தேவை எல்லாம் தேவதையே…

4.8
(26)

தேவதை 15

நாட்கள் அழகாக நகர்ந்தது… கல்லூரிக்கு சென்றவர்கள் எப்போதும் போல் கலகலப்பாக இருக்க, ஜெய்யின் கண்கள் மட்டும் அமுலுவை தேடியது.. யாரேனும் தன்னை திரும்பி பார்க்கிறார்களா? என மணிக்கொரு ஒரு முறை ஆராய்ந்து கொண்டான்…அன்றைய நாள் முழுதும் அவனின் கண்கள் பெண் பிள்ளைகள் அமர்ந்திருக்கும் இடத்தை மட்டுமே பார்க்க… தேவா வாய் விட்டே கேட்டு விட்டான்..

டேய் காவலன் படத்துல வர விஜய் மாதிரியே யாரது யாரதுனு பாடிக்கிட்டே இருக்க காது வலிக்குது… செமையா வாங்க போற டா நீ யார்கிட்டையோ என நக்கலாக கூற….

டேய் அந்த பொண்ணு யாருனு தெரிஞ்சிக்கணும் டா.. தினமும் போன் பண்ணி பேசுறா.. ஆனா உண்மையான பேர் கேட்டா மட்டும் சொல்ல மாட்டேன்றா.. நா எப்படியும் அவளை கண்டு பிடிக்கணும்.. நீ தான் டா உதவி பண்ணனும்.

ஆமா எனக்கே எனக்கு உதவி பண்ணிக்க முடியல இதுல உனக்கு வேற ஏண்டா நீ வேற? வாழ்க்கையே வெறுப்பாக உணர்ந்தான் தேவா ..

ஏண்டா இம்புட்டு சலிச்சிக்குற! வண்டு நல்லா தான பேசுறா? உன்கிட்ட

எங்க பேசுறா? தினமும் சீனியர்ட்ட தான் பேசுறா,, நைட் டெய்லி கால் பண்ணி பாத்துட்டு தான் தூங்குறேன்.. வெயிட்டிங்கல போகுது.. மார்னிங் என்ன பாத்ததும், சாரி டா வசி கிட்ட பேசிகிட்டு இருந்தேன்னு சொல்றா.. மனசெல்லாம் வலிக்குது தெரியுமா? என தன்னை நினைத்து நொந்து போனான்..

ஹ்ம்ம் நீ உன் காதல சொல்ற வரைக்கும் உனக்கு பிரச்சனை தான் டா..என்ற ஜெய்யை பார்த்தவன்

டேய் முன்னாடி மாதிரி இல்ல டா அவ பைக்குல வர கொஞ்சம் நேரம் கூட அவனை பத்தி தான் பேசுறா.. கடுப்பா இருக்கு டா மச்சான்.. அவ அவனை தான் ல ல லவ் பண்றா போல! என திக்கி திணறி கூறியவனுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது…

ஜெய் அவன் முக வாட்டத்தை கண்டு கொண்டவன் செய்வதறியாது இருந்தான்..

சரி டா என் கதையை விடு உனக்கு ஹெல்ப் பண்றேன் வா என அழைத்து சென்றான் தேவா…ரெஜிஸ்டர் நோட்டை திறந்து ஜெய்க்கு வந்த போன் நம்பரை தேடிப் பார்க்க.. அதில் அவன் அமுலு நம்பர் இல்லை என்றதும் இருவரும் முகத்தை தொங்கப் போட்டு கொண்டு செல்லவும், அமுலு திருட்டு தனமாய் அவர்களைப் பார்த்து சிரித்தாள்…

ஒரு முறை இருவரும் மரத்தடியில் நின்று கொண்டு அவன் க்ளாஸ் பெண் பிள்ளைகள் கூட்டமாய் நடந்து செல்லும் போது, ஏய் அமுலு என சத்தமாக அவர்களை பார்த்து ஜெய் கத்தவும், மொத்த கூட்டமும் திரும்பி அவர்கள் இருவரையும் பார்த்து சிரிக்க.. தேவா ஜெய் இருவரும் பல்பு வாங்கி கொண்டு க்ளாசிற்குள் சென்றனர்…

