தேவதை 4
தர்ஷினியை தேவா தள்ளிவிட்ட பிறகு… அவளை சமாதானப்படுத்த எவ்வளவோ முயன்றும் தோற்றுப் போனான்…. தர்ஷினி பிடிவாதக்காரி என்பதால்… அவளை சரி செய்வது அவ்வளவு எளிதாய் இருக்கவில்லை… ஆனாலும் தேவா அவளுக்கும் உயிருக்கு உயிரான தோழன் தான்…, என்பதால் அவளாலும் 2 நாட்களுக்கு மேல் அவனிடம் பேசாமல் இருக்க முடியவில்லை….
இப்ப உன்மேல உள்ள கோவம் போச்சி அவ்ளோதான்… ஆனா என்னைக்காவது ஒரு நாள் அந்த டைரிய படிக்காம விட மாட்டேன்…. என அடிக்கடி அவன் தேவதை அவனை மிரட்டுவதும் உண்டு…
இன்று வரை மிரட்டிக்கொண்டு தான் இருக்கிறாள்… ஆனாலும் அந்த டைரியை படிக்கும் சூழ்நிலை மட்டும் கிட்டவில்லை….
அதன் பிறகு பள்ளி படிப்பு முடிந்ததும்,, தர்ஷினி தேவாவிடம் சென்று,,, நா சேர போற காலேஜ்ல தான் நீயும் சேரணும்,, என ஒரு வார்த்தை சொல்லவும் ஜெய்யை இழுத்துக் கொண்டு அதே கல்லூரியில் மூவரும் விண்ணப்பித்து வந்தனர்….
நீ இந்த காலேஜ்ல தான் படிக்கணும்னு தர்ஷினி அவனுக்கு சொல்ல வேண்டிய அவசியமே இல்லை… அவனுமே அந்த முடிவில் தான் இருந்தான்… அவளே சொன்னதும்,, கரும்பு தின்ன கூலியா என்பது போல் இருக்க….,சரி, சரி ஒரே காலேஜ் தான போட்டு தொலைக்கிறோம்,, என பொய்யாக சலித்துக் கொண்டான் தேவா….
டேய் மச்சான் அதான் காலேஜ் போக போறோம்ல,, அங்க போனதும் உன் காதல சொல்லிரு… இல்லனா தப்பா போயிரும்… என ஜெய் முன்கூட்டியே எச்சரிக்கை கொடுக்க… அவனை புரியா பார்வை பார்த்தான் தேவா….
என்ன தப்பா போயிரும் புரியல டா மச்சான்….
ச்ச் டேய் அப்பிராணியா இருக்கியே டா… மச்சான் ஸ்கூல்ல இருந்ததை விட காலேஜ்ல நிறைய பசங்க இருப்பாங்க… அதுல யாரையாச்சும் அவளுக்கு புடிச்சுட்டு வை உன் கதை அம்பேல் தான் என பயமுறுத்தினான் ஜெய்….
டேய் விளையாட்டுக்கு கூட இப்படி சொல்லாதடா என்னால தாங்க முடியாது டா… என்றான் தேவா பாவமாக…
ஏதேய் விளையாட்டுக்கு சொல்றனா? பைத்தியக்காரா,, உண்மையா தான் சொல்றேன்… முன்னாடி உனக்கு லவ் பண்ண வயசும் இல்ல,, பக்குவமும் இல்ல… ஆனா இப்ப நாம மேஜர்… தெளிவா முடிவு எடுக்கலாம்.. நீ உன் லவ்வ அவகிட்ட சொல்லு கண்டிப்பா ஒத்துப்பா…அப்டி இல்லனாலும் உன்மேல அதிகம் கோவமும் பட மாட்டா… என்ன புரியுதா?
