தேவை எல்லாம் தேவதையே…

5
(24)

தேவதை 26

மரணத்திலிருந்து தப்பித்து வந்தவனை இறுக்க அணைத்த ஜெய், தேவா டேய் மச்சான் ஏண்டா இப்டி பண்ண? என கேட்டு அழுது கதறினான்…

சா சாரி டா இ இனி இந்த மாதிரி முடிவு எடுக்க மாட்டேன் என திக்கி திணறி கூறி முடித்திருந்தான் தேவா…

சப்பையும், மைக்கேலும் அங்கு நடப்பதை அதிர்ச்சியுடன் தான் பார்த்துக் கொண்டிருந்தனர்…

அவ மட்டும் தான் உனக்கு லைஃபா டா அப்போ நாலாம் உன் வாழ்க்கைக்கு வேணாமா டா? என சொர்ந்து போய் கேட்டிருந்தான் ஜெய் … கொஞ்ச நேரத்துல உயிர் போயிருச்சு தெரியுமா டா? கண்கள் சிவந்து அழுதவனை பார்க்க அனைவருக்கும் பாவமாய் இருந்தது…

இது எனக்கு கடவுள் குடுத்த மறு வாழ்க்கை டா, இந்த தப்ப இனிமேல் செய்யவே மாட்டேன் என கூற… அவர்கள் இருவரும் பேசுவதை வைத்து மைக்கேலுக்கு ஏதோ காதல் விவகாரம் என புரிந்து போனது…

உங்கள பெத்தவங்க, எங்க கண்ணு முன்னாடி நீங்க இறந்து நாங்க மட்டும் வாழனுமா டா? எங்களால அத தாங்கிக்க முடியுமா? நெனச்சி பாருங்க! பெத்த வயிறு பத்தி எரியுது பா,, நல்லா வாழ பாருங்க டா , எல்லாத்தையும் ஆண்டு அனுபவிச்ச பொறவு சாவ பத்தி யோசிப்போம் என்றவர் நொறுங்கிய மனதுடன் எழுந்து சென்று விட, சப்பையும் அவருடன் சென்று விட்டான்…

ஜெய் அவனை இறுக்கி கட்டியவன் தான் விடவே இல்லை.. எங்கே விட்டால் தன் நண்பனை மீண்டும் பார்க்க முடியாதோ,! இழந்து விடுவோமோ! என்ற பயமே அவனை விட்டு விலகவில்லை…

டேய் மச்சான் ஹாஸ்பிட்டல் போவோம் வாடா என்றதும், தேவா சரி என அவனுடன் ஹாஸ்பிட்டலுக்கு சென்று விட.. வழி முழுதும் தான் இறக்கும் தருவாயில் நடந்த விஷயங்கள் தான் மனதில் ஓடிக்கொண்டிருந்தது… ஜெய்யிடம் அதை பற்றி எதுவும் சொல்லிக்கவில்லை..

ஹாஸ்பிட்டலில் டாக்டரிடம், கடலில் இறங்கி விளையாடும் போது எதேச்சையாக நடந்த விபத்திலிருந்து தப்பித்ததாக கூற, டாக்டர் அவனை பரிசோதித்து விட்டு, காதில் அதிக மண் புகுந்து இருப்பதால், இன்பெக்ஷன் ஆக வாய்ப்பு இருக்கிறது என்றவர், அதற்கு தகுந்த ட்ரீடீமெண்டை செய்து வீட்டிற்கு அனுப்பி வைத்தார்..

