- அத்தியாயம் 4
பல வருடங்களுக்குப் பிறகு தன் சொந்தத்தைப் பார்த்த மகிழ்ச்சியில் சித்ரா துள்ளிக் குதிக்காதக் குறையாக ஆனந்தத்தை பொற்றிருந்தார்.
அதேபோல அவருடைய பிறந்துவிட்டு ஆட்களும் சந்தோஷமாக இருந்தார்கள்.
இதில் லல்லுவும் விஹானும் மட்டுமே முகத்தைக் தூக்கி வைத்துக் கொண்டு இருந்தார்கள்.
“ அடடே மாப்ள எம்பட்டு அழகா இருக்காரு ” என்று ராமச்சந்திரன் கேட்க, விஹானோ சிறிதாக புன்னகைத்தானே தவிர பெரிதாக எதையும் கண்டு கொள்ளவில்லை.
ராமச்சந்திரன் தன் தங்கையிடம் திரும்பி,
“ சித்ரா மாப்பிள்ளை எப்படி இருக்காரு அவருக்கு இன்னும் எங்க மேல இருக்க கோபம் போகலையா அவரும் கூட வந்திருந்தா எவ்ளோ நல்லா இருந்திருக்கும் ” என்று சற்று வருத்தமாக கேட்க, பக்கத்திலிருந்த விஹானின் முகமோ இறுகியது.
அதைப் பார்த்த சித்ரா அவனுடைய கையைத் தன்னுடையக் கைக்குள் அடக்கி வைத்துக் கொண்டவர் தன் அண்ணனிடம்,
“ அண்ணே அவர் இவ்வளவு மனசு இறங்கி எங்களை இங்க அனுப்பி வச்சதே ரொம்ப பெரிய விஷயம் அண்ணே கொஞ்சம் கொஞ்சமா தான் எல்லாம் மாறும் இத்தனை வருஷம் கழிச்சு நாங்க இப்ப இங்க வரலையா அதே மாதிரி ஒரு நாள் இல்ல ஒரு நாள் உங்க மேல இருக்கிற கோபம் எல்லாம் போய் அவரும் இங்க வருவாரு கவலைப்படாதீங்க..
அது சரி இப்போ உங்க மச்சான் வரவில்லை என்று நீங்க எங்க ரெண்டு பேரையும் சரியா கவனிக்க மாட்டீங்களா? ” என்று அவரை இலகுவாக மாற்ற நினைத்தவர் சற்று கேலியாக கேட்டார்.
உடனே ராமச்சந்திரன், “ அட என்னம்மா இப்படி கேட்டுட்ட இத்தனை வருஷத்துக்கு அப்புறம் நீங்க இங்க வந்து இருக்கீங்க கூட அவரும் வந்திருந்தா ரொம்ப சந்தோஷமா இருந்திருக்கும்னு நினைச்சேன் அதுக்காக வந்தவங்களை நாங்க சரியா கவனிக்காம இருப்போமா நீங்க இங்க எத்தனை நாள் வேணாலும் இருக்கலாம் உங்களுக்கு என்னென்ன வேணுமோ இந்த அண்ணன் நான் பார்த்துக்கிறேன் உங்களுக்கு எந்த குறையும் இல்லாம ” என்றார் ராமச்சந்திரன்.
இவர்கள் இங்கு பேசிக் கொண்டிருக்க மீனுவோ ஒரு பெரிய ட்ரேயில் அனைவருக்கும் ஜூஸ் கொண்டு வந்தாள். ஒவ்வொருவராக ஜூஸை கையில் எடுக்க சித்ராவிடம் வந்தவள்,
“ அத்தை ஜூஸ் சாப்பிடுங்க ” என்று கொடுக்க, சித்ரா மீனுவை மேலிருந்து கீழாக பார்த்தவர் அதிசயத்து போனார். இருக்காதா பின்னே தன்னுடைய இளமை வயதில் தான் எப்படி இருந்தோமோ அதே போல இருந்தால் மீனு.
“ அண்ணா இது உன் பொண்ணா பார்க்கிறதுக்கு சின்ன வயசுல என்னைய பார்த்த மாதிரியே இருக்கு ” என்று சொல்ல விஹானின் பார்வையும் ஒரு நிமிடம் மீனுவின் மேல் படிந்து மீண்டது.
