தேவை எல்லாம் தேவதையே….

4.8
(4)

தேவதை 19

 

வசி படம் முடிந்து செல்லும் போது தான் தர்ஷியை காணவில்லை என்பதையே புரிந்துகொண்டு அவ எங்கே என்று கேட்டான்..

ஷில்பா ஐ டோன்ட் நோ வசி அவ என்ன பேபியா? வீட்டுக்கு போயிருப்பா வா நமக்கு நேரம் ஆகிருச்சு கிளம்பலாம் என்றவள் காரில் முன் சீட்டில் அமர்ந்துக் கொண்டாள்…

வசிக்கு ஏதோ தவறாக நடந்திருப்பதை உணர்ந்தவன், ஷில்பாவை இடுப்பில் கை வைத்து முறைத்து பார்த்தப் படியே காரை எடுக்காமல் நின்றிருந்தான்..

வாட் வசி வா வந்து காரை எடு, டைம் ஆகுது பாரு என கடுப்படிக்க…

காரில் ஏறி அமர்ந்தவன், ஷில்பா என்ன ப்ராப்லம் உனக்கு? அவ எங்க?

என்ன கேட்டா எனக்கு எப்படி தெரியும்? திமிறாக பதில் சொன்னாள்…

இங்க பாரு அவ என்ன நம்பி தான் இங்க வந்தா.. அவளை அப்டியே விட்டுட்டு போக முடியாது புரிஞ்சிக்க..

அதுக்கு என்னனை என்ன பண்ண சொல்ற..? தெனாவெட்டாக கேட்க வசிக்கும் பத்திக் கொண்டு வந்தது…

சரி நீ சொல்ல வேணாம், ஆனா அவ உங்க கூட தான ரெஸ்ட்ரூம் வந்தா அதுக்கு பிறகு தான் காணாம போய்ட்டா… ஏதோ நடந்திருக்கு.. இல்லனா அவ வீட்டுக்கு போற மாதிரி இருந்தா அவ போன் என்கிட்ட தான இருக்கு வந்து வாங்கிருக்கணுமே! ரைட்டு நா போலீஸ்க்கு கால் பண்ணி வர சொல்றேன்.. அவங்க வந்து உங்க எல்லாரையும் விசாரிக்கட்டும் என தன் போனை எடுக்க பார்க்கவும்.. ஷில்பாவிற்கு பயம் ஒட்டிக் கொண்டது…

சிசிடிவி செக் பண்ணா நாம தான் லாஸ்ட்டா வந்திருக்கோம்னு தெரிஞ்சி மாட்டிக்கணும், வேணாம் என அவன் கையை பிடித்து தடுத்தவள்,, ஹ்ம்ம் என பெருமூச்சி விட்டு அவ பாத்ரூம்ல தான் இருப்பா என்றதும் வசிக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது.

வாட் நீ என்ன சொல்ற? விழி விரித்து கேட்க…

ஆமா வசி, அவளை பாத்ரூம்ல வச்சி பூட்டிட்டு வந்துட்டோம் என சொல்லி முடிப்பதற்குள், வசி அவள் கன்னத்தை பழுக்க வைத்திருந்தான்… ஓங்கி பளார் என அறை விட்டதில், ஷில்பாவிற்கு மண்டையில் குருவி பறக்க, கன்னம் சிவந்து போய் எரிய ஆரம்பிக்கவும்… கண்களில் கண்ணீருடன் அவளை அடிபட்ட பார்வை பார்த்தாள்…

யூ ப்ளடி இடியட்…என திட்டியவன் நொடியும் தாமதிக்காமல் தியேட்டரிக்குள் ஓடி லேடிஸ் டாய்லெட்டுக்குள் சிறிதும் யோசிக்காமல் நுழைந்திருந்தான்…

