தேவை எல்லாம் தேவதையே…

4.8
(28)

தேவதை 39

தர்ஷி கண்களில் வழியும் நீரை துடைத்த படியே தான் சென்றாள்.. தேவா ரொம்ப பண்ற டா.. தெரியாம தப்பு பண்ணிட்டேன் மன்னிக்க மாட்டியா? என் பழைய தேவா என்ன அழவே விட மாட்டான் தெரியும்ல. நீ என்னடா இப்டி மாறிட்ட.. எல்லாத்துக்கும் காரணம் அந்த பாட்டுகாரி,, அவ தான் அவள மட்டும் வண்டியில ஏத்துவ, என்ன ஏத்த மாட்டியோ! வச்சிக்கிறேன் என்றவள் கண்களை துடைத்து கொண்டு ஆட்டோவில் இருந்து இறங்கி கேம்பஸிற்குள் நுழைந்திருந்தாள்…

அங்கு பார்க்கிங் ஏரியாவில் தேவாவிடம் அம்ருதா தான் நின்று பேசிக் கொண்டிருக்க.. அதை பார்த்தவளுக்கு சகலமும் பற்றி எரிய ஆரம்பித்தது.., தர்ஷி அவர்களை முறைத்தபடியே கிளாசிற்குள் சென்று விட்டாள்..

தேவா அம்ருதாவிடம் பேசிவிட்டு லேட்டாக தான் கிளாசிற்குள் நுழைந்தான்.. தர்ஷி தலையில் கை வைத்த படி அமர்ந்திருக்க அதை தேவா கண்டு கொள்ளாதது போல் சென்று தனது இடத்தில் அமர்ந்து விட்டான்..

பொருக்க முடியாமல் எழுந்து சென்றவள் தேவாவிடம் நேரடியாக சண்டை போடவே ஆரம்பித்து விட்டாள்…

தேவா நீ பண்றது புடிக்கல,எனக்கு கோவத்தை கிளப்புது…

நா என்ன பண்ணேன் டி…

அவ கூட நின்னு பேசுற..அன்னைக்கு அவளை மட்டும் வண்டியில கூப்டு வந்த, என்ன வண்டியில கூப்டு வர மாட்டேன்ட.. என்ன நெனச்சிட்டு இருக்க நீ…

ஜெய் அவள் பேசுவதை கேட்டவன்… ஏண்டி வண்டு அவன் யார்கிட்ட பேசுனா உனக்கென்ன? கிடந்து துள்ளுற…

நா இவனை லவ் பண்றேன் முண்டம்.. நீ கொஞ்சம் மூடிட்டு உட்காரு என திட்டிவிட… ஜெய் ஏதேய் லவ்வா!? என வாயை பிளந்தவன்… தேவாவை தான் திரும்பி பார்த்தான்…

டேய் மச்சான் என்ன டா நடக்குது இங்க?

அத பிறகு சொல்றேன் டா மச்சான், என்றவன் தர்ஷியை பார்த்து இங்க பாரு டி அது என் விருப்பம் நா யார்கிட்ட வேணும்னாலும் பேசுவேன்.. அத நீ சொல்ல கூடாது…

டேய் இப்டி பேசாத டா எனக்கு ஆத்திரமா வருது.. ஏண்டா புரிஞ்சிக்க மாட்டேன்ற நா உன்ன லவ் பண்றேன் டா.. நீ யார்கிட்டயாச்சும் பேசுனா எனக்கு புடிக்க மாட்டேன்குது… கோவத்துல அப்டியே உன்ன கொல்லனும் போல வெறி புடிக்குது… கையை நெறிப்பது போல கொண்டு செல்ல…

தேவாவிற்கு உள்ளுக்குள் மனம் குத்தாட்டம் போட்டது… கொய்யால இப்டி தான எனக்கும் இருக்கும்.. எவ்ளோ நொந்து போயிருப்பேன்.. இரு டி உன்ன வச்சி செய்றேன் என எண்ணியவன்…

ஏய் இங்க நின்னு சீன போடாம போடி… என்றதும் தர்ஷி கோவத்தில் மூக்கு சிவந்து அவனை ஒன்றும் செய்யமுடியாமல் தனது இடத்திற்கு சென்று அமர்ந்து விட்டாள்…

மச்சான் என்ன டா சொல்றா அவ, உன்ன லவ் பண்றேன் டா அப்போ வசி…! ஜெய்க்கு குழப்பத்தில் மண்டை வெடிப்பது போல் இருந்தது….

