அத்தியாயம் 30
விஹான் அவளுடைய தோள்களை உலுக்கியவாறு கேட்க, இதற்கு மேலும் அவனிடம் உண்மையை மறைக்க முடியாது என்று உணர்ந்துவள்
கண்ணீர் மல்க வீட்டில் இருந்து கிளம்பியது முதல் விழி தன்னிடம் எப்படி வந்தாள். தான் இங்கு எப்படி வந்து சேர்ந்தோம் என்பது வரை அனைத்தையும் கூறினாள்.
“விழிய தூக்கிட்டு என்னால ஊருக்கு வந்திருக்க முடியும் ஆனா எனக்கு அங்க வர பிடிக்கல.
திரும்பவும் உங்க ரெண்டு பேரோட முகத்தையும் ஃபேஸ் பண்ண என்னால முடியாது அதான்.
உங்ககிட்ட என்னோட காதல நான் நேரடியா சொல்லலையே தவிர என்னோட ஒவ்வொரு அணுவுளையும் கலந்த உங்களை என் தங்கச்சியாவே இருந்தாலும் இன்னொரு பொண்ணு கூட அவ்வளவு நெருக்கமா வச்சு பார்க்குற சக்தி எனக்கு கிடையாது அத்தான்.
உயிரை கூட விட்டுவிடலாம் கூட தோணுச்சு. அந்த சமயம் தான் எதிர்பாராமல் விழி என் கையில கிடைச்சா. அந்த பிஞ்சு முகத்தை பார்த்ததிலிருந்து அவளுக்காகவே வாழனும்னு எனக்கு தோணுச்சு. அதனாலதான் யாருக்குமே தெரியாம இங்க தனியா நான் வாழ்ந்துகிட்டு இருக்கேன் என்ன இப்படியே விட்டுடுங்க நான் இப்படியே வாழ்ந்துட்டு போறேன். உங்களை பொறுத்த வரைக்கும் செத்தவ செத்தவளாவே இருந்துட்டு போறேன்.
என்ன தொந்தரவு செய்யாதீங்க தயவு செஞ்சு நீங்க இங்க இருந்து போயிருங்க அத்தான்” என்று சொல்ல இவ்வளவு நேரமும் அவள் சொல்வதை வேதனையோடு கேட்டுக் கொண்டிருந்தவன் இறுதியாக அவள் அவனை இங்கிருந்து போக சொல்ல கோபம் உற்றவனோ தன்னுடைய கைகளை மார்புக்கு குருக்காக கட்டியவன்,
“ ஓ நான் போகணுமா அப்புறம் எதுக்குடி என்ன விழிக்கிட்ட அவளோட அப்பா நான்தான்னு சொல்லி வச்சிருக்க. சொல்லு அதுக்கு காரணம் சொல்லு” என்று விஹான் கேட்க, அதற்கு மீனாவோ யோசிக்காமல் உடனே அவனுடைய கேள்விக்கு பதில் கூறினாள்.
அவள் கூறிய பதிலில் அந்த ஆறடி ஆண் மகனுக்கு கூட மயிர் கால்கள் சிலிர்த்து அடங்கியது.
“இங்க பாருங்க அத்தான் என்னோட இந்த ஜென்மத்துல இல்லை எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நீங்க தான் எனக்கு புருஷன், காதலன் எல்லாமே நான் அப்படியே வாழ்ந்துட்டேன் விழி என்னோட பொண்ணுங்கிறதால அவளுக்கு நீங்க தானே அப்பாவா இருக்க முடியும். அதனாலதான் உங்கள அப்பான்னு அடையாளம் காட்டினேன்” என்று சொன்னாள் மீனா.
“ மனசுக்குள்ள இவ்வளவு காதலை வச்சுக்கிட்டு அப்புறம் ஏண்டி என்னை போக சொல்ற”
என்று கேட்க மீனாவோ,
“ உங்களுக்கு இன்னொரு குடும்பம் இருக்கு அத்தான் நீங்களும் லல்லுவும் சந்தோஷமா இருக்கணும் அதுக்கு நான் எப்பவும் தடையா இருக்க மாட்டேன் என்ன இப்படியே விட்டுருங்க” என்று சொல்ல,
“ அரேஞ்சன்ன பாரு” என்று கையை ஓங்க அவளோ அவன் கை ஓங்கியதும் பயந்து போனவள் ஒரு அடி பின்னே எடுத்து வைக்க, அவளுடைய பயத்தை கண்டவனோ கையை கீழே இறக்கியவன், “ஏண்டி அங்க ட்ராயிங் எக்சிபிஷன்ல வச்சு நான் உன்கிட்ட என்ன சொன்னேன்.
