தேவதை 29
டேய் மச்சான், தப்பு பண்ணிட்டோம்னு தோணுது டா, அவ இல்லாம கடலுக்கு வந்திருக்க கூடாது, அழைச்சிட்டு வந்துருக்கணும், அவளுக்கு மட்டும் இந்த விஷயம் தெரிஞ்சிது ரொம்ப வருத்தப்படுவா என தேவா ஜெய்யிடம் புலம்பினான்..
யாரு அவ? அட ஏண்டா நீ ஒருத்தன், அவ மாறிட்டா டா மச்சான், அவளுக்கு இப்ப தேவை நம்ம பிரெண்ட்ஷிப் இல்ல, வசிகரன் லவ் தான், பொண்ணுங்க ஸ்கூல் படிக்கும் போது இருக்குற மாதிரி காலேஜ் போயிட்டா இருக்க மாட்டாலுக.. மாறிடுவாளுங்க என அவனை மேலும் நோகடித்தான்..
சொன்னா தப்பா நெனைக்க கூடாது டா, அவ இப்ப வசிக்கூட வெளில சுத்திட்டு இருந்தாலும் இருப்பா என்றதும் தேவா மனம் முழுதும் ரணத்துடன் வேதனையை அனுபவித்தான்.. அந்த படகு சவாரியில் தர்ஷி இல்லை என்றாலும், அவளின் நினைவலைகள் தேவாவை சுற்றி வந்தது..
வீட்டிற்கு கோவமாக வந்த தர்ஷி, அறைக்குள் நுழைந்து அழ ஆரம்பித்தாள்.. என்ன மட்டும் எப்படி டா விட்டுட்டு போனீங்க? என கையை முறுக்கி பெட்டில் குத்தியவள், அவ்ளோ தான் நம்ம நட்பா? எல்லாம் முடிஞ்சிட்டு என்ன கழட்டி விட்டு போற அளவுக்கு போய்ட்டிங்கள! இனி நீங்களே வழியாக்க வந்து பேசுனாலும் நா பேச மாட்டேன் என தீர்மானம் எடுத்துக் கொண்டவள், கண்ணீர் துளிகள் வழிந்தோட அப்படியே படுத்து உறங்கினாள்…
தேவா தர்ஷியின் வீட்டிற்கு வந்தவன், தாழிடப்படாத அவள் அறைக்குள் நுழைந்திருந்தான், அவள் முகத்தை உற்று பார்க்க, கண்ணீர் வழிந்த நீர் கோடுகள் அப்படியே இருக்கவும்.. உறங்கும் அவள் நெற்றியில் குனிந்து முத்தமிட்டவன், அடுத்து அவளின் குண்டு கன்னங்களிலும் முத்தமிட்டு கண்கள் முழுதும் காதலோடு அவளை பார்த்திருக்க,, தர்ஷியும் கண்கள் விழித்தாள்…
அவள் முகத்தின் அருகே நெருக்கத்தில் நின்ற தேவாவின் முகத்தை பார்த்தவள், சட்டென எழுந்து அவனின் கழுத்தில் தன் கைகளை மாலையென போட்டவள், உதட்டில் மென் புன்னகை சிந்தி, தேவா வந்துட்டியா!? எதுக்கு என்ன விட்டுட்டு போன சிறு குழந்தை போல் உதடு பிதுக்கி கேட்கவும்…
தேவாவிற்கு அவளை அப்படியே அள்ளி கொஞ்ச தோன்றியது.. அவளின் இடுப்பில் கை வைத்து இறுக்கி அணைத்து கொண்டவன்,எங்கடி போவேன் உன்ன விட்டுட்டு? எனக்கு எப்பவுமே நீ தாண்டி உலகம், நீ என் தேவதை டி.. நீயே என்ன போடான்னு சொன்னாலும், உன்ன அவ்ளோ சீக்கிரம் விட்டுட்டு போ மாட்டேன்… மரணத்தால மட்டும் தான் நம்மல பிரிக்க முடியும்னு நெனச்சேன், அந்த மரணமே போய் உன் தேவதை கூட வாழுனு என்ன உங்கிட்ட அனுப்பி வச்சிட்டு, இனி நமக்குள்ள பிரிவே இல்லடி என்றவன்… நீயும் என்ன விரும்புற தான!? என கேட்க
தர்ஷி சிறிதும் யோசிக்காமல் ஆமா என்றாள்.., கீழ் உதட்டை கடித்து சிரித்தவன் அவள் கண்களில் முத்தமிட்டு, முத்தத்திற்காக ஏங்கி துடிக்கும் அவளின் செம்மாதுளை உதட்டை பார்த்தவன் மெதுவாக அவள் இதழோடு தன் இதழ்களை இணைத்தான்…
இருவரின் இதழ் முத்தங்களும், இதயதுடிப்பும் ஒன்றாக இணைந்த வேளையில், தர்ஷிக்கு அடி வயிற்றில் உணர்வுகள் ஊற்றெடுக்க சட்டென அவனின் பின் தலையை பிடித்து வருடினாள்…
ஒரே இதழ் முத்தத்தில் அவள் மீதான ஒட்டு மொத்த காதலையும் புரிய வைத்து விட்டான் தேவா.. தீரா அந்த இதழ் முத்தம் போன் சத்தத்தில் பாதியில் நின்றது…
திடுக்கென, கனவு கலைந்து எழுந்து மூச்சி வாங்க அமர்ந்தாள் தர்ஷி… வியர்த்து போய் எழுந்து அமர்ந்தவள், உடல் சில்லிட்டு போயிருந்தது..
