தேவை எல்லாம் தேவதையே….

5
(14)

தேவதை 35

      தர்ஷினியை தேவா பேசியதை ஜெய் வாயை பிளந்து பார்த்து கொண்டிருந்தவன்…தர்ஷினி அழுகையுடன் சென்று தன் இடத்தில் அமர்ந்ததும்…

     டேய் மச்சான் தேவா நீயா டா பேசுனது? இது கனவா? இல்ல நினைவா? என தேவாவை கிள்ளி பார்த்து கொண்டான்…

      ஆஹ் டேய் வலிக்குது டா..என கையை தேய்த்து கொண்டான் ..

      டேய் நீயா டா அவளை பேசுன? எங்க அவ வந்து பேசுனதும், எமோஷனல் ஆகி திரும்ப அவ பக்கம் ஓடிடுவியோன்னு பாத்தேன், ஆனா நீ என்னடானா அவ முகத்தை கூட பாக்காம எடுத்தெறிஞ்சி பேசிப்புட்ட…

       டேய் சும்மா இரு டா, மனசுலாம் வலிக்குது டா மச்சான்… அவ அழுறா பாரு டா.. எனக்கு ஏண்டா இந்த நிலைமை?

       அவனின் உச்சகட்ட வேதனையை கண்ட ஜெய், டேய் அப்புறம் எதுக்கு டா அவளை இப்டி பேசுன? என கேட்க

     வேற எப்பிடி டா பேச சொல்ற? பயமாருக்கு டா மச்சான், எங்க அவ அழுறத பாத்து மனசு இறங்கி அவகிட்ட போயிருவனனோனு…

      டேய் ஏண்டா இப்டி? அதுக்கு பேசாம அவ கிட்ட பேசிரு டா…

      அவ கிட்ட பேச ஆராமிச்சா திரும்ப நிறைய எதிர்பாத்து எதிர்பாத்து ஏமாந்து போயிருவேன் டா… இதுக்கு அப்புறம் எந்த ஏமாற்றத்தையும் தாங்கிக்குற அளவுக்கு என் இதயத்துல பலம் இல்ல.. எல்லாம் முடிஞ்சி போச்சு இனி நா விலகுறது தான் நல்லது., என்றவன் அவள் முகம் பார்க்க, தர்ஷினி காது, மூக்கு என அனைத்தும் சிவந்த நிலையில் அமர்ந்திருந்தாள்… டேய் கேன்டீன் போவோம் டா, இன்னும் கொஞ்ச நேரம் அவ முகத்தை பார்த்தா அவகிட்ட போயிருவேன் டா மச்சான், வேணாம் டா என எழுந்து வெளியே செல்ல, ஜெய்யும் அவன் பின்னால் சென்று விட்டான்…

      நாட்கள் இப்படியே நகர, தேவாவிடம் தர்ஷினி எப்போது பேச வந்தாலும் அவன் முகம் கொடுத்தே பேசவில்லை…

      தர்ஷி ஒவ்வொரு தடவையும் அதிக ரணத்தை அனுபவித்தாள்.. அன்று வசி தர்ஷியை பார்க்க வந்தவன் அவளின் கலை இழந்த முகத்தை பார்த்தவனுக்கு, ஒன்றும் புரியவில்லை… எப்போதும் குறும்பென மின்னும் கண்களில் சோகம் மட்டுமே நிலைத்திருக்க, மரத்தடியில் அமர்ந்திருக்கும் அவள் அருகில் சென்றவன்,

       ஏய் தர்ஷி, என்னாச்சி ஏன் தனியா உட்காந்திருக்க? என அவள் தோளில் கை வைக்க… தர்ஷி பித்து பிடித்தது போல் தான் அமர்ந்திருந்தாள்…

     ஹாலோ மேடம் என்னாச்சி மீண்டும் அவள் முகத்தருகே சொடக்கு போட்டு அழைக்கவும் தான் சுயத்திற்கே வந்தாள்.. வசியை பார்த்ததும் கண்களில் நீர் கோர்க்க… சீ சீனியர் என திக்கி திணறி அழைக்கவும்… சூழ்நிலையை புரிந்து கொண்டவன் சரி வா என அழைக்க அவளும் கீ போட்ட பொம்மை போல் அவன் பின்னால் எழுந்து சென்றாள்….

