காதல்-01
பல கரகோசத்திற்கு மத்தியில் கையில் மைக்கைப் பிடித்தான் நிதிஸ் சரன் அவனுடைய இனிய குரலோ அனைவரையும் கட்டிப் போட்டது.” தேடிக் கிடைப்பதில்லை என்று தெரிந்த ஒரு பொருளை தேடிப் பார்ப்பதென்று மெய் தேடல் தொடங்கியதே ” எனும் பாடல் வரிகளை உணர்ந்து பாடினான் போலும் அவன் குரலிலும் தேடல் கூடியது.
அவன் குரல் குழைந்து ,வழிந்து உயிரை உலுக்கியது. பாடல் முடிந்ததும் , மைக்கை அறிவிப்பாளரிடம் கொடுத்து விட்டு பார்வையாளர்களை நோக்கி கையசைத்து விட்டு மேடையை விட்டு இறங்கி ஓய்வறையினுள் நுழைந்தான்.
அதனைத் தொடர்ந்து அறிவிப்பாளர் அடுத்து அனைவரும் எதிர்பார்த்த பாடல் இதோ…..என அழைத்த நொடி மேடை ஏறிய வேதா கரகோசத்திற்கு மத்தியில் “
சோகாமா சோகாமா ஹே ஜாலி லிலோ ஜிம் காணா தான்மா…
ஹே மாமா பனாமா போயி பார்ட்டி பண்ணலாம் மாமா…
சோகாமா சீன் ஆ ஒரு கானா பாடலாமா…
நீ வாமா அட ஆளு நைட்டு ரவ்சு தாமா…
டக்குளு டக்குளு டக்குளு டக்குளு…
ப்ளாக்பஸ்டர் சாங்குமா…
டக்குளு டக்குளு டக்குளு டக்குளு…
திருப்பி போட்டு வாங்குமா…
டக்குளு டக்குளு டக்குளு டக்குளு…ஏரியா தான் தாங்குமா…
ஜாலி லிலோ ஜிம் கானா தாமா… குலேபா…என பாடலை பாட அரங்கமோ உற்சாகத்துடன் ஆரவாரித்தனர்.
ஓய்வறைக்கு வந்த நிதிஸ் சரன் தண்ணீரைக் குடித்து தன்னை ஓரளவு சரிப்படுத்திக் கொண்டான்.” ஆர் யூ ஓகே சார்…ம்ம் நவ் ஓகே” என்றான்.
அதனைத் தொடர்ந்து நிதிஸ் சரன் மற்றும் ஹரிணியும் இணைந்து டூயட் சாங் பாட அனைவரும் அலைபேசியில் டார்ச் லைட்டை ஆன் செய்து அப் பாடலுக்கு லைஃப் பண்ணத் தொடங்கினர்.
இரவு எட்டு மணி போல் தொடங்கிய இசை நிகழ்ச்சி நள்ளிரவை தாண்டி தான் முடிவடைந்தது. அறிவிப்பாளர் இந்நிகழ்விற்கு ஸ்பான்சர் வழங்கியவர்களுக்கும், பாடகர்கள் மற்றும் வாத்திய குழுவினருக்கும், ரசிகர்களுக்கும் நன்றியை தெரிவித்து இசை நிகழ்ச்சியை முடித்து வைத்தனர்.நிதிஸை அழைத்துக் கொண்டு கிளம்பினான் ராம். “நிதிஸ்..ம்ம் வீட்ட என்ன பதில் சொல்லப் போற”….” தெரியல ரொம்ப டிஸ்டர்பா இருக்குடா கெஸ்ட் ஹவுஸ்க்கு போ” என்றான் நிதிஸ் தனது தம்பியான ராமிடம். அவனும் காரை திருப்பி கெஸ்ட் ஹவுஸ் நோக்கி செலுத்தினான்.
