தேவதை 38
தேவா குளித்து முடித்து உடை மாற்றி மாடிக்கு சென்று பார்க்க, அங்கு அவன் தேவதை திண்டில் அமர்ந்து ஏதோ யோசித்தவாறு இருக்க.., இவன் சிறிது நேரம் அப்படியே நின்று புன்னகையுடன் அவளை ரசிக்க ஆரம்பித்து விட்டான்..
பிங்க் வண்ண சுடிதாரில் தேவதையாகவே மின்னினாள்…குறும்பு மின்னும் குழந்தை முகம் கொண்டவளிடம் கோவமும் வர மறுக்கிறது.. இவள வச்சிக்கிட்டு எப்டி கோவப்பட போறேனோ! என்றெண்ணி கொண்டே அவள் அருகில் சென்றான்… ஆனால் நாளை அவள் கல்லூரியில் நடந்து கொள்ளும் விதம் உண்மையாகவே அவள் மீது கோவத்தை வரவழைத்து அவளை அடிக்கும் அளவிற்கு செல்வான் என்பதை எதிர்பார்க்கவில்லை….
அவள் அருகில் சென்றவன், மேடம் பலத்த யோசனைல இருக்கீங்க போல, என கேட்டதும்…
தர்ஷி அவன் முகம் பார்த்தவள், ஆமா டா தேவா, எங்கப்பா காலைல ஒரு விஷயம் சொன்னாரு.. அத பத்தி தான் யோசிச்சிட்டு இருக்கேன்…
ஓஹ் என்ன சொன்னாரு உங்கப்பா!? சிறிது நக்கலுடன் கேட்க…
ஹ்ம்ம் எனக்கு வர போறவன் பாவமாமே!
கரெக்ட் தானே மா..
டேய் ஏண்டா அப்டி சொல்ற?
ஆமா உன்ன கட்டிக்க போறவன நெனச்சா இப்போவே பாவமா இருக்கு… என்ன பாடு பட போறானோ என கிண்டல் அடிக்க, அவள் செல்லமாக முறைத்து வைத்தாள்…
மேடம் இந்த டவுட்ட கேட்க தான் இவ்ளோ சீக்கிரம் வந்திங்களோ! குறும்பு மின்ன கேட்டு வைத்தான்…
அ அ அது வந்து, ஹ்ம்ம் குரலை செருமிக் கொண்டாள்.. இதழ்கள் நடுங்க, கன்னம் இரண்டும் சிவந்து போனது.. எப்படி சொல்வேன்! அவன் கண்களை பார்த்தாலே.. பேச்சே வர மாட்டுது.. தேவா உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்.. விழி உருட்டியவள் அ அ து வந்து பயத்தில் எச்சில் விழுங்கினாள்…
அவள் படும் அவஸ்தையை பார்த்து, உள்ளுக்குள் சிரித்து கொண்டான்.. நீ எதும் சொல்ல வேணாம் இந்தா நீ கேட்ட நோட்ஸ் எல்லாம் இதுல இருக்கு எடுத்துட்டு கிளம்பு., என்றதும் தர்ஷினி முகம் வாடி போனது..
தேவா உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும் டா, எதுக்கு இப்டி அவாய்ட் பண்ற..கடுப்பாக இருந்தது அவளுக்கு… எங்கே நாளைக்கே உலகம் அழிந்து விடும், இன்றே சொல்ல வேண்டும் என்பது போல் கிடந்து தவித்தாள்…
ப்ளீஸ் டா கொஞ்சம் கேளேன்…
சரி சொல்லு என்ன விஷயம்?
அ அது ஹான் நா உனக்கு யாரு டா?
என்ன?
நா உனக்கு யாருனு கேட்டேன்?
இது ஒரு கேள்வியா? நீயும் ஜெய்யும் எனக்கு நல்ல பிரெண்ட்., என்றான் எதுவும் தெரியாதது போல்…
ஹான் அப்டி தான! ஆனா எனக்கு மட்டும் அப்படி தோண மாட்டுது டா.. நீ இது வரைக்கும் என் பக்கத்துல தான இருந்திருக்க, நா உன்ன பெருசாவே நெனச்சது இல்ல.. ஆனா நீ இல்லாத இந்த கொஞ்ச நாள் எனக்குள்ள நிறைய மாற்றம் டா, அத அத உனக்கு எப்டி சொல்லி புரிய வைப்பேன்…பரிதவித்தாள் பாவை…
அவள் படும் அவஸ்தையை கண்டவனுக்கு, உள்ளுக்குள் பட்டாம்பூச்சி பறந்தது… கை கட்டி அவளை ஆழ்ந்து பார்த்த படி முகத்தில் எவ்வித சலனமும் காட்டாமல் நின்றிருந்தான்….