பாட்டி, “ ஆமா சித்ரா எங்க மீனும் அப்படியே உன்னையே உரிச்சு வச்சு பிறந்து இருக்கா அவ வளர வளர எங்க எல்லாருக்குமே உன்னைப் பார்க்கிற மாதிரி இருக்கும் ஆனா இதுல ஒரு சின்ன வித்தியாசம் நீ துறுத்துறுன்னு வருவ ஆனா இவ அமைதியா இருப்பாள் அவ்வளவுதான் வித்தியாசம்
ஆனா அதுக்கு எல்லாம் சேர்த்து வச்சு தான் அடுத்து பிறந்து இருக்காளே லல்லு. உன்னோட உருவம் மீனு குட்டினா உன்னோட கேரக்டர் லல்லு வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுன்னு பேசவா அவளுக்கு என்ன தோணுதோ அதைத்தான் செய்வாள் சரியான வாலு ” என்று பாட்டி சொல்ல லொள்ளு பூ பாட்டியை முறைத்துக் கொண்டிருக்க பாட்டியோ வன்முறை எல்லாம் என்னை ஒன்னும் செய்யாது என்றவாறு இருந்தார்.
லல்லுவோ, ‘ இந்தக் கிழவிய இப்ப கேட்டாங்களா இவங்க கிட்ட இதுக்கெல்லாம் சேர்த்து வச்சி உனக்கு இருக்கு தனியா மாட்டு அப்ப கவனிச்சிக்கிறேன் ”
அப்படியா அம்மா என்று கேட்ட சித்ரா லல்லுவைத் தேட அவளோ அங்கு இல்லை.
பாட்டியை முறைத்துக் கொண்டு நின்றிருந்த லல்லுவுக்கோ போன் வர அந்த இடத்தில் இருந்து அகன்று விட்டாள்
“ எங்க லலிதாவை காணோம் நீங்க போன்ல சொல்லும் போதெல்லாம் எப்படா உங்களை வந்து பார்ப்போம் அப்படின்னு ரொம்ப ஆர்வமா இருக்கும் ” என்று சொல்ல,
“ இங்கதான இருந்தா ” என்ற பாட்டியோ,
“ லல்லு இங்க வாமா ” என்று கூப்பிட போனில் தன்னுடைய நண்பியிடம் உரையாடியவள் பாட்டி அழைக்கவும் இவர்கள் அருகே வந்தவள் திமிராகவே,
“ என்ன பாட்டி சொல்லுங்க ” என்று கேட்க, சித்ராவோ லல்லுவை கீழிருந்து மேல் வரை பார்த்தார்,
சும்மா சொல்லக்கூடாது அழகுன்னா அழகு அப்படி ஒரு அழகு ஆனால் மார்டன் அழகி என்ன கொஞ்சம் இல்லை ரொம்பவே திமிர் பிடித்தவள் போல் தெரிந்தாள் லல்லு.
“ அத்தை உன்ன கூப்பிடுறாங்கடா ” என்று பாட்டி சொல்ல,
“ ஹாய் அத்தை எப்படி இருக்கிங்க ” என்று சம்பிரதாயமாக கேட்க,
உடனே சித்ரா எழுந்தவர் மீனுவையும் லல்லுவையும் கட்டி அணைத்து இருவருடைய கன்னத்திலும் முத்தம் பதித்தார்.
“ உங்களோட குழந்தைப் பருவத்தை நான் ரொம்ப மிஸ் பண்ணிட்டேன் ” என்று வருத்தமாக பேசினார் சித்ரா.
உடனே மீனுவோ, “ என்ன அத்தை நீங்க இதுக்காக வருத்தப்படாதீங்க அதான் நம்ம எல்லாரும் இப்போ ஒண்ணா இருக்கோமே முன்னாடி நடந்ததற்காக கவலைப்பட்டுக்கிட்டு இருக்காம இப்போ இருக்கிற இந்த தருணத்தை சந்தோஷமா கொண்டாடலாமே ” என்று சொல்ல அவளுடைய இந்தக் குணத்தை கண்டு மெய் சிலிர்த்துப் போனார் சித்ரா.
“ முதல்ல ஜூஸை குடிங்க அத்தை ” என்று மீண்டும் ஜூசை நீட்டினாள் மீனு. சித்ரா ஜூஸை எடுத்ததும் அவர் பக்கத்தில் இருக்கும் விஹானுக்கு ஜூஸ் டம்ளரை நீட்டினாள் மீனு.
அவளுடைய கால்களோ சற்று நடுக்கம் கொண்டது போல இருந்தது. நிமிர்ந்து அவனைப் பார்க்க அவளுக்கு சங்கூஜமாக இருந்தது.
“ அத்தான் ஜூஸ் எடுத்துக்கோங்க ” என்று அவளுக்கே கேட்காத குரலில் சொன்னாள் மீனு.
அவள் சொன்னது அவளுக்கே கேட்காத போது விஹானுக்கு மட்டும் கேட்டு விடுமா என்ன.
அவள் ஜூஸை கையில் வைத்துக்கொண்டு நின்று கொண்டே இருக்க இவனோ அவளை ஏறெடுத்துப் பார்த்தான் இல்லை. குனிந்து தன்னுடைய மொபைலில் ஏதோ செய்து கொண்டிருந்தான்.
