தேவை எல்லாம் தேவதையே…

4.9
(19)

தேவதை 20

 

வசி மறுநாள் காலை தேவாவிற்கு போன் செய்யவும், தேவா அட்டென்ட் செய்தவன் சொல்லுங்க சீனியர் என்ன விஷயம்? என கேட்டான்

டேய் தேவா உங்க வீடு எங்க இருக்கு?எனக் கேட்க.. தேவாவும் அவன் அட்ரஸ்ஸை சொல்லவும் சரி என போனை வைத்து விட்டான் வசி…

அடுத்த நிமிடம் இன்னொரு கால் வர, யாரென எடுத்துப் பார்க்கவும் ஷில்பா தான் அழைத்திருந்தாள்..

ஹலோ சொல்லு ஷில்பா….

வசி அம் சாரி என மெல்லிய குரலில் பேசினாள்…

பரவால்ல விடு ஷில்பா, இனிமேல் இப்டி பண்ணாத…

இல்ல வசி தப்பு பண்ணிட்டேன் நைட் முழுக்க ஒரே கில்டி பீலிங்கா இருந்துச்சி… வெரி சாரி வசி என குரலிலேயே நடிப்பை அள்ளித் தெளித்தாள்…

ஹே இட்ஸ் ஓகே டி விடு….வசி நம்பி விட்டான்…

வசி எனக்கு ஒரு உதவி செய்வியா? ப்ளீஸ் எனக்கு தர்ஷினி நம்பர் குடு அவ கிட்ட ஒரு சாரி கேட்டுக்குறேன். ப்ளீஸ் ப்ளீஸ் என கெஞ்ச..

வசி அதெல்லாம் பரவாயில்லை டி விடு, நா பேசிக்குறேன் என்றவனிடம் இல்ல டா அவ இடத்துல நா இருந்திருந்தா எவ்ளோ கஷ்டப்பட்டிருப்பேன், தப்பு பண்ணிட்டேன், அவ கிட்ட மன்னிப்பு கேட்கணும் இல்லனா எனக்கு தூக்கமே வராது என்றதும்…

 

வசி பெருமூச்சை இழுத்து விட்டவன், சரி நா நம்பர் தரேன், ஆனா இப்ப கால் பண்ணாத, ஏனா அவ செல் போன் என் கைல தான் இருக்கு.. நா போய் முதல்ல இத அவகிட்ட கொடுத்துடறேன், நைட் போல அவளுக்கு நீ பேசு என அப்பாவியாய் அவள் நடிப்பை நம்பி சொல்லவும்…

சரி வசி நா கண்டிப்பா நைட் கால் பண்ணி சாரி கேக்குறேன் நீ நம்பர் அனுப்பு என்றவள் போனை வைத்து விட்டாள்….

இணைப்பு துண்டிக்கப்பட்டதும் வசியும் தர்ஷி நம்பரை அவளுக்கு அனுப்பி வைத்தான்…

ஷில்பா அதை பார்த்தவள், யூ ப்ளடி உனக்கு என் வசி கேட்குதா! நா பேசுற பேச்சுல நீ வசி பக்கமே தலை வச்சி படுக்க மாட்ட பாரு என வில்லத்தனமாய் யோசித்தாள்….

 

இங்கு தேவா இவர் எதுக்கு நம்ம அட்ரஸ் கேட்குறாரு.. ஒரு வேளை இங்க வர போறாரோ! இருக்கலாம் யோசித்தவன்.. எதுக்கும் நாம போய் அம்மாகிட்ட ஒரு வார்த்தை சொல்லிடலாம் என கலாவதியிடம் சென்றான்.. அம்மா அன்னைக்கு வசி ஒரு சீனியர் பையன் சொன்னேன்ல…

ஆமா டா படிக்க நோட்ஸ் குடுப்பானு சொன்னியே!

ஆமா அவன் தான் இங்க வர போறான் போல போன் பண்ணி அட்ரஸ் கேட்கவும் சொன்னேன்.. இப்ப நா குளிக்க போறேன்.. ஒரு வேளை வந்துட்டான்னா உட்கார வை என்றதும் சரி டா என்றார் கலா….தேவா குளிக்க சென்று விட்டான்..

