தேவதை 32
இவ்வளவு நாள் தேவா பட்ட வேதனையை இனி இவள் அனுபவிக்க போகிறாள்.. தனக்கு ஏற்கனவே தேவாவின் மீது விதையாய் மனதிற்குள் புதைந்து இருந்த காதல், இன்று தான் துளிர் விட்டு முளைக்க தொடங்கி உள்ளது.. இவளது அந்த காதலை அவனிடம் வெளிப்படையாய் கூறுவாளா? அல்லது தேவாவை போல் நட்பு கெட்டு விடும் என பயந்து சொல்லாமலே இருந்து விடுவாளா? ஒரு வேளை தன் காதலை அவனிடம் சொல்லிவிட்டால்! அதை தினம் தினம் செத்து பிழைக்கும் தேவா தான் ஏற்றுக் கொள்வானா? அல்லது முளை விடும் போதே கிள்ளி எரிந்து விடுவானா? கடந்து போகும் நாட்கள் தான் அதற்கான தீர்வை சொல்ல வேண்டும்….
கல்லூரியில் இருந்த தர்ஷினி மதியத்திற்கு மேல் தனது வீட்டிற்கு சென்று விட்டாள்.. கல்ச்சுரலில் பெண் பிள்ளைகள் அனைவரும் புடவை கட்டி வர வேண்டும், ஈவ்னிங் தானே ப்ரோக்ராம் அதனால் வீடு அருகில் இருக்கும் மாணவர்கள் மதியம் போல் வீட்டிற்கு சென்று புடவை கட்டி வந்தார்கள்..
தர்ஷியும் தனது கிளாசில் படிக்கும் 2 மாணவிகளுடன் சேர்ந்து தன் வீட்டிற்கு சென்றவள், தன் தாய் மஞ்சுளாவிடம் புடவை கட்டி கொண்டு கல்லூரிக்கு மாலை 5 மணி போல் வந்தார்கள்…
முதன் முதலில் புடவை கட்டியிருக்கிறாள் தேவா பார்க்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே ஏனோ மனம் முழுக்க இருந்தது…
தன் கேம்பசிற்குள் நுழையும் முன், ஒரு வித பதட்டமும், வெட்கமும் புதிதாய் ஆட்கொள்ள,, க்ளாசிற்கு செல்வதற்குள் ஒரு வழி ஆகிவிட்டாள்.. தேவா என்ன முதல்ல பாரு ப்ளீஸ் ப்ளீஸ் என மனதிற்குள் வேண்டியவள், நிமிர்ந்து பார்த்தாள், தேவா லாஸ்ட் பெஞ்சில் அமர்ந்திருக்க, ஜெய் அமுலுவுடன் கடலை போட்ட படி அமர்ந்திருந்தான்….
அவள் ஆசைப்படியே தேவா தான் அவளை முதலில் பார்த்தான், அரக்கு நிற புடவையில் உண்மையாகவே வானத்தில் இருந்து இறங்கி வந்த தேவதை போல் தான் இருந்தாள்.. அவளின் அழகில் ஆடவன் சொக்கி தான் போனான்…
அவளை பார்க்க வேணாம் என மனம் தடுத்தாலும் முடியவில்லை…
தர்ஷி தேவாவின் பார்வை துளைத்தெடுப்பதை கண்டு கொண்டவள் வெட்கத்தில் முகம் சிவந்து போனாள்.. வெட்கப்பட தெரியுமா எனக்கு! தன்னையே கேட்டு கொண்டாள்…நேருக்கு நேர் சந்தித்த இருவரின் கண்கள் மவுனமாய் காதல், ஏக்கத்தின் மொழி பேச…
அப்போது தர்ஷியை தேடி வந்த வசி, அவளை புடவையில் கண்டதும் சட்டென அவளின் தோளில் கை போட்டு விட்டான்.. தர்ஷிக்கே தூக்கி வாரிப் போட்டது.. நெஞ்சில் கை வைத்த படி அவனை அதிர்ச்சியுடன் பார்த்தாள்…
வாவ் கார்ஜியஸ் டி.. செமயா இருக்க.. ஆமா ஏண்டி போனை எடுக்கல, உன்ன எங்க எல்லாம் தேடுறது.. சரி வா என அழைத்து செல்ல… தர்ஷிக்கு முகமே மாறி விட்டது…. இவ்வளவு நேரம் இருந்த இனம் புரியாத மகிழ்ச்சி நிமிடத்தில் தொலைந்து போக, தேவாவை ஏறிட்டு பார்த்தாள்..
