தேவை எல்லாம் தேவதையே…

5
(22)

தேவதை 34

ஜெய் அமுலுவை நேராக வீட்டிற்கு அழைத்து செல்லாமல், பார்க்கிற்கு அழைத்து சென்றிருந்தான்…
ஜெய் விளையாடாத என்ன கொண்டு போய் வீட்ல விடு, டைம பாரு எங்க வீட்ல தேடுவாங்க டா… மார்னிங் காலேஜ் வரணும் நியாபகத்துல வச்சிக்க..
கொஞ்ச நேரம் டி, இந்த புடவைல செம அழகா இருக்க.. பாத்துட்டே இருக்கணும் போல இருக்கு டி… ப்ளீஸ் இன்னும் கொஞ்ச நேரம் இருந்துட்டு போயேன் அசடு வழிந்தான்….
இத கேட்டு கேட்டு காத வலிக்குது டா… நீ கொண்டு போய் விட போறியா? இல்லை நானே ஆட்டோ புடிச்சி போய்க்கவா? என மிரட்டவும் தான் பையன் சரி வா நானே கொண்டு போய் விடுறேன் என்றான்….
ஹ்ம்ம் அது வா என அமுலு அவனின் கை கோர்த்து நடக்க ஜெய் அவள் விரல்களை இறுக்க பிடித்து கொண்டவன்.. ஆனாலும் ரொம்ப பண்ற டி.. ரசிக்கவே விட மாட்டேன்ற….
போதும் போதும் நீ ரசிச்சது., போட்டோ எடுத்திற்கல அத பாத்துக்கோ இதழில் சிரிப்புடன் கூற … அதை கண்டவன்
அமுலு உன்கிட்ட ஒன்னு கேட்கவா?
என்னடா கிஸ் கேட்க போறியா? அதிர்ச்சியில் விழி விரித்தவள்.. தன் வாயை மூடி கொள்ள…
எதேய்… கிஸ்ஸா! அடியே எனக்கு அந்த அளவுக்குலாம் தைரியம் இல்லை டி…
ஓஹ் அதான பாத்தேன்… நீயாவது கிஸ் கேக்குறதாவது சலிப்புடன் சொன்னவளை ஜெய் தான் விழி விரித்து பார்த்தான்… ரொம்ப பேசுற டி… வாய் உனக்கு..
ஹ்ம் ஹ்ம் அத விடு என்ன கேட்கணும்னு வந்த…அத கேளு…
அ அது வந்து உண்மையாவே என்ன உனக்கு புடிக்கும்ல டி.. ஏனா நா பெருசா அழகுன்னு சொல்ல முடியாது.. ஆனா நீ பேருக்கேத்த மாதிரி உண்மையாவே அமுல் பேபி மாதிரி இருக்க.. நாளைக்கு வேற எவனயாச்சும் பாத்தா என்ன கழட்டி விட்டுட மாட்டில..அப்புறம் நா தாங்க மாட்டேன் பாத்துக்க டி… தேவா சாக போன மாதிரி நானும் போயிருவேன் என வாயை விட்டவன், பின் தன் தலையில் அடித்து கொண்டான்…
எ என்ன சொன்ன தேவா சாக போய்ட்டானா? எப்ப நடந்துச்சு? ஏன் என்கிட்ட சொல்லல? உண்மையான கோபத்துடன் கேட்டாள் ஸ்ருதி…
அது நம்ம லீவ்ல நடந்துச்சு… அன்னைக்கு நா செத்து பிழைச்சேன் தெரியுமா? ரொம்ப பயந்துட்டேன்…
தேவா முதல்ல லவ்வ சொல்லாம இருக்குறது தப்பு, லவ்வயே சொல்லல, அதுக்குள்ள லவ் பெயிலியர்னு சூசைட் பண்ண போய்ட்டானா முட்டா பைய என்றதும் ஜெய் அவளை முறைத்தான்… போதும் வாய மூடு என்றவனிடம் …
இந்த தர்ஷினி அதுக்கும் மேல சரியான ஆளு தான் வசிக்கூட சுத்திகிட்டு தேவாவ நல்ல வெறுப்பேத்தி பாத்துட்டா… நல்ல பொண்ணா அவளாம்…
போதும் ஓவர் வாய் பேசாத…கடுப்பேத்தாம நம்ம மேட்டருக்கு வா, நா கேட்டதுக்கு பதிலே வரல இன்னும்..
