தேவை எல்லாம் தேவதையே…

4.9
(16)

தேவதை 40

ஷில்பா தனது நண்பர்களை வர சொல்ல, அவர்களும் அவள் சொன்ன காபி ஷாப்பிற்கு வந்து சேர்ந்தனர்..

வசியின் பர்த்டேக்கு என்னன பிளான் செய்ய வேண்டும் என கூறியவள், நாளைக்கு கேக் மட்டும் நான் வாங்கிட்டு வரேன் என அனைவருக்கும் இருக்கும் வேலையை பிரித்து கொடுக்க, அனைவரும் சரி என ஒப்புக்கொண்டனர்…

சரி, இதல்லாம் நாம ஜமாய்ச்சுரலாம், அப்புறம் அந்த தர்ஷினி கதை என்னாச்சி… ஆசிட் கூட வாங்கி வச்சிட்டேன்…என ஸ்டீபன் சொல்ல…

உடனடியாக ஷில்பா , டேய் அதெல்லாம் வேணாம் என மறுத்துவிட்டாள்…

ஓஹ் வேணாமா!? பல்லை கடித்தவன் சரிங்க லீடர்.. ஆனா ஏன்னு தெரிஞ்சிக்கலாமா?

டேய் அவ தேவாவ தான் லவ் பண்றாலாம், வசிக்கும் அவளுக்கும் இடையில ஒன்னும் இல்லனு அவனே சொல்லிட்டான்…

ஓஹ் ஓகே… அப்ப உன் ரூட் க்ளியர் அப்படித்தானே!

எஸ் கைஸ்…. அவ சேப்டர் இனி வேணாம்… அத மறந்துருங்க…

பா நீ எவ்ளோ செல்ஃபிஷ் பாரேன்… உனக்கு ரூட்டு க்ளியர்னு தெரிஞ்சதும், எங்கள கழட்டி விட்டுட்டல்ல, அப்போ உனக்கு மட்டும் தான் நாங்க ஹெல்ப் பண்ணனும், நீ எங்களுக்கு பண்ண மாட்ட கரெக்ட்டா ஸ்டீபன் அவளை மடக்கி பேச முயற்சி செய்தான்..

டேய் அப்டி இல்லடா, வசி மனசுல நா எப்படியாச்சும் இடம் புடிக்கணும், இப்ப போய் இதெல்லாம் செஞ்சா, என் முகத்தை கூட அவன் பாக்க மாட்டான்… அவன் எனக்கு கிடைக்கணும்னு தான் இந்த பிளானே போட்டேன்… அவன் எனக்கு கிடைக்க போறான்… சோ இந்த பிளான கை விட்ரலாம்…

அப்ப எனக்கு தர்ஷினி மேல ஒரு இன்ட்ரெஸ்ட் இருக்கே அதுக்கு என்ன பண்றது?

டேய் நீ என்னமோ அவளை லவ் பண்ற மாதிரி பேசுற? சும்மா அவள அனுபவிக்கனும், அதான உன் எண்ணம்… அதுக்கு பதிலா உன்கூட நைட் ஸ்டே பண்ண தான் நிறைய உனக்கு கேர்ள் பிரெண்ட்ஸ் இருக்காங்களே பிறகென்ன, அதுல யாரையாச்சும் சூஸ் பண்ணிக்க என கடுப்புடன் சொல்ல…

அந்த மசுறலாம் நீ பேசாத, எனக்கு தெரியும்… எனக்கு தர்ஷி தான் வேணும் முடியுமா முடியாதா?

நோ வே, அப்டி அவளை நீ எதாவது பண்ணனும் நெனச்சா, அந்த எண்ணத்தை இதோட விட்டுடு, இல்லனா உன்ன நானே விட மாட்டேன்… உனக்கு எங்க கூட இருக்க விருப்பம் இருந்தா இரு, இல்லையா கெட் லாஸ்ட்… ப்ளடி ரேப்பிஸ்ட் என விரல் நீட்டி அவனை எச்சரித்தவள், வாங்க கைஸ் என மற்றவர்களை அழைத்து கொண்டு அங்கிருந்து செல்லவும், அவள் பின்னால் மற்றவர்களும் செல்ல, ஸ்டீபனும், அவனின் மற்றொரு நண்பனும் அங்கேயே நின்றனர்…

டேய் என்னடா இவ இப்டி பேசிட்டு போறா?

அவளை விடு டா, லம்பாடி… எனக்கு அந்த தர்ஷிய எப்படியாச்சும் அடையணும் டா, வா நாம தனியா திட்டம் தீட்டுவோம், பட் எல்லாம் முடிஞ்ச பிறகு பழி இவ மேல எப்புடி? என்றவன் வில்லத்தனமாய் செல்லும் ஷில்பாவையே பார்த்தான்….