     காருக்கு அழைத்து சென்றவன் அவளை ஏற்றி கொண்டு வெளியே சென்று விட்டான்.. எப்பவும் வாய் ஓயாது பேசி வரும் அவள், கண்ணாடியில் தலை சாய்த்து எதையோ இழந்தது போல் வருவதை அவனால் பார்க்க சகிக்கவில்லை… என்ன இருந்தாலும் அவனும் மனதார விரும்பிய பெண் அல்லவா!?

    ஓரிடத்தில் காரை நிறுத்தி விட்டு தர்ஷியிடம் பேச்சு கொடுக்க ஆரம்பித்தான்…

      என்ன ஆச்சு மா உன் லவ்வ தேவா கிட்ட சொல்லிட்டியா? இல்லயா?

       கசந்த புன்னகை சிந்தியவள், இல்லை என்பது போல் தலையாட்ட…

        ஏன்? என வசி கேட்டான்…

        அவன் என்கிட்ட பேசவே விரும்பல சீனியர்… நா பேச போனாலே என்கிட்டே கடுப்படிக்கிறான், முகத்தை கூட பாக்க மாட்டேன்றான்.. என்னால அவனை பத்தின எண்ணத்த மனசுல பூட்டி வச்சிக்க முடியல..உண்மைய சொல்ல போன் பண்ணாலும் பிளாக்ல போட்ருக்கான்… அவன் இவ்ளோ கோவப்படுற அளவுக்கு நான் என்ன பண்ணேனு தெர்ல குரல் தழுத்தழுத்தது…

       அவள் கண்களை துடைத்து விட்டவன், இதுக்கு போயா அழுற? நா சொல்றத கேளு, பழையப்படி உன் பார்ம்க்கு போ. இப்படியே அழுது அழுது ஓஞ்சி போய் உட்காரத… பழைய தர்ஷியா போய் அவன் கிட்ட பேசு.. அப்புறம் உனக்கு எப்போ தோணுதோ அப்ப அவன் கிட்ட உன் காதல சொல்லு.. அவன் திட்டுனா உன்னால ஏத்துக்க முடியாதா? என்ன?

         திட்டுனா பரவாயில்லை சீனியர்..என்ன பாத்து கூட பேச மாட்டேன்றான்.. இங்க இருந்து போ போ னு விரட்டி அடிக்கிறான்…

         ரொம்ப ஹர்ட் ஆகிட்டான் போல, ஹ்ம்ம் நாம தான் அவனுக்கு வேற விதமா புரிய வைக்கணும் என வசி எண்ணியவன்..

       சரி நான் பாத்துக்குறேன், இனிமேல் நீ அழக்கூடாது சரியா? தென் இனிமேல் அவன்கிட்ட கெஞ்சாத உன் உரிமைய நீதான் எடுத்துக்கணும் என்ன புரிஞ்சிதா?

      ஹ்ம்ம் சரி சீனியர்… ஆனா நீங்க என்ன அவன்கிட்ட பேச போறீங்க? என் லவ்வ பத்தி சொல்ல போறிங்களா?

       நோ நோ அது என் வேலை இல்லை மா, அவங்க அவங்க காதல அவங்க அவங்க தான் சொல்லணும்… மத்தப்படி என்னால முடிஞ்ச உதவிய கண்டிப்பா உனக்காக நான் செய்வேன்… சரியா?

      சரி… சீனியர்

       ரைட்டு போற வழியில ஐஸ் க்ரீம் பார்லர் இருக்கு அங்க போயிட்டு போலாம் என அழைத்து சென்றான் வசி..

        தேவா கல்லூரியில் தர்ஷியை காணவில்லை என்றதும், அவள் வசியுடன் தான் சென்றிருப்பாள் என புரிந்து கொண்டான்…கல்லூரி முடிந்து பைக்கை எடுக்க செல்லும் போது, அம்ருதாவும் தனது ஸ்கூட்டியை எடுக்க வந்திருந்தாள், அப்போது அம்ருதாவை பார்த்தவன், ஹாய் மா எப்படி இருக்க? என அவள் அருகில் சென்று பேச்சு கொடுக்க….