சொல்றேன் டா என நேத்து வசி வந்து பேசியதிலிருந்து, இவள் காலையில் செய்த அட்டகாசம் என அனைத்தையும் சொல்லி முடிக்க… ஜெய்க்கு தான் சந்தோசம் தாங்க முடியவில்லை….

டேய் நண்பா கைய குடு டா… என தேவாவின் கை பிடித்து குலுக்க…

டேய் பேசாம இரு டா ராட்சசி பாத்துற போது…

டேய் இது என்னடா புது விளையாட்டு, நீ லவ் பண்ணா அவ விலகுறதும், அவ லவ் பண்ணினா நீ விலகுறதும் வேணாம் டா இதுக்கு பிறகாச்சும் ரெண்டு பேரும் ஹாப்பியா இருங்க டா…

இருப்போம் டா அவ பண்ண தப்ப அவ இன்னும் உணரல, அது மட்டும் இல்ல என்ன எப்டிலாம் அழ வச்சா.. கொஞ்சமாச்சும் அவளுக்கும் அந்த வலி எப்படி இருக்கும்னு தெரியணும் டா…

பாத்து டா திரும்ப வேதாளம் முருங்கை மரம் ஏறிட போவுது….

வாய்ப்பில்லை ராஜா…..

மார்னிங் அனைவரும் கம்ப்யூட்டர் பிராக்ட்டிக்கல் கிளாசிற்கு செல்ல இருந்தனர்.. தர்ஷி மட்டும் செல்லாமல் தலையில் கை வைத்து அமர்ந்திருக்க… அவளின் அருகில் வந்த தேவா, பிராகட்டிக்கல் கிளாஸ் வரல? என கேட்க

இல்லை என்பது போல் தலையாட்டினாள் தர்ஷி… ரைட்டு என்றவன் அதற்கு மேல் அங்கு நிற்கவில்லை… ஜெய்யும், அமுலுவும் சிரித்து பேசி கொண்டு செல்வதையும் கவனித்து கொண்டு தான் இருந்தாள் தர்ஷினி.. அனைவரும் சென்ற பின் பெஞ்சில் தலை சாய்த்தவளுக்கு, தேவாவை பற்றிய நியாபக அலைகள் தான் ஓடியது…

வசி இப்போதெல்லாம் கல்லூரிக்கு பெரிதாக வருவதில்லை… முப்பொழுதும் தர்ஷியின் நியாபகமாய் இருக்க.. வீட்டிலேயே இருந்து கொண்டான்… அவன் காலேஜிற்கு வராததால் அவனை காண ஷில்பா அவன் வீட்டிற்கே சென்று விட்டாள்…

ஹாய் ஷில்பா வா உட்காரு.. என வசி வீட்டுற்கு வந்தவளை சோபாவில் உட்கார சொல்லிவிட்டு, வீட்டில் வேலை பார்க்கும் பெண்மணியிடம் அவளுக்கு ஜுஸ் கொண்டு வாங்க என கூறியவன் அவள் எதிரில் அமர்ந்து கொண்டான்…

ஏன் காலேஜ் போகலையா? என கேட்க..

இல்ல., வசி நீ ஏன் வரல..? இப்போலாம் அதிகமா காலேஜூக்கே வர மாட்டேன்ற,, நீ வரதுனால தான் நானே கிளாசுக்கு வரேன்… இப்போல்லாம் நீயும் வரது இல்ல.. சோ நானும் போறது இல்ல சலித்து கொண்டவளை பார்த்து புன்னகைத்தான் வசி…

ஷில்பா நா இன்னும் 3 மந்த்ஸ் தான் இங்க இருப்பேன், அதுக்கு பிறகு எங்கப்பா கூடவே லண்டன்ல செட்டில் ஆக போறேன் என்றதும், ஷில்பாவிற்கு அதிர்ச்சியானது… அவளை அறியாமல் அவளின் கண்களில் நீர் கோர்க்க… வசியை அடிப்பட்ட பார்வை பார்த்தாள்…