ஒவ்வொரு கதவையும் தட்டி விட்டு திறந்து பார்த்தவன் அவள் இல்லாததை தெரிந்துகொண்டு தலையில் கை வைத்து யோசித்தவாறு வெளியே வந்தான்… அப்போது தான் அந்த துப்புரவு பெண் அங்கு குப்பையை அள்ளி போட்டு விட்டு, கை அலச பாத்ரூமுக்குள் செல்லப் பார்க்க … வசி வாசலில் நிற்பதை கண்கள் சுருக்கி பார்த்தவர்., என்னடா இது பசங்கலாம் லேடிஸ் பாத்ரூம் சைடு நிக்கிறானுங்க என முனு முனுத்தபடி அவன் அருகில் சென்றவர்…

ஏன் பா தம்பி இங்க நிக்குற? அடுத்து உன் பிரெண்ட் யாரும் உள்ள மாட்டிக்கிட்டாங்களா? என கேட்கவும் வசிக்கு ஏதோ புரிந்து போனவன்…

ஆமா கா அந்த பொண்ண உங்களுக்கு தெரியுமா? என ஆர்வத்துடன் கேட்டான்…

ஹ்ம்ம் இந்த பொண்ண தெரியாது ஆனா ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி.. ஒரு பொம்பள புள்ளய யாரோ பாத்ரூமுக்குள்ள வச்சி வெளில தாழ் போட்டுட்டு போய்ட்டாங்க..

அப்ப 2 பசங்க வந்து அந்த பொண்ணு உள்ள மாட்டிக்கிட்டானும், அவளை திறந்து விடுங்கணும் சொன்னானுங்க. நானும் உள்ள போய் பாத்தா அந்த புள்ள கதவை போட்டு தட்டிகிட்டு இருந்துச்சி, நா தான் திறந்து விட்டேன்.. பாவம் பா ரொம்ப பயந்துருச்சு.. அப்டியே அழுதுக்கிட்டே வெளில போயிருச்சு… அதுக்கு பிறகு நா அந்த 2 பசங்களையும் தேடி பாத்தேன் அவனுங்களும் இல்ல என அந்த பெண் சொல்லிவிட்டு நகர… வசிக்கு அனைத்தும் புரிந்து போனது… அப்ப தர்ஷினி வீட்டுக்கு தான் போயிருப்பா, வந்தது ஜெய், தேவா தான் என உறுதியாய் நம்பினான்…

அடுத்த நிமிடம் தனது மொபைலை எடுத்து தேவாவிற்கு கால் செய்ய., தேவா அட்டென்ட் செய்திருந்தான்…

ஹலோ தேவா தர்ஷினி வீட்டுக்கு போய்ட்டாளா? எனக் கேட்க.. தேவா தான் விழி பிதுங்கினான்..

சீனியர் நானும் ஜெய்யும் தான் வரவே இல்லையே! எங்கள கேட்குறீங்க! தர்ஷினி உங்க கூட தான வந்தா என்றதும் வசி சிறிது புன்னகையுடன் நீங்க வந்தீங்கனு நா சொல்லலையே டா நீயா எதுக்கு வாய குடுக்குற.. தர்ஷினி போன் என்கிட்ட தான் இருக்கு.. அவ வீட்டுக்கு போய்ட்டாளானு தெரியணும் அவ்ளோ தான்… உனக்கு தெரியும் தான! என நமட்டு சிரிப்புடன் கேட்க…

ஹ்ம்ம் தெரியும் ப்ரோ அவ அப்பாகிட்ட பேசுனேன். வீட்டுக்கு வந்துட்டதா சொன்னாங்க என பொய் சொல்லி வைத்தான்…

சரி நாளைக்கு வந்து அவ செல் போனை குடுத்திடுறேன் என்றவன், இன்னும் எத்தன நாளைக்கு இந்த கண்ணாமூச்சி ஆட்டம்னு பாக்குறேன் என்றதும் தேவாவிற்கு ஒன்றும் புரியவில்லை தர்ஷியை தான் ஏதோ சொல்கிறான் போல என நினைத்தவன்..