வசி தேவா சொன்ன அட்ரெஸிற்கு விரைந்தவன், வழி கேட்டு தேவாவின் வீட்டை கரெக்ட்டாக சென்றடைந்தான்…

வாசலில் காலிங் பெல்லை அழுத்த.. கலாவதிக்கு வசி தான் வந்துருக்கணும் என புரிந்துகொண்டவர்.., வாசலுக்கு சென்று பார்க்க வசி நின்றிருந்தான்..

மா தேவா என கேட்கவும்… ஆமா பா வாங்க என் பையன் தான் தேவா நீ உள்ள வாப்பா என அழைக்க.., சரி மா என புன்னகையோடு உள்ளே சென்றான்..

சோபாவை காட்டி உட்காரு பா, தேவா குளிக்குறான் இதோ வந்திருவான் என்றவர், இரு பா அம்மா உனக்கு காபி கொண்டு வரேன் என அடுப்படிக்கு செல்ல .. வசி நெகிழ்ந்து போனான்..

அம்மா… என முனு முனுத்தவனுக்கு இதழில் தானாக புன்முறுவள் பூத்தது… சிறிது நேரத்தில் வெளியே வந்த தேவா, வசியை பார்த்ததும் முகத்தில் சிரிப்புடன் வாங்க சீனியர் என வரவேற்றான்…

மா மா என கத்தி அழைக்கவும், வந்துட்டேன் டா கத்தி கூப்பாடு போடாதே என்றவர், கையில் காபி மற்றும் சுட சுட பஜ்ஜியுடன் வசியிடம் கொடுக்க அவனும் அதை வாங்கிக் கொண்டான்…

தேவா காதில் கலாவதி டேய் தேவா உன் சீனியர் ரொம்ப அழகா இருக்கான் டா என் கண்ணே பட்டுடும் போல என்றதும் தேவா ஆமா ஆமா அழகன் தான் என பல்லை கடித்துக் கொண்டான்…

என்ன பெத்ததும் சரி இல்ல, எனக்கு வாச்சதும் சரி இல்ல.. என்ன உசுப்பேத்தி பாக்குதுங்க என நெஞ்சை தடவியவன் அமைதியாக நிற்க…

அவன் தலையில் தட்டிய கலாவதி டேய் போய் சிக்கன் வாங்கிட்டு வாடா தம்பிக்கு சமைச்சி தரேன் என சொல்ல… தேவா வசியை பார்த்தான்..

அம்மா விற்காக ஏங்குபவன், அம்மா கையால் சாப்பிட ஏங்குபவனுக்கு இந்த வாய்ப்பு கிடைக்குமா? அதை நழுவ விடுவானா? அவன்… யா ஓகே என பஜ்ஜியை திணித்து தோள்களை குலுக்க… தேவா சிரித்தவன் சரி சீனியர் இருங்க 10 நிமிஷத்துல வந்துருவேன் என வெளியே சிக்கன் வாங்க சென்று விட்டான்…

அவன் எதிரில் அமர்ந்த கலாவதி ஏன் பா, வீட்ல எல்லாம் நல்லாருக்காங்களா? என கேட்க

யா நல்லாருக்காங்க மா.. என்றான்

தேவா சொன்னான் பா, நீ அவனுக்கு நிறைய படிக்க உதவி செய்வேன்னு என்றதும் வசிக்கு வாயில் திணித்த பஜ்ஜி தொண்டைக்குள் சிக்கி புரை ஏறியது… நெஞ்சை பிடித்து கொண்டு இருமவும், கலாவதி தண்ணீரை எடுத்தவர், அவன் கையில் திணித்து மண்டையை தட்டி விடவும் தான் வசி நார்மல் ஆனான்…

ஆனாலும் அவனை அறியாமல் கண்கள் கலங்கியது… பாத்து மெதுவா சாப்பிடு பா என்றதும் சரி மா என்றான்..

வீட்டை சுத்தி இருக்கும் போட்டோவை பார்க்க, தேவா, தர்ஷி, ஜெய் என மூவரும் சிறு வயதில் இருந்தே எடுத்த போட்டோக்கள் நிரம்பி இருக்க, அதை எழுந்து ஆசையாய் பார்த்தவன், சிறு வயது போட்டோ ஒன்றை மட்டும் தனது மொபைலில் புகைப்படம் எடுத்துக் கொண்டான்…

இது ஜெய் அது தர்ஷி பா என கலாவதி சொல்ல, தெரியும் மா.. தர்ஷி தான் முதல்ல எனக்கு பிரெண்ட் ஆனாள்..அப்புறம் தான் தேவா ஜெய் என சொல்ல ஓஹ் அப்டியா பா என்றார் கலாவதி..

