தேடித் தேடி தீர்ப்போமா

5
(10)

அத்தியாயம் 03

 

“அம்மாவை பாசமா பார்த்தது போதும்டா மகனே, இப்படியே எவ்வளவு நேரம் பார்க்க போற கண்ணு வலிக்கும், நீ தூங்கு அம்மா ஃப்ளைட் லேன்ட் ஆனதும் எழுப்புறேன்..” என்று சொன்னதோடு விடாமல் அவன் தலையை தன் தோள் மீதும் சாய்த்து கொண்டார்.

“ஆஹ்ஹா புள்ள மேல எவ்ளோ பாசம் உங்களுக்கு, கொஞ்ச நேரத்துல நான் எவ்வளவு பயந்து போயிட்டேன் தெரியுமா உங்களுக்கு ஏதாவது ஆனால் அப்பாவுக்கு என்ன பதில் சொல்வேன் ஏன்மா இப்படி பண்றீங்க இப்படி உங்க உயர வச்சு விளையாடுற அளவுக்கு அவங்க உங்களுக்கு முக்கியமா போய்ட்டாங்களா..” என்று ஆத்திரம் தாங்காமல் பல்லை கடித்துக் கொண்டு அவன் கேட்க,

“டேய் ரொம்ப பேசுற நீ ஆயிரம் தான் இருந்தாலும் அவங்க என் குடும்பம் என்ன பெத்தவங்க நீ இப்படி எல்லாம் பேசுறது எனக்கு பிடிக்கல டா..” என்று தன்னுடைய பிறந்த வீட்டிற்காக மகனிடம் சண்டைக்குச் சென்றார். 

“ஆமா பெரிய பெத்தவங்க இத்தனை வருஷம் புள்ள இருக்காளா இல்லையா நல்லா இருக்காளா எப்படி இருக்கா என்ன ஏதுன்னு விசாரிக்காதவங்க உனக்கு ரொம்ப முக்கியமா போய்ட்டாங்க.. நீ மட்டும் போன் பண்ணி பேசாம இருந்திருந்தா அவங்க உன்ன நினைச்சு கூட பார்த்திருக்க மாட்டாங்க..” 

“டேய் போதும் நிறுத்து ஏற்கனவே உங்க அப்பா கூட இத்தனை வருஷமா ஆர்க்யூ பண்ணி இப்பதான் அந்த மனுஷன் என்னை ஊருக்கு அனுப்ப சம்மதிச்சிருக்காரு.. நானும் ரொம்ப சந்தோஷமா அங்க போகணும்னு ஆசைப்படுறேன்டா சும்மா சும்மா என்கிட்ட நீ சண்டை போட்டுக்கிட்டு இருக்காத..” என்றார் சித்ரா. 

“உனக்கு வேணா உன் குடும்பம் பெருசா இருக்கலாம் ஆனால் எனக்கு அவங்களை சுத்தமா பிடிக்கல.. எவ்வளவு தைரியம் இருந்தா என் அப்பாவுக்கு உன்னை கட்டி கொடுக்கறதுக்கு அவ்வளவு யோசிச்சிருப்பாங்க.. உங்க அண்ணனுக்கு ஒன்னு இல்ல ரெண்டு பொண்ணு இருக்குன்னு சொன்னேல்ல பாரு அங்கிருந்து நம்ம ஊருக்கு வர்றதுக்குள்ள என் பிரண்டு யாரையாவது வெள்ளைக்காரனா பார்த்து பிடிச்சு லவ் பண்ண வச்சு மொத்தமா ஊற விட்டு ஓட வைக்க போறேன் அப்ப தெரியும் அவங்களுக்கு..” என்று சாபம் வேறு விட்டான் சித்ராவின் பிறந்து வீட்டுக்கு. 

“டேய் டேய் வாய கழுவுடா முதல்ல.. ஆமா நீ இருக்கும் போது எதுக்குடா வெள்ளைக்காரனைப் பார்க்கணும் முருகனுக்கு வள்ளி தெய்வானை மாதிரி ரெண்டு பேரையும் நீ கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்துரு அப்படி கூட்டிட்டு வந்துட்டேனா இனி ஊருக்கு போகறதுக்கும் வரத்துக்கும் உங்க அப்பா கிட்ட அனுமதி கேட்கவும் வேண்டாம் அவரையும் எதிர்பார்க்க வேண்டாம் உன்னை எதிர்பார்க்க வேண்டாம் என் மருமகள்களை கூட்டிட்டு நான் போயிட்டு 

வந்துருவேன் ” என்று மகிழ்ச்சியாக சித்ரா சொல்ல இங்கே விஹானுக்கோ தலையை சுத்தி கொண்டு வந்தது. அவன் அடித்த பாலை சித்ரா சிக்ஸர் அடித்தார்.