விழி விரித்து அதிர்ச்சியில் இருந்தவள், என்ன கனவு டா இது? ச்ச வர வர ரொம்ப கெட்ட பொண்ணா போய்ட்டோம், எப்படி என் தேவாவ போய் இப்டி! ச்ச ச்ச அவனுக்கு தெரிஞ்சா என்ன பத்தி என்ன நினைப்பான்? என தன்னையே அசிங்கமாய் உணர்ந்தவள் எழுந்து சென்று முகம் கழுவி விட்டு வந்தமர்ந்தவள்..
கனவை பற்றி யோசித்தவள், தன் உதடுகளில் கை வைத்து பார்க்க, அவளையும் மீறிய வெட்கம் புதிதாக பிறந்தது.. உதட்டில் புன் முறுவல் பூக்க, கனவில் அவன் கொடுத்த முத்தம் நிஜத்தில் நின்று பேசியது…
உதடுகள் என்னவோ அவன் மென்மையான முத்தத்தை உண்மையாகவே அனுபவித்ததை போல குறு குறுக்க, உதட்டை விரலால் தடவியப்படி இருந்தாள்.. என்னதான் தவறு என தோன்றினாலும், தன் கனவை கலைத்த அந்த செல்போனின் மீது ஆத்திரம் வந்து போனது..
முத்தம் கொடுத்தது கனவு தான், ஆனாலும் அவன் கண்கள் பேசிய காதல் பாஷை உண்மை, நேரில் அந்த காதல் நிறைந்த கண்களை மூன்று முறை நெருக்கத்தில் பார்த்து உணர்ந்திருக்கிறாள்… என்னவாக இருக்கும் என குழப்பத்தில் இருந்தவளுக்கு காதலாக இருக்குமோ என்ற எண்ணம் தோன்றாமல் இல்லை…
மீண்டும் செல்போனின் ஒலி கேட்க, சுயத்திற்கு வந்தவள், யாரென எடுத்து பார்த்தாள், ஷில்பா தான் அழைத்திருக்க, அட ச்சை மூதேவி எப்ப பாத்தாலும் தொல்லை பண்ணிக்கிட்டு பற்களை கடித்து, கடுப்புடன் போனை எடுத்தவள்… சொல்லு மூதேவி எதுக்கு போன் அடிச்சி தொல்லை பண்ணுற? என கேட்க
ஹவ் டேர் யூ? என்ன பாத்தா மூதேவி மாதிரி இருக்கா? நீதான் டி எரும மாடு என ஷில்பா பதிலுக்கு திட்ட…
சரி மலை மாடு எதுக்கு இப்ப போன் பண்ணின? அத சொல்லு என காதை குடைந்து கொண்டாள் …
ஏய் சே நீ எவ்ளோ சீப்பா பிஹவ் பண்ற… உன்ன எப்படி இந்த வசி லவ் பண்றான்? அருவெறுப்பா இருக்கு து என துப்ப தர்ஷிக்கு கோவம் பொத்துக் கொண்டு வந்தது…
ஏய் சே வாய மூடு டி, என்ன பாத்ரூம்ல வச்சி பூட்டுனியே நாயே நீ தாண்டி சீப்…
உன்கிட்ட எனக்கென பேச்சு, நா அன்னைக்கு அவ்ளோ மிரட்டியும் நீ வசி கூட சுத்துறனா என்ன அர்த்தம்?
