தேவதை 31
தேவா வீட்டிற்கு செல்லாமல் கடற்கரை ஓரம் சென்றான் , அலைகளின் இடையே மண்டிக்கால் போட்டவன், அந்த கடலின் எல்லையை கண்களால் அளந்து, மணலில் கையை மடக்கி வெறித்தனமாய் குத்தி ஆஆஆஆஹ்ஹ்ஹ்ஹ்ஹ் என கத்தினான்…
தர்ஷி….. தர்ஷி…. தர்ஷி…… என கத்தியாவாறே கர்ஜித்தான்….பெண்ணவளின் குறும்பு மிளிரும் சிரித்த முகம் கண் முன்னே வந்து சென்றது…. அவள் வசியை முத்தம் கொடுத்த படி நின்ற நிலை கண் முன்னே காட்சிகளாய் ஓட, வெறி பிடித்தவன் போல் ஆனான்….
இது மனதில் இவ்வளவு நாட்கள் பொத்தி வைத்திருந்த காதல் ஏக்கத்தின் வெளிப்பாடு மட்டுமல்லாமல் இன்று அவன் தன் தேவதையை பார்த்த நிலை அவனை மேலும் கலங்கடித்து விட்டது… சிறிது நேரம் தொண்டை வலிக்க கத்தி வேதனையை வெளிப்படுத்தியவன் நிதர்சனத்தை புரிந்து கொண்டு கண்களை துடைத்து விட்டு எழுந்தான்…
வேணாம் இனி அவள் புறமே திரும்ப போவது இல்லை.. அவள் முகம் பார்த்தால் மட்டுமே சுவாசிப்பேன் என்ற நிலை மாறி, அவள் புறம் திரும்பினால் சுவாசிக்க மறந்து மரணம் மட்டுமே நிச்சயம்…
சந்தோசமாக இருக்கட்டும் என மனதை தேற்றி கொண்டவன் நீண்ட நேரத்திற்கு பின் தன் வீட்டிற்கு சென்றான்…
மறுநாள் அனைவரும் கல்லூரி க்கு சென்றனர், அம்ருதாவும் ஸ்கூட்டியில் சென்று கொண்டிருக்க,, திடீரென டம் என பெரிய சத்தம் கேட்ட படி, ஸ்கூட்டி தடம் மாறி தாறுமாறாய் சென்று, முன்னே சென்று கொண்டிருந்த தேவாவின் பைக்கின் மீது மோதி கீழே விழுந்தாள்…
தேவா பைக்கை பேலன்ஸ் செய்து நிறுத்தி விட்டு கோபத்துடன் யார் அது என பின்னால் திரும்பி பார்க்க, அம்ருதா கீழே இருக்க, ஸ்கூட்டி அவள் மேல் கிடந்தது…
பதறியவன் ஓடி சென்று, ஸ்கூட்டியை தூக்கி விட்டு, அவளையும் கை கொடுத்து தூக்கி விட்டான்…
அடி பலமா? என தேவா கேட்க…
தன் கையை உதறி கொண்டவள் இல்ல இல்ல பெருசா அடி ஒன்னும் இல்ல.. டையர் வெடிச்சிட்டு அதான் என்னால பேலன்ஸ் பண்ண முடியாம கொண்டு வந்து விட்டுட்டேன், சாரி என பாவமாய் சொல்லவும்…
இட்ஸ் ஓகே… பாத்து போங்க என அங்கிருந்து நகர பார்த்தவனை தடுத்தாள் அமுருதா… ஒரு நிமிஷம் ப்ரோ எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுங்க ப்ளீஸ் பார்வையால் இறைஞ்சினாள்..
தேவா என்ன என்பது போல் பார்க்க,
ஒன்னும் இல்ல இன்னைக்கு காலேஜ் கல்ச்சுரல், என்றதும் தேவாவிற்கு அப்போது தான் அந்த பெண் தன்னுடைய காலேஜ் என்பதை புரிந்து கொண்டான்…
சரி அதுக்கு நா என்ன பண்ணனும்?
