அத்தியாயம் 29
சிங்கப்பூருக்கு ஓவிய கண்காட்சியில் மீனாவின் ஓவியத்தை பலருக்கும் தெரியப்படுத்த நினைத்து அங்கு சென்ற விஹானோ இனி நம் வாழ்க்கையில் சந்தோஷம் என்ற ஒன்று இருக்காது என்று நினைத்தவனுக்கோ அந்த கடவுள் அவனுடைய மொத்த சந்தோஷமான மீனாவையே அவனுக்கு திருப்பி கொடுத்திருந்தார்.
இதுவரை தான் மீனாவை இழந்து விட்டேன் என்று தனிமையில் தவித்துக் கொண்டிருந்த விஹானுக்கோ வர பிரசாதமாக மீனாவே அவனுக்கு திரும்ப கிடைக்க இனியும் அவளை விட்டு விலகுவானா என்ன.
அவளுடனே ஒட்டிக்கொண்டு அவளுடைய ஊருக்கே வந்து விட்டான் இனி மீனாவின் பாடு திண்டாட்டம் தான்.
தங்களுடைய ஊருக்கு வந்தவர்களோ மீனாவின் வீட்டிற்கு செல்ல மீனாவின் வீட்டின் முன்பு காரிலிருந்து மீனா இறங்க அவளுடைய முந்தானையோ அவளுடைய தோள்பட்டையில் இருந்து பின் கழண்டு இறங்கபோக சட்டென பிடித்தவள் பின்னே திரும்பிப் பார்க்க, விஹானோ குறும்பு புன்னகையோடு அவளைப் பார்த்தவன்,
“ என்ன” என்று கேட்க,
அவளோ அவனுடைய தொடைக்கு அடிகள் சிக்கியிருந்த அவளுடைய முந்தானையை சுட்டிக்காட்ட,
அவனோ அதை இப்பொழுதுதான் பார்ப்பது போல,
“ ஓ சாரி மீனா நான் பார்க்கவே இல்லை” என்று ராகம் பாடியவாறு சொன்னவன் மெதுவாக தன்னுடைய காலை தூக்கி அவளுடைய முந்தானையை தன்னுடைய கையால் எடுத்துக் கொடுத்தான்.
அவளோ,
‘ ஐயோ இவரோட இம்சை கொஞ்சம் கொஞ்சமா அதிகரித்துக்கொண்டே இருக்கு நான் எப்படி இவர சமாளிக்க போறேன்னு தெரியலையே’ என்று தனக்குள் புலம்பியவள் வீட்டிற்குள் செல்ல, விஹானோ காரை விட்டு கீழே இறங்கியவன் விழியை தன்னுடைய கையில் தூக்கிக் கொள்ள அப்பொழுது மீனா குடி இருக்கும் அந்த வீட்டின் பாட்டி அவர் வீட்டில் இருந்து வெளியே வர,
விழியே அந்த பாட்டியை கண்டதும் விஹானின் கையில் இருந்தவாறே கத்தி அழைத்தாள்.
“ பாட்டி இங்க பாருங்க என்னோட அப்பா வந்துட்டாங்க” என்று சந்தோஷமாக கத்தி சொல்ல பாட்டியோ இவர்கள் அருகில் வந்தவர் விஹானே மேலிருந்து கீழ் வரை கூர்ந்து பார்க்க,
விகானோ அந்த பாட்டியை பார்த்தவன்,
‘ என்ன இந்த பாட்டி நம்மை இப்படி பார்க்கிறது’ என்று ஷர்டின் காலரை அட்ஜஸ்ட் செய்தான்.
பாட்டியோ,
“ நீதான் மீனா புள்ளையோட புருஷனா?” என்று கேட்க, விஹானோ லேசாக புன்னகைத்தவாறே “ஆமாம்” என்று சொல்ல உடனே பாட்டிக்கு எங்கிருந்துதான் அவ்வளவு கோபம் வந்ததோ தெரியவில்லை அவனை வண்டி வண்டியாக திட்ட ஆரம்பித்தார்.
“ ஏம்பா நீ எல்லாம் ஒரு மனுஷனா கையில கைப்புள்ளையோட ஒரு பொண்ண தனியா அனுப்பிவிட்டுட்ட. அப்படி என்ன உனக்கு வேலை முக்கியமா போச்சு.