நா உன்ன விட்டுட்டு வேற யாரையும் நெனச்சு கூட பாக்க மாட்டேன்… இந்த டிகிரி முடிச்சிட்டு, இன்னும் ஒரு டிகிரி படிக்கணும் அப்புறம் நல்ல வேலைக்கு போய்ட்டு நாம கல்யாணம் பண்ணிக்கலாம் சரியா?
ஹ்ம்ம் சரி வா உங்க தெரு முனைல இறக்கி விடுறேன் என்றவன் பைக்கில் ஏற்றி அவளை அழைத்து சென்றான்….
ஏலேய் சப்பை வலைய நல்லா புடில… வண்டியில சிக்கிக்கிட போகுது என மைக்கேல் டிவிஎஸ் 50 வண்டியை ஓட்டிய படி சொல்ல….
வலை சிக்கல மாமோய்… அங்குட்டு பாரு உன் மொவன் தான் ஒரு பொண்ணு கூட சிக்கிட்டான் என சப்பை ஜெய்க்கு ஆப்பு வைத்து விட்டான்….
மைக்கேலும், சப்பையும் வலை வாங்கிட்டு வரும் வழியில், எதிரில் ஜெய்யும், அமுலுவும் வர, அதை சப்பை கண்டு கொண்டவன், மைக்கேலிடமும் போட்டு கொடுத்து விட்டான்…
என்னது? வண்டியை நிறுத்தி விட்டு திரும்பி பார்க்க, ஜெய்யும், அமுலுவும் சிரித்த படி செல்வதை பார்த்துவிட்டார்…
எடுப்பட்ட பயலே. இன்னைக்கு வால உனக்கு இருக்கு… உன் கால உடைச்சி மீனுக்கு இறையாக்கல என் பேரு மைக்கேல் இல்லல… வண்டியை கோபத்துடன் ஓட்டினார்….
தர்ஷினி வீட்டிற்கு சென்றதும் மஞ்சுளா அவளை சாப்பிட அழைக்க, வேணாம் என கடுப்படித்து விட்டு அறைக்குள் நுழைந்து புடவையை வேகமாக கழட்டி எறிந்தாள்…
உடை மாற்றியவள் தேவா மேல் உள்ள கோவத்தை தீர்க்க தன் நகத்தை உட்காந்து கடிக்க ஆரம்பித்து விட்டாள்…
தேவா அவள அழைச்சிட்டு போற அப்டினா எனக்கு என்ன ஆனாலும் உனக்கு பரவாயில்லை அப்டி தான? நைட் டைம்ல எப்படி என்ன விட்டுட்டு போக மனசு வந்துச்சி? இது சரி இல்ல.. இதுக்கு மேல இப்டியே விட முடியாது… நீ எனக்கு மட்டும் தான், உன்ன விட்டு குடுக்குற அளவுக்குலாம் நா நல்லவ இல்லை… நாளைக்கு மட்டும் அந்த மாடு உன்கிட்ட வந்து பேசட்டும்… நேரடியாவே அவ மூஞ்ச உடைச்சி கைல குடுப்பேன் பாரு.. அப்புறம் இனி நீ எந்த பொண்ணுகிட்டயும் பேசவே பயப்புடனும் என எண்ணியவள் அவனுக்கு போன் செய்து பார்க்க, தேவா எடுப்பதாய் இல்லை…
ஓஹ் போனை கூட எடுக்க மாட்டல்ல… அந்த அளவுக்கு நல்லா பேசி உன்ன மயக்கி வச்சிருக்காளோ! நாளைக்கு வச்சிக்கிறேன் உனக்கு இருக்கு… என்றவள் படுத்து அவன் நினைப்பில் உறங்கினாள்….
அமுலுவை வீட்டில் விட்டு விட்டு, வீட்டிற்கு வந்த ஜெய்யை செருப்பை எடுத்து தலையிலேயே அடித்தார் மைக்கேல்…. ஜெய்யின் தாய் சரசு எவ்வளவு தடுத்தும் மைக்கேல் கேட்காமல் அடிக்க…
ஒரு கட்டத்தில் அவர் கையை பிடித்த ஜெய்.. லூசா பா நீயு… எதுக்கு என்ன இப்டி இழுத்து போட்டு வாறுற? வலியில் முதுகை தடவிய படி கேட்டான்….