வசியும் அதை கவனித்தவன், அவள் கண்களில் தெரியும் காதலின் ஏக்கத்தையும், கண்களில் வழியும் கண்ணீரில் வசியின் மீதான காதலின் ஆழத்தையும் எடுத்துரைக்க.. வசிக்கு பாவமாய் போனது…

என்ன திடீர்னு வசி.. நீ இங்கயே எங்க கூடவே இருக்கலாம்ல…

இல்ல ஷில்பா, இங்க இருந்தா எனக்கு தர்ஷினி நியாபகம் அதிகமா வருது என்றதும் ஷில்பாவிற்கு அவன் வார்த்தைகள் மேலும் ரணத்தை கொடுக்க…அதை மறைக்க புன்னகைத்தாள்…

ஹ்ம்ம் ஏன் என்னாச்சி? அதான் எப்பவும் உன் கூடவே சுத்துறாளே! திரும்பவும் என்ன அவ நெனைப்பவே இருக்குன்ற… அவளை பேச்சில் பொறாமை கலந்த காதல் அப்பட்டமாய் தெரிய, அதை ரசித்த வசி… ஹஹஹஹ என சிரித்து வைத்தான்…

எதுக்கு சிரிக்கிற? என்ன பாத்தா சிரிப்பா இருக்குல்ல?

ச்ச ச்ச அப்டிலாம் இல்ல..தென் அவ இனி என்கூட சுத்த மாட்டா?

ரொம்ப சந்தோசம், ஆனா எதுக்குன்னு தெரிஞ்சிக்கலாமா?

ஹ்ம்ம் யா, அவளுக்கு என்மேல லவ் இல்ல.. அவ தேவாவ தான் லவ் பண்றா.. சோ அவங்கள சேர்த்து வைக்கிறது தான் எனக்கு சரியா பட்டுச்சு…

வாட் வாட் வாட் நீ என்ன சொல்ற வசி… நீ சொல்றது உண்மையா? கண்கள் விரிந்து ஆர்வமாய் கேட்டாள்…

எஸ் மா, அது தேவா சின்ன வயசுலேந்து அவளை லவ் பண்றானா, சோ

ஸ்டாப் இட்… எனக்கு அவ ஸ்டோரி தேவை இல்ல.. இப்போ நீயும், அவளும் ஒன்னா இல்லையா? ஐ மீன் லவ்வர்ஸ் இல்லையா? என எதிர்பார்ப்புடன் கேட்க…

நோ என்றான் தோள்களை குலுக்கி…

வாவ், வாவ் தேங்க் காட்… உப்ப்ப் என உதடு குவித்து ஊதியவள், தேங்க் காட் யாஹூ… என கை தட்டி, தன் நெஞ்சில் கை வைத்து ஆசுவாசமடைய…

அவளின் நிம்மதியை கண்டு வசிக்கு சிரிப்பாய் வந்தது….ட்ரூ லவ் போல என கேட்டு விட்டான்…

எஸ் டா, ரொம்ப… என்னால உன்ன யாருக்குமே விட்டு குடுக்க முடியாது வசி அவன் கண்களை பார்த்து கூறினாள்…

ஹ்ம்ம்ம்ம் பட் அம் சாரி ஷில்பா, தர்ஷி இடத்துல என்னால என ஏதோ சொல்ல வருவதற்குள்…..

நோ நோ கை நீட்டி தடுத்தவள், ஜஸ்ட் ஸ்டாப் இட் வசி.. நீ அவகூட இனி டச் இல்லல… எனக்கு அது போதும்… எவ்ளோ தெரியுமா வலிச்சுது வசி.. நீ அவகூட டைம் ஸ்பென்ட் பண்றப்ப.. ரோம்ப கஷ்டப்பட்டேன் டா… இங்க பாரு என தன் கையை காட்டியவள்.. அதில் 4,5 அறுப்பு இருக்க… இதை பார்த்தியா வசி.. இது எல்லாமே எனக்கு நானே குடுத்துக்கிட்டது… எதுக்குன்னு தெரியுமா? நீ எப்போல்லாம் அவகூட டைம் ஸ்பென்ட் பண்ண போறியா அப்பலாம் அந்த வலிய தாங்கிக்க முடியாம எனக்கு நானே இப்டி உடல் வலிய கொடுத்து சமாதானப் படுத்திப்பேன் என குரல் உடைந்து கூறியவளை ஆழ்ந்து பார்த்தான் வசி…