அந்த பிள்ளைக்கு பாதுகாப்பான ஒரு இடத்தை கூட ஏற்பாடு பண்ணி கொடுக்காம நீ பாட்டுக்கு வேலை தான் முக்கியம்னு போயிருக்க. சரி போனது தான் போன அந்த பிள்ளை என்ன ஆச்சுன்னு வந்து பார்த்தியா. முழுசா மூணு வருஷம் கழிச்சு இப்ப வந்திருக்க அந்த பிள்ளை என்ன செஞ்சா எது செஞ்சா தனியா கடந்து எப்படி கஷ்டப்பட்டான்னு உனக்கு ஏதாவது தெரியுமா” என்று அவனை திட்ட விஹானோ,
“ விழிக்குட்டி நீங்க அம்மாகிட்ட போங்க அப்பா இங்க பாட்டி கிட்ட பேசிட்டு வரேன்” என்று சொன்னவன் விழியின் கண்ணத்தில் ஒரு முத்தம் பதித்து விட்டு அவளை இறக்கி விட, அவளும் தன்னுடைய தந்தைக்கு பதில் முத்தம் கொடுத்து விட்டு தன்னுடைய அம்மாவை நோக்கி ஓடிவிட்டாள்.
“ பாட்டிமா நீங்க என்ன சொல்றீங்க எனக்கு எதுவும் புரியல” என்று கேட்க அந்த பாட்டியோ,
“ என்ன எதுவும் புரியலையா கொஞ்சமாச்சும் உனக்கு பொண்டாட்டி புள்ளைங்க மேல பாசம் இருக்கா இல்லையா. நான் அந்த பிள்ளையை பார்க்கும் போது உடம்பு எல்லாம் காயும் கையில பிறந்த பிள்ளையோட வீடு தேடி அலைஞ்சிட்டு இருந்தா எங்களையும் வீடு கிடைக்காம என் வீட்டு வாசல்ல நிக்க கூட தெம்பில்லாமல் வந்து இருந்தா. அவளை பார்க்கும் போது எவ்வளவு பாவமா இருந்தது தெரியுமா உனக்கு.
நீ பாட்டுக்க மிலிட்டரியில போய் உட்கார்ந்து கிட்ட அந்த புள்ள ஒவ்வொரு நாளும் கையில பிள்ளையோட எவ்வளவு கஷ்டப்பட்டா தெரியுமா” என்று அந்த பாட்டி ஒவ்வொன்றாக சொல்லிக் கொண்டிருக்க, அவனை அறியாமலேயே கண்கள் கலங்கின.
அவர் சொல்வதைக் கேட்ட விஹானுக்கோ மனது பிசைய ஆரம்பித்தது.
‘ என்னதான் நடந்தது இவளுக்கு ஏன் இந்த மாதிரி ஒரு வாழ்க்கை அவர்கள் ஊரில் அவளுடைய வீட்டில் ராஜகுமாரியாக வாழ்ந்தவள் இங்கு வந்து ஏன் இவ்வளவு கஷ்டப்பட வேண்டும்’ என்றெல்லாம் தோன்றின விஹானுக்கு.
“ இங்க பாரு புருஷன் என்கிறவன் கல்யாணம் பண்ணி பிள்ளை பெத்துட்டா மட்டும் ஒரு பொண்ணுக்கு புருஷனா ஆக முடியாது ஒரு ஆம்பளையாகவும் முடியாது அந்த பொண்ணை கண்கலங்காம கஷ்டப்படாம பாத்துக்கணும். இதுக்கு பிறகாவது அந்த பிள்ளையை சந்தோஷமா பாத்துக்கோ ரொம்ப நல்ல பொண்ணு” என்று சொல்ல விஹானோ அந்தப் பாட்டியின் இரு கைகளையும் பிடித்தவன்,
“ பாட்டிமா என்னோட மீனா தனியா நின்னு தவிச்சப்போ அவளுக்கு துணையா இருந்து இத்தனை வருஷமா பார்த்ததுக்கு ரொம்ப நன்றி. இனி என் மீனாவ நான் என் கண்ணுக்குள்ள வச்சு பாத்துப்பேன்” என்றவன் நேராக தன்னுடைய மீனாவிடம் சென்றான். விஹானுக்கு பாட்டி சொன்னதை கேட்டதிலிருந்து அவனுடைய மனது மிகவும் வேதனை பட்டு கொண்டு இருந்தது.
மீனாவிடம் அதைப்பற்றி கேட்கலாம் என்று நினைத்தான்.
அவளோ இவன் கையில் தனியாக சிக்க மாட்டேன் என்பது போல ஏதாவது செய்து கொண்டே இருந்தாள்.
அன்றைய இரவு பொழுது விழி, மீனா, விஹான் மூவரும் ஒன்றாகத்தான் சாப்பிட்டார்கள்.
பின்பு விழியை தூங்க வைக்க மீனா முயற்சி செய்ய விழியோ தன்னுடன் தன் அப்பாவும் வர வேண்டும் என்று அடம் பிடிக்க, மீனாவோ விஹானையும் விழியையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருக்க விஹானா நேராக விழியின் அருகில் வந்தவன், அவள் அருகில் படுத்துக்கொண்டு விழியை தன்னோடு சேர்த்து அணைத்தவன் அவளை தூங்க வைத்தான்.
