தேவதை 30
மறுநாள் கல்லூரி மீண்டும் திறக்க, தேவா எதையும் எதிர்பார்த்து ஏமாறாமல் நேராக கல்லூரிக்கே வந்து விட்டான்.. அவன் எண்ணத்தை பொய்யாக்காமல் தர்ஷி அவனுக்கு முன்பே கல்லூரிக்கு சென்றிருந்தாள்..
கிளாசில் அமர்ந்து பேசிகொண்டிருந்தவளை கண்டும் காணாமல் தனது இடத்தில் சென்று தேவா அமரவும், தர்ஷிக்கு மூக்கு உடை பட்டது போல் ஆனது..
தேவா தன்னிடம் வந்து கெஞ்சுவான் என நினைத்து கொண்டிருந்தவளுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது…
முதல் நாள் என்பதால் கிளாசிற்கு எந்த ப்ரோபஸ்ஸரும் வரவில்லை.. அதனால் மாணவர்கள் பேசி அரட்டை அடித்தவாறு இருந்தனர்…
அமுலு கிளாசிற்குள் நுழைந்ததும், தர்ஷியை வெறுப்பேற்ற நேராக சென்று ஜெய் அருகில் தான் அமர்ந்தாள்.. தேவாவிடமும் அமுலு நன்றாக பேச, தேவாவும் அவளிடம் பேசி கொண்டிருந்தான்..
அதை பார்த்த தர்ஷிக்கு சகலமும் பற்றி எரிய ஆரம்பித்தது.. ஓஹ் இவ குடுக்குற தைரியமா? அதான் ரெண்டு பேரும் என்கிட்ட பழைய படி பேச மாட்றானுங்க… இருக்கட்டும் இருக்கட்டும் எவ்ளோ நாளைக்குன்னு பாக்குறேன்…
அமுலு ஜெய்யிடம் வா ஜெய், தேவா வாங்க கேன்டீன் போயிட்டு வரலாம் என அழைக்கவும் மூவரும் எழுந்து கேன்டீனுக்கு சென்றனர்…
தர்ஷிக்கு கண்களில் நீர் கோர்த்து கொண்டது.. தனது செல்போனில் இருந்து வசிக்கு மெசேஜ் போட்டு மரத்தடிக்கு வர சொல்ல சரி என ரிப்ளை அனுப்பினான்., அதன் பின் தர்ஷி எழுந்து மரத்தடிக்கு சென்று பார்க்க ஏற்கனவே அங்கு வசி தனது நண்பர்களுடன் நின்றிருந்தான், கூடவே ஷில்பாவும் நின்றிருக்க.. ஏனோ அவளுக்கு அவர்களை பார்த்ததும் வெறுப்பாய் இருந்தது… மீண்டும் தனது கிளாசிற்குள் நுழைந்து கொண்டாள்…
அவள் செல்வதை பார்த்த ஷில்பா வில்லத்தனமாய் சிரித்தவள், இனி நீ வசிகிட்ட நெருங்க முடியாத அளவுக்கு பாத்துப்பேன் அதான் என் வேலையே என எண்ணிக் கொண்டாள்..
ச்ச அவன மட்டும் கூப்டா அவன் பிரெண்ட்ஸ அழச்சிட்டு வந்து நிக்குறான் கொஞ்சம் கூட அறிவே இல்ல, வாய் விட்டே புலம்பினாள்..
டேய் தர்ஷிய நீ கண்டுக்கவே இல்ல, நா அப்டியே ஷாக் ஆகிட்டேன் என ஜெய் கிண்டலடித்தான்..
ஆமா டா, இனி அப்டி தான்….
ஹ்ம்ம் பாப்போம் டா, ஒரு வேளை உனக்கு அவ மேல இருந்த லவ் குறைஞ்சு போச்சோ..!