ஏம்புள்ள இன்னும் எம்புட்டு காலத்துக்கு என்கூட பேசாமலே இருப்ப? என்னால முடியல புள்ள.. உன் கையால ஒரு வாய் கஞ்சி கூட ஊத்த மாட்டுற? அன்னைக்கு அடி வாங்குன அவனே பெருசா ஏதும் கண்டுக்காம என்கிட்ட பேசுறான், உனக்கு என்ன புள்ள வந்துச்சி? என தட்டை கையில் ஏந்தியவாறு சரசுவிடம் கெஞ்சி கொண்டிருந்தார் மைக்கேல்…

யோவ் நீயே போட்டு தின்னுட்டு போயா சும்மா நொய் நொய்ணு காது வலிக்குது…

ஏன் புள்ள சொல்ல மாட்ட.. உனக்கென்ன என்ன பாக்காம இருந்துடுவ, ஆனா நா இந்த பாழா போன மனசு தான் கேட்க மாட்டுது… உன் முகத்தை பாக்காம கெடந்து அடிச்சிக்குது.. என் தொண்டை குழியில சோறு கூட உன் கையால சாப்பிடாம இறங்க மாட்டுது புள்ள என குரல் உடைந்து மைக்கேல் பேசவும்… தான் சரசு இறங்கி வந்தார்…

தெரியுதுல, அப்புறம் எதுக்கு அவன இந்த பாடு படுத்துற!? நீயே காதலிச்சு கல்யாணம் பண்ணவன் தான! காதலுக்கு எதிரியா நிக்குற எங்கப்பன் மாதிரியே….

நீ லவ் பண்ணா தப்பு இல்ல.., ஆனா உன் மொவன் லவ் பண்ணினா தப்போ! உனக்கென்ன கேடு வந்துச்சு, ஏன் என்ன லவ் பண்ணி கல்யாணம் பண்ணின என்கூட நீ சந்தோசமா இல்லயா?

எனக்கென்ன புள்ள குறை, நா சந்தோசமா தான் இருக்கேன், ஆனா நீ தான் புள்ள சந்தோசமா இல்ல என மைக்கேல் முகத்தை தொங்க போட, சரசு ஒன்றும் புரியாமல் அவர் அருகில் சென்று அமர்ந்தவள், அவர் தாடையை பிடித்து நிமிர்த்தி தன்னை பார்க்க வைத்தாள் …

யோவ் நீ என்ன சொல்ற? நா எப்ப யா உன்கிட்ட சொன்னேன் சந்தோசமா இல்லனு… என்னயா உளறுற? உண்மையாகவே சரஸ்வதிக்கு ஒன்றும் புரியவில்லை…

ஏன் புள்ள நடிக்கிற? நீ ஒவ்வொரு தடவையும் உங்கம்மா வ நெனச்சி அழுறப்ப எனக்கு எம்புட்டு கஷ்டமா இருக்கும்ன்னு தெரியுமா? எப்டி வாழ்ந்த புள்ள நீ, என்ன லவ் பண்ணதால இந்த உப்பு காத்துல, என்கூட இந்த சின்ன வீட்டுல வாழ்ந்துட்டு இருக்க… எல்லாம் என்னால தான!? என மனம் வருந்தி சொல்லவும் சரசுக்கு கண்களில் நீர் நிரம்பியது…

யோவ் பைத்தியமா யா நீ, எனக்கு உன்கூட இருக்குறது தான் யா சந்தோசம்.. இங்க பாரு நா செத்தாலும் உன் மடியில தான் ஏன் உயிர் போகணும்.. அந்த அளவுக்கு இன்னும் உன்ன மனசார விரும்புறேன்… என்னயா குறை வச்ச எனக்கு, இத்தனை வருஷத்துல என்ன ஒரு முறையாச்சும் கண் கலங்க விட்ருக்கியா? குடிசை வீட்ல வாழ்ந்த நீ அம்புட்டு கஷ்டத்துலயும் எனக்காக தான் இந்த வீட்டையே கட்டுன! இத போய் சின்ன வீடுன்ற… இது தான் யா என் சந்தோசம்… எனக்கு எங்கப்பா, அம்மா வ விட உன்ன தான் யா ரொம்ப புடிக்கும் என கண்கலங்கி அவரின் நெஞ்சில் சாய்ந்து கொள்ள… மைக்கேலும் அவரை அணைத்து கொண்டார்….

பயந்துட்டேன் புள்ள எங்க ஜெய்யும் என்ன மாதிரியே யாரையாச்சும் இழுத்துட்டு வந்து கல்யாணம் கட்டிக்கிட்டு உன்ன மாதிரியே அந்த புள்ளயயும் கஷ்டப்படுத்திடுவானோன்னு.. வேற ஒன்னும் இல்ல….

