தேவை எல்லாம் தேவதையே…

5
(24)

தேவதை 37

அழகான காலை,

குளிரான காற்று,

மேகம் மூடிய வானம்,

முகம் காட்ட துடிக்கும் சூரியன்…

தொடங்கியது புது விடியல்…

சூரியனுக்கே டௌப் கொடுத்து, ஆதவனுக்கு முன்பே எழுந்தாள் தர்ஷினி.. குளித்து விட்டு நல்ல பிங்க் வண்ண கலரில் சுடிதார் போட்டு கொண்டு, கண்ணாடி முன் நின்று என்றும் இல்லாமல் இன்று தன்னை அதிகமாக அழகு படுத்தி கொண்டாள்…

மாதவன் அப்பொழுது தான் எழுந்து பாத்ரூம் போக வெளியே வந்தவர்… தர்ஷினியை பார்த்து அதிர்ச்சியில் வாயில் கை வைத்து அப்படியே நின்று விட்டார்..

அவரை பார்த்ததும் என்னவாம்? எதுக்கு இந்த பிரீஜிங் மோட் என நக்கலாய் கேட்கவும் மாதவன் இது நிஜமா? இல்லை கனவா? தன்னை கிள்ளி பார்த்து கொண்டவர்.. எம்மாடி மணி இப்போ தான் 5 ஆகுது… அதுக்குள்ள எழுந்து குளிச்சி கிளம்பி ஒரே ஆச்சரியமா இருக்கு டா இங்க பாரு உடம்புலாம் புல்லரிக்குது….

அது அறிக்கட்டும் சரி வா பா, என அவரின் கையை பிடித்து இழுத்து வெளியே செல்ல பார்க்க…

எங்க மா இழுத்துட்டு போற?

பா எனக்கு பைனல் எக்ஸாம் ஸ்டார்ட் ஆக போது பா…எல்லாம் குரூப் ஸ்டடி பண்றங்க வா என்னையும் கொண்டு போய் விடு வா…

எங்க டா கொண்டு போய் விட சொல்ற?

வேற எங்க தேவா வீட்டுக்கு தான்…

இந்த மாதிரி தொல்லை பண்ண கூடாதுனு தான் உனக்கு அப்பா ஸ்கூட்டி வாங்கி குடுத்தேன் அதுல போடா….

போ பா, நீதான், என்னையும் தேவாவையும் பிரிச்சிட்ட

எதே நா பிரிச்சேனா? மாதவன் முட்டை கண்களை விரித்து கேட்டார்…

ஆமா பா, அந்த ஸ்கூட்டிய வாங்கி குடுத்து எங்கள பிரிச்சிட்ட.. இனி எனக்கு அது வேணாம் பா… இப்போ கேள்வி மேல கேள்வி கேக்காத எனக்கு டைம் வேஸ்ட் ஆகுது…வா பா என்ன கொண்டு போய் விடு.. கையோடு வெளியே இழுத்து சென்றாள்..

எம்மாடி இரேன் சட்டையாச்சும் போட்டுட்டு வரேன்…

இந்த இருக்கு பக்கத்து தெரு , அதுக்கு எதுக்கு உனக்கு சட்டை, பேண்டு பேசாம வண்டிய எடுப்பா…

மாதவன் தலையில் கட்டிய முண்டாசு, கைலி, ஒரு வெள்ளை பனியன் போட்டிருக்க பாவம் பார்க்காமல் அப்படியே இழுத்து சென்றாள்…

வண்டி ஓட்டி செல்லும் போது ஒரு சிலர் டீக்கடையில் நின்றவர்கள் மாதவனையே பார்க்க, காலை கடன் முடிக்க போனது ஒரு குத்தமா டா? , நா பெத்த சோதனை, எனக்கு இப்டி ஒரு வேதனையை குடுக்குது என தலையில் அடித்து கொண்டே வண்டியை ஓட்டினார்…

பா எதுக்கு இப்டி சலிச்சிகுக்குற? இந்த காஸ்டியூம் கூட உனக்கு நல்லா தான் பா இருக்கு,..

எது இந்த தோட்டகாரன் ட்ரெஸா…

ஆமா பா.. அப்டியே இருக்க….