என்னைக்குமே அவ மேல இருக்குற காதல் எனக்கு துளி கூட குறையாது டா, எல்லாத்தையும் மறைச்சி வாழ்ந்துட்டு இருக்கேன் அவ்ளோ தான், எதையும் மறக்கல, என் காதலால அவ காதலுக்கு எந்த பிரச்சனையும் வந்திட கூடாதுனு ஒதுங்கி போறேன் அவ்ளோ தான்…
என சோர்வான குரலில் கூறினான் தேவா…
ஹ்ம்ம் டா இப்டியே இரு அது போதும்.. இனி வழியாக்க போய் கெஞ்ஜாத என அட்வைஸை போட்டான்…
அன்றைய நாள் கழிய, தேவா, அமுலு, ஜெய் மூவரும் ஒன்றாக வீட்டிற்கு செல்வதை பார்த்தவளுக்கு கோவம் பொத்து கொண்டு வந்தது… ஸ்கூட்டியை எடுக்க போகும் போது அங்கு வசி வந்து அவளை வழி மறைத்து நின்றான்…
ஏய் தர்ஷி என்ன வர சொல்லிட்டு, நீ ஏண்டி வரல? என கேட்க
நா உங்கள மட்டும் கூப்டா நீங்க என்னடானா உங்க பிரெண்ட்ஸ கூப்டு வந்து நிக்கறீங்க, அது எனக்கு பிடிக்கல அதான் திரும்பி வந்துட்டேன் முகம் சுருக்கி கூறியவளை, கை கட்டி நின்று உற்று நோக்கினான்….
உனக்கு என் பிரெண்ட்ஸ பிடிக்கலையா? என கேட்டான் வசி
பிடிக்கல என உடனடியாக சொல்லியவளை, ஒற்றை புருவம் தூக்கி பார்த்தவன், ஓஹ் ஓகே எனக்கும் உன் பிரெண்ட்ஸ் தேவா அப்புறம் அந்த ஜெய்ய பிடிக்கல, நீயும் இனி அவங்க கூட சேராத நானும் என் பிரெண்ட்ஸ்க் கூட சேரல ஓகேவா என கேட்டவனை வெட்டவா? குத்தவா? என்பது போல் முறைத்தவள்…
நா ஒன்னும் உங்க பிரெண்ட்ஸ் கூட சேர கூடாதுனு சொல்லலையே! அப்புறம் என் பிரெண்ட்ஸ் ஒன்னும் உங்க பிரெண்ட்ஸ் மாதிரி மோசமானவங்க இல்ல… அவனுங்களுக்கு மனுஷங்கள மதிக்க தெரியும், ஆனா உங்க கூட இருக்குறவங்களவுக்கு பணத்தை மட்டும் தான் மதிப்பீடு செய்ய தெரியும், சோ அவங்களோட இவனுங்கள கம்பேர் பண்ணாதீங்க முகத்தில் அடித்தாற் போல் பேசினாள் தர்ஷி, ஏற்கனவே தேவா ஜெய்யின் மீது இருந்த கோவத்தை வசியிடமே காட்டினாள்..
உனக்கு எப்படி உன் பிரெண்ட்ஸ் முக்கியாமோ எனக்கும் அப்டி தான்….
இருக்கட்டும், இப்ப நா முக்கியமா அவங்க முக்கியமான்னு கேக்கல, ஆனா என்கூட தனியா டைம் ஸ்பென்ட் பண்ண பாருங்க என்றவள், அதற்கு மேல் அவனிடம் பேச விருப்பம் இல்லாமல் ஸ்கூட்டியை எடுத்து கொண்டு சென்று விட்டாள்..
தர்ஷிக்கு கண்களில் கண்ணீர் வழிந்தோட அதை துடைத்தவாறே தான் வண்டி ஒட்டினாள்.. தேவாவின் ஒதுக்கத்தை அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.. எதையோ இழந்தது போன்ற உணர்வு தோன்றி இருந்தது…
வீட்டிற்கு சென்றவள் யாரிடமும் பேசாமல் அறைக்குள் புகுந்து கொண்டாள்.. அவள் செல்வதை பார்த்த மஞ்சுளா என்னாச்சி இந்த பொண்ணுக்கு வர வர யார்கிட்டயும் சரியா பேச மாட்டுது. ஒழுங்கா சாப்பிட மாட்டுது… என்னமோ சரி இல்ல, தேவா வீட்டுக்கு போய் அவன்கிட்ட விசாரிச்சிட்டு வந்துருவோம் என அங்கு கிளம்ப ஆயுத்தமானார்…
தேவாவிற்கும் மனம் வலிக்க தான் செய்தது, அவளை பார்த்தாலே போதும் என நினைப்பவனுக்கு, அவள் முகம் பார்க்க கூட இப்போது கொடுப்பினை இல்லாமல் போய் விட்டது என வருந்தினான்.. அவள் நியாபகமாகவே இருக்க, படுத்து உறங்கிய படியே இருந்தான்… எழுந்து உணவு உண்ண கூட மனம் ஒப்பவில்லை..