சீனியர் இனிமேல் அவளை கூப்டு போனா கொஞ்சம் பத்திரமா பாத்துக்கோங்க என சொல்லிவிட்டு உடனே இணைப்பை துண்டிக்க… வசி தலையை தூக்கி மேலே பார்த்தவன் பெருமூச்சி விட்டப்படி அவ்விடம் விட்டு நகர்ந்தான்..

தர்ஷி வீட்டுக்குள் நுழைந்து குளித்து விட்டு உடை மாற்றியவள் பெட்டில் புரண்டு புரண்டு படுத்தாள்.. அவளால் நிம்மதியாய் உறங்க முடியவில்லை.. தனது கையில் போனும் இல்லாத காரணத்தால் தேவாவிடம் நடந்ததை கூற முடியாமல் தவித்தவள்.. ஓடி சென்று தனது தந்தையின் செல்லை எடுத்தவள் தேவாவிற்கு கால் செய்துப் பார்க்க அவன் போனை எடுப்பதாய் இல்லை.. முதல் முறையாக அவனை மிஸ் செய்தாள்.. பேசணும்னு நினைக்கும் போது பேச முடியல என நொந்து போனவள் தலையணையை கட்டிக் கொண்டு படுத்திருந்தாள்..

யாரும் இல்லா தருணத்தில்

யாதும் ஆகிப் போனவன்

யாரோ போல் ஆகிவிட்டான் அவளுக்கு …

இப்படி தானே அவனுக்கும் வலி இருந்திருக்கும் என்ற உண்மை அறியாமல் போனாள் பாவை..

தேவா வேண்டுமென்று தான் அவள் அழைப்பை ஏற்கவில்லை.. இனி அவளிடம் இருந்து தூர விலகி நிற்க முடிவெடுத்து விட்டான்.. தன் தேவதை வேறு ஒரு ஆணுடன் கை கோர்த்து நெஞ்சில் முகம் புதைத்து அமர்ந்திருப்பதை பார்த்து செத்து மடிந்தவனுக்கு இந்த விலகல் தான் சிறந்தது.., கண்கள் முழுதும் ரத்த நரம்புகள் தெறிக்க அழுதவன் உறங்கி போனான்..

ஷில்பா கன்னத்தில் கை வைத்தப் படி அமர்ந்திருந்தவள், வசியின் பக்கம் திரும்பி கூட பார்க்கவில்லை… வசிக்கும் இது வரை யாரையும் அடித்து பழக்கம் இல்லை.. இது தான் முதல் முறை அவன் ஷில்பாவின் கன்னத்தில் தன் கை விரல் அச்சு இருப்பதை பார்த்தவன், எதுக்கு இப்டி பண்ண? அவளும் பொண்ணு தான ஏதாச்சும் ஆகியிருந்தா என்ன பண்ணிருப்ப? என ஆதங்கமாய் கேட்க

ஏனா எனக்கு உன்ன பிடிக்கும்.. எனக்கு உன்ன மட்டும் தான் பிடிக்கும்… பிகாஸ் ஐ லவ் யூ உனக்கு புரியல.. என் மனசுல நீ மட்டும் தான் இருக்க.. நிமிஷம் நிமிஷம் உன்ன மட்டும் தான் நெனச்சிட்டு இருக்கேன்.. ஆனா நீ நீ அவகூட போய்…. ச்சி எப்படி மனசு வருது… என ஆத்திரத்தில் கத்தவும் வசி காரை சட்டன் பிரேக் போட்டு நிறுத்தியிருந்தான்….

ஹே ஷில்பா வசி ஏதோ பேச வருவதற்குள்….