யோவ் அவன் உன்ன மாதிரி இல்லையா, கண்டிப்பா நல்ல வேலைக்கு போய் தான் , அவன் லவ் பண்ற பொண்ண கட்டிப்பான் பாரேன்…

ஓஹ் அப்ப பொண்ண பாத்து வச்சிட்டீங்க அம்மாவும் பையனும் கிண்டலாக கேட்க…

ஆமா ஆமா பொண்ணு பேரு அமுலு யா நல்லா இருக்கா… என்கிட்ட கூட அப்போ அப்போ பேசும்….

ரைட்டு என் மகாராணி முடிவு பண்ணின பிறகு எனக்கென்ன பிரச்சனை, ஆனா இந்த ஆர்வத்தை படிக்குறதுல காட்டலாம்…

அதெல்லாம் படிப்பான் படிப்பான் படிக்காம எங்க போக போறான்… நல்ல நிலைமைக்கு வந்த பிறகு தான் மா கல்யாணம் பண்ணிப்பேன்னு சொன்னான்…

ஹ்ம்ம் என பெருமூச்சி விட்டவர், அன்று தேவா கடலில் விழுந்து சாக போனதை நினைத்து பார்த்து உள்ளுக்குள் பயந்தார்…

ஜெய் படிப்பு முடிஞ்சி என்ன ஜாப் உனக்கு போகணும்னு ஆசை என அமுலு கேட்க….

எனக்கு ஒரு நல்ல ஐடி கன்சல்ட்டண்டா ஆகணும், உனக்கு டி என அமுலுவிடம் வடையை சாப்பிட்ட படி கேட்க…

எனக்கு டீச்சர் ஆகணும் டா அதான் ஆசை… சரி நா ஒன்னு கேட்கவா? எப்போ பாரு என்னைய கேட்குறல உங்க வீட்ல ஒத்துப்பாங்களானு, உங்க வீட்ல எப்புடி உங்கப்பா ஒதுப்பாரா?

எங்க வீட்ல எங்கம்மா தான் எல்லாமே, அவங்க என்ன சொல்றாங்களோ அத தான் எங்கப்பா கேட்பாரு… இன்னேரம் எங்கம்மா டோஸ் விட்டு அவரை சரி பண்ணிருக்கும்.. என சரியாக கணித்து சொல்ல… அமுலு சிரித்து வைத்தாள்…

தர்ஷினி க்ளாசில் தேவாவையே வைத்த கண் வாங்காமல் பார்த்து, சைட் அடித்தே அவனை வெட்கப்பட வைத்தாள்…

அடி பாவி நானுலாம் உன்ன பாக்கவே பயந்து பயந்து பாப்பேன், நீ என்னடானா இப்டி பச்சையா சைட் அடிச்சி என்ன வெட்கப்பட வைக்குற? என மனதிற்குள் எண்ணி சந்தோசப்பட்டு கொண்டான்…

தர்ஷி எழுந்து அவன் அருகில் செல்லவும், நெஞ்சில் கை வைத்த தேவா, ஆஹா வராலே வராலே என்ன பண்ண போறாளோ! என இதயம் படபடக்க அவளை பார்க்க… அவன் அருகில் சென்று நெருங்கி அமர்ந்தவள்…

தேவா என குழையும் குரலில் அழைக்க… தேவா அந்த குரலில் மயங்கியவன், ஹ்ம்ம் என ஹஸ்கி வாய்ஸில் கேட்க….

ஐ லவ் யூ தேவா என உதடு குவித்து சத்தம் வராமல் சொல்லியவளின் இதழ்களை கிள்ளி முத்தமிட விபரீத ஆசை தோன்றியது…அவள் கண்களையே இமைக்காமல் மெய்மறந்து பார்த்திருந்தான் அவன்… தேவா என்ன உனக்கு புடிக்குமா டா? என கேட்க…

தேவா அவளின் வசியத்தில் கவிழ்ந்தவன், ஹ்ம்ம் என தலையாட்டினான்…

அப்போ என்னையே கல்யாணம் பண்ணிக்கிறியா? என ஓப்பனாக கேட்டு விட்டாள் தர்ஷி….

தேவாவிற்கு சந்தோஷத்தில் மூச்சு முட்டி கண்களில் கண்ணீர் வர ஆரம்பிக்க , ஹ்ம்ம் னு சொல்லு டா, இப்போவே அவளை கூப்டு எங்கேயாச்சும் போ உன் மனசுல உள்ள காதலையும் சொல்லு இதுக்கு மேல முடியாது, அவள் மீது உள்ள அளவு கடந்த காதல சொல்லலனா இதயமே திக்குமுக்காடி போயிரும்… ப்ளீஸ் சொல்லு என அவன் மனம் ஓசை எழுப்ப…

கண்டிப்பா சொல்லிதான் ஆகணும், ஹ்ம்ம் என தலையாட்ட செல்வதற்குள் டேய் தேவா….என சத்தமாக பெஞ்ச் அதிர தட்டும் ஓசையில் இருவரும் தன் சுயத்திற்கு வந்தவர்கள், யாரென திரும்பி பார்க்க, ஜெய் தான் நின்றிருந்தான்….