ஒரு முறை தனது களாசில் படிக்கும் மாணவியிடம் சென்று, எனக்கு ஒரு உதவி பண்ணேன் என கேட்க வும் அந்த மாணவி என்ன என்பது போல் பார்க்க

அமுலு னு நம்ம களாஸ்ல யாராச்சும் படிக்கிறாங்களா? கேட்டு சொல்லேன் ப்ளீஸ் என்றதும்  இவன் என்ன பைத்தியமா என்பது போல் பார்த்த அந்த பெண், போய் படி டா தடியா என திட்டி விட்டு  சென்று விட்டாள்..

  •      அய்யே போடி நா என்ன இவ நம்பரையா கேட்டேன்.. ஓவரா பேசுறா.. இப்டி புலம்ப விட்டுட்டாளே! என தலையில் கை வைத்து அமர்ந்து விட்டான்..

எப்போதும் போல்  தர்ஷி பிரேக் டைமில் வெளியே சென்று விட்டாள்..

தேவா சொன்னது போல் இப்போதெல்லாம் அதிக நேரம் அவள் வசியுடன் தான் நேரத்தை செலவிடுகிறாள்.. பிரேக் டைமல் கூட தேவாவையும், ஜெய்யையும் எதிர்பார்க்காமல், அவள் தனியாகவே கேண்டீனுக்கு செல்லவாள்., அங்கு வசி தனது நண்பர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டிருப்பான்.. இவளை பார்த்ததும் தன் நண்பர்களிடம் சொல்லிவிட்டு, தர்ஷியுடன் தான் நேரத்தை செலவிடுவான்… இதுவே தொடர்ச்சியாக நடக்க அதை பார்க்கும் போதெல்லாம் தேவாவால் மூச்சி கூட விட முடியாமல் திணறுவான்…

அவள் காலை, மாலை இரு வேலையும் பைக்கில் அவனுடன் வரும் போது மட்டும் தான் பேசுகிறாள்.. அதும் பாதி நேரம் வசியை பற்றி மட்டுமே இருக்கும்.. அவள் தன்னிடம் பேசும் நிமிடங்களுக்காக மணிக்கணக்காய் காதலோடு காத்திருக்கிறான்.. ஆனால் அவள் அவனை சட்டை கூட செய்யவில்லை.. அனைத்தும் அவன் கை மீறி சென்று விட்டது…

தன்னவள் தனக்கில்லை என்று நினைக்கும் போது வருகின்ற வலியை விட, என்னுடன் இருந்தும் அவள் எனக்கானவள் இல்லை, என்று நினைக்கும் போது தான் இன்னும் வலிக்கிறது…

வீட்டிற்கு சென்றால், படிப்பில் நாட்டமின்றி அறைக்குள் சுருண்டு தன்னவளின் புகைப்படத்தை பார்த்தவாறு, அடைந்து கிடக்கின்றான்..

முதல் செமஸ்டர் வர, தேவா அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் ஏனோ தானோ வென்று எழுத, ஜெய் அதற்கும் மேல் தன் சொந்தக் கதை, சோகக் கதை, ஊர்க்கதை என அனைத்தும் அவன் எக்ஸாம் பேப்பரில் தான் படமாய் ஓட்ட… தர்ஷினி ஓரளவுக்கு நன்றாகவே எழுதி இருந்தாள்…

நாளை கடைசி தேர்வு , அதன் பிறகு ஒரு மாத காலம் விடுமுறை தான்.. தன்னவளை பார்க்க முடியாவிட்டாலும், பேசவாது செய்யலாம்.. ஆனால் இப்போது அதற்கும் வாய்ப்பில்லையே! மனதிற்குள் புலம்பினான்… மீண்டும் தன் காதலை ஒரு டைரியில் அடக்க விரும்பாதவன், அதை முழுதாய் மறைக்க முயற்சி செய்தான்…

ஜெய் அவன் அமுலுக்கு போன் செய்யவும், அவன் அமுலு போனை எடுத்தது…

ஹலோ சொல்லு ஜெய் படிக்கலையா?