இந்த ஸ்கூட்டிய பக்கத்துல உள்ள கடையில போட்டுட்டு, என்ன கொஞ்சம் லிப்ட் குடுத்து கூப்டு போய் காலேஜ்ல் விட்ருங்களேன் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ரோ நா சிங்கிங் பிராக்டீஸ் பண்ணனும் ப்ளீஸ் என கெஞ்சவும்…
நீங்களும் எங்க காலேஜ் தானா?
ஆமா நா உங்கள பாத்துருக்கேன், பார்க்கிங்ல நிறைய முறை…
ஓஹ் சரி வெயிட் பண்ணுங்க நா போய் இந்த ஸ்கூட்டிய கடையில போட்டுட்டு வந்து கூப்டு போறேன் என சென்று வண்டியை டையர் மாத்த சொல்லி கடையில் விட்டவன், பின் அவளை தன் பைக்கில் ஏற்ற விருப்பம் இல்லாமல் அரை மனதோடு அழைத்து சென்றான்..
வண்டியில் இரு கால் போட்டு அவன் தோளில் கையை வைத்து பேசிய படியே வந்தாள்.. அவனுக்கோ முழுக்க தர்ஷியின் நியாபகம் தான் வந்தது…
லொட லொட வென பேச, கொஞ்சம் வாய மூடிக்கிட்டு வரிங்களா? எனக்கு காது வலிக்குது என வாய் விட்டே புலம்பினான்..
ஓஹ் சாரி சாரி, ஆனா என்னால வாய பேசாம இருக்க முடியாதே பிரதர்… வேணும்னா நா ஒரு நல்ல பாட்டு பாடவா?
நா ஒன்னு பண்றேன் உன்ன இறக்கி ஒரு ஆட்டோல ஏத்தி விடுறேன் நீ காலேஜ் வந்துரு கடுப்படித்தான் தேவா…
வேணாம் வேணாம் சாரி இனி வாயே திறக்க மாட்டேன் என்றவள் கல்லூரிக்குள் நுழையும் வரை வாயை திறக்கவில்லை.. பார்க்கிங்கில் சென்று பைக்கை நிறுத்த கீழே இறங்கியவள் தேவாவிடம் ப்ரோ எனக்கு ஆல் தி பெஸ்ட் சொல்லுங்க… நா சிங்கிங் காம்படிஷன்ல இருக்கேன் என கையை நீட்ட…
தேவா அவளது இயல்பை ரசித்தவன், நல்லா பாடு ஆல் தி பெஸ்ட் என சொல்லி பதிலுக்கு கை கொடுத்தான் ….
தேங்க்ஸ் ப்ரோ, கண்டிப்பா நா பாடுறத நீங்க கேட்கணும், அப்டியே உங்க பிரெண்ட்ஸ் கிட்ட சொல்லி அங்க மேடை ஏறுனதும் கிளாப் விசில்ன்னு பறக்க விடுங்க… ஓகே பை என்றவள் வேகமாக அவ்விடம் விட்டு ஓடி சென்றாள்…
அதன் பின் தேவா தனது க்ளாசிற்கு சென்று, தனது நண்பர்களுடன் பேசி கொண்டிருந்தவன் கண்கள் தர்ஷியை தேடாமல் இல்லை.. ஆனால் அவள் இல்லை என்றதும் வசியுடன் இருக்கிறாள் என புரிந்து கொண்டான்…
தர்ஷினி ஆத்திரத்தில் நகத்தை கடித்து வெறித்தனமாய் துப்ப அதை கண்ட வசி, மேடம் க்கு என்ன கோவம்? யார் மேல கோவம்? என கேட்க
வேற யாரு அந்த தேவா தான் ஒரு பொண்ண பைக்குல வச்சி அழைச்சிட்டு வரான்..எவ்ளோ தைரியம்? அது எப்படி வரலாம் சீனியர்… நா மட்டும் தான் அவன் வண்டியில எப்போதும் ஏறுவேன்.. வேற யாரும் போக கூடாது என்பவளை விசித்திரமாய் பார்த்திருந்தான் வசி..
இதென்ன வம்பா இருக்கு? அவன் யார் கூட வந்தா உனக்கென்ன? என சந்தேகத்துடன் கேட்க…
அது எப்பிடி சீனியர், அதுல நா மட்டும் தான் போகணும் குழந்தை போல் பிடிவாதம் பிடித்தாள்…
இது நல்லாருக்கே! சரி யார் அந்த பொண்ணு இதுக்கு முன்னாடி பாத்துருக்கியா?