ஹ்ம்ம் என பெருமூச்சு விட்டவன்,, சரி டா,, நீ சொல்றதும் சரி தான்.. இப்டியே போயிட்டு இருந்தா எப்ப தான் நானும் என் லவ்வ சொல்றது… இப்ப தானே காலேஜ் சேர்ந்தோம்…. ஒரு மாசம் போகட்டும்… அவகிட்ட என் காதல சொல்லிடுறேன்,, என வாக்குறுதி கொடுத்தவன்…
தினமும் தன் காதலை சொல்ல பாடு படுவதை விட,, அதை மறைக்க தான் படாத பாடு பட்டான்…
அவனையும் மீறி சில வார்த்தைகள் அவளை வருணிக்கும் பொருட்டு வெளியே வர,, அதையும் காமெடியாக அவள் எடுத்துக் கொள்வதால்,, என்ன செய்வதென்று புரியவில்லை….
எப்படியும் தன் காதலை சொல்ல முடிவெடுத்து,, தன் தேவதையின் டைரியை எடுத்திருந்தான்…
முன் பக்கம் ‘தேவை எல்லாம் தேவதையே’ என எழுதிருக்க,, அந்த வார்த்தையை வருடி விட்டவன்…. டைரியின் கடைசி பக்கத்தை எடுத்து எழுத ஆரம்பித்து இருந்தான்….
ஏனென்றால்,,, இன்னும் சிறிது நாட்களில் என் மனதில் இருக்கும் காதலை நான் சொல்ல மாட்டேன்.. என்னை போல்,,, இத்தனை வருடங்களாய் அவளை பற்றிய உணர்வுகளின் குவியல்களை,, சுமந்திருக்கும் என் டைரி யை கொடுத்து அவள் மீது நான் வைத்திருக்கும் காதலை தெரிவுபடுத்துவேன்…
தேவதையை நான் என் உயிரில் சுமந்திருப்பது போல்,, என் டைரியின் காகிதமும் அவள் மேல் நான் வைத்திருக்கும் காதலை எப்போதாடா வெளிக்காட்டுவோம் என என்னை போல் மூச்சடைக்க காத்திருக்கிறது…..
இது என் கடைசி வரி… இதற்கு மேல் இது எனக்கு சொந்தமல்ல இதிலிருக்கும் ஒவ்வொரு வார்த்தையும் என் தேவதைக்கு மட்டுமே சொந்தம்…
உனக்காய் படைக்கப்பட்ட இந்த டைரி கூட, உன்னை காதலிக்க ஆரம்பித்து விட்டது… உன் பெயரை மட்டுமே ஆயிரம் முறை நித்தம் எழுத சொல்லி கெஞ்சுகிறது….. இதை விட பெரிய க்ரீட்டிங் கார்டு இல்லடி வண்டு…..
நீ பெண்ணல்ல!
என்னுள் வாழும் தேவதை,
என் தேவதையே!
நீ இல்லாமல் நான் இல்லை..
உன் நிழலை கூட நிலம் போல காப்பேனடி!
காற்றாய் மாறி உன் சுவாசமாக இருக்க ஆசை…
என்னுள் வந்து முழுதாய் கலந்து விடு…
உன்னை எப்போதும் தழுவிகொண்டே இருப்பேன்…
என் உயிரின் அங்கமே..!
உன் இருப்பிடம் என் இதயம் மட்டுமே!!
உன்னை என்னுள் காதல் சிறையிட முற்பட்டேனடி!!
என் ஆயுள் போதவில்லையடி கண்மணி!!
என்றைக்கும் எனக்கு நிஜமாய் மாறிய கனவு நீ…!
என் கனவிலும் வேண்டிய உறவு நீ….!
நிஜத்திலும்,, கனவிலும் நான் தேடும் தேவதை நீ….!
என் காதல் சரியா? தவறா? தெய்வீக காதலா,, என்பதெல்லாம் தெரியாது….
ஆனாலும்
என் தேவதையின் மீதான காதல் என்பது மட்டும் தெரியும்…..
என எழுதி முடித்திருந்தான்…
டைரியை முத்தமிட்டு கப்போர்டில் வைத்து பூட்டியவன் நிம்மதியாக கண் மூடி தன் தேவதை கனவுடன் உறங்க….
