தேவதை : 21
தனது தாய் கலாவதி கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் தேவா திணறியவன்,தனது அம்மாவிடம் சொல்லிவிட்டு வசியை பார்க்க சென்றான்… தனது அறைக்குள் நுழைந்தவன் வசியை தேட அங்கு அவன் இல்லை.., சீனியர் சீனியர் என கத்தி அழைக்கவும்….
ஹான் தேவா இங்க தான் டா இருக்கேன், என பாத்ரூமில் இருந்து வசியின் குரல் கேட்கவும்,, ஒஹ் ஒகே சீனியர் நா வெளில இருக்கேன் நீங்க வாங்க என்றவன் தன் அறையிலிருந்து வெளியேறி சென்று விட்டான்.. ஏற்கனவே மனக் குழப்பத்தில் இருந்தவன், கப்போர்ட் பூட்டாமல் இருப்பதை கவனிக்க தவறி விட்டிருந்தான்…
வசி சிக்கன் வாங்க சென்றிருந்த தேவா வந்துவிடுவான் என அறிந்தவன் பாத்ரூமிற்குள் டைரியை எடுத்து சென்று படித்துக் கொண்டு இருந்தான்.. படிக்க படிக்க அவன் கண்களில் இருந்து கண்ணீர் சுரக்க, தன்னை சமன் படுத்திக் கொள்ளவே சிறிது நேரம் பிடித்தது…
தேவா அடுப்படிக்கு சென்றவன், தனது தாயிடம் பேச்சுக் கொடுத்தான்,,இப்ப சொல்லு மா என்ன தெரியணும் உனக்கு என வெங்காயத்தை நறுக்கி கொடுத்தப் படி கேட்க,,,
கலாவதி அவனிடம் டேய் தேவா , அம்மாகிட உண்மைய சொல்லு, நீ என்னனா னத்து மூவிக்கு போனேனு சொல்ற! அவன் என்னடானா தர்ஷி போன கையில வச்சிக்கிட்டு சுத்துறான், என்ன தான் டா நடக்குது?
அம்மா நேத்து நானும், ஜெய்யும் எக்ஸாம் முடிஞ்சி ,ஹெச் ஓ டிய பாக்க போய்ட்டோம் , சோ அவங்க எல்லாரையும் முன்னாடி போக சொல்லிட்டு நாங்க பின்னாடி போனோம்,, இவ்ளோதான் மா என்றதும் தான் கலாவதி சிறிது சமாதானம் அடைந்தார்,..
தேவா இந்த அம்மாக்கு உன் மனசுல யாரு இருக்கா? என்னனு எல்லாமே தெரியும்.. உன் மனசுல உள்ளத தர்ஷி கிட்ட சொல்லிரு, சொல்லாம இருந்து அவளையும் ஏமாத்திக்கிட்டு, உன்னையும் ஏமாத்திக்கிட்டு எதுக்கு இந்த வேதனைய அனுபவிக்குற? வேண்டாம் பா. அம்மா சொல்றத கேளு,,கொஞ்ச நாளா பாக்குறேன் நீ நீயாவே இல்ல.. என்னைக்கா இருந்தாலும் என் பையன் மனசுக்கு புடிச்சவ தர்ஷி தான் இந்த வீட்டுக்கு வரணும், வருவா, சரியா என்றிட … தேவா தன் தாய் பேச பேச பயத்துடன் வெளியே பார்த்த படியே இருந்தான்,, எங்கே வசி வந்து காதில் வாங்கி விடுவானோ என்ற பயம் தான்… இருந்தும் தன் தாய் சொன்னதை கேட்டு மனதளவில் சந்தோசப்பட்டுக் கொண்டாலும், கசந்த புன்னகை சிந்தினான்..