ஆமா மா போன வாரம் எல்லாம் சேர்ந்து போட்டிங் போனோம், அப்பா கூட நீங்க குடுத்தேங்களே சிக்கன் கிரேவி வாவ் டெலிசியஸ் என சொல்ல,

கலாவதி சிரித்தவர், தேவா சொன்னான் பா.. உன்ன பத்தி எல்லாம் என்றதும்

ஹ்ம்ம் மா… தர்ஷிக்கிட்ட அவ செல் போனை குடுக்கணும் அவ வீடு தெரியாது, அதான் தேவாகிட்ட குடுத்து குடுக்க சொல்லலானு வந்தேன் என்றதும் கலாவதி கண்களை விரித்தவர்,

அப்டியா பா அவ செல் உன்கிட்டயா இருக்கு.. என ஆச்சரியத்துடன் கேட்டு வைக்க

ஆமா மா நேத்து மூவிக்கு போனோம் அப்ப செல்போனை மறந்துட்டு போய்ட்டா என்றதும்..

ஓஹ் அதான் நேத்து நைட் தேவா லேட்டா வந்தானா? என கலாவதி கேட்க

வசிக்கு அப்போ தேவா தியேட்டருக்கு வந்திருக்கிறான் என கன்பார்ம் ஆகியது…இருந்தும் ஹ்ம்ம் அவன் வந்தானா என்னானு தெர்ல மா பட் நானும் ஏன் பிரெண்ட்ஸ் அப்புறம் தர்ஷி நாங்க மட்டும் போனோம் என்றதும் கலாவதிக்கு அது மேலும் அதிர்ச்சியை தந்தது….

தேவா இல்லாமல் தர்ஷி வெளியே சென்றிருப்பது இதுவே முதல் முறை என்பது அவருக்கு தெரியாமல் இல்லை.. ஆனாலும் சிறிது நாட்களாக தேவாவின் முகத்தில் இருக்கும் வாட்டத்தை அவர் கண்காணிக்காணித்து வைத்திருந்தார் … சில நாட்களாக வீட்டிலும் யாரிடமும் சரியாக பேசுவது இல்லை.. தன்னிடம் இன்று ஸ்கூலில் நடந்தது முதல், காலேஜில் நடக்கும் விஷயம் வரை அனைத்தையும் சொல்லுபவன், இப்போதெல்லாம் எதையும் பற்றி பேசாததும், எதுவும் கேட்க போனால் ஒன்னும் நடக்கலமா எப்போதும் போல தான் என சமாளித்து விடுகிறான்… எதற்காக? கேட்டு விடுவோம் ஆனால் இது அதற்கான நேரம் இல்லை என அமைதியாக இருந்து விட்டார்…

வசி நெற்றியில் வழிந்த வியர்வையை துடைக்கவும், தம்பி நீங்க போய் தேவா ரூம்ல ஏசிய போட்டுட்டு உட்காருங்க.. இப்ப தேவா வந்திருவான் என சொல்லவும்.. சரி மா என்றவன் தேவாவின் அறைக்குள் புகுந்துக் கொண்டான்…கலாவதி இஞ்சி, பூண்டு அரைக்க சென்று விட்டார்..

அறைக்குள் வந்தவன், ஏசி ரிமோட்டை தேடி பார்க்க கிடைக்கவில்லை… ட்ரா முதற்கொண்டு ஓபன் செய்துப் பார்த்தவன் கண்ணில் அந்த கப் போர்டு சிக்கியது….

