அத்தியாயம் 27
ரஞ்சனியிடம் விழியை சற்று நேரம் பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு மீனாவை அங்கு ஒரு ஓரமாக மறைவான இடத்திற்கு அழைத்து வந்த விஹானோ சட்டென அவளுடைய கன்னத்தில் பளார் என விட்டான் ஒரு அறையை.
அவன் அறைந்த வேகத்தில் மீனாவின் கன்னம் திபு திபு வென்று எறிய ஆரம்பிக்க கண்களில் கண்ணீர் வழிய சத்தமே வராமல் அடி வாங்கிய கண்ணத்தி கையை வைத்தவாறே கண்ணீர் வடித்தாளே தவிர அவனிடம் ஏன் அடிக்கிறீங்க என்று ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை.
இங்கு விஹானுக்கோ சொல்ல முடியாத ஆத்திரம் அவனுக்கு.
இவளை நினைத்து அவளுடைய குடும்பம் உட்பட இன்று வரை இவள் உயிரோடு இல்லை என்று துடித்துக் கொண்டிருக்க, இவளோ இங்கு கல்யாணம் கட்டி குழந்தை வேறு பெற்று சந்தோஷமாக இருக்கிறாள்.
“ என்ன மீனா ரொம்ப சந்தோஷமா இருக்க போல. உன்ன மாதிரி ஒரு சுயநலக்காரிய நான் இதுவரைக்கும் பார்த்ததே இல்லை.
எப்படி உன்னால இப்படி இருக்க முடியுது.
இந்த மூணு வருஷமா நீ உயிரோட இல்லைன்னு அங்க அவ்ளோ பேரும் எவ்வளவு கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்காங்க. ஆனா நீ எந்த ஒரு குற்ற உணர்ச்சியும் இல்லாம இங்க சந்தோஷமா வாழ்ந்துகிட்டு இருக்க. அட்லீஸ்ட் நீ உயிரோடு இருக்கிறதாவது உன் குடும்பத்துக்கு தெரியப்படுத்திருக்கலாமே” என்று கோபத்தில் சீறினான் விஹான். அவளோ அழுகையோடு அவனிடம் பேச வாய் எடுக்க தன்னுடைய கையை நீட்டி தடுத்தவன்,
“ இரு நான் பேசி முடிச்சிடுறேன் அதுக்கப்புறம் நீ பேசு” என்றவன் இவ்வளவு நேரம் அவளுடைய குடும்பத்தை பற்றி பேசியவன்,
“இப்போ இங்க நீ கல்யாணம் பண்ணி ஒரு குழந்தையோட சந்தோஷமா உன்னோட லைஃப் நீ பார்த்துகிட்டு இருக்கன்னா அப்புறம் எதுக்காக என்ன லவ் பண்றேன்னு நாடகம் ஆடின? எதுக்காக எனக்கு டிராயிங் அனுப்பி என்னோட மனச கெடுத்த? நானா உன் பின்னாடி வந்தேன். நானா உன்ன லவ் பண்றேன்னு டார்ச்சர் பண்ணேன். நீதானடி எனக்கு டிராயிங் அனுப்பி எனக்கு உன் மேல காதல் வரவச்சி என்ன இந்த மூணு வருஷமா பைத்தியக்காரன் மாதிரி திரிய வச்சிட்டியேடி இதெல்லாம் ஏன் செஞ்ச சொல்லு மீனா”
அவன் இவ்வளவு நேரம் பேசியதை அமைதியாக கேட்டு அழுது கொண்டிருந்தவளோ, “என்னையே காதலிக்கிற மாதிரி நடிச்சு ஏன் ஏமாத்தின” என்ற சொல்லைக் கேட்டதும் வெடுக்கென அவனை நிமிர்ந்து பார்த்தாள் மீனா.
அப்படி என்றால் அத்தானுக்கு விழி நான் தான் என்று தெரிந்து விட்டதா. என்ன கூறுகிறார் இவர்.
“எனக்கு உன் மேல காதல் வரவச்சி என்ன இந்த மூணு வருஷமா பைத்தியக்காரன் மாதிரி திரிய வச்சிட்டியேடி” என்று சொல்கிறார் இவர். இந்த மூன்று வருடங்களாக பைத்தியக்காரன் மாதிரி திரிய வைத்து விட்டேன் என்றால் அப்போ இவருடைய திருமணம்.
லல்லுவை இவர் திருமணம் செய்யவில்லையா என்று அவள் மனதில் ஓடிய கேள்விகளோடு அவனை ஆராய்ச்சியாக பார்க்க.