சிறிது நேரத்தில் வசி பாத்ரூமை விட்டு வெளியே எட்டிப் பார்த்தவன், அங்கு தேவா இல்லாததை பார்த்ததும், வேகமாக வெளியே வந்து கப்போர்டில் டைரியை வைத்து விட்டு, பழைய படி சாவியுடன் பூட்டை தொங்க விட்டிருந்தான்., தன் சிவந்த முகத்தை நன்கு அழுத்தி துடைத்தவன், நார்மலாக வெளியே செல்ல,, தேவா ஹாலில் அமர்ந்து டீவி பார்த்துக் கொண்டிருந்தான்…
வசியை பார்த்ததும் வாங்க சீனியர், உட்காருங்க என்னாச்சி முகம் முழுக்க சிவந்து போய் இருக்கு? எனக் கேட்க…
சரியான தலை வலி டா , எனக்கு மைக்ரெயின் பெயின் இருக்கு அது வந்தாலே முகம் மாறிடும் என பொய் சொல்லி வைத்தான்…
இங்கு தர்ஷினி தேவாவின் வீட்டிற்கு தான் கிளம்பிக் கொண்டிருந்தாள்… கண்ணாடி முன்பு நின்றவள், டேய் மூஞ்ச பாரு,, அதான் நேத்து எங்கப்பா நம்பர்லேந்து கூப்டேன்ல டா, நைட் எடுக்கல தூங்கிருப்ப சரி, இப்ப என்ன கேடு வந்துச்சி? உனக்கு.. கிளம்பி வந்து இன்னேரம் என்ன பாத்திருக்க வேணாம்..! இல்ல திரும்ப அப்பா செல்லுக்கு கூப்டுருக்கலாம்ல! ஏன் டா நாயே கூப்டல? வரேன் வந்து வச்சிக்குறேன் கச்சேரி உனக்கு.. என தேவாவை தன்னுள் சரி பாதி என உணர்ந்தவள் அவனை வெளிப்படையாகவே திட்டித் தீர்த்தாள்,,,( அம்மணிக்கு திட்ட மட்டும் தான் தேவா தன் சரி பாதியோ!) மாதவன் வேலைக்கு கிளம்பியவர் வாசலுக்கு சென்று செருப்பை போட, மஞ்சுளா சாப்பாடு கூடையுடன் அவர் அருகில் நின்றிருந்தார்,,,
அப்போது பா பா பா என கத்தியப் படி ஓடி வந்த தர்ஷி, நில்லு பா என்ன கொண்டு போய் தேவா வீட்ல விட்டுட்டு போ என தாவி வந்து பைக்கில் ஏறிக் கொண்டாள்… ஏன் மா அவனுக்கு போன் பண்ணு அவனே வந்து அழச்சிட்டு போவான், எனக்கு வேலைக்கு டைம் ஆகிருச்சி என சொல்லிப் பார்க்க,,
திருட்டு முழி முழித்தவள் போன் எங்க இருக்கு? என எண்ணியவாறு அதெல்லாம் முடியாது நீ கொண்டு போய் விடு பா, அவனுக்கு உடம்புக்கு முடியல என பொய் சொல்ல,, வேற வழி இல்லாமல் பைக்கில் ஏற்றிக் கொண்டு தேவா வீடு வரை சென்றார்..