என்ன வசி இப்டி பாக்குற? உன்னோட இந்த பார்வைக்காக மட்டும் நா எவ்ளோ ஏங்கிருக்கேன்னு தெரியுமா? டா…

பிக் சைக்கோ என்றெண்ணியவன், எப்போலேந்து என்ன லவ் பண்ற? என கேட்க

எனக்கு நீ இந்த காலேஜ்ல வந்து பி எஸ் சி சேர்ந்த அப்போவே ரொம்ப புடிச்சி போச்சு… நீ எம் எஸ் சியும் இங்க தான் படிக்க போறேன்னு தெரிஞ்சப்ப ரொம்ப சந்தோஷப்பட்டேன்… ரொம்ப தைரியமான பொண்ணு டா நா.. ஆனா இந்த லவ்வ சொல்ல மட்டும் எனக்கு தைரியமே வரல… நா உன்ன லவ் பண்றது உன்ன தவிர நம்ம பிரெண்ட்ஸ் எல்லாருக்கும் தெரியும்.. என்ன விட்டு எங்க போய்ட போறன்னு ஒரு அசட்டை தைரியமும் இருந்துச்சி… உனக்கு நான் தான், நான் மட்டும் தான் ஏத்தவன்ற ஆணவம் எல்லாமே சேர்ந்து லவ்வ சொல்ல விடல… ஆனா நீ தர்ஷியா லவ் பண்றனு சொன்னப்ப ரொம்ப உடைஞ்சிட்டேன் தெரியுமா? பட் இப்போ ஹாப்பி….

ஓஹ்,, சரி பட் என்னால உன் லவ்வ ஏத்துக்க முடியாது ஷில்பா,தர்ஷி ஒரு ரீசனா இருந்தாலும், நா அங்கேயே செட்டில் ஆக போறேன்..

சோ வாட்? நானும் லண்டன் வந்துருவேன்.. ஏதாச்சும் ஜாப்க்கு அப்ளை பண்ணிட்டு அங்க உன்கூடவே இருந்துருவேன், உன்ன பாத்துட்டே உன் பக்கத்துலயே என்றவள் சரி டா அப்போ நா கிளம்பவா? என எழ…

அதுக்குள்ள என்ன அவசரம்? கொஞ்ச நேரம் இருந்துட்டு போ…

இல்ல டா, உன் பர்த்டேக்கு நிறைய வேலை இருக்கு அதெல்லாம் செய்யணும் பை என்றவள் வேகமாய் சந்தோசத்துடன் அங்கிருந்து வெளியேறினாள்…

ஷில்பா அங்கிருந்து வெளியேறி தனது காரில் ஏறிய அடுத்த நிமிடம் தனது நண்பர்களுக்கு கால் செய்து ஓரிடத்திற்கு வர சொல்ல, அனைவரும் சரி என்றனர்…

இங்கு கம்ப்யூட்டர் பிராக்டிக்கலை முடித்து விட்டு முதல் ஆளாக ஸ்ருதி தான் க்ளாசிற்குள் நுழைந்திருந்தாள்… தண்ணீர் பாட்டிலை எடுத்து தண்ணீர் குடித்தவள், கடைசி பெஞ்சில் பார்க்க, அங்கு தர்ஷி தலை கவிழ்த்து படுத்திருந்தாள்…

என்னாச்சி இவளுக்கு? பிராக்ட்டிக்கல் வரலையா? என யோசித்தவள் போய் கேப்போமா? வேணாம் ஏதாவது கத்துவா.. எதுக்கு தேவை இல்லாம… ஆனாலும் அவளுக்கு மனது கேட்காமல் அவளின் அருகில் சென்று அமர்ந்து விட்டாள் ஸ்ருதி…

