்டிங்ஸ் அதே பேர்ல வேற ஒருத்தங்க குடுத்துருக்காங்க அப்படின்னா கண்டிப்பா வேற யாரோ ஏமாத்துறாங்கன்னு தான் அர்த்தம் நீங்க ஃபர்ஸ்ட் அந்த சாப்ட் காப்பியை காமிங்க”
என்று சொல்ல,
“ ஒன் மினிட்ஸ் சார்” என்றவள் அந்த சாப்ட் காப்பியை அவனிடம் காட்ட அதிலிருந்த ஓவியத்தை பார்த்தவனுடைய விழிகளோ அதிர்ச்சியில் விரிய ஆரம்பித்தன.
Wowwwww sema semaaa superb sis….. Soooo intresting plssss continuous upload panunga sisss…… Waiting…..