இல்ல, அந்த நாய் யாருன்னே தெர்ல, என் தேவாவோட கை பிடிச்சி பல்ல காட்டி காட்டி பேசுது ஒரே இரிடேட் சீனியர்.
ஒரு வேளை அவன் லவ்வரா இருக்குமோ! என்றவனை அதிர்ச்சியுடனும், கண்களில் திடீர் கண்ணீருடன் முறைப்பது போல் பார்த்தாள்….
என்ன மா இது அவனுக்குன்னு ஒரு லைஃப் இல்லையா? உன் பிரண்டா இருக்கிறதுனால அவனுக்கு லவ் இருக்க கூடாதா?அவன் யாரையும் வண்டியில அழைச்சிட்டு வர கூடாதா?என்ன உன் நியாயம், எனக்கு தெரிஞ்சி அது அவன் லவ்வரா தான் இருக்கும் என மீண்டும் அவளை உசுப்பேத்தி பார்த்தான் வசி….
தர்ஷியால் பொருக்க முடியவில்லை…சான்ஸே இல்ல, சீனியர் அப்டி ஏதாவதுனா நா அவனை சும்மா விட மாட்டேன் கொன்றுவேன்…
நீ மட்டும் என்ன லவ் பண்ணலாம் ஆனா அவன் பண்ண கூடாதா?
பதிலுக்கு நா உங்கள லவ்……… என ஏதோ சொல்ல வந்தவள் சட்டென வாயை மூடி கொண்டாள்…
மேடம் என்னமோ சொல்ல வந்திங்க சொல்லுங்க.. நீங்க என்ன….!?
சீனியர் நா ரொம்ப குழப்பத்துல இருக்கேன் அப்டியே விடுங்க அப்புறம் பேசலாம் என்றவள் தனது க்ளாசை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்… செல்லும் அவளையே வெறிக்க பார்த்தவன், எப்ப தான் புரிஞ்சிப்பாளோ! தத்தியா இருக்கா என்றெண்ணிகொண்டான் வசி…
என்ன நடக்குது? தேவா எந்த பொண்ணு கூட சேர்ந்து வந்தா எனக்கென்ன? வசி சொல்ற மாதிரி நா வசிய தான லவ் பண்றேன்! ஆனா வசி கேட்டதும் நா உங்கள லவ் பண்ணலன்னு என் வாயில வர பாத்துச்சி…. இ இல்ல தேவா யார வேணும்னாலும் லவ் பண்ணட்டும்! மூளை சொல்ல மனம் அதற்கு எதிராய் யோசிக்க ஆரம்பித்தது…
இல்ல அப்டி விட முடியாது, அவன் என்கிட்ட மட்டும் தான் பேசணும், என்கூட மட்டும் தான் க்ளோசா இருக்கணும், என்னால அவனை யாருக்கும் விட்டு குடுக்க முடியாது… அப்டினா நா அவனை லவ் பண்றேனா?
பைத்தியம் மாதிரி பேசாத தர்ஷி, அவன் உன் பிரெண்ட் இந்த விஷயம் தெரிஞ்சா ரொம்ப வருத்தப் படுவான்.. உன்ன ரொம்ப கீழ்த்தனமா நினைப்பான்… ஒழுங்கா இரு, அவன் பிரெண்ட்ஷிப்ப கொச்சப் படுத்தாத…
இல்ல தேவா வேணும், வேற ஒருத்தி கூட பைக்குல வரப்ப என்னால முடியல,மனசு வலிக்குதுன்னு, எனக்கு ஏத்துக்க முடியல… தலை வலிக்குது தேவா வேணும்… தேவா மனம் கூப்பாடு போட …. மண்டை வலிக்க ஆரம்பித்தது… மனம் ஒரு நிலையில் இல்லை.. கண்கள் இருட்டி மயக்கம் வருவதற்குள் தனது இடத்தில் சென்று அமர்ந்து கண்களை இறுக்க மூடினாள்…
பெஞ்சில் சாய்ந்தவள், தேவா அமர்ந்த இடம் நோக்கி பார்வையை செலுத்த,, தேவா ஜெய்யுடன் அமர்ந்து பேசி கொண்டிருந்தான்….ஏனோ இன்று தேவா அவள் கண்களுக்கு புதிதாக தெரிந்தான் …அவளையும் மறந்து ரசிக்க ஆரம்பித்து விட்டாள்..