வேணாம் வசி நீ எதுமே சொல்ல வேணாம்.. உன் மனசுல நா வெறும் பிரெண்டா தான் இருக்கேனு சொல்ல போற.. அதான.. பரவாயில்ல… ஆனா என் மனசுல நீ தான் எனக்கு எல்லாமே.. உன்கூட நா மட்டும் தான் இருக்கணும்.. ஆனா நேத்து வந்த அவ உன்கூட உரிமையா இருக்குறத பாத்து என்னால பொறுத்துக்க முடியல.. கோவத்துல அப்டி பண்ணிட்டேன் என அழுதப் படி பேசியவளை பார்க்க பாவமாய் இருந்தது அவனுக்கு….

உன் மனசுல நா கொஞ்சம் கூட இல்லையா வசி….குரல் தழு தழுக்க கேட்டாள்…

பதில் சொல்ல முடியவில்லை அவனால்…

ஏன் வசி உன் மனசுல அந்த தர்ஷி தான இருக்கா? என கேட்க

வசி ஸ்டியரிங்கை அழுத்தி பிடித்தவன், ஆமா என்பது போல் தலையாட்ட ஷில்பாவிற்கு அவமானமாக போனது… கேவலம் அவ ஒரு ஆளுன்னு அவளை போய் லவ் பண்ற!? என எண்ணியவள் அதற்கு மேல் ஒன்னும் பேசவில்லை….

ஆனா தர்ஷி…. என வசி பேச

ப்ளீஸ் போதும் வசி காரை எடு என முகத்தை திருப்பிக் கொண்டாள்…

ஷில்பா வை சமாதானப்படுத்துவது ஆகாத காரியம் என தெரிந்து வைத்திருந்தவன், காரை ஸ்டார்ட் செய்து ஓட்டி கொண்டு அவள் வீட்டில் இறக்கி விட்டான்… அவள் அவனின் முகத்தை கூட பார்க்காமல் வீட்டிற்குள் புகுந்துக் கொண்டாள்.. வசியும் அங்கிருந்து நகர்ந்திருந்தான்…

வீட்டுக்குள் நுழைந்த ஷில்பா பெட்டில் குப்புற படுத்து அழ ஆரம்பித்து விட்டாள்… கையால் ஓங்கி ஓங்கி பெட்டை குத்தியவளுக்கு அவ்வளவு கோவம், ஆற்றாமை… கேவலம் அந்த தர்ஷி பரதேசிகிட்ட என்ன இருக்குனு அவளை போய் லவ் பண்றான்.. விட மாட்டேன் நாளைக்கு உன்ன மிரட்டுற விதத்துல நீயே அவனை விட்டு போயிருவ பாரு என சபதம் எடுத்துக்கொண்டாள்….ஜெய் அமுலுவிடம் தான் பேசிக் கொண்டிருந்தான்…

ஏன் புள்ள என்ன லவ் பண்றனு சொல்றியே உங்க வீட்ல எத்துப்பாங்களா?

இங்க பாரு ஜெய் என் வீட்ல நா சொல்றது தான்.. எனக்கு பிடிச்ச வாழ்க்கை தான் அமைச்சி குடுப்பாங்க..என்ன நம்ப மாட்டேன்ற அது ஏன்னு எனக்கு புரியல….

எப்படி புள்ள நம்புறது.? என்னால அந்த லவ் பெயிலியர் வலி எல்லாம் அனுபவிக்க முடியாது.. என் நண்பனை பாத்தல்ல பாவம் ரொம்ப கஷ்டப்படுறான்…

ஏண்டா அவன் போய் ப்ரபோஸ் பண்ணாம எப்படி லவ் பெயிலியர் ஆகும்… முதல்ல அவன் காதல வெளிப்படுத்த சொல்லு வெண்ண, அப்புறம் உனக்கு தான் என் மேல லவ் இல்லையே என் வீட்டுல ஒத்துப்பாங்களா மாட்டாங்களானு கேள்வி எதுக்கு கேக்குற.? என கேட்டவளிடம் பதில் சொல்ல முடியாமல் திணறினான் ஜெய் …

தொடரும்…..

 

 

 

 

 

 

 

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!