இந்த மூணு வருஷமா நான் உன் நினைப்பிலேயே சுத்திக்கிட்டு இருக்கேன்னு சொன்னேனே. நான் சொல்றது எதையும் நீ காதுலையே வாங்க மாட்டியா. லாலிய கல்யாணம் பண்ணிக்கிட்டா நான் உன் நெனப்புல மூணு வருஷம் சுத்துவேன். என்னடி நெனச்சிட்டு இருக்க என்னை பார்த்தா உனக்கு பொம்பள பொறுக்கி மாதிரி இருக்கா” என்று கோபமாக திட்டியவன்,
“இங்க பாரு லாலியா ஒன்னும் அவ மேல ஆசைப்பட்டு அவளை லவ் பண்ணி கல்யாணம் பண்ண நினைக்கல.
என்னோட விழி லாலி தான்னு தெரிஞ்சதால தான் அவளை லவ் பண்ணேன்.
கல்யாணம் பண்ண நினைச்சேன்” என்று சொல்ல மீனாவின் விழிகளோ ஆச்சரியமாக அவனை நோக்கின.
“நான் என்னோட விழி யாருன்னு தேடும்போதுதான் விழி லாலிதான்னு தெரிஞ்சது.
நீ ஏண்டி உன் துப்பட்டாவை லாலி கிட்ட கொடுத்த அன்னைக்கி” என்று விஹான் கேட்க,
“ நீங்க என்ன சொல்றீங்க எனக்கு எதுவும் புரியல”
“ தினமும் எனக்கு கொரியர் அனுப்பின நீ ஒரு வாரம் அனுப்பல அது ஏன் மீனா?”
“ அது பக்கத்து ஊருக்கு நான் மெடிக்கல் கேம்ப் போயிருந்தேன் அதான் அந்த ஒரு வாரமும் அனுப்பல”
“ நீ பாட்டுக்கு பக்கத்து ஊருக்கு மெடிக்கல் கேம்ப் போயிட்ட ஆனால் நான் அந்த ஒரு வாரம் எப்படி இருந்தேன் தெரியுமா. தினமும் அந்த கொரியர் காரரை நிப்பாட்டி எனக்கு கொரியர் வந்திருக்கான்னு டார்ச்சர் பண்ணேன். எனக்கு அந்த ஒரு வாரமும் நரகம் மாதிரி இருந்தது.
பால்கனியில நின்னு வாசலையே பார்த்து கிட்டு இருப்பேன் உன்கிட்ட இருந்து கொரியர் வருமான்னு தெரியுமாடி உனக்கு.
பிறகு ஒரு வாரம் கழிச்சு உன் கிட்ட இருந்து கொரியர் வந்தது அவ்வளவு சந்தோஷப்பட்டேன்.
அதுக்கு பிறகுதான் நீ யாராய் இருக்கும்னு தெரிஞ்சுக்க ரொம்ப ஆசைப்பட்டேன்.
கொரியர் ஆபீஸ்ல விசாரிக்க போனேன்.
அங்க நீ இப்பதான் வந்துட்டு போனதா சொன்னாங்க. நீ மஞ்சள் கலர் துப்பட்டா போட்டிருப்பன்னும் சொன்னாங்க. நானும் அங்கே இருந்து வந்து ஒரு இடம் விடாமல் தேடினேன்.
அப்போதான் லாலி மஞ்சள் கலர் துப்பட்டா போட்டு இருந்தா நான் அவளைத்தான் விழியின்னு கன்ஃபார்ம் பண்ணிட்டேன்” என்று சொன்னான் விஹான்.
அவன் சொன்னதை யோசித்துப் பார்த்த மீனாவோ”
“ ஆமா அன்னைக்கு லல்லு ஓட ட்ரெஸ் கிழிஞ்சிட்டு நான் தான் என் துப்பட்டாவை அவளுக்கு கொடுத்தேன்” என்று சொன்னவளோ தன் தலையில் அடித்தாள்.
ஆனாலும் விஹானிடம் அவள் வேறு ஒரு கேள்வி கேட்டாள்.
“ ஆனா அதுக்கு பிறகு நான் தான் விழின்னு உங்களுக்கு தெரியப்படுத்த நம்ம ரெண்டு பேர் படமும் வரைஞ்சு அனுப்பினேனே” என்று கேள்வியாக பார்த்தாள்.
விஹானோ,
“ நீ கடைசியா அனுப்புன கொரியர் மிஸ் ஆகிட்டாம். கல்யாண நாள் அன்னைக்கு நீதான் விழின்னு தெரிஞ்ச பிறகுதான் அந்த கொரியர் என் கைக்கு கிடைச்சது” என்றான் விஹான்.
“நடக்க இருந்த கல்யாணத்தை நிறுத்திட்டு உன்னை வரவைக்க உனக்கு எவ்வளவோ முறை போன் பண்ணுனோம் ஆனா உனக்கு லைன் கிடைக்கவே இல்லை.
அப்பதான் உங்க அப்பாவுக்கு ஒரு போன் வந்தது.
ட்ரெயின் ஆக்சிடென்ட்ல நீ இறந்து போயிட்டேன்னு.