ஏன் மா உனக்கு அப்பா ஸ்கூட்டி வாங்கி தரவா? எனக் கேட்டதும். அதெல்லாம் முடியாது பா, எனக்கும் தேவாவுக்கும் இடையில இருக்குற ஃப்ரெண்ட்ஷிப்ப பிரிக்க பாக்குற என பல்லைக் கடித்தாள்…
எது ஃப்ரெண்ட்ஷிப்ப பிரிக்குறேனா? என்ன டா சொல்ற? அப்பா ஸ்கூட்டி தானே வாங்கி தரவா னு கேட்டேன்,,இதுல எங்க இருந்து உங்க ஃஃப்ரெண்ட்ஷிப் வந்துச்சி என புரியாமல் கேட்டார், மாதவன்…
ஆமா நீ ஸ்கூட்டி வாங்கி குடுத்துட்டேனா என்ன தேவா காலைல வந்து பிக் அப் பண்ண மாட்டான், என்னய ஸ்கூட்டிலயே வர சொல்லிருவான், அப்ப எங்க ஃப்ரெண்ட்ஷிப் குறஞ்சிரும்ல என சொல்லவும்,, மாதவன் தனது மகளின் வெகுளித்தனத்தை நினைத்து சிரித்துக் கொண்டார்…
டேய் கண்ணா உனக்கு அப்பா ஒரு ஸ்கூட்டி வாங்கி தரேன், நீ அவசரத்துக்கு யூஸ் பன்ணிக்க, மத்தப் படி காலேஜ் முழுக்க தேவா கூடவே போ டா, எப்பவும் நீ அவன் கூட இருக்கணும்னு நெனைக்குறது நடக்காதுல என கேட்க தர்ஷிக்கு சுருக்கென இருந்தது…
விழி விரித்தவளுக்கு ஒரு மாதிரி பயம் சூழ, ஏன் பா எங்க போவான்? எப்பவும் அவன் எங்கூட தான் இருக்கணும். அப்டிலாம் போக விட மாட்டேன் தீவிரமாய் பேசினாள்.. மாதவன் மகளின் பேச்சை கேட்டு ஹ்ம்ம்ம் என பெரு மூச்சி விட்டார்….
மாதவன் ஒரு தனியார் கம்பேனியில் தான் வேலை பார்த்து வருகிறார்… கடன் இல்லாத நிம்மதியான வாழ்க்கையை தன் மகளுக்கும், மனைவிக்கும் கொடுத்து, ஒரே மகள் என்பதால் செல்லம் குடுத்து வளர்த்து வருகிறார்.. அவருக்கும் தேவா ஜெய் என்றால் மிகவும் பிடிக்கும்,, தேவாவின் குடும்பமும்., தர்ஷினியின் குடும்பமும் நல்ல ஒற்றுமையாக தான் வாழ்கிறார்கள், தேவாவின் காதல் தெரிந்து போனால், பெற்றவர்களின் ஒற்றுமை நீடிக்குமா? தெரியவில்லை…..
தேவாவின் வீட்டு வாசலில் வண்டியை நிறுத்த, தர்ஷினி தேவா வீட்டு வாசலில் வசியின் கார் இருப்பதை கண்டுக் கொண்டாள்.. வசி எதுக்கு இங்க வந்தான்? யோசித்துக் கொண்டே இறங்க, மாதவனும் தேவா வீட்டிற்கு வரப் பார்க்க, தர்ஷினி அவரை தடுத்து நீ எங்கப் பா வர? எனக் கேட்கவும்…
தேவாவ பாத்துட்டு போறேன் மா., உடம்பு முடியலனு சொன்னில என வண்டியை விட்டு இறங்கப் பார்க்க,,, பா சின்ன ஜுரம் தான் பா நா பாத்துக்குறேன் நீ கிளம்பு என வலுக்கட்டாயமாக அவரை அனுப்பி வைத்தாள்..
வாசலில் இருந்து எட்டிப் பார்த்தப் படி மெதுவாக உள்ளே நுழைய, ஹாலில் வசியும், தேவாவும் சோஃபாவில் அமர்ந்து ஒயர்லெஸ் கேமிங்க் ப்ளே ஸ்டேஷனை வைத்து விளையாடிக் கொண்டிருப்பதை பார்த்தவள்.. அமைதியாக சென்று தேவாவின் பக்கத்தில் வசியை முறைத்தப் படி அமர, தேவா அவளைப் பார்த்ததும் ஹே வாடி வண்டு எப்ப வந்த? என புன்னகை முகமாய் கேட்டான்… அவனுக்கு தர்ஷினியின் வரவு இன்ப அதிர்ச்சியை கொடுத்தது…
வசியும் அவளைப் பார்த்து, ஹாய் தர்ஷி என கை காட்ட, அவள் அவனைக் கண்டுக் கொண்டதாய் தெரியவில்லை… நேற்று நடந்த விஷயத்துக்கு தன் மேல் அவள் கோவமாய் இருப்பதை தெரிந்துக் கொண்டவன், உதட்டோரம் மெல்லிய புன்னகை சிந்தினான்…
டேய் தேவா எதுக்கு டா என் போன நேத்து எடுக்கல? எத்தன தடவை கால் பண்ணேன்? என இடுப்பில் கை வைத்து மூக்கை விடைக்க கேட்கவும்..