தேவா வசி வந்து அவள் தோளில் கை போட்டதுமே, அவன் பார்வையை மாற்றி கொண்டான்.. திரும்பி ஜன்னலோரம் பார்த்து தலையை கோதியபடி இருக்க.. தர்ஷிக்கு என்ன செய்வதென தெரியாமல், வசி இழுத்த இழுப்பிற்கு சென்று விட்டாள்…
வெளியே சென்றதும் ச்ச சீனியர் என் மேல இருந்து கைய எடுங்க, இது காலேஜ்… நீங்க நெனைக்குற மாதிரி பார்க்கோ, பீச்சோ இல்ல என கடுப்படித்து வசியின் கையை தட்டி விட்டாள்…
அவள் முகம் வெறுப்பில் சுருங்குவதை கண்டவன், ஹலோ மேடம்.. நானும் இப்ப இத பார்க், பீச்ன்னு சொல்லலையே,.. டுடே கல்ச்சுரல் டி எல்லாம் ஜோடியா சுத்துது பாரு… நீ மட்டும் ஏண்டி இப்டி கடுப்படிக்குற?
இதெல்லாம் எனக்கு பிடிக்காது சீனியர்.. என்றவளை பார்த்து இடுப்பில் கை வைத்து நின்றவன்…
சரி லீவ் இட்.. இங்க பாரு இந்த சாரில செம அழகா இருக்க டி… ப்ளீஸ் வா காருக்கு போகலாம் என்றழைத்தான்…
காருக்கா? எதுக்கு காருக்கு? கூப்பிடுறீங்க? இப்ப ப்ரோக்ராம் ஆரமிச்சிடுவாங்க..
அதுக்கு இன்னும் லேட்டாகும் நீ வா பர்ஸ்ட்….என கையை பிடித்து அழைத்து சென்றான்… பார்க்கிங் ஏரியாவில் உள்ள தனது காருக்கு அவளை அழைத்து சென்றவன் கார் கதவை திறந்து விட்டு உள்ள ஏறு என கூற…
தர்ஷி ஒன்றும் புரியாமல் காரில் ஏறி அமர்ந்தாள்… வசியும் காரில் வந்து ஏறியதும்… சீனியர் இப்ப எங்க போறோம்? வாங்க ப்ரோக்ராம் பாக்க போகலாம் என அழைத்தாள்…..
இருட்ட ஆரம்பிக்க ஆங்காங்கே வண்ண விளக்கு போடபட்டு எறிந்தது… கல்லூரி முழுதும் பார்க்கவே கலர்புல்லாக திருவிழா வீதியை போல் காட்சியளித்தது…
அவள் முகம் அருகே சென்றவன், ஏய் தர்ஷி இந்த புடவைல நீ செம அழகா இருக்க தெரியுமா? அப்டியே மின் மினி பூச்சி மாதிரி ஜொலிக்குற… பிளீஸ் டி ஒரே ஒரு முத்தம் மட்டும் ப்ளீஸ் என அவள் முகத்தருகே நெருங்கினான் வசி…
அதிர்ச்சியில் கண்கள் விரித்து, சட்டென அவனை நெஞ்சில் கை வைத்து தள்ளி விட்டவள், நீங்க என்ன பண்றீங்க சீனியர்? ச்ச எவ்ளோ மோசமா நடந்துகிறீங்க? கோவத்தில் பற்களை கடித்தாள்….
ஏய் கூல் டி, லவ்வர்ஸ் குள்ள இதெல்லாம் சகஜம் தான்.. கம் அன்ட் ப்ளீஸ் கோஆப்ரேட் என மீண்டும் அவளை முத்தமிடுவது போல் நெருங்கினான் வசி…
எனக்கு பிடிக்கல வேணாம் ப்ளீஸ்…
அதெல்லாம் புடிக்கும் டி வா மீண்டும் அவளை நெருங்கினான்….
அவனை தடுத்தவள் வேணாம்னு சொல்றேன்ல…
ஹே லூசு, லவ்வர்ஸ்க்குள்ள இது சகஜம் வாடி என அவள் தாடையை பிடித்து இழுக்க…..