படிச்சா என்ன படிக்கலைன்னா என்ன? நா ஒன்னு கதை எழுதுவேன், இல்லனா மூவி பாட்ட அப்டியே இங்கிலிஷ் ல ட்ரான்ஸ்லேட் பண்ணிருவேன்..என சொல்லவும் அமுலு சிரித்து விட்டாள்.

ஓய்…..

ஹ்ம்ம் லைன்ல தான் இருக்கேன்….

தெரியுது,, நாம பேசி ஒரு மாசம் ஆகப்போகுது.. உன் முகத்தை காட்டவே மாட்டுற… ப்ளீஸ் புள்ள.. நாளைக்காவது நேர்ல வந்து பேசேன்.. என கெஞ்சும் குரலில் கேட்கவும்..

அவளிடம் அமைதி மட்டுமே!

ப்ளீஸ் ப்ளீஸ் அப்புறம் ஒரு மாசம் லீவு டி யோசிச்சிக்க. என்ன பாக்கவும் முடியாது நீ என்றான் சற்று மிரட்டும் குரலில்..

அவளுக்கு கஷ்டமாக தான் இருந்தது.. ஜெய் மனதில் என்ன இருக்கு என்று தெரியவில்லை… ஆனால் அவள் மனதில் ஜெய் மீது கட்டுக் கடங்கா காதல் அல்லவா ஒளிந்திருக்கிறது.. இதை அவனும் அறிவான், ஆனால் ஒரு போதும் இதை பற்றி அவளிடம் கேட்டு அவளை தர்ம சங்கடத்துக்குள் தள்ளவில்லை..

அவள் நண்பனாக பழக வேண்டும் என்றால், நேரில் வந்தே பேசி இருக்கலாமே! இந்த அளவு திருட்டு தனம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்பதால், தன்னை அவளுக்கு பிடித்திருக்கிறது என்பதை முன் கூட்டியே அறிந்திருந்தான்..

அவள் அமைதி காக்கவே ஜெய்க்கு மேலும் கடுப்பேற்றியது.. சரி நாளைக்கு நீ என்ன பாக்கலைன்னா இனிமேல் உன்கிட்ட பேச போறது இல்ல.. நீ போன் பண்ணாலும் எடுக்க மாட்டேன்.. நீ என்னனு யோசிச்சு சொல்லு என்றதும் அவள் மவுனம் சாதித்தாள்..

சரி அப்போ நா வச்சிரட்டா…

வேணாம், வைக்காதீங்க…

ஏன் என்றான் ஆவலுடன்….

நாளைக்கு உங்கள பார்க்க வரேன்,

நா நம்ப மாட்டேன் டி…

இல்ல கண்டிப்பா வரேன்.. நா அழகா இல்லனா என்ன பண்ணுவீங்க?

நீ எப்படி இருந்தாலும் எனக்கு பிடிக்கும் டி…

பொய் சொல்லாத.. நா அழுக்கா, கருப்பா, பல்லு தெத்து பல்லு என்ன உனக்கு கண்டிப்பா புடிக்காது..

நா மட்டும் என்ன ஷாருக்கானா? நானும் என்ன நல்லாவா இருக்கேன்.. சரி அப்டியே இருந்தாலும் பிரெண்ட்ஸ்க்குள்ள எதுக்கு அழகு பாக்கணும் என்றான் அவன்.