நைட் டைரியை எடுத்து பார்த்தவன் அதை கப்போர்டில் வைத்து விட்டு பூட்டாமல் மாடிக்கு சென்று விட்டான்… அதில் பூட்டுடன் சாவி தொங்கவே.. ஒருவேளை ரிமோட் இதற்குள் இருக்குமோ என்ற நினைப்பில் அந்த கப்போர்டை திறந்து பார்க்கவும்….. கண்கள் விரிய அதற்குள் கை விட்டான்…

அந்த கப்போர்டு உள்ளே முழுக்க அவன் தேவதையின் புகைப்படங்களும், நிறைய கிப்ட்ஸ், க்ரீட்டிங் கார்ட், டைரி இருக்க… அதை எல்லாம் எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தான்…

அனைத்து கார்டிலும் லவ் யூ தர்ஷி, என இருக்கவும்,பெரிதாக அதிர்ச்சியாக வில்லை… ஏற்கனவே தெரிந்த விஷயம் தானே! டைரியை ஓபன் செய்து பார்த்தவன் முன் பக்கம் தேவை எல்லாம் தேவதையே…. என்ற வார்த்தையை விரலால் வருடி விட்டவன்.. சிறிதும் யோசிக்காமல் பிரித்து படிக்க ஆரம்பித்து இருந்தான்…

 

தேவா சிக்கன் வாங்கி கொண்டு வீட்டிற்குள் வந்தவன், சோபாவில் கண்களை மேய விட அங்கு வசி இல்லை… தனது தாயிடம் சென்றவன் எங்க மா சீனியர் எனக் கேட்க…

அந்த பையனுக்கு வியர்த்து வழிஞ்சிது பா, அதான் உன் ரூம்ல ஏசில உட்கார சொன்னேன் என்றதும் சரி மா நீங்க சமைங்க நா இதோ வந்திடுறேன் என செல்லப் பார்க்க,

நில்லு பா என அவனை தடுத்த கலாவதி, என்ன நடக்குது? அம்மா கிட்ட வர வர நீ எதுமே சொல்ல மாட்டேன்ற, நேத்து எங்க போயிருந்த? எனக் கேட்க தேவா புரியாமல் விழித்தான்…

சொல்லு பா முன்னாடி மாதிரி நீ இல்ல.. உனக்கும் தர்ஷிக்கும் ஏதும் பிரச்சனையா? அவ இப்பலாம் உன்கூட சேராம அந்த பையன் கூட சுத்துறாளோ! என கேட்க.. தேவா முகம் பயத்திலும், கோவத்திலும் வெளிறிப் போனது…

முகத்தை சாதாரணமாக வைக்க பாடு பட்டவன் என்ன மா? எதுக்கு இப்டி பேசுற? நேத்து நாங்க எல்லாம் சேர்ந்து தான் படத்துக்கு போனோம் என பொய் சொல்ல, கலாவதி வெங்காயம் நறுக்கி கொண்டே அவனை முறைத்தாள்..

அம்மா கிட்ட பொய் சொல்ல ஆரம்பிச்சிட்ட, நிறைய விஷயங்களை மறைக்க ஆரம்பிச்சிட்ட இல்ல பா ஏனா பெரிய மனுஷனா வளர்ந்துட்டல அப்டி தான் இருப்ப… என சாடவும் தேவா அமைதி காத்தான்…

சரி அவ செல் போன் எப்படி அவன் கைக்கு போச்சி? எனக் கேட்டதும் இதற்கு மேல் சரிப்பட்டு வராது என யோசித்த தேவா மா என்ன மா நீ என்னென்னமோ பேசுற? நேத்து மூவிக்கு போனோம் ஆனா நானும் ஜெய்யும் கொஞ்சம் லேட்டா போய்ட்டோம் மா, சீட் லாஸ்ட்டா கெடச்சுது… தர்ஷிய வசி, அவங்க பிரெண்ட்ஸ் கூட அனுப்பிட்டு நானும் ஜெய்யும் மட்டும் என் பைக்குல போனோம்.. திரும்ப வரப்ப நா ஜெய்ய வீட்ல விட போய்ட்டேன், தர்ஷிக்கு ஆட்டோ பிடிச்சி கொடுத்தோம் என நிறைய பொய்களை அடுக்கி அவரை அப்போது சமாதானப் படுத்தி வைத்தான்…

ஆனாலும் கலாவதியால் அதை நம்ப முடியாமல் அவனை நம்பா பார்வை பார்த்தாள்… சரி இரு மா சீனியர பாத்துட்டு வரேன் என தனது அறைக்குள் செல்ல அங்கு வசி இல்லை…

தொடரும்ம்ம்……

 

 

 

 

 

 

 

 

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 19

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!