இதை பக்கத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த மீனாவுக்கோ மனது சங்கடப்பட்டது.
விழி பிறந்து இத்தனை ஆண்டுகளாக மீனா இல்லாமல் இருக்க மாட்டாள். ஆனால் இன்று அவளுடைய எதிர்பார்ப்பு விஹானாக இருக்க இவளுக்கோ இதயம் வலித்தது.
அங்கு இருக்க பிடிக்காதவள் வெளியே வந்து நிற்க.
இங்கு விஹானோ மீனாவை பார்த்தவன் விழி தூங்கிவிட்டாள் என்று உறுதி செய்து விட்டு மீனாவின் பின்னால் வந்து நின்றான்.
அவளோ தனக்கு பின்னால் ஒருவன் நின்று கொண்டு தன்னையே வெறித்து பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பது கூட தெரியாது இருள் சூழ்ந்த வானில் தெரிந்த ஒற்றை நிலவை பார்த்துக் கொண்டிருந்தாள்.
“மீனா” என்று விஹான் அழைத்தான்.
அவன் புறம் திரும்பினாள் மீனா. அவளுடைய முகமோ வாடிய தாமரை போல இருந்தது.
“ இங்க பாரு மீனா நான் சுத்தி வளைச்சு பேச விரும்பல விழி யாரு?” என்று அவன் நேரடியாகவே கேட்க,
மீனாவுக்கோ அவன் கேட்ட கேள்வியில் தூக்கி வரி போட்டது.
“இது என்ன கேள்வி விழி என்னோட குழந்தை” என்றாள் மீனா.
“ என்னை பார்த்தா பைத்தியக்காரன் மாதிரி தெரியுதா உனக்கு. இல்ல முட்டாள் என்று நெத்தில எழுதி ஒட்டியிருக்கா நீ என்ன சொன்னாலும் அப்படியே நம்புறதுக்கு.
விழி உன்னோட குழந்தை கிடையாது. அவ எப்படி உன் கிட்ட வந்தா” என்று கேட்டான் விஹான்.
“இல்ல இல்ல விழி என்னோட குழந்தை அவ என்னோட குழந்தை தான்” என்று விழிகள் கலங்க அவனிடம் கூறினாள் மீனா.
“ இங்க பாரு மீனா விழி உன்னோட குழந்தை இல்லன்னு எனக்கு நல்லா தெரியும் அவளோட வயசு வச்சு பார்த்தா நீ இங்க வந்து மூணு வருஷம் தான் ஆகுது. அவ பிறந்தும் மூணு வருஷம் தான் ஆகுது. அப்போ நீ அங்க ஊர்ல இருக்கும்போது வேற யாரோடையாவது அஃபர்ல இருந்தியா அவன் மூலமா உன் வயித்துல வந்த குழந்தையா விழி” என்று தன்னுடைய மனதை கல்லாக்கிக் கொண்டு அவளிடம் இருந்து உண்மையை வாங்க வேண்டி அவளை வேண்டும் என்றே காயப்படுத்தினான் விஹான் மீனாவை.
“ போதும் நிறுத்துங்க” என்று தன்னுடைய செவி இரண்டையும் மூடிக்கொண்டவளால் அவனுடைய பேச்சை இதற்கு மேல் கேட்க முடியவில்லை.
“போதும் நிறுத்துங்க நான் அப்படிப்பட்ட பொண்ணு எல்லாம் இல்ல. எனக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்து உங்களை தான் என் மனசு புல்லா நினைச்சுக்கிட்டு இருந்தேன் இப்படி உங்க வாயாலயே எனக்கு இன்னொருத்தன் கூட அஃபர் இருக்குன்னு இப்படி வாய் கூசாம சொல்றீங்களே” என்று அழுகையினோடே கேட்டாள் மீனா.
“ சரி விவரம் தெரிஞ்ச நாள்ல இருந்து நீ என்னதான் விரும்பினாலும் அதை என்கிட்டேயும் சொல்லல நானும் உன்கிட்ட வரல அப்புறம் எப்படி விழி உன்னோட குழந்தையா இருக்க முடியும்”
என்று அவளிடம் கேட்க,
அவளோ என்ன சொல்வது என்று தெரியாமல் அவனிடம் தலை குனிந்து நின்றாள்.
“ சொல்லு மீனா இப்படி நீ அமைதியா இருந்து எவ்வளவோ நடந்துட்டு இதுக்கு அப்புறமும் நீ இப்படி அமைதியா இருந்து எதை சாதிக்க போற. தயவு செஞ்சு உண்மை என்னன்னு சொல்லு” என்று அவளுடைய இரு தோள்களையும் பிடித்து உழுக்கினான் விஹான்.
Interesting epiiii ❤️❤️❤️❤️❤️ pavum meenu……