ஏன்மா சொல்லமாட்ட, உனக்கு செல்லம் குடுத்து வளர்த்ததுக்கு இதுவும் சொல்லுவ, இன்னமும் சொல்லுவ… உனக்கு வர போறவன் ரொம்ப பாவம் என்ன பாடு பட போறானோ! இறங்கு கீழ…

என்ன பா முன்னாடியே இறக்கி விடுற…

ஹ்ம்ம் நடந்து போ, தேவா வீட்ல யாராச்சும் பாத்தா பைத்தியமா இவன்னு நெனைப்பாங்க.. போ மா போ.. என்றவர் விட்டால் போதும் என வண்டியை திருப்பி கொண்டு சென்றுவிட்டார் ….

எனக்கு வர போறவன் பாவமா? என யோசித்தவள்… அவன்கிட்டயே கேட்ருவோம் என வீர நடை போட்டு சென்றவள்.. தேவாவின் வீட்டின் முன்பு நின்று காலிங் பெல்லை அழுத்த…

கலாவிற்கு திட்டுக்கென தூக்கி வாரி போட்டது… யாரு இந்த நேரத்துல? என யோசித்த படி, தலை முடியை அள்ளி கொண்டையிட்டவர், வாசற் கதவை திறந்து பார்க்க..அவர் கண்களை அவராலையே நம்ப முடியவில்லை… தேவதையென மின்னியவளை கண்டு வாயடைத்து போனார்….

ஹாய் அத்தை என ஹாயாக உள்ளே நுழைந்து சோபாவில் அமர்ந்தவளை அதிர்ச்சியுடன் பார்த்து கொண்டிருந்தார்…

என்ன அத்தை அப்டி பாக்குறீங்க?

அழகா இருக்க டி செல்லம்? என நெட்டி முறித்தவர்.. ஆமா என்ன மா இவ்ளோ சீக்கிரம் கிளம்பி வந்துருக்க?

அதான் பைனல் எக்ஸாம் ஸ்டார்ட் ஆக போகுதுல.. சரி குரூப் ஸ்டடி பண்ணலானு வந்தேன்…

கலாவதி ஓஹ்…. என்றவர் சந்தேக கண்ணுடன் அவளை பார்க்க…அவர் பார்வையை புரிந்து கொண்டவள்..,

என்ன அத்தை லுக்கு மாறுது…

இல்ல படிக்கணும்னு சொன்ன, கைல புக்க காணுமே அதான் கேட்டேன்…

அ அது தேவாகிட்ட தான் இருக்குல்ல அத ஷேர் பண்ணிக்குவோம்.. சரி நீங்க போய் தூங்குங்க… எங்க அவன்?

மாடியில தான் இருக்கான் மா.. நீ போ நா ரெண்டு பேருக்கும் காபி போட்டு கொண்டு வரேன்…

இல்ல இல்ல நீங்க போட்டு குடுங்க.. நானே எடுத்துட்டு போய்க்கிறேன்…

சரி கொஞ்சம் வெயிட் பண்ணு, இதோ வரேன் என காபி போட கலாவதி அடுப்படிக்குள் புகுந்து கொண்டார்…

வெரி இன்னொசென்ட் ஆண்ட்டி எது சொன்னாலும் நம்புது… ஹ்ம்ம் நாம வாழ போற வீடு தான.. நம்ம ராஜ்யம் தான் போ என கனவு கோட்டை கட்ட ஆரம்பித்து விட்டாள்….

கலா காபியை கொண்டு வந்து கொடுக்க, தேங்க்ஸ் அத்தை… என வாங்கி கொண்டவள், அப்புறம் யாரும் எங்கள டிஸ்டர்ப் பண்ண கூடாது என்ன ஓகே வா? நாங்க படிக்கணும்…

சரி மா தாயே போ, நா எந்த தொல்லையும் பண்ண மாட்டேன்…

வெரி குட் ஆன்டி என்றவள் வேக வேகமாக மாடிப் படியை ஏறி பார்க்க, அங்கு தேவா உறங்கி கொண்டிருந்தான்…

அவனை பார்த்ததும் புன்னகைத்தவள்.. காபியை ஓரமாக வைத்து விட்டு அவன் அருகில் சென்று அப்படியே கன்னத்தில் கை வைத்து அமர்ந்து விட்டாள்….

 

உடலை துளைக்கும் பனிக்காற்றும்,

நீல நிற வானத்தில்

அழகான பிறை நிலவும்

தன்னவனின் அருகாமையும்

அவளை உற்சாகபடுத்த…!