      ஹாய் ப்ரோ, நா நல்லாருக்கேன்.. நீங்க எப்படி இருக்கீங்க? உங்கள பாக்கவே முடியல…என இருவரும் சகஜமாய் பேசி கொண்டிருக்க.. அப்போது தான் வசியும், தர்ஷினியும் காரில் உள்ளே நுழைந்தனர்…

       இருவரும் பேசிக்கொள்வதை பார்த்த தர்ஷி, பாத்திங்களா சீனியர் இவகிட்ட தான் இப்பலாம் இவன் பேசுறான்… என்ன கண்டுக்குறதே இல்ல…

       ஆமா பாத்தாலே தெரிது நல்லா சிரிச்சி சிரிச்சி பேசிக்கிறாங்க ,ரொம்ப கிளோஸ் போல… நீ சீக்கிரமா உன் லவ்வ சொல்லிரு இல்லனா அவ முந்திக்க போறா, நீ உன் ஸ்கூட்டிய எடுத்துட்டு பாத்து போ மா என உசுப்பேத்தி அனுப்பி விடவும்….

        கோவமாய் தனது பேகை எடுத்து கொண்டு கீழே இறங்கி, தன் ஸ்கூட்டியை எடுத்து அவர்கள் இருவரையும் முறைத்தவள், தேவாவின் வண்டியை தன் ஸ்கூட்டியை வைத்து ஒரு இடி இடிக்க பெரும் சத்தத்தோடு அது கீழே விழுந்தது..

      அங்கு நின்றவர்கள் திரும்பி பார்க்க, தேவாவும் அதிர்ச்சியுடன் தான் அவளின் செய்கையை பார்த்தான்… அவன் பைக்கை இடித்து தள்ளிவிட்டு தேவாவை முறைத்து விட்டு அங்கிருந்து வேகமாய் செல்ல,, அம்ருதா அடியே முட்ட கண்ணி எதுக்கு டி அந்த பைக்க தள்ளி விட்டு போற? என கத்த

         ஏமா பேசாம இரு, அவளுக்கு தெரிஞ்சா உன்ன உண்டு இல்லனு பண்ணிருவா, என அவள் வாயை அடக்கியவன் ஓடி சென்று தனது பைக்கை தூக்கி நிறுத்தினான்… ராட்சசி வர வர கொழுப்பு ஜாஸ்தியா போயிருச்சு… எவ்ளோ பாஸ்ட்டா போறா பாரு என முனுமுனுத்தான்

       அவன் அருகில் வந்த அம்ருதா ப்ரோ,, வாட் ப்ரோ? இதெல்லாம் வெரி ராங் ப்ரோ? என டைலாக்கை விட….

      இதெல்லாம் பெருசா எடுத்துக்காத விடு மா, சரி நான் கிளம்புறேன் நீ பாத்து போ என்றவன் தனது பைக்கை எடுத்து கொண்டு அவசரமாய் சென்றான்…வேற எதுக்கு அவள் வண்டியில் வேகமாய் சென்றதும் பயந்தவன் அவளை பின் தொடர தான்……

          அன்று இரவு வசி தேவாவிற்கு போன் செய்தான்..

     டேய் தேவா வீட்ல இருக்கியா?

      ஆமா சீனியர்.. என்ன இந்த நேரத்துல கால் பண்ணிருக்கீங்க? என்ன விஷயம்? என சந்தேகத்துடன் கேட்க…

        ஆமா டா உன்கிட்ட பேசணும், உன் வீட்டு வாசல்ல தான் நிக்குறேன்.. வரட்டா

          சீனியர் எதுக்கு வெளில நிக்கிறீங்க? நீங்க பாட்டுக்க வர வேண்டி தான என்றவன் போனை காதில் வைத்து கொண்டு வெளியே சென்று கதவை திறக்க… வசி காரில் சாய்ந்து நின்றிருந்தான்…

       சீனியர் உள்ள வாங்க என அழைத்தவனுக்கு ஒன்றும் புரியவில்லை… மணியை பார்க்க 9.00 என காட்டியது இன்னேரத்துல எதுக்கு வந்திருக்காரு என்ற எண்ணம் தோன்ற, உள்ளே வந்த வசியிடம் சீனியர் சாப்புடுறீங்களா? அம்மாவ தோசை சுட்டு தர சொல்லவா என கேட்டான்…

      நா அப்புறமா சாப்பிட்டுக்கிறேன், அதுக்கு முன்னாடி உன்கிட்ட பேசணும், வா என மாடிக்கு அழைக்க.. தேவாவும் வசியின் பின்னால் மாடிக்கு சென்றான்….

        சீனியர் ஏதும் பிரச்சனையா?