ச்ச நல்ல வேலை டா மச்சான் வந்து காப்பாத்திட்ட என்பது போல் தேவா தலையை உலுக்கி பெரு மூச்சி விட, தர்ஷி ஜெய்யை முறைத்து வைத்தாள்…

ச்ச சொதப்பிட்டியே டா, கரடி பயலே என கோபத்துடன் தனது இடத்தில் சென்று அமர்ந்து விட்டாள்….

டேய் மச்சான் இந்த மாயக்காரி எனக்கு இப்ப வசியம் வச்சி மயக்குனா டா! குழந்தை போல் தேவா சொல்ல ஜெய் சிரித்தவன்…

டேய் பாவம் டா தவிக்குறா டா, எப்போ டா உன் லவ்வ சொல்லுவ?

தவிக்கட்டும் ஆனா அவ என்ன படுத்தின அளவுக்குலாம் இல்ல டா மச்சான்.. நாளைக்கே என் லவ்வ அந்த டைரிய குடுத்து சொல்லுவேன்…என் தேவதை கூட சந்தோசமா ஒவ்வொரு நிமிஷமும் ரசிச்சு வாழனும் டா… கஷ்டமோ, நஷ்டமோ அவ கூட கை கோர்த்துட்டே எல்லாத்தையும் கடக்கணும்., அவளுக்கு திகட்ட திகட்ட காதலை மட்டும் குடுக்கணும் டா உணர்ந்து கூறியவனை உற்று பார்த்தான் ஜெய்…

என்னடா அப்டி பாக்குற…

மச்சான் ரொம்ப சந்தோசமா இருக்கு டா., என மனதார சொல்லிய நண்பனின் தோள் மீது கை போட்டு தர்ஷியை தான் பார்த்தான்…..

நாளைக்கு வசி பர்த்டே பார்ர்டிக்கு போயிட்டு ரிட்டரன் வரப்ப, அவளை தனியா கூப்டு போய் அவளுக்காக வாங்குன ரிங்க அவ விரலுக்கு மாட்டி விட்டு , ப்ரபோஸ் பண்ண போறேன் டா மச்சான்…அது வரைக்கும் கொஞ்சம் ஓவரா வெறுப்பேத்தி பார்க்க வேண்டியது தான்….

ஹ்ம்ம் நீ நடத்து நடத்து மச்சான் என்றான் ஜெய்..

 

கல்லூரி முடிந்ததும் அனைவரும் தங்கள் வீட்டிற்கு செல்ல, தர்ஷி நொந்து தான் சென்றாள்… ச்ச ஸ்கூட்டியும் கொண்டு வரல….இனி கெஞ்சி வேஸ்ட், போய் அதிரடியா ஏறி அவன் பைக்குல உட்காருவோம் என எண்ணியவள் வேகமாய் தேவாவின் பைக் இருக்கும் இடத்திற்கு செல்ல பார்க்க, அதற்குள் அமுலுவும் சேர்ந்து கொண்டாள்… இருவரும் எதார்த்தமாய் பேசி கொண்டே செல்ல,

அங்கு லைப்ரரி அருகே தேவாவின் பக்கத்தில் அம்ருதா நின்று, தொட்டு தொட்டு சிரித்து பேசுவதை பார்த்து வெறி பிடித்தவள் போல் ஆனால் தர்ஷினி…. தேவாவின் நிராகரிப்பும், எங்கே விட்டு சென்று விடுவானோ! என்கிற பயமும் அவன் மீது உள்ள அதிகப்படியான பொஸசிவ்னசும் அவளின் புத்தியை பேதலிக்க வைக்க….

அடிங்…. இதுக்கு மேல விட்டா இது சரிபடாது, ஸ்ருதி இந்த புக்கயும், பேக்கயும் கொஞ்சம் பிடி, என அவள் கையில் அனைத்தையும் திணித்தவள்…. வேக நடையுடன் இருவரும் நின்று பேசும் இடத்திற்கு சென்று , அம்ருதாவை பிடித்து ஒரே தள்ளாக தள்ள… அம்ருதா நிலை தடுமாறி கீழே விழுந்தாள்…

 

தொடரும்ம்…..

படித்து விட்டு உங்க ஸ்டார்ஸ் கொடுக்கவும் 🥰🥰🥰

 

 

 

 

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 16

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!