அவனுக்கு தெரியப்போவது இல்லை.. இந்த டைரிக்கு இனி வேலை இல்லை,, என்பதை… தெரிந்தால் எப்படி தாங்கிக் கொள்வான்…?
அடுத்த நாள் எப்போதும் போல கல்லூரிக்கு சென்றவர்கள்… கிளாசை கவனித்து விட்டு,, கேன்டீன் நோக்கி சென்றனர்…. தேவாவும்,, ஜெய்யும் காபீ வாங்க செல்லவும்….
தர்ஷினி ஜுஸ் குடித்தப் படி நின்றிருந்தாள்…. அப்போது ஒருவன் தெரியாமல் அவள் மீதி மோதி நின்றான்…
தர்ஷினிக்கு கையில் நல்ல வலி,, கையில் இருந்த ஜுஸயும் கீழே போட்டு விட,,, யார் என்பது போல் கடுப்பில் திரும்பிப் பார்க்கவும்,, அவள் கண்கள் இமைக்க மறந்து தான் எதிரில் நின்ற ஆணவணைப் பார்த்தது….
ஆறடி உயரம்,, உடற்பயிற்சி செய்த தேகம்,, சிவந்த உதடுகள்,, அறை குறை தாடி மீசையுடன்,,,,முன் தலை முடியை கோதியப்படி தன் ரோஸ் நிற உதட்டை சுழித்து…. சாரி மா என சொல்லிவிட்டு ஓட… அவனைப் பார்த்து சிலை போல் நின்றிருந்தாள்….
அந்நேரம் காபியை வாங்கி குடித்தப் படி வந்த ஜெய்யும், தேவாவும் ,, அவள் வாயை பிளந்தப் படி நிற்பதை கண்டு… ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்….
தர்ஷினியின் பின் தலையில் தட்டினான் தேவா…அப்போதுதான் சுயத்திற்கு வந்தவள்… தலையை தடவி உதட்டை சுழிக்க,,,
தேவா ஐயோ ஆள கொல்றாலே,, என நெஞ்சை தடவியப்படி,,, தன்னை சமன் செய்தவன்,,,
அவளிடம் பைத்தியம் உன் வாயில 4 கொசு போய் மூக்கு வழியா வெளியே வருது…. அதுக்கூட தெரியாம என்ன வாயை பிளந்து பாத்துட்டு இருக்க? என்றவன் காபியை ஒரு மிடறு விழுங்க….
டேய் தேவா ஒரு பையன பாத்தேன் டா… செம ஹேண்ட்சமா இருந்தான் என்றதும்…. தேவாவிற்கு புரை ஏறி குடித்த காபி வெளியே வந்து கண்கள் ரத்த சிவப்பாக மாறி இருமினான்…..
ஜெய்க்கும் அதிர்ச்சி யாக தான் இருந்தது.. உடனே தர்ஷினி தேவாவின் தலையை வேகமாக தட்டி.. அவன் முகத்தை தன் துப்பட்டாவால் துடைத்து விட்டு… பைத்தியம் மெதுவா குடிச்சா என்ன எப்புடி கண்ணுலாம் சிவந்து இருக்கு பாரு… என அவன் கண்களை துடைக்க சென்றவளின் கையைப் பிடித்தவனுக்கு தொண்டை அடைத்தது…..
நீ இப்ப என்ன சொன்ன? என்பது போல் அவளைப் பார்க்க…,
என்னடா நாயே இப்டி பாக்குற?
இ இ இல்ல.. நீ இப்ப என்னமோ சொன்னியே! அதான் அதிர்ச்சியில….. அதற்கு மேல் அவனால் பேச முடியவில்லை….
ஆமா டா,, அவன் இங்க தான் எங்கேயோ என கண்களால் அலசியவள்,, அவனை தேடிக் கண்டுபிடித்திருந்தாள்….
ஏனோ இப்போது தேவாவின் கண்களுக்கு அவள் தேவதை உருவில் இருக்கும்,, தன் மனதை வதைக்க காத்திருக்கும் ராட்சசியாக தெரியவும்.. கையறு நிலையில் அப்படியே நின்றிருந்தான்…..