மஞ்சுளா தேவாவின் வீட்டிற்கு செல்ல, அவரை கலாவதி அழைத்து நன்றாக உபசரித்தார்..
என்ன மஞ்சுளா அதிசயமா இருக்கு, வானு கூப்டாலும் அவ்ளோ யோசிச்சி வருவ இப்ப திடீர்னு வந்துருக்க? என கேட்க
ஆமாம் கலா இந்த தர்ஷினி பொண்ணு சரியே இல்ல, வர வர வீட்ல இருக்குறது இல்ல, யார்கிட்டயும் ஒழுங்கா பேச மாட்டுது, சிரிக்க மாட்டுது பேய் அடிச்ச மாதிரி உர்ருனு இருக்கா அதான் தேவாவுக்கும் அவளுக்கும் சண்டையானு கேட்க வந்தேன்…
ஆமா நீ சொல்றது சரி தான், இங்க தேவாவும் அப்டி தான் இருக்கான்.. நிறைய விஷயத்துல ரெண்டு பெரும் மாத்தி மாத்தி பேசுதுங்க எது உண்மைனே தெர்ல என கலாவதியும் புலம்பி தள்ளவும்,,
, சரி கலா தேவாவ கூப்பிடு நா என்னனு கேட்குறேன் என சொல்ல, கலாவதி சென்று தூங்கி கொண்டிருந்த தேவாவை உசுப்பி அழைத்து வந்தார்…
தேவா முகம் வாடி போய் களை இழந்து இருந்தது.. அத்தை நல்லாருக்கீங்களா? என மென் புன்னகை சிந்தி கேட்டவனை கூர்ந்து பார்த்தே ஏதோ இருவருக்கும் சரி இல்லை என்பதை புரிந்து கொண்டவர் உனக்கும் அவளுக்கும் என்ன பா பிரச்சனை? என்பதை வாய் விட்டே கேட்டு விட்டார் மஞ்சுளா…
தேவா சிறிது அதிர்ச்சி அடைந்தவன், அ அதெல்லாம் இல்ல அத்தை, சும்மா சின்ன பிரச்சனை தான் நாங்களே பேசி சரி பண்ணிப்போம் என சமாளித்தான்…
இப்போல்லாம் அவ அடிக்கடி வெளில போறா, நீயும் வீட்டுக்கு அழைக்க வரது இல்லை.. ஆனா அவ உங்க கூட தான வெளில போறா! இல்ல வேற யாரையும்?… என இழுக்க இந்த கேள்வியில் கலாவதியே விழி விரித்தவர் தேவாவை என்ன சொல்ல போகிறான் என்பது போல் அமர்ந்திருந்தார்…
தேவாவிற்கே பயம் வந்து விட்டது, எங்கே அவள் வசியுடன் ஊரை சுற்றி மாட்டி கொண்டாளோ! என அடி வயிற்றில் பய பந்து உருள,, ச்ச நீங்க நினைக்குற மாதிரிலாம் ஒன்னும் இல்லை அத்தை அவ சின்ன புள்ள தனமா சண்டை போடுறா, அவ்ளோதான் நாங்க பாத்துக்குறோம் அத்தை என சமாளித்து வைக்கவும் தான் இருவருக்கும் நிம்மதியாய் இருந்தது…
சரி பா தேவா அப்போ நா கிளம்புறேன் வீட்ல அவ தனியா இருக்கா, இன்னும் அவங்க அப்பாவும் வரல.. என்றவர் கலாவதியிடம் சொல்லிவிட்டு தன் வீட்டிற்கு கிளம்பிவிட்டார்….
