தேவை எல்லாம் தேவதையே…

5
(11)

தேவதை 22

 

நேத்து கூட அவனும் ஜெய்யும் எங்க கூட படத்துக்கு வரல,, நா வசி அவன் பிரெண்ட்ஸ் மட்டும் தான் போனாம் என்றதும் கலாவதி புருவம் சுருக்கி அவளை பார்த்தவர்.., வரலையா என சந்தேகத்துடன் முனுமுனுத்து விட்டு,, சரி அப்போ திரும்ப எப்படி உன் வீட்டுக்கு போன? என கேட்க சிறிது தடுமாறியவள் அ அ அது வந்து எனக்கு அவனுங்க 2 பேரும் இல்லாம படம் பாக்க பிடிக்க ல, அதுனால பாதியில கிளம்பி ஆட்டோ புடிச்சி வந்துட்டேன் என்றதும் கலாவதி அமைதியாக இருந்தார்…

மிச்சரை கபளீகரம் செய்து விட்டு ஏப்பம் விட்டவள், என்ன அத்தை பலத்த யோசனைல இருக்கீங்க!? என கலாவதியிடம் கேட்க…

இங்க பாரு மா இனிமேல் தேவா இல்லாம தனியா எங்கேயும் போக கூடாது, நேத்து ஆட்டோல வந்தன்னு சொல்ற, அதும் தனியா வந்திருக்க.. இதெல்லாம் தப்பு இனி இப்டி பண்ணக்கூடாது. காலம் ரொம்ப கெட்டு கெடக்கு என கண்டிக்க, தர்ஷினி சரி அத்தை இனி தனியா போ மாட்டேன் என வாக்குறுதி அளிக்கவும் , சரி போய் உட்காரு, உனக்கு சாப்பாடு கொண்டு வரேன் என சொல்ல சரி என தலையாட்டியவள் டைனிங் டேபிளில் சென்று அமர்ந்து டீவி பார்க்க, வசியும் தேவாவும் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தனர்…

ஜெய் ப்ளீஸ் டா வா ஐஸ் க்ரீம் பார்லர் போகலாம் என அமுலு போனில் ஜெய்யிடம் கெஞ்சிக் கொண்டிருந்தாள்…

ஏய் உங்க வீட்ல பாத்தா ப்ராப்லம் ஆகிரும் டி, அத விடு எங்கப்பா பாத்தாரு அம்புட்டு தான் சோலி முடிஞ்சு…..

எல்லாத்துக்கும் இப்டி பயந்தா எப்படி டா, உன்ன லவ் பண்ண வச்சி, கல்யாணம் பண்ணி விளங்கும் சலித்துக் கொண்டாள் ஸ்ருதி…

ஸ்ருதி இப்படி சொல்வதை கேட்டு ஜெய்யின் மனதில் ஒரு வித குறு குறுப்பு ஏற்பட்டது… என்ன உணர்வு அது சொல்ல தெரியாமல், அனுபவித்துக் கொண்டு அமைதியாக இருந்தான்..

டேய் என்ன அமைதியா இருக்க!? வெக்கம் வந்திருச்சோ! என அமுலு கேட்கவும்

ஆமா புள்ள அது ஒன்னு தான் குறைச்சல், என்ன என்னவோ சொல்ற, பேசுற ஆனா அதெல்லாம் சரியா வருமானு யோசனையா இருக்கு… இந்த வயசுல இதெல்லாம் தேவையா புள்ள? படிக்குற வழிய பாரு என சிறிது கடுப்புடன் சொன்னான்….

சரி டா நீ சொல்லு எந்த வயசுல லவ் வரணும்,,? ஸ்கூல் படிக்கிறப்ப லவ் வந்தா முளைச்சி மூணு இலை விடல,, அதுக்குள்ள என்ன லவ் வேண்டி கிடக்குனு கேட்க வேண்டியது… சரி னு காலேஜ் போய் லவ் பண்ணினா படிக்க வந்தா படிக்குற வழிய பாருன்னு சொல்ல வேண்டியது, வேலைக்கு போறப்ப லவ் பண்ணா வேலை பாத்தா பெரிய ஆளுன்னு நெனைப்பா லவ் கிவ் னு சுத்திட்டு இருக்கனு திட்ட வேண்டியது, அப்புறம் 30 வயசுல லவ் பண்ணினா ஆண்டிக்கு லவ்வ பாத்தியானு கிண்டல் பண்ண வேண்டியது… பின்ன எப்ப தான் லவ் பண்றது? காலம் போன கடைசிலயா?… ஆதங்கமாக கேட்க…