பளிச்சென நிலவின் வெளிச்சம் அவன் முகத்தில் விழுந்து பளபளத்து, ஆணவனின் அழகை எடுத்து காட்ட… தர்ஷி சொக்கி தான் போனாள்…

இவ்ளோ நாள் என்கூடவே, என் பக்கத்துலயே தான டா இருந்த.! அப்போலாம் ஒன்னும் தெர்ல.. இப்போ மட்டும் என் கண்ணுக்கு நீ வேற மாதிரி தெரியுற.. உன்ன ரசிச்சுகிட்டே இருக்கணும் போல இருக்கு டா, என்ன விட்டு எப்ப தூரமா போக ஆரம்பிச்சியோ அப்போலேந்து ரொம்ப பயமாருக்கு டா என்ன வேணாம்னு மட்டும் சொல்லிராத ப்ளீஸ் என்றவள் கண்கள் கலங்கி போனாள்…

இவ்ளோ கிட்ட முகம் பார்த்து எவ்ளோ நாள் ஆச்சு என்றவள் அழகாய் காற்றில் அசையும் அவள் முன் தலை முடியை தன் விரல் கொண்டு கோதி விட்டாள்…மெதுவாக குனிந்து அவன் நெற்றியில் பட்டும் படாமல் நடுங்கிய படி வெட்கத்துடன் முத்தம் கொடுத்தவள், கீழே இறங்கி அவன் இரு கண்களிலும் தன் மாதுளை உதடுகளால் ஒற்றி எடுத்தாள்…

அவன் முகம் பார்த்து, அழகு மூக்கு டா உனக்கு என முனுமுனுத்து அவன் மூக்கின் நுனியிலும் முத்தமிட்டவள்.. அப்படியே கீழே பார்க்க அவன் சிறிய பிளந்த உதடுகள் இருக்க… பயத்தில் எச்சிலை விழுங்கி கொண்டு ஐ ஐ ஐ லவ் யூ தேவா நீ எனக்கு மட்டும் தான், என மெலிதான குரலில் சொல்லிவிட்டு, அவன் இதழ்களில் முத்தமிட நெருங்கினாள்… அவளின் இதய துடிப்பின் ஓசை அவளுக்கே கேட்கும் அளவிற்கு வேகமாய் துடித்தது….

அவன் மூச்சு காற்று பலமாய் தர்ஷியின் உதடுகளில் பட அதை அப்படியே கண்கள் மூடி ரசித்து அனுபவித்தவள்… மேலும் குனிந்து முத்தமிட செல்ல… அதற்குள் தேவாவின் செல் போன் அலாரம் அடிக்கவும் …

தர்ஷி பயத்தில் அவன் மேலேயே விழுந்து விட்டாள்..

அதில் தூக்கி வாரி போட்ட தேவா கண் விழித்து அவளை பார்த்த கணம் அஹ்ஹ்ஹ அம்மா பேய்ய் பெய்ய்ய் என அலறி கத்தவும், அவன் மேலே படுத்தபடியே., அவன் வாயை இறுக்கி மூடியவள்

டேய் நான் தான் டா காத்தாத டா, ப்ளீஸ் நான் தான் தர்ஷி என சமாதானம் படுத்தவே போதும் போதும் என படாத பாடு பட்டு விட்டாள்…

ஏய் நீ இங்க என்னடி பண்ற? அதுவும் இந்நேரத்துல கண்கள் விரித்து அதிர்ச்சியுடன் கேட்டிருந்தான்…

நா நா அது வந்து ஆஹ்ஹ் உன்கிட்ட நோட்ஸ் கேக்கலானு வந்தேன்., மழுப்பி வைத்தாள்….

நோட்ஸா என்ன விளையாடுறியா? எத்தனை மணிக்கு வந்து நோட்ஸ் கேக்குற? முதல்ல யாரு உன்ன உள்ள விட்டது? அம்மா அம்மா என மீண்டும் கத்த ஆரம்பிக்க…

அவன் வாயை மறுபடியும் பொத்தியவள், ஏண்டா கத்துற? இப்ப என்ன உனக்கு நா போணுமா?பல்லை கடித்து கேட்க

ஆமா என்பது போல் அவள் முகம் பார்த்து தலையாட்டினான்…

சரி போறேன், இப்ப நா உன் வாயிலேந்து கையை எடுத்ததும் நீ கத்த கூடாது… சரியா?