ஐயோ….. என்ன விட்ருங்க ப்ளீஸ்… சீனியர் எனக்கு உங்க மேல லவ் இருக்கா என்னனு எனக்கே தெரியல என கண்கள் மூடி கத்தியவளை வசி சிரித்த படி பார்த்து கொண்டிருந்தான்…
இன்னும் தன்னை முத்தமிடாமல் இருக்கும் வசியை சந்தேகத்துடன் கண்கள் திறந்து பார்க்க, அவன் கூலாக ஸ்டியரிங்கில் தாளம் தட்ட, தர்ஷிக்கு ஒன்றும் புரியவில்லை….
அவன் முகத்தை உற்று பார்த்தவளுக்கு ஒரு வேளை இவன் சைக்கோவா இருப்பானா ? என்ற எண்ணம் கூட தோன்றியது…
என்ன மேடம் நா பைத்தியம்னு நெனைச்சீங்களோ!
இ இல்ல சீனியர் சா சாரி என திக்கி திணறி கண்களில் கண்ணீருடன் மன்னிப்பு கேட்டாள்..
ச்ச ச்ச சாரிலாம் கேக்காத, எனக்கு எப்பவோ தெரியும் தர்ஷி உனக்கு என்மேல லவ் இல்லனு என்றதும் தர்ஷி கண்ணீருடன் அமைதியாக அவனை பார்க்க,,
என்ன பாக்குற? நா சொல்றது உண்மைதான்.. உனக்கு என்மேல உண்மையான லவ் இல்ல.. என் மேல ஒரு கிரஷ் அவ்ளோதான்.. அப்புறம் நல்ல பிரெண்டா பழகுன, ஆனா எனக்கு தான் உன்மேல லவ் வந்துட்டு.. என்ன ரீசன்னு கேக்காத எனக்கு சத்தியமா தெரியாது..
ஆனா உனக்கு ஏன் என் மேல லவ் வந்துச்சுனு தெரியும் சொல்லவா! எனக்கு அம்மா இல்லனு நா சொன்னதால உனக்கு என்மேல ஒரு சிம்பத்தி கிரியேட் ஆகிருச்சு, அதோட ஷில்பா என்ன லவ் பண்றேன்னு சொல்லி உன்ன பாத்ரூம்ல வச்சி பூட்டிட்டா அந்த கோவத்துலயும் தான் நீ என்ன லவ் பண்றனு சொல்லிட்ட…
இ இ ல்ல அப்டி இல்லை, தடுமாறினாள்….
ச் அப்டி தான், நீ என்கிட்ட ப்ரபோஸ் பண்றப்ப, யாரையோ வெறுப்பேத்தவும், கடமைக்குன்னு சொன்னது மாதிரியும் தான் எனக்கு தெரிஞ்சுச்சு…அதுக்கு பிறகு நா உன்ன லவ் பண்றேன்னு சொல்லிருக்கவே மாட்டேன் என்றதும் தர்ஷி யோசித்து பார்த்தாள்…
ஆம் ஒரு முறை கூட இவன் என்னை காதலிப்பதாக என்னிடம் நேரடியாக சொல்லவில்லையே..! மர மண்டைக்கு அப்போது தான் உதித்தது…
என்கூட இருக்கிறப்ப எப்போ பார்த்தாலும் எதையோ இழந்த மாதிரி தான் இருப்ப.. அது என்னனு எனக்கு தெரியும் என்றவனை உற்று பார்த்தாள்..
புன்னகைத்தவன் அது தேவா தானா!? என நேரடியாகவே கேட்க… தர்ஷி ஆமாம் என்பது போல் தலையாட்டினாள்..
ஹ்ம்ம் தெரியும், அவன் ஒரு பொண்ணுகூட பைக்குல வந்தா உனக்கு வலிக்குது, தினமும் அந்த ஷில்பா கூட பேசுறேன், அவ கூட டைம் ஸ்பெண்ட் பண்றேன், ஒரு நாளும் அந்த போஸ்ஸசிவ உன் கண்ணுல நா பாத்தது இல்ல, என்கூட இருக்குறப்போ கூட முழுக்க தேவாவ பத்தி தான் பேசுவ… சரி இப்ப சொல்லு நீ அவன லவ் பண்றியா?
தர்ஷி சிறிதும் யோசிக்கவில்லை, தலையை குனிந்தவள் அழுத படி ஆமாம் என்பது போல் தலையாட்டினாள்…
வசிக்கு அதை கேட்டதும் தன் கண்களில் அவனை அறியாமல் கண்ணீர் சுரந்தது, என்ன இருந்தாலும் அவன் காதலித்த பெண்ணாயிற்றே,, இருந்தும் தேவாவின் காதலை நன்கு அறிந்தவன் மனதை தேற்றி கொண்டான்..