அதைப் பார்த்த சித்ராவோ அவனுடைய தோளைத் தட்டி ஜூஸை எடுத்துக் கொள்ளுமாறு கூறினார்.
அதன் பின்பாவது அவளைப் பார்த்தானா இல்லவே இல்லை.
ஜூஸை மட்டும் கையில் எடுத்துக்கொண்டு அவன் வேலையை செவ்வனே செய்து கொண்டிருந்தான்.
“மீனுவோ அவன் ஜூஸ் டம்ளரை எடுக்கும்போது அவள் பிடித்திருந்த ட்ரேயில் ஒரு அழுத்தம் வர அதற்கே சிலிர்த்து அடங்கினாள் பெண்ணும். மேலும் அவளுடைய இதயமோ படு வேகமாக துடித்துக் கொண்டிருந்தது. எங்கே இன்னும் சற்று நேரம் இங்கே நின்று கொண்டிருந்தால் தன்னுடைய இதயத்துடிப்பு இங்கிருக்கும் அனைவருக்கும் கேட்டு விடுமோ என்று நினைத்தவள் அவன் டம்ளரை எடுத்ததும் சட்டென அந்த இடத்தை விட்டு அகன்று சமையலறைக்குள் நுழைந்தவள் யாரும் பார்க்காத வண்ணம் தன்னுடைய இதயத்தின் மீது கையை வைத்து பெருமூச்சு ஒன்றை வெளியிட்டாள் மீனு.
“ ஐயோ என்னடா இது? ஏன் என்னோட ஹார்ட் இவ்வளவு வேகமா துடிக்குது இதுவரைக்கும் நான் இப்படி ஒரு ஃபீலிங்க ஃபீல் பண்ணதே கிடையாது உஃப் ஏதோ மாயலோகத்தில இருக்கிற மாதிரி இருக்கு ” என்று தனக்குள்ளே கூறிக் கொண்டவள் மெதுவாக தன்னுடைய தலையை மட்டும் சாய்த்து ஒரு பார்வை பார்த்தாள் விகானை.
பால் நிறம். தொட்டால் சிவந்து விடும் போல அவனுடைய மேனி இருக்க, அதில் பிரவுன் கலரில் குட்டி குட்டியாக மயில் இறகு போல பூனை முடிகள். அலை அலையான நம்முடைய இந்தியன் கலரான கருப்பு நிறத்தில் அடர்த்தியான கேசம். இருக்குதா இல்லையா என்று தெரியாத அளவுக்கு டிரீம் செய்யப்பட்ட அவனுடைய குறுந் தாடியும் மீசையும். அடர்த்தியான இரண்டு புருவங்கள். பார்ப்பவரை சுண்டி இழக்கும் வகையில் அவனுடைய விழிகளும், யாரையும் கிட்டே நெருங்க முடியாத அளவுக்கு கூர்மையான பார்வை. உதடுகளோ ஜெர்ரி பழம் போல சிவப்பாக அழகாக இருந்தது.
“ஹப்பா என்ன ஒரு அழகு ” என்று சமையல் அறைக்குள் இருந்து கொண்டு யாருக்குமே தெரியாத வகையில் விஹானை இன்ச் பை இன்ச்சாக அளவெடுத்து ரசித்துக் கொண்டிருந்தாள் மீனு.
ஃபோனை பார்த்துக் கொண்டிருந்த விஹானோ தன்னை யாரோ கூர்ந்து பார்ப்பது போல தோன்ற சட்டென தனக்கு நேர் எதிரே இருக்கும் சமையலறையை அவன் கண்கள் கூர்ந்து பார்த்தன.
உடனே ஷாக் அடித்தது போல உள்ளே மறைந்து கொண்டாள் மீனு.
அவளுடைய இதயத்துடிப்பு மீண்டும் மீண்டும் அதிகமாக துடிக்கத் தொடங்கின.
தன்னுடைய வலது கையால் நெஞ்சை தேய்த்துக் கொண்டவள்,
“ என்னடா இது? நம்ம பார்த்தது அவருக்குத் தெரிஞ்சிருக்குமா சட்டுன்னு இப்படி பார்த்துட்டாரு ஐயோ இப்ப நான் என்ன செய்யறது ” என்று தன்னுடையக் கைவிரல்களை பிசைந்து கொண்டிருந்தாள் .
அப்பொழுது அவளுடையத் தோளை தட்டினான் விஹான்.
யார் என்று திரும்பிப் பார்த்தவள் அவ்வளவு தான் மயக்கம் போட்டு விழுந்தே விட்டாள்.
மயக்கம் போட்டு கீழே விழ போனவளை தன்னுடைய இரு கரங்களாலும் தாங்கிக் கொண்டு நின்றான் விஹான்.