மைக்கேல் தனது மனைவி சரசு விடம் அனைத்தையும் கூற, சரசுக்கு பெரிய அதிர்ச்சியாய் இருந்தது… நம்ம புள்ள ரொம்ப நல்லவன் டீ, அவனை நெனச்சி தான் பயந்தேன் ஆனா அவன் ரொம்ப தெளிவா இருக்கான் டீ என புகழ்ந்தவர்… ஜெய்க்கு போன் செய்தார், ஒரு ரெண்டு மூணு நாள் தேவா கூட தங்கிக்க அவனை நல்லா பாத்துக்க பா என சொல்ல ஜெய்யும் சரி பா என சொல்லிவிட்டு தேவாவை அழைத்துக் கொண்டு அவன் வீட்டிற்கு சென்றிருந்தான்…

வீட்டிற்குள் நுழைந்ததும், அவனை பார்த்த செல்வமும், கலாவதியும் என்னடா நைட் முழுக்க எங்க இருந்த? கால் பண்ணாலும் எடுக்கல என கேள்விகளை கேட்டு துளைக்கவும் ஜெய் தான் பதிலளித்தான்,

மா நேத்து எல்லாம் என் வீட்ல தான் இருந்தோம், அப்புறம் என் வீட்ல தான் நைட் ஸ்டே பண்ணிருந்தான் மா கொஞ்சம் பீவரா இருந்துச்சி, அதான் என்கூட வே தங்கிக்க சொல்லிட்டேன்… என்றதும் செல்வமும், கலாவதியும் பதற ஆரம்பித்தனர்…

டேய் கண்ணா உடம்பு முடியலைன்னா அம்மாகிட்ட சொல்ல வேண்டிதான டா.. என அவன் நெற்றியை தொட்டு பார்க்க, உடல் சூடு இல்லை என உணர்ந்ததும் தான் அவருக்கு பதட்டமே குறைந்தது… போய் ரெஸ்ட் எடு பா உனக்கு கஞ்சி வச்சி கொண்டு வரேன்.. அழைச்சிட்டு போடா என ஜெய்யிடம் சொல்லிவிட்டு அடுப்படிக்கு ஓடினார்…

ஜெய் தேவாவை அறைக்கு அழைத்து செல்ல, செல்வம் அவர்களை பின் தொடர்ந்தவர், தேவாவை படுக்க வைத்ததும் அவன் காலடியில் அமர்ந்து, பாதங்களை பிடித்து விட, தேவா இல்ல பா வலி இல்ல விடு பா என சொல்லிப் பார்த்தான் , அவர் கேட்கவில்லை…

தூங்கு பா ஜுரம் வந்தா கை கால் வலிக்கும் நான் புடிச்சி விட்டா உனக்கு இதமா இருக்கும் தூங்கு நிம்மதியா என சொல்ல, ஜெய்க்கு தான் அவர்களை பார்க்க பாவமாகவும், தேவாவை பார்க்க ஆத்திரமாகவும் வந்தது….

எப்படி பட்டவங்கள விட்டுட்டு போக பாத்திருக்கான்? இவனுக்கு காய்ச்சல்னா கூட அவங்களால தாங்கிக்க முடியல? ஆனா இவன் பண்ண காரியம் தெரிஞ்சாலோ! இல்ல இவன் இல்லாமலோ போனாலோ! கண்டிப்பா இவங்களும் வாழ மாட்டாங்க அது மட்டும் உறுதி, முதல்ல பெத்தவங்க அன்ப புரிஞ்சிக்கோங்க டா அதுக்கு பிறகு சாகணும்ன்ற எண்ணமே வராது என மனதில் எண்ணிக்கொண்டான்…

தேவா உறங்கியதும், ஜெய்யும் அவன் பக்கத்தில் அமர்ந்தே உறங்கி போனான்… அவனை எழுப்பிய செல்வம் டேய் கால நீட்டி நல்லா படுத்துக்க பா என அறையிலிருந்து வெளியேற, இருவரும் நல்ல உறக்கத்திற்கு சென்று விட்டனர்…