போடி கிழவி,, பல்லு விழுந்த கிழவிய விட மோசமா பேசுற டி லொட லோடன்னு…

டேய் அதெல்லாம் விடு இப்ப நீ என்ன சொல்ற, என்ன ஐஸ்கிரீம் பார்லர் கூப்டு போவியா? மாட்டியா? மிரட்டலுடன் கேட்க…

என்னடி மிரட்டுற வர முடியாதுனு சொன்னா என்ன பண்ணுவ?

போன கட் தனியா போவேன், போடா…

அப்ப தனியாவே போடி….

நிஜமா நீ வரமாட்டல்ல!

மாட்டேன்….

சரி பை வை நானே போய்க்குறேன், சிறிது கோவத்துடன் போனை வைத்துவிட்டாள்…. ஜெய் முதல் ஆளாக வண்டியை ஐஸ் க்ரீம் பார்லருக்கு விட்டிருந்தான்…

கலாவதி சாப்பாடு எடுத்து வைக்க, தேவா வசி தர்ஷி என மூவரும் உட்காந்து சாப்பிட்டு கொண்டிருந்தனர்….

கலாவதி வசியை நன்றாக கவனித்தார்.. தர்ஷி எதிரில் அமர்ந்து சாப்பிடும் தேவாவை முறைத்தவாறு லெக் பீசை கடிக்கவும்,

தேவா எச்சில் விழுங்கினான்… மறந்தும் அவள் வசி பக்கம் திரும்பவில்லை… தன் காலால் தேவாவின் காலை உதைக்க, தேவா அதிர்ச்சியில் நிமிர்ந்து அவளை பார்த்து என்ன என்பது போல் புருவம் உயர்த்த,

என் பக்கத்துல வந்து உட்காரு என்பது போல் கண்ணை காட்ட, தேவாவிற்கு சாப்பிடும் போது எழுந்து அவள் அருகில் அமர ஒரு மாதிரியாக இருந்தது.. அதனால் அவள் சொல்வதை கேட்காமல் பேசாம சாப்பிடு என கண்ணால் சைகை காட்டி விட்டு தலையை கீழே போட்டுக் கொண்டான்… அது தர்ஷிக்கு மேலும் கடுப்பை கிளப்பியது…

வசி அவர்களுக்குள் நடப்பதை கவனிக்காமல் உணவின் மேல் முழு கவனத்தையும் வைத்திருந்தான்…

தேவாவின் மனதில் நிறைய குழப்பங்கள் சூழ ஆரம்பித்து இருந்தது.. இவ மனசுல என்ன ஓடுது னு கண்டுபிடிக்க முடியலையே! நேத்து வரைக்கும் என்கூட பேச நேரம் இல்லனு சொன்னவ இன்னைக்கு என்னனா ரொம்ப பண்றா, ஒரு வேளை வசி மேல உள்ள கோவத்துனால, அவனை வெறுப்பேத்த என்கூட இப்டி நடந்துக்கலாம்.. ஆமா அது தான் உண்மையா இருக்கும் என தப்பு கணக்கு போட்டு விட்டான்…

உண்மையாகவே தேவா அவள் அருகில் இருக்கும் வரை அவளுக்கு பெரிதாக ஒன்றும் தோன்றவில்லை.. இன்று தனது தந்தை சொன்னது அவளுக்கு வலி கொடுக்க, மேலும் வசியுடன் அவன் க்ளோசாக இருப்பதும் அவளுக்கு கோவத்தை கிளப்பி இருந்தது…

மூவரும் சாப்பிட்டு முடித்ததும், வசி கலாவதியிடம் தேங்ஸ் மா லன்ச் ரொம்ப நல்லாயிருந்துச்சி நெக்ஸ்ட் டைம் வருவேன் என சொல்ல, கலாவதி சிரித்தவர் நீ எப்பவுமே வரலாம் பா. இந்த அம்மா உன்ன ஏதும் சொல்ல மாட்டேன்.. தேவா மாதிரி நீயும் எனக்கு மகன் தான் என்றதும் வசிக்கு தான் மகிழ்ச்சியாக இருந்தது…

சீனியர் வாங்க கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு போகலாம் என்றதும் வசி சரி என்றான்… தர்ஷி இவன் எப்ப நகருவான், எப்ப தேவாவிடம் நேற்று நடந்த விஷயத்தை சொல்லலாம் என இருந்தவளுக்கு தேவா வசியை வீட்டில் இருக்க வைத்தது ஆத்திரமாய் இருந்தது….