“ என்ன அடுத்து என்ன பொய் சொல்லி இவனை ஏமாற்றலாம்னு பாத்துட்டு இருக்கிய. உண்மைய சொல்லு மீனா ஏன் இப்படி எல்லாம் செஞ்ச” என்று கேட்க அவளோ,
“ ஐ அம் சாரி” என்று அவள் ஆரம்பிக்க திரும்பவும் கை ஓங்கி விட்டான் அவளுடைய கன்னத்தை நோக்கி விஹான்.
என்ன நினைத்தானோ ஓங்கிய கையை அப்படியே அந்தரத்தில் நிறுத்தியவாறு,
“ இங்க பாரு மீனா உன்னோட இந்த நடிப்பை பார்த்து ஏமாந்து போக நான் ஒன்னும் பழைய விஹான் இல்ல இந்த “சாரி” இதை கேட்டாலே எனக்கு அப்படியே பத்திக்கிட்டு வருது. ஏன் டி உனக்கு என் கிட்ட பேசுறதுக்கு வேற எதுவுமே இல்லையா. இந்த சாரி இந்த சாரி இதனால தான் என் வாழ்க்கையே இப்படி ஆகி போய் கிடக்கு இதுக்கு பிறகும் திரும்பவும் அதே மாதிரி சாரின்னு சொல்ல வாய் எடுக்க. உன்னை கொன்றுவேன் மீனா” என்று விஹான் படபட பட்டாசு என பொரிந்து தள்ளிக் கொண்டிருந்தான்.
அவனுடைய இந்த ருத்ர தாண்டவத்தில் செய்வதறியாது பேய் அறைந்தார் போல நின்றாள் மீன.
அவனிடம் கேட்பதற்கு நிறைய கேள்விகள் இருந்தாலும் பாவை அவளுக்கோ அவனிடம் கேட்கத்தான் முடியவில்லை.
“இப்ப வாயைத் திறக்க போறியா இல்லையா” என்று விஹான் ஒரு பக்கம் கத்த இவளோ ஒருவாரு தன்னை திடப்படுத்திக் கொண்டு தைரியத்தை வரவழைத்தவள் போல அவனிடம் தன்னுடைய கேள்விகளை கேட்க முன்வந்தாள்.
“உங்களுக்கு நான் தான் விழின்னு எப்போ தெரிய வந்தது” என்று அவள் கேட்க விஹானோ அவளை கோப விழிகளோடு ஏற இறங்க பார்த்தவன்,
“ ஆமா இப்ப அது ரொம்ப முக்கியம் எனக்கு எப்ப தெரிய வந்தால் உனக்கு என்ன அதான் தெரிஞ்சு என் வாழ்க்கையே இப்படி நாசமா போச்சே இப்ப அதை கேட்டு நீ என்ன செய்ய போற. நீதான் வேற ஒருத்தனை கல்யாணம் பண்ணி இவ்ளோ உயரத்துக்கு பிள்ளையும் பெற்று வச்சிருக்கியே இப்போ நான் சொன்னா உடனே என் கூட வந்துடுவியா” என்று கேட்டுவிட அவளும்,
“ இல்ல அப்படி எல்லாம் இல்ல” என்று அவள் சொல்ல,
“ ஓஓ அப்போ வரமாட்டீங்க இத்தனை வருஷமா உன்னையே நினைச்சு பைத்தியக்காரன் மாதிரி சுத்திக்கிட்டு இருந்த நான் முட்டாள் அப்படித்தானே”
“அது அத்தா”
“போதும் நிப்பாட்டு என்ன உருகி உருகி காதலிச்ச என்னோட விழி நீ தான்னு தெரிஞ்சதுக்கப்புறம் லாலியோட நடக்க இருந்த கல்யாணத்த நிறுத்திட்டு உன்னோட நினைப்பிலேயே இத்தனை வருஷமா வாழ்ந்துகிட்டு இருந்தேன்.
இப்போ நீ உயிரோடு இருக்கிறாய் என்று தெரிஞ்சதுக்கு அப்புறம் உன்னை எப்படியோ போன்னு விட்டுட்டு போறதுக்கு நான் என்ன சொம்பையா. எனக்கு நீ என்ன செய்வியோ ஏது செய்வியோ தெரியாது இதுக்கு பிறகு நீ என் கூட தான் இருந்தாகணும்” என்று விடாப்பிடியாக நின்றான் விஹான்.
மீனாவுக்கோ அவன் திட்டுவது எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் அவன் மூன்று வருடமாக தன்னுடைய நினைப்பில் வாழ்கின்றான். லல்லு உடனான திருமணத்தை நிறுத்தி விட்டான். இது இரண்டுமே அவளுடைய மனதுக்குள் ஓடிக் கொண்டிருந்தது.