தேவா உன்ன ரொம்ப ரசிக்க ஆரம்பிச்சிட்டேன் டா, என் கண்ணுக்கு வர வர நீ ரொம்ப அழகா தெரியுற.. இதெல்லாம் எதுக்குன்னு உனக்கு புரியுதா டா?
ஹம்ஹ்ம்ம் நோ என்பது தோளை குலுக்கி, சொல்ல… தர்ஷிக்கு புஷ் என ஆனது…. மரமண்டைக்கு எப்டி புரிய வைப்பேன்… என்றவள் திடீரென மின்னல் வெட்ட யோசனையுடன் ஹான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நா உன்மேல விழுந்தேன்ல அப்போ என்ன கண்ணுல உனக்கு ஏதாச்சும் பீல் தெரிஞ்சிதா?
இங்க பாரு எதுவா இருந்தாலும் ஓப்பனா சொல்லு டி.. எதுக்கு இப்டி சுத்தி வளைக்குற?
சரி தேவா, நா சொல்ல போற விஷயத்த நீ எப்டி எடுத்துப்பேன்னு தெரியல… பட் என்ன விட்டு போக மாட்டேன்னு சத்தியம் பண்ணு…
தேவா சிரித்தவன், எங்கேயும் போ மாட்டேன் டி வண்டு., உன்ன விட்டு நா எங்க போறது? என்றெண்ணி அவள் கையில் சத்தியம் செய்யவும் தான் அவளுக்கு நிம்மதியாய் இருந்தது…
டேய் தேவா நா உன்ன ல லவ் பண்றேன் டா திக்கி திணறி கூறியவள் வேகமாக வேறு பக்கம் திரும்பி கொண்டாள்…
தேவாவிற்கு தான் என்ன செய்வதென தெரியவில்லை… சந்தோசத்தில் அப்படியே அவளை இறுக்கி கட்டி அணைத்து, நீ எனக்கானவள் என்ற முத்திரையை பதிக்க ஆசைப்பட்டான்… அது உடனே நடக்காதே அவள் செய்த தவறை அவளுக்கு புரிய வைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்ற அமைதியாக நின்றிருந்தான்…
அவனிடமிருந்து எந்த பதிலும் வராமல் போகவே, மெதுவாக திரும்பி அவனை பார்க்க… அவன் அங்கிருக்கும் புத்தகங்களில் ஒன்றை எடுத்து புரட்டி பார்த்து கொண்டிருந்தான்…அதை பார்த்தவளுக்கு கண்கள் கலங்கி தே தேவா நா சொன்னது காதுல விழுந்திச்சா டா? என கேட்க…
ஹ்ம்ம் என மட்டும் பதிலலித்தான்…
என்னாச்சி டா உனக்கு பிடிக்கலையா? மெலிதான குரலில் கேட்க…
இல்ல எனக்கு புரியல டி, இத தான டி 2 மாசத்துக்கு முன்னாடி வசிகிட்டயும் சொன்ன..! இப்ப என்கிட்டயும் வந்து என்ன லவ் பண்றேனு சொன்னா என்ன அர்த்தம்?
தர்ஷிக்கு கண்கள் இருட்டி மயக்கம் வராத குறை தான்… கண்கள் சிவந்து நீர் தழும்ப அவனை அடிபட்ட பார்வை பார்த்தாள்…
தேவா பெரிதாக சட்டை செய்யவில்லை…
டேய் சா சாரி டா, நானே அத பத்தி உன்கிட்ட சொல்லணும் னு நெனச்சேன்… ச்ச என தலையில் அடித்து கொண்டவள்,, எப்டி மறந்தேன்னு தெர்ல டா…நா முதல்ல அத தான உன்கிட்ட சொல்லிருக்கணும்… ச்ச ச்ச தப்பு செஞ்சிட்டேன் டா.. நா வசிய லவ் பண்றேன்னு தப்பா நெனச்சிட்டு….
நெனச்சுக்கிட்டு…. ஒற்றை புருவம் ஏற்றி கேட்ட தேவாவை மேற்கொண்டு அவளால் பார்க்க முடியவில்லை… தலையை கீழே குனிந்து கொண்டவள்..
இல்ல டா வசி மேல உள்ள க்ரஷ லவ் னு நெனச்சி அவன்கிட்ட போய் சொல்லி… ச்ச ஆனா அவனுக்கு சொல்லி புரியவைச்சிட்டேன் டா தேவா, அவன் புரிஞ்சிகிட்டான்..
ஓஹ் அப்ப அவனோட வலி உனக்கு புரியல.
டேய் அவனும் என்ன லவ் பண்ணல டா, அவ்ளோ ஏன் அவன் என்கிட்ட இது வரைக்கும் ப்ரப்போஸ் கூட பண்ணது இல்ல..
உனக்கு எப்டி தாண்டி சொல்லி புரிய
வைக்க , தலையில் அடித்து கொண்டான் தேவா….