ஏண்டா ஆத்தங்கெட்ட கூவ…. எம்புட்டு தைரியம் இருந்தா ஒரு பொண்ணு கூட வண்டியில போவ..? உன்ன படிக்க அனுப்புனனா? இல்ல இந்த மாதிரி கண்டதுங்க கூட ஊர் சுத்த அனுப்புனேனா? கத்தியப்படி மீண்டும் அடிக்க சென்றார்…
ஓஹ் அமுலு கூட போனத இவரு பாத்துட்டாரு போல! சரி சமாளிப்போம் என்றவன் சட்டென யோசனையுடன்.., எப்போய் ஒரு நிமிஷம் அது தான் உன் பிரச்சனையா? செத்த இரு இப்ப உனக்கு விளக்குறேன் பாரு என போனை எடுத்து தேவாவிற்கு கால் செய்து ஸ்பீக்கரில் போட்டான்…
தேவா என்ன டா வீட்டுக்கு போய்ட்டியா?
ஹ்ம்ம் போய்ட்டேன் டா… நீ
ஹ்ம்ம் வந்துட்டேன், சரி டா அந்த அம்ருதா புள்ளய பத்திரமா இறக்கி விட்டுட்டியா?
ஹ்ம்ம் ஆமா டா, நீ அமுலுவ விட்டுட்டு வந்துட்டியா? பதிலுக்கு அவனும் கேட்க… ஹ்ம்ம் விட்டுட்டு வந்துட்டேன்… சரி பாரு டா இந்தா கூப்பிடுறேன் என்றவன் போனை கட் செய்து விட்டு இருவரையும் பார்த்தான்…
எம்மொய் கேட்டியா? ப்ரோக்ராம் முடிய லேட் ஆகிருச்சு மா…அதுனால எங்க கூட படிக்குற புள்ளைங்கள பத்திரமா எல்லாரும் வீட்ல கொண்டு போய் விட்டுட்டு வந்தோம்.. அவ்ளோ தான் இதுக்கு போயா இந்த அடி ச்சை ரொம்ப தப்பு மோவ் பாத்துக்க என்றவன் தேங்ஸ் டா தேவா மனதார மனதிற்குள் நன்றி சொன்னவன், எஸ்கேப் என்ற ரீதியில் சென்றுவிட.. சரசு மைக்கேலை முறைத்தாள்…
சரசு காளியாகவே மாறிவிட்டார் யோவ் நீதான் படிக்காம லவ் ண்ணு ஊர சுத்துனா? என் புள்ளயும் அப்டி இருப்பானு நெனச்சியோ! என்ன ஏதுன்னு கேக்காம அவனை எம்புட்டு அடி அடிச்சிட்ட.. போயா இனி அவன் மேல கைய வச்ச அவ்ளோ தான் பாத்துக்க.. நா என் புள்ளய அழைச்சிட்டு எங்கேயாவது போயிருவேன்…
அடியேய் அவன் லவ் கிவ்வுனு அழைவானேனு….
போதும் நிறுத்து யா… ஏன் லவ் பண்ணுனா என்ன தப்புன்றேன்.. நீ பண்ணல, இப்ப சொல்றேன் என் புள்ள எந்த தப்பு பண்ணான்னு அடிச்சியோ! நானே அத பண்ண சொல்லுவேன்… என் மொவன் எந்த பொண்ண லவ் பண்ணி இழுத்துட்டு வந்தாலும் நா கட்டி வைப்பேன்…நீ உன் வேலைய மட்டும் பாருயா, என்றவர் கதவை சாத்தி விட்டு உள்ளே செல்ல…
மைக்கேல் அடியேய் உள்ள விடுறீ, வெளில ஊத காத்து டி என் உடம்புக்கு ஒத்துக்காது…
முடியாது போயா, வெளிலயே கட…
அடியே உன் மொவன் இனி எவ கூட போனாலும் நா கண்டுக்கிட மாட்டேன்.. இப்ப கதவை திற….
கொழுப்பெடுத்த மனுஷன் என் பையன என்ன அடி அடிச்ச… வெளிலயே கெட அப்ப தான் உப்பு காத்து உன் உடம்புல உள்ள கொழுப்ப குறைக்கும் நீயும் அடங்குவ… போர்வையை இழுத்து விட்டு படுத்து விட்டார் சரசு….