ஹ்ம்ம்…. என்றான்

அவன் வாயிலிருந்து கையை எடுத்தவள், அவன் கண்களை உற்று பார்க்க…

டேய் மயக்குறா டா மயங்கிடாத என உள்ளுக்குள் சொல்லி கொண்டவன்… என்ன டி லுக்கு? முதல்ல எழுந்திரு….

ஹ்ம்ம் அதுக்கு முதல்ல நீ என்ன இடுப்புல இருந்து கைய எடுக்கணும்…

ஓஹ் சாரி சாரி என அவள் இடுப்பில் இருந்து கையை எடுக்கவும்…விலக மனமின்றி அவன் மேலிருந்து எழுந்து அமர்ந்தாள்…

எப்பா…. டி என நெஞ்சை தடவி கொண்டவன்… அவளை பார்க்க அவள் முகம் வெட்கத்தில் சிவந்து போயிருந்தது…

ஹம்ஹ்ம் இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல, வெட்கப்படுறப்ப கூட அழகு டி, கன்னம் கிள்ளி கொஞ்சிட தோன்றியது, தலையை உலுக்கி தன்னை சமன் படுத்தி கொண்டவன் எதுக்கு டி வந்த? மீண்டும் கேட்க

அதான் சொன்னேனே நோட்ஸ் வாங்க வந்தேன்னு., விழி உருட்டி சொன்னாள்..

ஓஹ் மேடம்க்கு என்ன நோட்ஸ் வேணும்? ஒற்றை புருவம் உயர்த்தி கேட்க

அது எந்த நோட்ஸ்….. அத விடு அத்தை காபி போட்டு குடுத்தாங்க.. வேணுமா தரவா?

என்னமோ சரி இல்லடி நீ, ஓரக்கண்ணால் பார்த்தவன் வேகமாக எழுந்து இரு வரேன் என கீழே இறங்கி விறு விறுவென தனது அறைக்குள் சென்று கதவை அடைத்து கொண்டான்… ராட்சசி இங்கயும் வந்தாலும் வந்திருவா என்றவன் நெஞ்சில் கை வைத்து தடவி கொண்டான்..,

கிழே அப்படியே சரிந்து அமர்ந்தவனுக்கு சந்தோஷத்தில் கண்களில் இன்ப நீர் பெருக்கெடுத்து ஓடியது… ஐ லவ் யூ சொல்ல உனக்கு இவ்ளோ நாள் ஆச்சா டி…எத்தனை வருஷம் டி… ரொம்ப படுத்திட்ட டி வண்டு…செத்து பிழைச்சிருக்கேன்..அவளை தொட்ட தன் இரு கைகளிலும் முத்தமிட்டு கொண்டவன்., கைகளால் முகத்தை மூடி சத்தமின்றி அழுதான்…

அவள் விரல் கோதிய முடிகளும், உதடு பட்ட என் நெற்றியும், அவள் சுவாசமும், என் சுவாசமும் ஒன்றாக கலக்கவும்… என்ன தவம் செய்தேனோ! மகிழ்ச்சியில் துள்ளி குதித்தான்….என்ன செய்வதென தெரியவில்லை…

ச்ச அந்த அலாரம் மட்டும் அடிக்காம இருந்திருந்தா….. உதடு கடித்து சிரித்தவன் குளியலறைக்குள் புகுந்து கொண்டான்…

ஷவருக்கடியில் நின்றவன், ஆனாலும் ரொம்ப தைரியம் டி உனக்கு… ஒரு முத்தம் குடுக்கவே எனக்கு எத்தனை வருஷம் தேவைப்பட்டுச்சு.. ஆனா நீ வீட்டுக்கே அதிரடியா வந்து முத்தம் குடுத்து…. ராட்சசி என்றவனுக்கு மனம் முழுக்க சந்தோசத்தில் துள்ளி குதித்தது…

தவமாய் தவமிருந்தேன்!

என்னவளின் அன்பு

வரமாய் கிடைத்து விட்டது…

சிறு கலங்கம் கூட வராமல்

அதை பொக்கிஷமாய் பாத்துகாப்பேன்..,

ஐ லவ் யூ டி உதடுகள் சொல்ல, ஆனாலும் அவ்ளோ ஈஸியாலாம் ஒத்துக்க மாட்டேன் டி, என்ன பாடு படுத்திட்ட.. இருக்கு உனக்கு என்றவன் குளித்து முடித்து உடை மாற்றி மாடிக்கு சென்றிருந்தான்….

தொடரும்……..

 

 

 

 

 

 

 

 

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 24

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!