ஹ்ம்ம் நாங்க லவ் பண்றோம்னு அர்த்தம்… நா அப்டி தான் அவன் கூட சுத்துவேன், வேணும்னா சாம்பில் ஸ்டேட்டஸ்ல போடுறேன் பாத்து வயிறு உன் எரியட்டும் என சொல்லவும்
ஷில்பாவிற்கு அது மேலும் ஆத்திரத்தை மூட்டியது…. ஏய் அடங்க மாட்டியா? நீ கண்டிப்பா வருத்தப்படுவ வருத்த பட வைப்பேன் பாரு என பல்லை கடிக்க….
சரிதான் சூ……மூடிட்டு வை டி என அசிங்கமாய் திட்டிவிட்டு போனை வைத்து விட்டாள் தர்ஷி…
சினம் கொண்ட சிங்கம் போல் பெருமூச்சி விட்ட ஷில்பா அடுத்த திட்டத்தை யோசித்திருந்தாள்.. இல்ல இப்ப நா எது பண்ணாலும் எனக்கு அகைன்ஸ்டா போயிரும், அதுக்கான நேரம் வரும் அப்போ வசிய தர்ஷிக்கு எதிரா திருப்பனும் என எண்ணியவள் மனதில் புது திட்டத்தை வகுக்க ஆரம்பித்தாள்…
வசி க்கு கால் செய்த தர்ஷி, சீனியர் நீங்க ஸ்கூட்டில போறப்ப எடுத்த வீடியோவ அனுப்புங்க என சொல்லவும், அவனும் வீடியோவை அனுப்பி வைத்தான்… அடுத்த நொடி அதை எடுத்து ஸ்டேட்டஸில் போட்டிருந்தவள், எல்லாரும் பாத்துட்டு சாவுங்க டா,, என்ன விட்டுட்டா கடலுக்கு போறீங்க? தேவா நாளைக்கு இன்னும் இருக்கு உனக்கு, என்கிட்டே வந்து வழியாக்க பேசுவ பாரு என அடுத்த தூக்கத்தை போட்டிருந்தாள்… மூளை தவறு என சொன்னாலும்,, மனம் அடுத்த கனவை நோக்கி எதிர்பார்த்து சென்றது…
தேவா கடலுக்கு சென்றவன் வீட்டிற்கு திரும்பி வந்ததும், கலாவதி தர்ஷி வந்த கதையை கூற, தேவா முடிஞ்சிது போ என்றாவாறு தலையில் கை வைத்து அமர்ந்து விட்டான்..
டேய் என்னடா நடக்குது? நீ எப்படி தர்ஷி இல்லாம போன! அவ உன்மேல ரொம்ப கோவத்துல இருக்கா பாத்துக்கோ என்றவாறு கலாவதி சென்று விட… தேவா தான் என்ன செய்வதென தெரியாமல் ஜெய்க்கு கால் செய்து நடந்தவற்றை கூறினான்…
ஜெய் அதை பெரிதாக சட்டை செய்யாமல் டேய் மச்சான் அந்த அளவுக்குலாம் சீன் இல்ல… அவ வீட்டுக்கு ஸ்கூட்டி வாங்குனத காட்ட வந்துருப்பா, அப்ப நீ இல்லனு தெரிஞ்சதும் கோவமா போயிருப்பா என்றதும் தேவா விற்கு அது மேலும் அதிர்ச்சியை கொடுத்தது..
என்னது ஸ்கூட்டியா!?…. வாயை பிளந்தான்…
ஆமா ஸ்கூட்டியே தான், இப்டியே ஷாக் ஆகி ஷாக் ஆகி கோமாவுக்கு போயிராத.. ஸ்டேட்டஸ பாரு என இணைப்பை துண்டித்து விட்டான்…
தேவா உடனடியாக வாட்ஸ்ப்பை திறந்து தர்ஷியின் ஸ்டேட்டஸை பார்க்க, அதில் அவள் ஸ்கூட்டியின் பின்னால் வசியை ஏற்றிக்கொண்டு ஓட்டும் வீடியோ இருக்க… கீழே ரைடிங் வித் மை லவ் என்ற வாசகமும் எழுதி இருந்தாள்…
அதை மீண்டும் மீண்டும் ஓட விட்டு பார்த்தவன், உணர்ச்சி துடைத்த முகத்துடன் கற்சிலை போல் அமர்ந்திருந்தான்… ஏற்கனவே நடைப்பிணமாக இருப்பவனிடம் வேறு என்ன எதிர் பார்க்க முடியும்? அவனுடைய பயமே இனி என் தேவதை என்னுடன் கல்லூரிக்கு வர போவது இல்லை..நினைக்கவே அவனுக்கு வலித்தது, இது வரை தோன்றிடாத உணர்வு அவளை முற்றிலும் இழந்து விட்டேன்… அவ்வளவு தான் என தோன்ற துக்கம் தொண்டை அடைக்க அமர்ந்திருந்தான்…
ஜெய் அமுலுவிற்கு சப்பை போனிலிருந்து அழைத்து பார்த்தான், அவன் அமுலு போனை எடுத்து ஹலோ யாரு என கேட்க?