கெஸ்ட் ஹவுஸ் அடைந்ததும் “நிதிஸ் இறங்கிக்கோ”…. என்றான் ராம். நிதிஸும் காரை திறந்து இறங்கி வீட்டினுள் நுழைந்தவன் ஹாலில் சோபாவில் சரிந்தான். காரை பார்க் செய்துவிட்டு உள்ளே நுழைந்த ராம் நிதிஸை பார்த்துவிட்டு ஒரு பெருமூச்சுடன் நிதின்.”காபி போட போறேன் உனக்கு….” “யா ப்ளீஸ் “என்றான் நிதிஸ் அதனைத் தொடர்ந்து ராம் சமையல் அறையினுள் நுழைய மேலே சுற்றிய மின்விசிறியை பார்த்தபடி இருந்த நிதிஸின் அலைபேசியோ “யார் கண்ணும் தீண்டாத தீவொன்றிலே நாம் சென்று வாழ்வோமா வா காதலே….” எனும் குரலில் பாட தன் சிந்தனையில் இருந்து வெளிவந்தவன் அலைபேசியை ஆன் செய்து காதில் வைக்க மறுபுறம் தாய் தான் அழைத்திருந்தார்.
” நிதிஸ் …..அம்மா நீங்க இன்னும் தூங்கலையா? எத்தன தடவ சொல்றது நேரத்துக்கு சாப்பிட்டு தூங்குங்கனு”….மறுபுறம் என்ன சொல்லப்பட்டதோ “ஆமா காலைல வாரம் என அழைப்பைத் துண்டித்தான்.”கையில் இரண்டு காஃபி கப்புடன் வந்தான் ராம் ஒன்றை நிதிஸிடம் நீட்ட அவனும் அதனைப் பெற்றுக் கொண்டான்.” ராம் ஏதும் தகவல் கிடைச்சுதா???தமையின் நிலை புரிந்தாலும் தான் இதற்கு என்ன செய்ய முடியும்”இல்லை எவளோ ரை பண்ணியும் முடியல ஒரு மாதமா அதுல எந்த அப்டேட்ஸ்ஸிம் புதுஷா வரல ,சில வேளை இப்போ வரலாம்ல என்றான் ராம்…..தனது அலைபேசியில் ” தேனிலும் இனியது காதலே எனும் யுடியுப் சேனலைத திறந்து பார்வையிட்டபடி அதிலோ புதிய புதிய அப்டேட்ஸ் எதுவும் இல்லை “ம்ம் பார்ப்போம் என்றான் ராம்”.
இருவரும் அன்று இரவு அங்கு தான் தங்கினர்.மறு நாள் காலையில் சூரியன் தன் பொற் பாதங்களை பூமியியல் பதிக்க மெல்ல பொழுதும் மலர்ந்தது.நிதிஸிம் ராமும் வீட்டிற்கு முறப்ப்ட்டனர்.தேவ் பிரதாப் மற்றும் கல்யாணி தம்பதியின் மூத்தவன் நிதிஸ் சரன், இளைய மகன் ராம் சரன் ராம் பிரதாப் பெரிய பிஸினஸ் மேன்,தேவ் பிரதாப்பின் தாய் சத்தியதேவி பழம் பெரும் முன்னனிப் பாடகி முதுமை காரணமாக அவர் பாடுவது குறைந்தாலும் அவரது பாடல்கள் என்றும் மனதை நீங்காத இடத்தைப் பிடித்துள்ளது.
தேவ் பிரதாப்பின் மனைவி கல்யானி வீணை வாசிப்பதில் கை தேர்ந்தவர்.இவ்வாறான இசைக் குடும்பத்தின் மூத்த பையன் நிதிஸ் சரன் இசைத்துறையில் ஆர்வம் கொண்டதால் அப் பிரிவையே தெரிவு செய்து அதில் முன்னேர.இளைய பையன் ராம் சரன் தந்தையின் தொழிலை கையில் எடுத்துக் அதனை நிர்வகிக்கிறான் நேரம் கிடைக்கும் போதெல்லாம் தந்தைக்கு தொழிலில் உதவுவதை வழக்கமாக கொண்டான் நிதிஸ்.
இரண்டு மாடி கட்டடத்தின் முன் வந்து நின்றது.அவ்விலையுயர்ந்த கார் அதிலிருந்து இறங்கினான் நிதிஸ் சரன் அவனது ஸ்டூடியோ தான் அது தனது வேக எட்டுக்களுடன் உள்நுழைந்தவனை ரிசப்ஷனிஸ்டில் இருந்த செரா “குட் மார்னிங் சார்” என காலை வணக்கத்தை கூறினாள். அவனது அதனை சிறு தலையசைப்புடன் ஏற்று தனது அலுவலக அறைக்குள் நுழைந்து கொண்டான்.