என்னவனின் அடர்த்தியான கேசத்தின் நெற்றி முடி காற்றில் அசைந்து, அவன் விரல் கோதும் அழகே அழகு தான்..
குறும்பான கண்களும், அளவான இதழ்களும், என் நெஞ்சம் திருடிய சிரிப்பும், ஆங்காங்கே முளைத்திருக்கும் தாடி மீசையும் என் அன்பனின் பேரழகு…!
என் விரல் கோர்க்கும் உன் கைகளும், ஆயிரம் கதை பேசும் உன் விழிகளும், கம்பீரமாய் தோன்றும் உன் நடையும், என் நடையை மாற்றிய உன் கர்வமும்… என்னை இமைக்காமல் ரசிக்க வைக்கிறது… அவன் முகம் பார்த்தவாறே இருக்கவும்… ஜெய் அதை கண்டு கொண்டான்…
டேய் தேவா அங்க பாரு டா இந்த வண்டு உன்ன பார்த்த படியே படுத்திருக்கா..
தேவா ஜெய் சொன்னதை நம்பாமல், பேசாம இரு டா நீ வேற, வெந்த புண்ணுல வேல பாய்ச்சாத….
சத்தியமா டா, கண்ண கூட சிமிட்டல, ஒரு வேளை இந்த சண்டைக்கு அப்புறம் உன்கிட்ட எப்படி பேசுறதுனு யோசிக்கிறாளோ! நீயா வந்து பேச மாட்டியானு ஏங்குறா போல,, நீ சட்டுனு திரும்பாத, ஏதேச்சையா பாக்குற மாதிரி பாரு….
தேவா சில நொடிகள் கடந்து ஏதேச்சையாக அவளை பார்ப்பது போல் பார்க்க, ஜெய் சொன்னது போல் தர்ஷினி அவனை தான் அசையாது பார்த்த படி இருந்தாள்… இருவரின் கண்களும் நேர் கோட்டில் சந்திக்க.. தர்ஷினிக்கு மீண்டும் அந்த கண்களின் ஈர்ப்பை தாக்கு பிடிக்க முடியவில்லை… அவன் பார்வை வீச்சில் கைதாகியவள் சொல்ல முடியா உணர்வில் தத்தளித்தாள்..
உன் கண்களில் தெரியும் காதலை என்று எனக்கு தருவாய் என கேட்க வேண்டும் போல் இருந்தது…
உன் விழி விரித்த வலையில் மாட்டிக்கொண்டேனடா.. கொஞ்சம் கொஞ்சமாய் என் உயிரை குடிக்கிறாய்…இங்கு உடல் மட்டும் தான் என்னிடம் உயிர் உன்னிடம் கண்களால் அவனிடம் பேச…
தேவாவிற்கு ஆயிரம் அர்த்தங்கள் புரிந்தாலும், இனி அவன் எதையும் நம்பி ஏமாற போவது இல்லை… என்ன என்பது போல் ஒரு புருவம் உயர்த்தி கேட்க… சட்டென இயல்புக்கு திரும்பியவள்.. ஒன்னும் இல்ல என்பது போல் தலையாட்டி விட்டு, எழுந்து சென்று முகத்தை கழுவி வந்தாள்…
பாத்தியா டா, நா சொன்னேன்ல அவ உன்ன தான பாத்தா என ஜெய் கேட்க அவனிடம் பதில் இல்லை….
தேவாவ நா லவ் பண்றனா? வசிகிட்ட எதுக்கு காதலை சொன்னேன்.. அவன்கிட்ட இல்லாத ஈர்ப்பு, இவன் கிட்ட மட்டும் ஏன் வரணும்? மண்டை வெடிச்சிரும் போல புலம்பி தள்ளினாள் அவன் தேவதை….
படிச்சி பாத்துட்டு மறக்காம stars குடுங்க 🥰🥰🙏🙏
தொடரும்……