ஹான்,, அதோ நிக்கிறான் பாரு அவன் தான் என கை காட்ட… ஜெய்யும், தேவாவும் திரும்பிப் பார்த்தனர்… நல்ல அழகனாக தான் நின்றிருந்தான்…
அவனைப் பார்க்க தேவாவிற்கு ஏக்கமாக இருந்தது…. இப்படி ஒரு பார்வைக் கூட என் தேவதையிடமிருந்து தனக்கு கிடைக்கவில்லை என்ற ஏக்கம்!
தேவாவின் தோள் மீது கை போட்டவள்…. நா இங்க ஜுஸ் குடிச்சிட்டு நின்னுகிட்டு இருந்தேனா! தெரியாம என் மேல வந்து மோதிட்டான்… யாருடா அதுனு திரும்பிப் பார்த்தா,, இப்டி அழகா ஒருத்தன்… நா அப்டியே ஷாக் ஆகிட்டேன்… ஏண்டா தேவா இதான் அழகுல மயங்குறதா? சொல்லுடா என அந்த சீனியரின் மேல் இருந்து தன் பார்வையை விலக்காமல் பேசியவள்,,, எப்படி இருக்கான் சொல்லு….டா என தேவாவை உலுக்க….
ஜெய்யிற்கு தன் நண்பனின் நிலை கண்டு பரிதாபமாய் போனது… என்ன சொல்வதென புரியவில்லை…
சொல்லுடா உன்ன தான கேக்குறேன்… என தர்ஷினி கத்தவும் தான்….
ந ந நல்லாருக்கான்… என திக்கித் திணறி கூறி முடிப்பதற்குள்.. தேவாவின் கண்களில் இருந்து நீர் வழிந்து ஓடியது….
அந்த சீனியர் மாணவன், தன் நண்பர்களுடன் அரட்டை அடித்தப் படி எதேச்சையாக திரும்ப… 3 பேரும் தன்னை தான் பார்ப்பதை உணர்ந்தவன்.., இடுப்பில் கை வைத்து அவர்களை உற்று நோக்கினான்….
அய்யோ நம்மள தான் டா பாக்குறான்… வேற எங்கேயாச்சும் பாருங்க என தேவாவின் கன்னம் பிடித்து திருப்ப… தர்ஷினியின் கை விரல்களில் அவனின் கண்ணீர் துளி….
அந்த நிமிடம் தர்ஷினி சட்டென தன் விரல்களை பார்த்து விட்டு அவன் தடையை பிடித்து தன் பக்கம் திருப்பிப் பார்க்க…. அவன் கண்கள் கலங்கி ரத்தமாய் இருப்பதை பார்த்தவள்…
தன் துப்பட்டாவை எடுத்து அவன் கண்களை துடைத்து விட்டு… ஏண்டா காபி புல்லா மண்டைக்கு ஏறிடுச்சா? எதுக்கு இவ்ளோ சிவந்துருக்கு… இங்க பாரு உன் மூக்கும் சிவந்து இருக்கு என அதையும் துடைத்து விட….
ஓ ஓ ஒன்னும் இல்ல.. தல வலிக்க ஆரம்பிச்சிட்டு,, நா களாசிற்கு போறேன் என விறு விறு வென செல்ல…. அவன் பின்னாலேயே ஜெய்யும்,, தர்ஷினியும் அவன் பின்னால் ஓடி சென்றனர்…..
அந்த சீனியர் மாணவனும் அங்கு நடப்பதை கவனித்து விட்டு தன் களாசிற்கு சென்று விட்டான்….
ஜெய்யிற்கு தேவாவை எப்படி சமாதானப் படுத்தப் போகிறோம்? தெரியவில்லை என்ற மனநிலையில் அமர்ந்திருக்க…. தேவா பெஞ்சில் கையின் மேல் தலை வைத்து அப்படியே படுத்து விட்டான்….
தொடரும்,……..
என் கதை பிடித்திருந்தால்,, ஸ்டார்ஸ் குடுங்க டார்லிங்ஸ்… 🙏🙏🙏🥰