அவனைப் பின் தொடர்ந்து அறையினுள் நுழைந்தான் நிதிஸின் பெர்சனல் அசிஸ்டன்ட் கௌதம் “குட் மார்னிங் சார் ஓஓ….குட் மார்னிங் கௌதம் எல்லாரும் ரெடியா ?””ஆமா சார் ” ” ஓகே அப்போ கிளம்பலாம் என இருவரும் ரெக்கார்டிங் நடக்கும் இடத்திற்கு வந்தனர்.அனைவரும் தத்தபது வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.” த லயன் கிங்” எனும் கார்டூன் திரைப்படத்திற்கே டப்பிங் பேசவுள்ளனர்.
கௌதம் அனைவருக்கும் ப்ரின்டட் செய்யப்பட்ட டயலாக்கை கொடுக்க ஒவ்வொருவரும் குழந்தைகளை ஈர்க்கும் வகையில் கிள்ளை மொழியில் அழகாகப் பேசத் தொடங்கினர்.ஒரு மணி நேரம் அங்கு செலவிட்டவன் “.டப்பிங் பிரிவிற்குரியரைப் பார்த்த நிதிஸ் அங்கிருந்து அகன்று தனது அலுவலக அறைக்குள் வந்தவன் வேலையில் மூழ்கிப் போனான்.” எக்ஸ்கியூஸ் மீ சார் என உள்ள வந்த கௌதம் இதக் கொஞ்சம் பாருங்க என தன் கையில் இருந்த டஃப்பைக் காட்ட அதிலோ ஒரு பெண்ணின் குரல் எந்தவித பிண்ணனி இசையுமின்றி ” நீயும் நானும் ஓருயிர் தானே ,உன் பிரிவால் வாடுதே என் இதயம் தேம்புதே” என ஒலித்தது. கௌதம் அடுத்த பாடலை ஒலிக்க விட அதிலோ ” உயிரே உயிரே உன்னைச் சேர என் மனம் ஏங்குதே, கண்ணீரில் வாடுதே என சோகமான பாடல் சிறு பிசிரும் இன்றி ஒலித்தது.
அந்தக் குரல் தந்த மயக்கத்தில் கண்மூடி, ஒரு சில நிமிடம் ,இருந்த நிதிஸ் கண்விழித்து ….. “நைஸ் வாய்ஸ் யாருன்னு தெரியுமா????”
“இல்ல சார் தேனிலும் இனியது காதலே என்ற யுடியூப் சேனல்ல தான் போட்டிருக்கு, பாட்டுக்கு ஏத்த போல ஏதோ ஒரு படம் போட்டிருக்கு” எனக் காட்டினான். “யாருனு பாருங்க” என்றான் நிதிஸ்.
மதிய வேளை வீட்டிற்குக் கிளம்பினான்.நிதிஸ் வீட்டிற்கு வந்தவனை வரவேற்றதென்னவோ சத்தியதேவி தான் ” நிதிஸ் வா வா” , எப்படி இருக்க கண்ணா எனக் கேட்க,நிதிஸிம் நான் நல்லா இருக்கன் நீங்க எப்படி இருக்கீங்க உங்கட பயணம் எல்லாம் எப்படி, எல்லாம் நல்லா தான் போச்சி என இருவரும் பேசிக் கொண்டு இருக்கும் போது,வாங்க சாப்பிடலாம் என அங்கு வந்தார் கல்யாணி , நீங்க சாப்பிடுங்க நான் ப்ரஸ்சாகிட்டு வாரன் என தனதறையினுள் நுழைந்தான்.
அனைவரும் மதிய உணவை பேசி சிரித்து ஒன்றாகவே உண்டனர்.மீண்டும் அலுவலகத்திற்கு கிளம்பினான் நிதிஸ் அன்றைய பொழுது அலுவலகப் பணியிலேயே கழிய இரவு மொட்டை மாடியில் ஏகாந்த தனிமையில் இதமான மெல்லிய காற்று உடலைத் தழுவிச் செல்ல முழு நிலவைத் தான் பார்த்தபடி படுத்திருந்தான் நிதிஸ்.
நிதிஸின் காதில் இருந்த கெட்போன் இழுக்கப்பட தன்னிலை மீண்டவன் பக்கவாட்டாக திரும்பிப் பார்க்க ராம் தான் நின்றிருந்தான். ” எத்தன வாட்டி கூப்பிடுறது ” என சலித்துக் கொண்டவன்.அவனது கெட்போனை தனது காதில் மாட்டியபடி நிதிஸிக்கு அருகில் படுத்துக் கொண்டான்.