கண்களில் கண்ணீருடன் அவனை பார்த்தவள், என்னடா சந்தேக படுறியா? நானும் அவனும்…..என ஏதோ சொல்ல வருவதற்குள் அவள் வாயில் தன் கை வைத்து மூடியவன்…
உச்சக்கட்ட கோவத்துடன் போதும் டி இதுக்கு மேல எதுவும் பேசாத… எப்டி உன்னால இப்டி ஒரு கேள்வி கேக்க முடிஞ்சிது? ச்சி உன்ன சந்தேகப்பட்டா நா என் அம்மாவ சந்தேகப்படுறதுக்கு சமம் டி… பல்லை கடித்தான்..
அவன் கையை நகர்த்தியவள்,பின்ன என்னடா உனக்கு பிரச்சனை..? உண்மையாகவே அவளுக்கு விளங்க வில்லை..
ஏண்டி இப்டி இருக்க? உன் முன் கோவத்தால இல்லாத லவ்வ இருக்குனு நெனச்சிட்டு, மத்தவங்க மேல உள்ள ஆத்திரத்துல யார பழி வாங்கிருக்க? யோசிச்சு பாரு…
டேய் எனக்கு எல்லாமே புரிது டா நா பண்ணது தப்பு தான்… ஆனா வசியும் என்ன லவ் பண்ணல டா, இத அவனே என்கிட்ட சொன்னான்…
இல்ல வசி உன்ன ரொம்ப லவ் பண்றான் டி.. ஆனா உனக்கு அவன் மேல லவ் இல்லனு தெரிஞ்சதும் தான் விலகி போய்ட்டான்… என்றதும் தர்ஷினி அமைதியாக இருந்தாள்…
உன் கோவத்தைலாம் முதல்ல குறை, தப்பான முடிவெடுத்து அது மத்தவங்களையும் பாதிச்சி, ஏன் தான் இப்டி இருக்கியோ..
சரி அதெல்லாம் தப்பு தான் எனக்கு புரியுது, நா வசிகிட்ட மன்னிப்பு கேட்குறேன்… அது என் பிரச்சனை.. ஆனா நீ எனக்கு வேணும் தேவா, நீ மட்டும் தான் வேணும்… நீ வேற ஒரு பொண்ணுகிட்ட சிரிச்சு பேசுறப்ப எனக்கு எனக்கு அப்டியே ஆத்திரம் ஆத்திரமா வருது …என்னால முடியல டா.. இப்பவே சொல்லு என்ன லவ் பண்ணுவியா?? மாட்டியா?
ஓஹ் இப்போ மேடம்க்கு என் மேல வந்த லவ்வும் நா வேற பொண்ணுகிட்ட பேசுறதால தானா!?
இல்ல டா கண்டிப்பா இல்ல… முன்னாடியே எனக்கு உன் மேல ஈர்ப்பு இருந்திருக்கு நா அத பிரெண்ட்ஷிப்ன்னு தப்பா நெனச்சிட்டேன்.. நீ என் கனவுல கூட வந்த தெரியுமா! உன்கிட்ட வந்து என் லவ்வ சொன்னா நீ எப்டி எடுத்துப்பியோ! நா உன்ன பிரெண்டா தாண்டி பாத்தேன்னு சொல்லி, என் பிரெண்ட்ஷிப்பயும் கட் பண்ணிட்டா.. அதுக்கு பயந்து தான் டா உன்கிட்ட சொல்லாமலே இருந்துட்டேன்…அப்புறம் அந்த பொண்ணு நீ கூட உன் பைக்குல கூப்டு போவியே… அவகூட நீ நெருக்கமா பேசுறத பாத்ததும் எங்க நீ எனக்கு கிடைக்க மாட்டியோன்னு பயம் வந்துருச்சு… ஒரு பொசஸ்ஸிவ் தான்.. இதுக்கு மேலயும் நா சைலண்டா இருந்தா எங்க உன்ன மிஸ் பண்ணிருவனோன்னு பயமாருக்கு டா… என்ன விட்டு போயிராத தேவா நா இருக்க மாட்டேன் என்றவள், வேகமாக அவனை இறுக்கி கட்டி கொள்ள…
தேவா அதிர்ச்சியில் விழி விரித்தான்.. இதயம் எக்குத்தப்பாக துடிக்க, சுத்தி யாரும் பார்க்கிறார்களா என நோட்டம் விட்ட பின், அவளை தன் கைகள் கொண்டு அணைக்க சென்றான்… அவனும் உயிருக்கு உயிராய் காதலித்தவள், அவளாய் வந்து அணைக்கும் போது எப்படி இருக்கும்! கட்டி அணைக்க செல்ல முயல, அதற்குள் தேவா தேவா என சத்தம் கேட்டதும் கையால் அவளை தள்ளி விட்டு, தள்ளி நின்று கொண்டான்…
கலாவதி தான் அழைத்திருந்தார்… டேய் தேவா தர்ஷி எங்க டா என கேட்டு மேலே வந்தவர்… இருவரின் முகம் பார்க்க.. தர்ஷி சட்டென கண்களை துடைத்து கொள்ள, தேவா ஒன்றும் தெரியாதது போல் என்னமா? இங்க தான் இருக்கா என கூற….