பழைய தேவாவாக இருந்திருந்தால் பைக்கில் ஏற்றி வீட்டிற்கு கொண்டு போய் விட்டு வந்திருப்பான்… ஆனால் இப்போது தான் அனைத்தும் மாறி விட்டதே…
நாட்கள் இப்படியே ஓட, இருவருக்குள்ளும் இடைவெளி அதிகமானதே தவிர, சிறு பார்வை மாற்றம் கூட இல்லை.. ஆனால் அன்று கண்ட கனவை அவள் தினமும் நினைத்து பார்க்கையில், இனம் புரியாத சந்தோசம் தோன்ற, அது காதல் என புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு தத்தியாக இருந்தாள் தர்ஷினி… அவளுடைய கோவமும், ஈகோவும் அவனிடம் செல்ல விடாமல் தடுத்து வைத்திருந்தது…
ஒரு நாள் கல்லூரியில் கல்ச்சுரல் ப்ரோக்ராம் நடத்த திட்டமிட கல்லூரியே விழாகோலம் போல காட்சி அளித்தது.. அவரவர் தான் பங்கேற்க போகும் போட்டிக்காக பிராக்ட்டிஸ் செய்து கொண்டிருக்க, ஒருவரும் கிளாசில் இல்லை…அமுலுவும், ஜெய்யும் கேன்டீனுக்கு பின் புறம் இருக்கும் மரத்தடியில் அமர்ந்து பேசிகிட்டு கொண்டிருந்தனர்..
வசி தர்ஷியின் கிளாசில் அவள் அருகில் அமர்ந்து பேசி சிரித்துக்கொண்டிருந்தான்… சட்டென தர்ஷி கண்களில் தூசு விழ கண்கள் திறக்க முடியாமல் எரிய ஆரம்பித்து விட்டது…
ஆஹ் என் கண்ணு என கசக்க, உடனே வசி எழுந்தவன் லூசு கசக்காத இரு நான் ஊதி விடுறேன் என அவள் கண்களில் தன் இதழ் குவித்து ஊதி கொண்டிருந்தான்…
தேவா அப்போது தான் உள்ளே நுழைந்தவன், அவர்கள் இருவரும் இருக்கும் நிலையை பார்த்து முத்தமிடுவது போல் இருக்க, சிலை போல் நின்றவன் இருவரும் முத்தமிடுவதாகவே தவறாக நினைத்து விட்டான்… முத்தம் நீளவே அங்கிருந்து உடனடியாக வெளியேறினான்…
இப்போ ஓகே வா, வா கண்ண கழுவு, நல்லா சிவந்து போயிருக்கு பாரு.. வா என வசி அவளை அழைத்து சென்று வாஷ் பேசனில் தண்ணீர் குழாயை திறந்து கண்களை கழுவி விட்டவன்.. லூசு கண்ணுல தூசி விழுந்தா எப்போதும் கசக்க கூடாது டி.. இப்டி கழுவிரு என்ன ஓகேவா வசி கேட்க… அவளுக்கு ஏனோ தேவாவின் நியாபகம் வந்து விட்டது…
ஒரு முறை அவள் கண்ணில் ஆகாச கல், என்ற சிறிய தூசு கண்களில் விழுந்து எரிய, அதை தேவா தன் நுனி நாக்கால் எடுத்து விட்டான்.. அந்த விஷயங்களை நினைத்து முகம் சிவந்து புன்னகையோடு நின்றவளை, தலையில் தட்டிய வசி பைத்தியம் சிரிக்கிற, நான் என்ன சொல்றேன் நீ எதுக்கு சம்மந்தம் இல்லாம சிரிக்கிற? என கேட்டான்
அது தேவாவ பத்தி யோசிச்சேன் வேற ஒன்னும் இல்ல என எதார்த்தமாக சொல்லிவிட்டு முன்னே செல்ல, வசி இடுப்பில் கை வைத்து செல்லும் அவளையே பார்த்து தலையை ஆட்டி கொண்டான்….
தொடரும்…..
டியர்ஸ் படிச்சி பாத்துட்டு மறக்காம staars குடுங்க 🥰🥰🙏🙏