கலாவதி சாப்பிட்டவர், தனது அறைக்கு சென்று ஓய்வெடுக்க, தேவா வசி தர்ஷி மூவரும் அமர்ந்து டீவி பார்த்தனர்… அப்போது தேவாவிற்கு போன் வரவே எடுத்து காதில் வைத்தான்…ஜெய் தான் அழைத்திருந்தான்..

மச்சான் டேய் எங்க டா இருக்க?

சொல்லு டா வீட்ல தான் இருக்கேன்.என்ன விஷயம்..

டேய் இந்த சுருதி இருக்காள ரொம்ப ஓவரா போறாடா என்றதும், தேவா திரும்பி தர்ஷியை பார்க்க, அவள் நகத்தை கடித்தவாறு அமர்ந்திருந்தாள்..

டேய் ஜெய் லைன்ல இரு சரியா கேக்கல இரு கொஞ்சம் தள்ளி போய்க்கிறேன் என எழுந்து வாசலுக்கு செல்ல.. தர்ஷி அவன் செல்வதையே வெறித்து பார்த்தாள்…

அவர்கள் என்ன பேசுகிறார்கள் என ஒளிந்து நின்று கேட்க, தர்ஷி எழ அதற்குள் வசி அவள் கையை பிடித்திருந்தான்…

தர்ஷி கோபத்துடன் அவனை பார்க்க, இங்க பாரு நான் சொல்றதை ஒரு நிமிஷம் கேளு, உன் போன குடுக்க தான் இங்க வந்தேன்.. நேத்து நடந்த விஷயத்துக்கு சாரி எனக் கேட்கவும் தர்ஷினிக்கு ஆத்திரமாக வந்தது…

என்ன சாரி, ஹான் என்ன சாரி கூப்டு வந்த பொண்ணு இருக்காளா? இல்லையானு தெரியாம அப்டி என்ன படம் வேண்டி கெடக்கு.. நா உட்காந்த சீட்ல வேற யார் உட்காந்தாலும் நீங்க என்ன எங்கன்னு கேட்கணுமா இல்லையா? நா நேத்து பாத்ரூமல சிக்கிட்டேன் ஏதோ ஒரு புண்ணியவதி என்ன உள்ளேயே வச்சி பூட்டிட்டு போயிட்டா தெரியுமா உங்களுக்கு? கண்கள் நீரை சுரக்க….

வசி எழுந்தவன் சாரி டி, எனக்கு நேத்து நடந்த விஷயம் லேட்டா தான் தெரிஞ்சிது, நீ எங்கன்னு கேட்டப்போ என் பிரெண்ட்ஸ் கூட பின்னால உட்காந்திருக்கேனு சொன்னாங்க, அதுனால தான் எனக்கு டவுட் வரல, அது மட்டும் இல்ல உன்ன யாரு அங்க வச்சி பூட்டினதுனு எனக்கு தெரியும் என்றதும் தர்ஷியின் விழி விரித்து யார் என கேட்க

வசி அவளிடம் ஷில்பா தான் அப்டி பண்ணிருக்கா, பட் அவ ரொம்ப வருத்தப்பட்டா உன் நம்பர் அனுப்பிருக்கேன் சாரி கேட்கணும் னு சொன்னா என்றதும் தர்ஷிக்கு வசி மேல் மேலும் கோவத்தை அதிகப்படுத்தியது…

ஓஹ் தப்பு பண்ணிட்டு சாரி கேட்டுட்டா எல்லாம் முடிஞ்சிது அப்டி தான?

ஹ்ம்ம் என பெரு மூச்சி விட்டவன், இங்க பாரு இது வரைக்கும் நா யாரையுமே அடிச்சது இல்ல, ஆனா உன்ன இப்டி பண்ணது அவ தான்னு தெரிஞ்ச பிறகு நேத்து நா அவளை அடிச்சிட்டேன், என்றதும் தான் தர்ஷி சிறிது கோவம் தணிந்தாள்..