அதான் பாத்தாலே தெரியுதே, சரி கீழ வாங்க சூடா இருக்கு சாப்பாடு… சாப்பிட்டு நீங்க காலேஜ் போக நேரம் சரியா இருக்கும்…
சரி மா வரோம் போ.. ஹ்ம்ம் என்றவர் தர்ஷியை ஒரு முறை பார்த்து விட்டு.. ஹ்ம்ம் இந்த புள்ளைங்க எதுக்கு அடிச்சிக்குதுங்க? அழுதுங்க ஒன்னும் புரியல… ஆனா படிக்க மட்டும் மாட்டுதுங்க என புலம்பியப்படி கீழே இறங்கி சென்று விட… தேவா தர்ஷியை பார்த்தான்… தர்ஷியால் அவன் முகம் பார்க்க முடியவில்லை…
கீழ வரியா எப்டி?
வரேன்.. ஆனா நீ இன்னும் ஒன்னும் சொல்லலையே!
கொஞ்சம் டைம் குடு, என்றவன் வேகமாக கீழே இறங்கி செல்ல… அவன் பின்னால் தர்ஷியும் இறங்கினாள்… தர்ஷிக்கு அப்பாடா என்றிருந்தது… மனதில் உள்ளவற்றை மறைக்காமல் சொல்லியதால் பாரம் குறைந்து விட்டது போல் இருந்தது… நல்ல வேளை நிராகரிக்கவில்லை.. டைம் குடுனு தான் கேட்டிருக்கிறான்,, சந்தோசம் என எண்ணிகொண்டாள்..
இட்லி யும் சட்னியும் கலாவதி எடுத்து வைக்க, டிவியை பார்த்தப்படி சாப்பிட்டாள் தர்ஷி .. சாப்பிடும் அவளையே பார்த்தவன், உன்ன பாத்தா லவ்வ சொல்லிட்டு அதுக்கு வெயிட் பண்றவ மாதிரி தெர்ல டி.. எப்படியும் இவன் நமக்கு தான்ற நம்பிக்கை… நம்மள விட்டு எங்க போவான்ற ஆணவம் அப்டியே உன் முகத்துல தெரிது டி…
ஈஈஈ என இளித்தவள்… மீண்டும் சாப்பிட ஆரம்பித்தாள்… சாப்பிட்டு முடித்ததும் இருவரும் கல்லூரிக்கு கிளம்பி வாசலுக்கு செல்ல, தேவா வண்டியை எடுக்கவும்… தர்ஷி ஓடி சென்று பின்னால் ஏறினாள், தேவா அவளை திரும்பி பார்த்தவன்…
நீ எங்க டி வர?
காலேஜ்க்கு….
அது தெரிது, என் பின்னால எதுக்கு வர? இறங்கு டி என பைக்கை ஆட்ட…
டேய் ஆட்டாத டா, எரும.. எதுக்கு டா என்ன இறங்க சொல்ற?
ஹ்ம்ம் நீ உன் ஸ்கூட்டில தான எப்போதும் போவ… இப்ப என்ன புதுசா இறங்கு டி கீழ…
முடியாது டா,
ஏண்டி…
நா ஸ்கூட்டி கொண்டு வரல டா,
ஓஹ் கொஞ்சம் கீழ இறங்கேன்…என்றதும் தர்ஷி கீழே இறங்கி என்ன என்பது போல் பார்க்க.. தேவா வண்டியை எடுத்து கொண்டு சென்று விட்டான்…
டேய் டேய் என பின்னால் நின்று கத்த அவன் எங்கே காதில் வாங்கினான்..தர்ஷி தலையில் கை வைத்து அப்படியே நின்று விட்டாள் … சில நொடிகளில் வண்டியை திருப்பி மீண்டும் வந்தான் தேவா..
தர்ஷி அவனை பார்த்து இடுப்பில் கை வைத்து முறைத்த படி நின்றிருந்தாள்..
பின்னால ஆட்டோ வருது அதுல வா என்றவன் மீண்டும் வண்டியை எடுத்து கொண்டு சென்று விட… ஆட்டோ வந்ததும் அதில் ஏறி அமர்ந்தவளுக்கு கஷ்டமாய் போனது.. கண்களில் கண்ணீருடன் தான் பயணித்தாள்…
தொடரும்ம்…..