“ எது நான் கல்யாணம் பண்ணனுமா அதுவும் உன் அண்ணன் பொண்ணுங்க ரெண்டு பேரையும் நான் கல்யாணம் பண்ணனும் எனக்கு என்ன தலை எழுத்தா இல்ல என் அழகுக்கும் என் ஸ்டைலுக்கும் வேற பொண்ணே கிடைக்காதா போயும் போயும் ஒரு பட்டிக்காட்டு பொண்ணுங்களை போய் நான் கல்யாணம் பண்ணனுமா இங்க பாருமா இந்த எண்ணம் உனக்கு இருந்துச்சு அப்படின்னா ஏர்போர்ட்டில் இருந்து அப்படியே நான் ஆஸ்திரேலியா பிளைட் ஏறிடுவேன் இந்த எண்ணத்தை இங்கேயே இப்பவே குழி தோண்டி புதைச்சி விட்டு வரதா இருந்தா சொல்லு நான் வரேன் ” என்றான் விஹான்.

“ என்னடா மகனே இப்படி சொல்லி அம்மாவுக்கு திரும்பவும் ஹார்ட் அட்டாக் வர வைக்க பார்க்கிற ” என்று பாவம் போல் முகத்தை வைத்துக்கொண்டு சித்ரா கேட்க, 

“ ஹலோ ஆக்டிங் குயின் போதும் உங்க டிராமாவை நிறுத்துங்க ” என்று சொன்னவன் தன் தாயின் தோள் மீது தலை சாய்த்து துயில் கொள்ள ஆரம்பித்து விட்டான். 

சித்ராவோ, “ என்னடா இவன் இப்படி சொல்றான் அப்போ நாம நெனச்சது நடக்கவே நடக்காதா பாப்போம் கடவுள் தான் நல்ல வழி காட்டணும் ” என்று கடவுளிடம் பிரார்த்தனை செய்து கொண்டார்.

“ மீனு மீனு எங்க இருக்க ” என்று அந்த வீடு முழுவதும் தன்னுடைய அக்காவைத் தேடிக் கொண்டு வந்தாள் லல்லு. 

“ இதோ இங்கே இருக்கேன் லல்லு இங்க மேல வா ” என்று தான் இருக்கும் இடத்திலிருந்து குரல் கொடுத்தாள் மீனு. 

குரல் வந்த திசையை நோக்கி மேலே வந்த லல்லுவோ, “ மீனு எனக்கு ஒரு கப் காபி போட்டு தாயேன் ரொம்ப தலை வலிக்குது ” என்று கேட்டாள்.  

அதற்கு மீனுவோ,

“ என்னாச்சு லல்லு ஏன் தலை வலிக்குது உனக்கு சரி ஒரு ரெண்டு நிமிஷம் இரு இந்த மாலையை மட்டும் கட்டிட்டு உனக்கு காபி போட்டு தரேன் ” என்று வாய் தன் தங்கையிடம் பதில் கூறினாலும் கைகள் தன் பாட்டிற்கு ரோஜா பூ மாலையை கட்டிக் கொண்டிருந்தன.

அதைப் பார்த்த லல்லுவிற்கோ கோபம் வந்துவிட்டது. 

“ என்ன மீனு எனக்குத் தலை வலிக்குதுன்னு நான் சொல்லிட்டு இருக்கேன் நீ என்னடானா இந்த மாலையை கட்டிட்டு அதுக்கப்புறம் காபி போட்டு தாரேன்னு சொல்லுற எனக்கு இப்பவே வேணும் என்னால தலைவலிய தாங்க முடியல நீ போடுற காபி குடிச்சா தான் கொஞ்சம் நல்லா இருக்கும் ப்ளீஸ் எனக்கு இப்பவே போட்டு கொடு ” என்று அடம் பிடித்தாள் லல்லு.