நைட் தூங்கிட்டேன் டி,
அப்ப காலைல பாத்தல அப்ப பண்ண வேண்டி தான? என சண்டைக்கு நின்றாள்..
ஏய் மாமா வேலைக்கு போய்ருப்பாங்கனு நெனச்சேன், சரி அங்க வரலானு பார்த்தா அதுக்குள்ள சீனியர் வந்துட்டாங்க டி என்றதும்…
என்ன விட இப்ப உனக்கு நிறைய பேர் முக்கியமா போய்ட்டாங்கல்ல! இப்பலாம் நீ என் கூட டைம் ஸ்பெண்ட் பண்றதே இல்ல,,என பாவமாய் கேட்கவும்.. தேவாவிற்கு நெஞ்சு வலியே வருவது போல் இருந்தது…
என்ன இவ நா கேட்க வேண்டியதை எல்லாம் இவ கேக்குறா? என்றெண்ணியவன்.. மா பரதேவதை ஆரம்பிக்காத மா, போ அம்மா சிக்கன் செய்றாங்க போய் சாப்பிடு என கை எடுத்து கும்பிடவும்,,,
தர்ஷிக்கு கோவம் அதிகமாக வந்தது.. வரும் வழியில் மாதவன் எப்பவுமே அவன் உன்கூடவே இருக்க முடியாது மா என்று சொல்லியதில் இருந்து காரணமே அன்றி தேவாவின் மேல் கோவம் அதிகமாக வந்து…. அந்த யோசனையுடன் வந்தவளுக்கு தேவா வசியுடன் அமர்ந்திருப்பது மேலும் கோவத்தை கிளப்ப,, தேவாவின் கையில் உள்ள கேமிங்கை வாங்கி தூக்கி வீசியவள் அடுப்படிக்கு சென்று விட்டாள்…
வசிக்கு தான் ஒன்றும் புரியவில்லை என்றால், தேவாவிற்கும் எதுவும் விளங்காமல் அப்படியே அமர்ந்து விட்டான்…
அடுப்படிக்கு சென்று கலாவதியை பின்னிருந்து அணைத்துக் கொள்ள, கலாவதி திரும்பி பார்த்தவர், தர்ஷியை பார்த்ததும்,, தர்ஷி வாடா எப்ப வந்த? யார் கூட வந்த என கேள்விகளை தொடுக்க…
தர்ஷி பதில் சொல்லிவிட்டு திண்டில் ஏறி அமர்ந்துக் கொண்டாள்.. ஒரு பிளேட்டில் மிச்சரை கொட்டிக்கொடுக்க அதை வாங்கி தர்ஷி சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்…
அத்தை இப்பலாம் என் கூட தேவா ஒழுங்கா பேசுறதே இல்ல.. என்னனு தெர்ல.. என முகத்தை தொங்கப் போடவும்… கலாவதிக்கு சந்தோசமாய் இருந்தது… தன் மகன் மேல் தான் இவளுக்கு எவ்வளவு அன்பு, கொஞ்சம் பேசவில்லை என்றாலும் கிளம்பி வந்துவிட்டாளே! என மகிழ்ச்சியுடன் சிரித்தாள்…
என்ன அத்தை சிரிக்கிறீங்க? நா எவ்ளோ சீரியஸா பேசுறேன்… நேத்து கூட அவ்ளோ கால் பண்ணேன் எடுக்கவே இல்ல, அவ்ளோ ஏன் நேத்து எங்க கூட படத்துக்கும் வரல என்றதும் கலாவதி அவளை புருவம் சுருக்கி பார்த்தார்….
தொடரும்…..
படிச்சி பாத்துட்டு மறக்காம staars குடுங்க…🙏🙏🥰🥰