செத்துட்டேன் டி அந்த நிமிஷம். உன்னுடைய இழப்பை என்னால தாங்கவே முடியல. இந்த மூணு வருஷமா உன் ஊர்ல உன் ரூம்ல தான் இருந்தேன். உன் நினைவுகளோடவே வாழ்ந்தேன்டி. ஆனா நீ இங்க உனக்குன்னு ஒரு வாழ்க்கையை அமைச்சு சந்தோஷமா இருக்க” என்று கவலை தோய்ந்த முகத்துடன் சொன்னான் விஹான்.
அவனையே வியப்பாக பார்த்துக் கொண்டிருந்தாள்.
“ இங்க பாரு மீனா திரும்பத் திரும்ப சொல்றேன் இந்த முட்ட கண்ணை உருட்டி உருட்டி பார்த்துட்டு இருக்காத அப்புறம் என்னோட கண்ட்ரோல் மிஸ் ஆகி இங்க என்ன வேணாலும் நடக்கலாம்”
என்று சொல்ல அவளோ அவன் அப்படி கூறவும் தன்னுடைய பார்வையை தாழ்த்தியவள்,
“ என்ன சொல்றீங்க அத்தான் அப்போ உங்களுக்கு கல்யாணம் ஆகலையா” என்று கேட்டாள்.
அதற்கு விஹானோ,
“பைத்தியக்காரி நீ அங்க வீட்டை விட்டு போனதும் கொஞ்ச நேரத்துல என்னோட விழி நீ தான்னு எனக்கு தெரிய வந்தது. உன் ரூம்குள்ள சீக்ரெட்டா ஒரு ரூம் வச்சிருக்கியே அதுக்குள்ள எதேர்ச்சியா போனேன். அப்பதான் நீ என்னை இந்த அளவுக்கு காதலிக்கிற விஷயமே எனக்கு தெரியவந்தது.
அப்பவே முடிவு பண்ணிட்டேன் இனி இந்த விஹானோட வாழ்க்கையில இந்த பைத்தியக்காரி மீனாவை தவிர வேற எந்த பொண்ணுக்கும் இடமில்லைன்னு. அப்புறம் எப்படி நான் லாலியை கல்யாணம் பண்ணி இருப்பேன்”
என்று விஹான் சொல்ல அவளுக்கோ பேச நா எழவில்லை விக்கித்துப் போய் நின்றாள் மீனா.
“ இங்க பாரு மீனா இப்ப சொல்லு நான் போகவா இல்ல இங்கேயே இருக்க வா” என்று கண்களில் காதலோடு அவளைப் பார்த்து கேட்டான் விஹான்.
அவளோ கண்களில் கண்ணீர் வடிய அவனை ஏறிட்டு பார்க்க அதில் அவனுக்கான பதிலை தெரிந்து கொண்டான் விஹான்.
அவள் வாய் திறந்து பதில் சொல்ல அவன் காத்திருக்கவில்லை.
அவளுடைய விழிகளே அவனுக்கான பதிலை அந்த நொடி சொல்லிவிட நொடியும் தாமதிக்காமல் மீனாவை தன்னோடு இறுக்கி அணைத்துக் கொண்டான் விஹான்.
தன்னுடைய கூட்டை தொலைத்த சிறு பறவை திக்கு தெரியாமல் நிற்கும் சமயத்தில் தன்னுடைய தாயானவளை கண்டால் அது எவ்வளவு ஆனந்தம் கொள்ளுமோ அதற்கும் மேலாக இருந்தது மீனாவின் ஆழ்மனம்.
தன் நெஞ்சுக்குள் அடைக்கலமானவளை தனக்குள் பொத்திக்கொண்ட விஹானோ,
“ மீனா இப்பவாவது அந்த வார்த்தையை சொல்லேண்டி” என்று ஆசையாக கேட்க,
அவளோ,
“ ஐ அம் சாரி” என்று சொல்ல சட்டென தன்னிடமிருந்து அவளை விளக்கியவன்,
“ என்னடி சொன்ன” என்று அதிர்ச்சியாக கேட்க,
அவளோ குறும்பு புன்னகையோடு,
“ ஐ அம் சாரி அத்தான்” என்று சொல்ல இங்கு விஹானுக்கோ அவளை வெட்டவா இல்லை குத்தவா என்று தோன்றியது.
“அடிங்க இப்பவும் சாரியா உன்னை என்ன செய்கிறேன் பாரு” என்று அவளை அடிக்க ஏதாவது கிடைக்குமா என்று தேட, அவளோ சத்தமாக சிரித்தவள் உள்ளே ஓட
விஹானோ, “ ஏய் ஓடாதடி நில்லு” என்று அவள் பின்னோடு ஓடினான்.
😍😍😍😍😍😍 wowwwwww…… Lovlyyyyyyyyyy epiii….. Sooooooooo cuteer you…..