பெருமூச்சி விட்டு கண்களை துடைத்து கொள்ள, தர்ஷிக்கே ஒரு மாதிரியாய் போனது.. சாரி சீனியர் என்னால…… என ஏதோ சொல்ல வருவதற்குள்…
ஏய் ச்சி நீ அழாத, எனக்கு இதுலாம் முன்னாடியே தெரியும்… என்றதும் தர்ஷி அவனை அதிர்ச்சியோடு பார்த்தாள்,, என்ன பாக்குற இதெல்லாம் தெரிஞ்சி எதுக்கு உன்கூட சுத்திக்கிட்டு இருந்தேன்னு யோசிக்குறியா? அதுக்கான பதிலை கூடிய சீக்கிரம் உன் தேவா கிட்ட சொல்லுவேன், நீயும் அவன் கிட்ட கேட்டு தெரிஞ்சிக்க., என அழுகையை அடக்கி கொண்டு புன்னகைத்தான்…
நீ உனக்கே தெரியாம தேவாவ லவ் பண்ணிருக்க தர்ஷி.. அது உன் ஆழ் மனசுல புதஞ்சி கெடந்துருக்கு… அத வெளிக்கொண்டு நீ புரிஞ்சிக்க இவ்ளோ வருஷம் தேவைப்பட்ருக்கு… ஒருத்தவங்க நம்ம கூடவே இருக்கிறப்ப நமக்கு ஒன்னும் தெரியாது, அவங்க இல்லனாலோ, இல்ல நம்மள விட வேற யாருக்கோ இம்பார்டன்ஸ் குடுக்கும் போது தான், நமக்கு ஒரு வலி வரும்.. அந்த வலி சொல்லும் நீ அவங்கள எவ்ளோ நேசிச்சிருக்கனு….
போ சீக்கிரமே உன் காதல அவன் கிட்ட சொல்லிரு.. நாம லவ் பண்றவங்க கிட்ட நம்ம லவ்வ எக்ஸ்பிரஸ் பண்ணிரனும் இல்லனா, எல்லாருக்கும், வேதனை தான் என்றவனின் குரல் தழு தழுக்க அவளை பார்த்தான்…
தர்ஷி கண்களில் இருக்கும் நீரை சுண்டி விட, அவன் தோள் மீதே சாய்ந்து கொண்டாள்… சாரி சீனியர் நா பண்ணது தப்பு, அந்த ஷில்பா கால் பண்ணி என்ன ரொம்ப கீழ்தனமா பேசுனா, என்னால அத ஏத்துக்க முடியல, அவளை வெறுப்பேத்தி பாக்கணும்னு ஆசைப்பட்டு, உங்க மேல இருக்குற கிரஷ லவ்ன்னு தப்பா நெனச்சிட்டேன்… எல்லாத்துக்கும் என் கோவம் தான் காரணம்… என்ன மன்னிச்சிருங்க..
இட்ஸ் ஓகே, அழாத, உங்க கூட இருக்குறப்போலாம் நானும் செம ஹேப்பியா இருந்தேன், எப்போமே உங்களுக்கு நல்ல பிரெண்டா இருப்பேன் என்றவன்,, சரி அத விடு லவ் இல்லனா என்ன எப்பவும், இப்பவும் நான் உன் கிரஷ் தான!? அவள் தலையை வாஞ்சையாய் தடவிய படி, அவள் முகம் பார்த்து கேட்டு சிரிக்க, அவளும் புன்னகையுடன் ஆமாம் என்றாள்…
சிறிது நேரம் அப்படியே இருந்தவர்கள், சரி நீ போ போய் ப்ரோகராம் பாரு, நா பின்னாடியே வரேன் என அவளை அனுப்பி வைக்க, அவளும் சரி என்ன இறங்கப் பார்த்தவள்,, திரும்பி மீண்டும் அவன் முகம் பார்த்தாள்..
வசி அவளது பார்வையை புரிந்து கொண்டவன், நோ கில்டி பீலிங்ஸ், அந்த அளவுக்கு ஒன்னும் நடக்கல, போ மா என தலையசைத்து அனுப்பி வைக்க,
ஹ்ம்ம் என்றவள் கீழே இறங்கி சென்று விட, வசி ப்ரோக்ராமிற்கு போகாமல் காரை ஸ்டார்ட் செய்து எங்கோ சென்றான்….
தொடரும்……
படிச்சி பாத்துட்டு மறக்காம stars குடுங்க டியர்ஸ் 🥰🥰🙏🙏