ஹ்ம்ம் 2 மாசத்துக்கு முன்னாடி நீ ஒருத்தனை லவ் பண்றனு சொல்லி ஏமாத்துனீயே அவன் தான் பேசுறேன்..
அந்த பயந்தாங்கோளியா? என்னவாம் அவனுக்கு இப்போ
பயந்தவனா? ரொம்ப பேசுற டி….
உண்மைய தான சொன்னேன், சரி எதுக்கு கால் பண்ண?
எப்படி டி உங்களால மட்டும் முடியுது? எல்லாத்தையும் சீக்கிரம் மறந்துட்டு இயல்பா வாழ ஆராமிச்சுடுறீங்க…ஆனா இந்த பசங்களால அப்டி ஈஸியா மறந்துட்டு போக முடியல… வலிக்குதுன்னு டி என நெஞ்சில் கை வைத்தான் ஜெய்…
பார்ர்ராஹ் சார்க்கு வலிக்க என்ன என் மேல லவ்வா இருக்கு! ஏதோ லவ் வச்சி அது பெயிலியர் ஆனா மாதிரி பேசுறீங்க என சிரித்தபடி அமுலு கேட்க…
லவ் தாண்டி… அது இல்லாம தான் நீ கூப்ட அன்னைக்கு ஓடி வந்தோமா? என குரல் உடைந்து ஜெய் கேட்க எதிரில் அமைதி….
உன் மனசாட்சிய தொட்டு சொல்லு உன்ன லவ் பண்றனு உனக்கு தெரியாது? சொல்லுடி…..
எனக்கென்ன பா தெரியும் உன் மனசுல இருக்குறத நீ தான என்கிட்ட சொல்லணும், தெரியாதது போல் நடித்து பேசினாள்…
தெரியாது….. ரைட்டு விடு… இப்ப என்ன சொல்ற? மறுபடியும் என்கிட்ட பேசுவியா மாட்டியா?
அன்னைக்கு நடந்ததுக்கு நீ என்ன சொல்ற? உன் பிரெண்ட் முன்னாடி அவளுக்காக என்னய அடிச்சல! என பதிலுக்கு அவளும் கேட்டாள்…
சாரி, இனி யாருக்காகவும் உன்ன விட்டு குடுக்க மாட்டேன்.. பிராமிஸ் அட் தி சேம் டைம் நீயும் அவங்கள பத்தி இனி பேச கூடாது என்ன ஓகே வா….
நா ஏன் அவளை பத்தி பேச போறேன், அவ என் வழியில குறுக்க வராம இருந்தா சரி என்றாள் பதிலுக்கு….
இனி அவ நம்ம விஷயத்துல வர மாட்டா, வந்தா நா பேசிக்குறேன்….
சரி அப்ப சொல்லு….
இன்னும் என்னடி சொல்லணும்?
ஹ்ம்ம் அவ்ளோ தானா? இன்னும் நீங்க எனக்கு பிராப்பரா ப்ரபோஸ் பண்ணல சார்..
ஓஹ் ஆமால ஐ லவ் யூ அமுலு குட்டி என மனதார அவளிடம் தன் காதலை சொல்ல… அமுலுவிற்கு உள்ளுக்குள் பட்டாம்பூச்சி பறக்க, சிரித்த படி நானும் ஐ லவ் யூ என்றாள்….
ஒரு லவ் ரூட் க்ளியர்…. 🫶😉😉
டியர்ஸ் படிச்சி பாத்துட்டு மறக்காம stars குடுங்க 🙏🙏🙏🥰🥰
தொடரும்……..