“ அட என்ன லல்லு இதோ முடிஞ்சிருச்சு ஒரு ரெண்டே ரெண்டு நிமிஷம் தான் கொஞ்சம் பொறுடி ப்ளீஸ் என் செல்ல தங்கச்சில்ல ” என்று அவளைக் கொஞ்சி கொண்டு மாலையை கட்டி முடித்து முடிச்சு போட்டுக் கொண்டிருக்க, பொறுமை இழந்த லல்லுவோ,

“ ஓஓ இப்ப இந்த மாலைதான உனக்கு பிரச்சனை இது என்ன செய்றேன்னு பாரு ” என்றவள் தன் அக்காவிடம் இருந்து அந்த மாலையைப் பறிக்க, அவளிடம் இருந்து மீனுவும் மாலையை கொடுக்காமல் தடுக்க இருவருடைய போராட்டத்தில் அந்த ரோஜா பூ மாலையோ அவர்கள் இருவருடைய கைகளிலும் அகப்படாமல் காற்றில் பறந்தது.

இருவருமே மாலை போன திசையை திரும்பி பார்க்க அந்த பறந்து சென்ற ரோஜா பூ மாலையோ விஹான் கழுத்தில் வரவேற்பாய் விழுந்தது. 

அவனைத் தொடர்ந்து காரை விட்டு இறங்கி வந்த சித்ராவோ, 

“ பாருடா இத்தனை வருஷம் கழிச்சு வந்த எனக்கு ஒரு வரவேற்பையும் காணோம் ஆனா உனக்கு எங்கிருந்தோ மாலை பறந்து வந்து விழுது பார்த்தியா எங்க ஊரு மகிமையை ” என்றார்.

இவர்களைக் கண்ட லல்லுவோ எதுவும் சொல்லாமல் நிற்க, மீனுவின் முகத்திலோ அவ்வளவு ஆனந்தம்.

“ அத்தை வந்துட்டாங்கடி வா போகலாம் ” சென்று தன் தங்கையையும் உடன் இழுத்துக் கொண்டு வேகமாக அவர்களை நோக்கி ஓடி வந்தாள் மீனு. 

“ அப்பா அம்மா பாட்டி எல்லாரும் வாங்க 

அத்தை வந்துட்டாங்க ” என்று கத்திக்கொண்டே வந்தாள் மீனு. அவளைத் தொடர்ந்து மொத்த குடும்பமும் அவளின் பின்னே வந்தது.

சித்ராவோ இத்தனை வருடங்களுக்கு பிறகு தன்னுடைய மொத்த குடும்பத்தையும் பார்த்தவருக்கும் கண்கள் கலங்க ஆரம்பித்தன. 

அவருக்கு மட்டும் அல்ல இங்கு பாட்டிக்கும் சரி தன்னுடைய மகளை நேரில் பார்த்ததும் அவரால் தாளவில்லை. 

தன்னுடைய வயதை மறந்து ஓடி சென்று மகளை கட்டி அணைத்துக் கொண்டார்.

“ அம்மா எப்படி இருக்கீங்க அம்மா ” என்று சித்ரா கேட்க, அதே நேரம் பாட்டியும், 

“ அம்மாடி சித்ரா உன்னைப் பார்த்து எத்தனை வருஷம் ஆச்சு எப்படிம்மா இருக்க என் தங்கமே ” என்று உச்சி முகர்ந்தார்.

அவரது அண்ணன் ராமச்சந்திரனும் தன் தங்கையின் தலை மேல் கை வைத்து, “ “ “ எப்படிமா இருக்க ” என்று கேட்க, அவரும் தன் நலனைப் பற்றி கூறியும் மற்றவர்களையும் நலம் விசாரித்தார்.

“ சரி சரி வாங்க எல்லாரும் உள்ள போகலாம் உங்களுக்காகத் தான் ரொம்ப நேரமா காத்துக்கிட்டு இருந்தோம் வாங்க உள்ள வாங்க ” என்று அழைத்தார் பாட்டி மரகதம்.

பிறகு என்ன மேளதாளங்கள் இசைக்க வெடிகள் முழங்க இருவருக்குமான வரவேற்பு அங்கு அமோகமாக நடந்தேறின. 

இங்கு அனைவரின் முகத்திலும் சந்தோஷம் இருந்தாலும் ஒரு பக்கம் விஹான் இன்னொரு பக்கம் லல்லு இவர்கள் இருவருமே அந்த இடத்திற்கு பொருந்தாதது போலவே நின்று கொண்டிருந்தனர்.

அடுத்த அத்தியாயம் ஈவ்னிங் வரும். அது வரணும்னா உங்கள் ரீவ்யூ முக்கியம் ப்ரண்ட்ஸ்.

இது பிளாக் மெயில் இல்ல அடுத்தடுத்த அத்தியாயங்கள் உங்களுக்கு கொடுக்க எனக்கு ஒரு சின்ன பூஸ்ட் மாதிரி கிடைக்கும்னு நம்புறேன் 

🤍🤍🤍🤍🤍

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 10

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!