என்ன நம்பு இனிமேல் இப்டி நடக்காது..சாரி என்றதும் தர்ஷி பரவாயில்லை என்றாள்…

இந்தா உன் செல்போன் என கொடுக்க அதை வாங்கிக் கொண்டாள்… மேடம்க்கு இப்ப கோவம் போச்சா என தலை சாய்த்து கேட்க…

ஹ்ம்ம் போச்சு என சிரித்தாள்… சரி தர்ஷி அப்ப நா கிளம்புறேன் என்றவன் வாசலுக்கு செல்ல,தர்ஷியும் அவன் பின்னால் சென்றாள்…தேவா இன்னும் ஜெய்யிடம் பேசிக் கொண்டு தான் இருந்தான்….

தேவா என அவன் தோளில் கைவைத்தான் வசி, ஒரு நிமிஷம் என ஜெய்யிடம் சொல்லியவன் இணைப்பை துண்டித்து விட்டு சீனியர் கிளம்பிட்டீங்களா?

ஆமா டா டைம் ஆகிருச்சு, நா கிளம்புறேன், அம்மா கிட்ட சொல்லிரு பாவம் ரெஸ்ட் எடுக்கட்டும், இனிமேல் அடிக்கடி வருவேன் டா பாத்துக்க… என சிரிக்க…

தாராளமா வாங்க சீனியர், என பதிலுக்கு அவனும் புன்னகைத்தான்… பை தர்ஷி என தன் காரில் ஏறி பறந்திருந்தான் வசி….

எனக்கு தெரியாம என்னடா ரெண்டு பேரும் மறைக்கிறீங்க?இடுப்பில் கை வைத்து மூக்கு விடைக்க கேட்டவளை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் உள்ளே செல்லப் பார்க்க., தர்ஷிக்கு அவன் செய்கை கோவத்தை கொடுக்க, அவன் கை பிடித்து விறு விறுவென மாடிக்கு இழுத்து சென்றாள்….

தேவா அவன் இழுத்த இழுப்பிற்கு பின்னால் சென்றவன் என்னடி உனக்கு பிரச்சனை இப்ப? என பல்லை கடித்து கேட்கவும் தர்ஷி முகம் மாறியது…

ஏண்டா என்கிட்ட கடுப்படிக்குற? நேத்து முழுக்க என் போனும் எடுக்கல நா என்ன தப்பு பண்ணிட்டேன், எல்லாரும் என்ன ஒதுக்குறீங்க? உதடு பிதுக்கி கேட்டவளை பார்த்தவனுக்கு அவள் மேல் இருந்த கொஞ்ச கோபமும் பறந்தோடியது…

அப்டியே மயக்கிருவா ராட்சசி என கீழ் உதட்டை கடித்து சிரிக்கவும், போடா சிரிக்காத கோவமா வருது, நேத்து என்ன நடந்துச்சுனு தெரியுமா டா,? என ஒன்று விடாமல் அனைத்தையும் சொன்னதோடு இல்லாமல், இன்று வசி பேசியதையும் சொல்ல, தேவாவிற்கு சந்தேகம் வந்து விட்டது..

ஷில்பாவா! இப்டி செஞ்சா என ஆச்சரியப்பட்டவன்… அவ ஏன் அப்டி செஞ்சா வசிகிட்ட கேட்டியா?

இல்லையே மறந்துட்டேனே இமைகளை பட படவென அடித்து பேசியவளை பார்க்கவும் அவள் கண்களில் முத்தமிட ஆசையாய் இருந்தது….

சரி ஜெய் என்ன சொன்னான்?

சும்மா தாண்டி பேசினான்… என்றவனிடம் டேய் தேவா என்ன பீச்சுக்கு கூப்டு போறியா? ப்ளீஸ் என கேட்க

ஹ்ம் போலாமே வா என வாசல் கதவை சாத்தி விட்டு, பைக்கில் அவளை ஏற்றி அழைத்து சென்றான்….

அங்கு ஏற்கனவே இரண்டு ஜீவன் ஐஸ் க்ரீம் பார்லரில் அமர்ந்திருக்க, தர்ஷி இருவரையும் பார்த்து விடுவாளோ!

 

 

தொடரும்…..

படிச்சிட்டு மறக்காம staars குடுங்க… உங்க staars தான் எனக்கு ஊக்கமளிக்கும்….🙏🙏

 

 

 

 

 

 

 

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 11

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!