        வசி கூலாக அங்கிருந்த திண்டில் ஏறி அமர்ந்தவன், அதெல்லாம் ஒன்னும் இல்ல.. உன்கிட்ட தர்ஷிய பத்தி தான் பேச வந்தேன்…

         ஹ்ம்ம் என பெருமூச்சி விட்டவன், அவளை பத்தி பேச என்ன இருக்கு? சலித்து கொண்டவனை உற்று பார்த்தான் வசி…

      இல்ல டா இந்த தர்ஷி மேல ஏனோ எனக்கு நம்பிக்கையே வர மாட்டுது.. அவ நல்ல கேரக்டர் மாதிரி எனக்கு தெரியல பா என சொன்னதும் தான் தாமதம் தேவா அவன் சட்டையை பிடித்திருந்தான்…

       அவ்ளோ தான் டா உனக்கு மரியாதை.. இன்னொரு வார்த்தை அவளை பத்தி தப்பா பேசுன, உன்ன கொன்றுவேன் பற்களை கடித்து, கண்கள் சிவந்து மிரட்டியவனை பார்க்க வசிக்கே சிறிது ஆட்டம் கண்டது….

       வசி தன் காலரை பிடித்த அவன் கைகளை முறைத்து பார்த்தவன், மரியாதையா கைய எட்றா என மிரட்டவும் தேவா சுயத்திற்கே வந்தான்., அவன் மேலிருந்து கையை எடுத்தவன்., தன் தலையை கோதி பெருமூச்சி விட்டு கொண்டான்…

       டேய் அவ என்கூட இருக்குறப்பலாம் எப்ப பாரு வேற ஒரு பையன பத்தி தான் டா யோசிக்கிறா… எனக்கு மட்டும் அப்ப எப்படி இருக்கும்?

        தேவா கண்களை மூடி திறந்தவன், சீனியர் வேணாம் உங்க மேல ஒரு மரியாதை வச்சிருக்கேன் அத கெடுத்துக்காதீங்க, இங்க இருந்து முதல்ல கிளம்புங்க….

         டேய் என்ன உன் பிரெண்ட் க்கு சப்போர்ட்டா? ரொம்ப யோக்கியமான பிரெண்ட் தான் டா உனக்கு… முதல்ல உன் கூட சுத்துனா, இப்ப என்கூட என சொல்லி முடிப்பதற்குள் தேவா அவன் வாயிலேயே ஓங்கி ஒரு குத்து விட்டிருந்தான்….

       மேல் உதட்டில் பற்கள் குத்தி ரத்தம் வெளியேற, வசி அசராமல் அதை துடைத்து கொண்டவன்., நீ என்னடா ரொம்ப துள்ளுற? அவ என்கூட சுத்துறத பார்க்க உனக்கு பொறாமையா இருக்கா? தேவாவின் வாயை புடுங்க பார்க்க…

       யாருக்கு டா பொறாமை? மீண்டும் அவனை குத்த செல்வதற்குள் அவன் கையை வசி தடுத்து பிடித்திருந்தான்…

        ஆமா டா உனக்கு பொறாமை தான், தர்ஷி ஒவ்வொரு தடவ என்கிட்ட பேசுறப்ப உன் முகத்தை பாத்துருக்கேனே செத்து போய் நிப்ப.. அவ்ளோ பொறாமை புடிச்சவன் டா நீ….

         டேய் பொறம்போக்கு என் பொறுமைய ரொம்ப சோதிக்குற வேணாம் ஆத்திரத்தை கட்டுப்படுத்த முடியாமல் நின்றிருந்தான் தேவா ….

        நா முடிஞ்ச அளவு அவளை வச்சி யூஸ் பண்ணிக்கிட்டு அப்புறம் கழட்டி விட போறேன்,

        டேய் பொறிக்கி என அவன் சட்டையை பிடிக்க, வசியும் அவன் கையை பதிலுக்கு பிடித்து தள்ளி விட்டிருந்தான்…

     மீண்டும் நக்கலாக சிரித்து என்னடா உனக்கு பொறாமையா இருக்கு போல! வேணும்னா நீயும்…….

      தேவா கட்டுக் கடங்கா கோவத்துடன் பிடித்து தள்ள, இருவரும் கீழே விழுந்து சண்டையிட்டு புரண்டனர்…..

 தொடரும்ம்……..

  கதையை படிச்சிட்டு மறக்காம stars குடுங்க டியர்ஸ்… 🥰🥰🙏🙏

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 14

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!