தலையில் துண்டை போட்ட மைக்கேல் வாசலில் கட்டிலை போட்டு படுத்து விட்டார்…
இவர்கள் பேசுவதை கேட்ட ஜெய், சந்தோஷத்தில் துள்ளி குதித்தான்… ஹையா எனக்கு க்ரீன் சிக்னல் கெடச்சிட்டு, இனி எந்த பிரச்சனையும் இல்ல…. ஆனா கொய்யால என்ன அடி அடிச்சுபுட்டார் எங்கப்பன் என்றவன் அமுலுவுக்கு போனை போட்டிருந்தான்…
மறுநாள் கல்லூரிக்கு சென்ற தர்ஷினி நேராக தேவாவிடம் சென்று பேச்சு கொடுத்தாள்…
தேவா உன்கிட்ட பேசணும்…
தேவா அவள் முகம் பார்க்காமல், என்ன விஷயம் சொல்லு……
என் முகத்த கூட பாக்க மாட்டியா!? டா அப்டி என்ன தப்பு பண்ணிட்டேன்….
ச்சு என அவள் முகம் பார்த்தவன், என்ன வேணும் இப்ப சொல்லு,
எதுக்கு முன்ன மாதிரி என்கிட்ட பேச மாட்டுற?
யாரு நானா? நீயா?
நா என்ன பண்ணேன் டா, என் லைஃப்ல நடக்குற எல்லாத்தையும் உங்ககிட்ட ஷேர் பண்ணேன், ஆனா நீங்க நிறைய மறச்சிங்க அதான் கோவப்பட்டேன்….
இங்க பாரு இங்க மறைக்கிற அளவுலாம் ஒன்னுமே நடக்கல, நீயா ஏதாவது கற்பனை பண்ணிக்கிட்டா அது நாங்க என்ன பண்ண முடியும்…
என்ன ஒன்னுமே நடக்கலன்ற!? இதோ இவன் அந்த நாய் ஸ்ருதிய, என்கிட்ட சொல்லாம லவ் பண்ணினது தப்பு தானே!?
இங்க பாரு, முதல்ல மத்தவங்களுக்கு மரியாதை குடுத்து பேசு, அவளை எதுக்கு நாய்னு சொல்ற கடுப்படித்தான் ஜெய்….
டேய் நா உங்கிட்ட பேசல, டா கொஞ்சம் வாய மூடு…..
அவன் கேட்டதுல என்ன தப்பு தர்ஷினி!? நீ எதுக்கு ஸ்ருதிய நாய் னு சொல்ற?
ஓஹ் சார் அவளுக்கு சப்போர்ட் பண்ணிட்டு வரிங்களா? என்ன விட இப்ப உனக்கு மத்தவங்க முக்கியமா போய்ட்டாங்கள? ஆத்திரமும் கண்களில் கண்ணீரும் ஒருசேர முட்டி கொண்டு வர கேட்டாள்…
தேவா சட்டென எழுந்தவன், யாரு டி முக்கியம் நீ தான் டி, எங்கள விட்டுட்டு அந்த சீனியர் பின்னால அலைஞ்ச… இப்ப தான் நாங்க உன் கண்ணுக்கு தெரிஞ்சோமா? இப்ப எதுக்கு எங்ககிட்ட வர,..
அவளுக்கு தேவாவின் கோவம் புதிதாய் தெரிந்தது…. இது வரை அவள் பேசுவதை மட்டுமே கேட்டு கொண்டு, அவளுக்கு தலையாட்டி கொண்டு இருந்தவன், இப்போது வெகுண்டு எழுந்து பேசுவது அவளுக்கு அச்சத்தை கொடுக்க, அவனை அடிபட்ட பார்வை பார்த்தாள்…
தேவா அ அ அது வந்து, நா தப்பு….
ப்ளீஸ் தர்ஷினி ஏதும் சொல்ல வேணாம் எனக்கு தலை வலிக்குது இங்க இருந்து போ என தன் இடத்தில் அமர்ந்து கொண்டான்…
தலை குனிந்து அங்கேயே நின்ற தர்ஷியின் கண்களில் இருந்த கண்ணீர் துளிகள், அவன் கைகளில் விழ,, தேவா மனம் வலிக்க ஆரம்பித்தது..
மனம் முழுக்க ரணமாய் சென்று தன் இடத்தில் அமர்ந்து கொண்டாள் தர்ஷினி.., ஜெய் தேவாவை வாயை பிளந்த படி பார்த்து கொண்டிருந்தான்…

தொடரும்…
படிச்சி பாத்துட்டு மறக்காம உங்க starsa கொடுக்கவும்.. 🥰🥰

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 22

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!