ஆனால் விஹானோ,
“ என்ன மீனா மேடம் யோசிச்சுக்கிட்டு இருக்கீங்க இப்ப கல்யாணம் பண்ணவன் கிட்ட என்ன பொய் சொல்லலாம்னு யோசிக்கிறியா? அவன்கிட்ட நீ என்ன சொல்லுவியோ ஏது சொல்லுவியோ எனக்குத் தெரியாது இன்னைக்கு ஒரு நாள் உனக்கு டைம் தரேன் நாளைல இருந்து நீ என் கூட தான் இருந்தாகணும்” என்றவன் இதழ்களோ மீனாவுக்குத் தெரியாமல் குறும்பில் லேசாக புன்னகை பூத்தன.
அவளை பார்த்த நொடியில் இருந்து அவன் மனதில் தோன்றிய கேள்விகளை எல்லாம் அவளிடம் கேட்டு விட்டான்.
அதற்கு அவள் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்க அவளுடைய அந்த நிலையைக் கூட ரசித்தவனுக்கோ அவளுடன் சிறிது விளையாண்டு பார்க்க ஆசை அரும்பியது.
அவனுக்கு ஒன்று தெளிவாக புரிந்தது.
விழி நன்றாக பேசுவதை பார்த்தால் அவளுக்கு எப்படியும் மூன்று வயதிற்கு மேல் இருக்கும். மீனா தங்களை விட்டு பிரிந்தும் மூன்று வருடங்கள் தான் ஆகிறது.
உண்மையில் விழி மீனாவுடைய குழந்தையாக இருக்க வேண்டும் என்றால் அவள் ஊரில் இருக்கும் போதே அவளுக்கு வேறு ஒருவருடன் அஃபர் இருந்திருக்க வேண்டும்.
ஆனால் இந்த ஊமை பெண்ணவளோ என் நினைப்பில் அல்லவா சுற்றிக் கொண்டிருந்தாள் பல வருடங்களாக.
அப்படி இருக்கும்போது விழி மீனாவின் குழந்தையாக இருக்க வாய்ப்பே இல்லை என்று அவனுடைய ஆழ்மனம் அடித்துக் கூறியது.
ஆனால் இவளோ இங்கு வந்து ஏதோ நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறாள் இவள்.
இவளுடைய நாடகம் மற்றவர்களிடம் வேண்டும் ஆனால் செல்லுபடி ஆகலாம்.
ஆனால் இந்த விஹானிடம் நடக்குமா. இனி என்னுடைய பார்வையை விட்டு எள்ளளவும் உன்னால் விலகி இருக்க முடியாது என்று முடிவெடுத்து விட்டான் விஹான்.
வெகு நேரமாக இவர்கள் பேசிக் கொண்டிருக்க அங்கு ஓவிய கண்காட்சி வேறு நடந்து கொண்டிருக்க மீனாவின் ஓவியங்களை அங்கு ஏனையவருக்கு மிகவும் பிடித்து போனது.
இறுதியாக யாருடைய ஓவியம் பலரின் மனதை கவர்ந்ததோ அதில் தேர்வு செய்யப்பட்ட ஓவியங்களில் மீனாவின் ஓவியம் முதலிடமாக இருக்க அவளை பாராட்டி சிறந்த ஓவியர் என்ற பட்டமும் அவளுக்கு வழங்கப்பட்டது.
அனைத்திற்கும் ஒரு சிறு தலையசைப்போடு இருந்த மீனாவின் மனதிலோ விஹானின் வார்த்தைகளே ஓடிக்கொண்டிருந்தன.
தன்னை இங்கு பார்த்ததை வீட்டில் சொல்லி விடுவானோ.
அவர்கள் அனைவருக்கும் தான் உயிரோடு இருக்கிறோம் என்று தெரிந்தால் என்ன செய்வார்கள். அவர்களும் தன்னை வெறுத்து விடுவார்களோ என்று சிந்தித்துக் கொண்டிருக்க இங்கு விஹானோ மேடையில் நின்றவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
தனக்கு வழங்கிய பட்டத்தை வாங்கி அனைவரிடமும் விடை பெற்றவள் ரஞ்சனியிடம் வந்து நிற்க விஹானும் அப்பொழுதே அவர்கள் அருகில் வந்தவன்,
மீனாவை பார்த்து குறும்பாக கண்ணடிக்க அவளோ அவனுடைய இந்த செயலில் திடுக்கிட்டு போனாள்.
இதுவரை விஹானை பார்த்து பயந்து தன்னுடைய காதலை ஓவியங்கள் மூலமாக வெளிப்படுத்திய மீனாவோ இனி அவன் காட்டும் காதலில் முக்குளித்து திணற போகிறாள்.
Awesome epiii… Na kuda vihan sandhekam patutano nenachitaa ….. Great…… Lovlyyyyyyyyyy epiiiiii ❤️❤️❤️❤️❤️