தர்ஷியின் தோள் மீது கையை வைத்து, தர்ஷினி என்னாச்சி? என கேட்க… தர்ஷி யாரென பார்க்க, அமுலு அமர்ந்திருந்தாள்…

என்னாச்சி தர்ஷி? பிராக்ட்டிக்கல் கிளாஸ் போயிட்டு இருக்கு நீ வரலையா? என கேட்க…

ஹம்ஹ்ம் இல்ல தலை வலி அதான்…

ஹ்ம்ம் கொஞ்சம் தண்ணி குடிக்கிறியா? தர்ஷி என கேட்க

இல்ல வேணாம் என்றதும்… சரி நீ படுத்துக்க நா போறேன் என்றவள் எழுந்து செல்ல பார்க்க…

அவள் கையை பிடித்தாள் தர்ஷி… அமுலு என்ன என்பது போல் திரும்பி பார்க்க… அம் சாரி ஸ்ருதி என மனதார மன்னிப்பு கேட்டிருந்தாள் தர்ஷி…

ச்ச அதெல்லாம் நா அப்போவே மறந்துட்டேன் தர்ஷி.. நீ இன்னுமா மனசுல வச்சிருக்க..

ஆமா அன்னைக்கு உன்ன ரொம்ப மோசமா பேசிட்டேன்ல….

இட்ஸ் ஓகே தர்ஷி… விடு அதையே நெனச்சிட்டு இருக்காத.. இங்க பாரு தர்ஷி இன்னும் 2 வருஷம் தான் இருக்கு நம்ம படிப்பு முடிய… இப்போ வேணும்னா நாம எல்லாம் சில்லியா சண்டை போட்டுக்கலாம்… ஆனா அந்த வருஷம் முடிஞ்சி நாம எல்லாம் பிரியுறப்ப ரொம்ப வருத்தப்படுவோம்… சோ இப்போவே நாம எல்லாம் சண்டை போடாம சந்தோசமான மெமோரிஸ வச்சிட்டு போலாம் என்ன ஓகே வா என கேட்க…

தர்ஷியும் புன்னகையுடன் சரி என தலையாட்டினாள்…அதன் பிறகு இருவரும் சேர்ந்து கேன்டீனுக்கு சென்றவர்கள் டீ குடித்து விட்டு சிரித்து பேசி கொண்டு களாசிற்கு வர, அதை பார்த்த ஜெய் தான் வாயை பிளந்து நின்றிருந்தான்…

டேய் மச்சான் தேவா இந்த பிஞ்சி குஞ்சி நெஞ்சு இன்னும் எவ்ளோ அதிர்ச்சிய தாண்டா தாங்கும்… என கேட்க… தேவாவும் எனக்கே ஷாக்கிங்க் மச்சி…. ஆமா இந்த ஸ்ருதி என். லவ் விஷயத்தை ஏதும் அவகிட்ட சொல்லிருப்பான்ற….

ச்ச ச்ச வாய்ப்பு இல்ல டா, ஆனா இந்த பொண்ணுங்கள மட்டும் நம்ப முடியாது மச்சி… பிரிஞ்சி இருக்கிறப்ப எலியும், பூனையுமா இருப்பாலுக… சேர்ந்துட்டா அவ்ளோ தான் டா பன் பட்டர் ஜாம் மாதிரி.. ஒட்டிக்கிட்டே கெடப்பாழுக….

ஆமா டா ஸ்ருதிய கூப்டு எதுக்கும் விசாரிச்சு வச்சிக்க மச்சான்…

ஹ்ம்ம் சரி டா என இருவரும் தனது களாசிற்கு சென்ற பின், ஜெய் ஸ்ருதியை தனியாய் அழைத்து விசாரிக்க, தான் எதுவும் சொல்லவில்லை சாதாரணமாக தான் பேசி கொண்டிருந்தோம் என உறுதி அளித்த பின் தான் தேவாவிற்கு நிம்மதியாய் போனது….

 

தொடரும்……

படிச்சிட்டு மறக்காம உங்க ஸ்டார்ஸ் குடுங்க 🙏🙏🥰🥰

 

 

 

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 28

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!