நாம பிரெண்ட்ஸா? என்றாள் தொய்ந்த குரலில்…

நீ என்ன சொல்ல வர? தெரியாதது போல் அவன் நடிக்கவும்

உங்கள மாதிரிலாம் எனக்கு மனசுல ஒன்னு வச்சிக்கிட்டு பேச தெரியாது. நா நா ல லவ் பண்றேன்…

அந்த வார்த்தையை கேட்டதும் உள்ளுக்குள் பட்டாம்பூச்சி பறக்க, இருந்தும் அதை மறைத்துக் கொண்டவன்,,

யார? மா என கேட்டு நாக்கை கடித்துக் கொண்டு சிரித்தான்

ஹ்ம்ம் உங்க தாத்தாவ உன்ன தான் டா மாங்கா மடையா, . எனக்கு எதையும் மறைச்சி பேச பிடிக்காது., காதல சொல்லிட்டு முடிவ உன் கைல குடுத்துருவேன்.. நீ என்ன சொல்றியோ அது தான் …நா உனக்கு கால் பண்ணப்பவே உனக்கு தெரியும் உன்ன லவ் பண்றேன்னு.. எதுமே தெரியாத மாதிரி நடிக்காத பல்லை கடித்து கொண்டு கோவத்தில் பேசினாள் அமுலு…

சரி சரி,, கோவப்படாத நாளைக்கு வா பேசிக்கலாம்

நீங்க இன்னும் பதில் சொல்லல! ஆர்வமாய் கேட்க வும்

நேர்ல வா டி சொல்றேன்..

அழகா இருக்கேனா இல்லையானு பாத்துட்டு தான சொல்வீங்க? அப்டி பட்டது ரியல் லவ்வா இருக்க வாய்ப்பு இல்ல? மூக்கை சுருக்கி பேசவும்.

ஜெய் பெருமூச்சை இழுத்து விட்டவன், இங்க பாரு புள்ள எனக்கு உன்கிட்ட தினமும் பேசணும், ஒரு நாள் பேசலைனா கூட எதையோ இழந்த மாதிரி இருக்கு. அட்லீஸ்ட் சண்டையாச்சும் போடணும். இது என்ன உணர்வுனு சொல்ல தெரியல.. ஆனா உன் குரல் கேட்காம தூங்க முடியாது.. அந்த அளவுக்கு மயக்கி வச்சிட்ட என மனதில் உள்ளதை வெளிப்படையாக சொல்லவும் அமுலுவுக்கு நிம்மதி பிறந்தது..

இந்த குணம் தாண்டா என்ன உன் பக்கம் இழுத்து விட்ருச்சு.. சரி நாளைக்கு எக்ஸாம் முடிஞ்சதும், கேம்பஸ்க்கு வெளில, மரத்தடிக்கு கீழ தனியா வந்து நில்லு.. நா வரேன் என்றதும்

நிஜமா வருவியா டி எனக் கேட்டான்..

நிஜமா வருவேன்., இப்ப போய் படி நா வச்சிரட்டா? எனக் கேட்டாள்

ஹ்ம்ம் பை குட் நைட் டி என போனை வைக்க.. ஜெய்யால் தன்னையும் ஒருத்தி விரும்புகிறாள் என்பதை நம்பவே முடியவில்லை.. பிறகு எங்கே படிக்கிறது? வானத்துக்கும், பூமிக்கும் குதித்து கொண்டிருந்தான்..

நாளை எக்ஸாம் பேப்பரில் நீ வருவாய் என! நீ வருவாய் என! சாங் தான் டிரான்ஸ்லேட் ஆகி வரும்…

நாளை ஜெய்யின் கண்மணி அவனை பார்க்க வருவாளா? வந்தால் அவன் அவள் காதலை ஏற்றுக் கொள்வானா? நிராகரிப்பனா?

தொடரும்,…..

 

நிறைய பேர் படிக்கிறிங்க staars குடுக்க மாட்றீங்க… தயவு செய்து படிச்சி முடிச்சிட்டு staars குடுங்க டியர்ஸ் 🥰🥰🙏🙏🙏

 

 

 

 

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 26

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!