செல்வம் வெளியே வந்ததும், கலாவதி, தன் கணவரிடம் சாப்பாடு செஞ்சிட்டேன் சாப்பிடுங்க, ஜெய்ய அனுப்புறேன் அவனுக்கு சாப்பாடு வைங்க நா போய் இந்த கஞ்சிய தேவாவுக்கு குடுத்துட்டு வரேன் என அறைக்குள் செல்லப்பார்க்க, செல்வம் வேணாம் மா நைட் ரெண்டு பேரும் தூங்கலனு நெனைக்கிறேன், முரட்டு தூக்கத்துல இருக்கானுங்க… தூங்கட்டும் விடு அப்புறம் எழுந்ததும் சாப்பாடு குடுக்கலாம் என கலாவதியை தடுத்து விட்டார்…

இல்லங்க.. பசி… என கலாவதி சொல்ல வருவதற்குள்..

அப்பறம் குடு இப்போ தூங்கட்டும் வா வந்து எனக்கு சாப்பாடு எடுத்து வை என டேபிளில் அமர, சரி என கலாவதியும் தன் கணவனுக்கு உணவு பரிமாற சென்று விட்டார்…

தர்ஷி காலையிலேயே வசிக்கு போன் செய்தவள், இன்னைக்கு நாம வெளில போலாம், நீயும் நானும் மட்டும் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும் என சொல்லவும்,, வசியும் சரி என ஒப்புக் கொண்டான்…

அழகாக கிளம்பியவள், தன் வீட்டில் சொல்லிவிட்டு ஆட்டோ பிடித்து ஓரிடத்தில் சென்று நிற்க அங்கு வசியும் தன் காரில் அவளுக்காக காத்திருந்தான்… வசியின் காரில் சென்று ஏறியவள், அவனை பார்க்க..

ஹாய் தர்ஷி, என்ன திடிர்னு வெளில கூப்பிட்ருக்க? என்ன விஷயம்? எனக் கேட்டான்….

அ அது எங்கேயாச்சும் வெளில போய்ட்டு பேசலாமா?

யா எங்க போலாம்? ஏதும் ரெஸ்டாரண்ட்? என கேட்கவும்

ஹ்ம்ம் போலாம் என்றாள்.. வசியும் காரை எடுத்திருந்தான்.. இருவரும் பெரிதாக ஒன்றும் பேசிக்கொள்ளவில்லை…

தர்ஷிக்கு ஏனோ தேவா மீதும், ஜெய் மீதும் ஆத்திரம் தான் வந்தது… எப்படி என்கிட்ட மறைக்கலாம்? ஒரு சாரி கேட்கல, இன்னமும் எனக்கு ஒரு போன் கால் கூட வரல! அவனா வந்து கெஞ்சட்டும் அப்பவும் மன்னிக்க மாட்டேனே! நகத்தை கடித்து யோசித்துக் கொண்டிருந்தாள்…

மேடம்க்கு இப்ப யார் மேல கோவம்? என வசி கரெக்ட்டாக கணித்து கேட்டு விட்டான்..

விழியை உருட்டியவள், எப்படி கண்டுபிடிச்சீங்க சீனியர்?

நீ நகத்த வெறியா கடிக்கும் போதே தெரியுது யார் மேலயோ பயங்கர கோவத்துல இருக்கனு… சொல்லு என்ன உன் ப்ராப்லம்?

அது எங்க பிரெண்ட்ஸ்க்குள்ள ஒரு பிரச்சனை அத விடுங்க, அவனுங்கள நெனச்சாலே கோவமா வருது..

சரி சரி உன் நல்ல மூட ஸ்பாயில் பண்ண விரும்பல, என்றவன் ரெஸ்டாரண்ட்டில் நிறுத்தி , காரை பார்க் செய்து விட்டு இருவரும் உள்ளே சென்றனர்..

பிடித்த உணவுகளை ஆர்டர் செய்து விட்டு தர்ஷியை பார்த்தவன் என்ன விஷயம் இப்ப சொல்லு எனக் கேட்க….

சீனியர் அ அ அது வந்து… புரடியை சொறிந்தாள்…

வசி சிரித்தவன், உனக்கு இதெல்லாம் செட் ஆகல டீ, எதுவா இருந்தாலும் பட்டு பட்டுனு பேசுற தர்ஷி தான் எனக்கு பிடிக்கும் என சொல்லவும்…

தர்ஷி வசியிடம், சீனியர் அ அது வந்து எனக்கு உங்கள ரொம்ப பிடிச்சிருக்கு.. நா உங்கள லவ் பண்றேன் சட்டென சொல்லிவிட்டு தலையை குனிந்துக்கொண்டாள்…

வசிக்கு தான் ஒன்றும் புரியவில்லை, என்ன இருந்தாலும் தன் மனதில் உள்ள பெண் தன்னிடம் காதலை சொல்லியதற்கு இன்னேரம் சந்தோஷப்பட்டிருக்க வேண்டும், ஆனால் இவனுக்கு தேவா தான் கண் முன்னே வந்தான்….

புருவம் சுருக்கி அவளை பார்த்தவன், என்ன திடிர்னு லவ்? என கேட்கவும்…

தெர்ல சீனியர் தோணுச்சு சொன்னேன்.. என்றாள்.. அவள் முகத்தையும், கண்களையும் உற்று பார்த்தான் வசி…

காதலாய் பார்க்கிறான் என எண்ணி கொண்டாள்… ஆனால் ஏனோ வெட்கம் வரவில்லை.. இயல்பாகவே நமக்கு வெட்கப் பட வராதோ என எண்ணிகொண்டாள்…

என்ன சீனியர் அப்டி பாக்குறீங்க? உங்களுக்கும் என்மேல காதல் இருக்குனு தெரியும்…

எப்படி தெரியும்? அதிர்ச்சியாக இருந்தது வசிக்கு…

ஷில்பா தான் சொன்னா..

என்ன சொன்னா?

நீங்க என்ன தான் லவ் பண்றீங்கன்னு சொன்னா…அப்புறம் உங்க கூட இனி நான் பேசக்கூடாதாம், நீங்க இருக்குற பக்கமே நான் வரக்கூடாது னு சொன்னா… அதெப்படி அவ என்கிட்ட ரூடா நடந்துக்கலாம்… கோவத்துல அவகிட்டயே உங்கள லவ் பண்றேன்னு சொல்லிட்டேன் என சொல்லவும் வசிக்கு பாதி புரிந்து போனது…

சரி புட் வந்திருச்சு பாரு சாப்பிடு, என சொல்ல.. தர்ஷி தனக்கு பிடித்ததை எடுத்து வைத்து சாப்பிட்டாள்…

சரி உனக்கு உன் பிரெண்ட்ஸ் மேல என்ன கோவம்? அத சொல்லு

அதுவா? என நெற்று நடந்ததை வசியுடம் கூறியவள், தேவா மேல தான் கோவத்துல இருக்கேன்.. அவன் எப்படி என்கிட்ட இருந்து மறைக்கலாம்? அதான் கோவம், அந்த கோவத்தோட வீட்டுக்கு வந்தேனா! ஷில்பா வேற கடுப்பேத்திட்டா அதான் கோவத்துல உங்கள லவ் பண்றேன்னு அவகிட்ட சொல்லிட்டேன் என்றதும் வசிக்கு மொத்தமாய் புரிந்தது….

ரைட்டு சாப்பிடு என்றவன், மனதில் ஏகப்பட்ட தெளிவு… தர்ஷி நானும் உன்ன லவ் பண்றேன், ஷில்பா சொன்னது உண்மை தான் என்றதும் தர்ஷியும் சரி சீனியர் என இயல்பாய் சாப்பிட ஆரம்பித்தாள்…

 

தொடரும்….

ஹாய் டியர்ஸ் என் story பிடிச்சிருந்தா? மறக்காம staars குடுங்க 🙏🙏🥰🥰

 

 

 

 

 

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 24

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!