தொலையும் நொடி கிடைத்தேனடி நின் காதலால்….(2)

4.6
(5)

இலக்கியா தன் அறையில் அமர்ந்து அழுது கொண்டிருந்தாள். மாலை நேரத்தில் அலுவலகத்தில் நடந்த விசயங்களை நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

என்னம்மா இலக்கியா அந்த ****டென்டர் பைல் எங்கே என்றான் அந்த அலுவலகத்தின் மேனேஜர் பாஸ்கர். அது ஒரு கவர்மென்ட் டெண்டர் பைல் அது  மட்டும் தொலைந்து போனால் அவ்வளவு தான் அவளது வேலை மட்டும் அல்ல கம்பெனியின் எதிர்காலமே காணாமல் போய்விடும். அந்த பைலை தன் மேஜை மட்டும் அல்லாது அலுவலகம் முழுவதும் தேடினாள் இலக்கியா. 

என்ன இலக்கியா பைல் மிஸ்ஸிங்கா என்ற பாஸ்கரிடம் சார் அந்த பைல் எப்படி மிஸ் ஆச்சுனே தெரியலை என்று கூறியவளை தன் இஷ்டம் போல் வாய்க்கு வந்தபடி வசை பாடியவன் அந்த பைல் மட்டும் கிடைக்கலை அவ்வளவு தான். உன் கெரியரையே எம்.டி காலி பண்ணிருவாரு அது எவ்வளவு இம்பார்டன்ட் பைல்னு தெரியும் தானே என்று மீண்டும் மீண்டும் அவளை நோகடித்தான்.

அவள் கண்கள் கலங்கினாலும் அழாமல் சார் சத்தியமா அந்த பைலை நான் பத்திரமா தான் வச்சுருந்தேன் என்றவளிடம் அப்போ எங்கே போச்சு பைல்க்கு கால் முளைச்சு நடந்து போயிருச்சா என்ற பாஸ்கரிடம் சார் என்று ஏதோ கூற வந்தவளின் பின்னால் வந்து நின்றான். இம்மி அளவு கூட தன் உடலின் பாகங்கள் தெரியாமல் புடவை கட்டி இருக்கும் அவளைப் பார்த்து சிரித்தவன் இந்த பிரச்சனை பைல் தொலைஞ்சது எதைப் பற்றியுமே நான் எம்.டி கிட்ட சொல்ல மாட்டேன். இன்னும் சொல்லப் போனால் அந்த பைல் உன்னால தொலையலை. அதை தொலைச்சது வேற யாரோ என்று எம்.டி கிட்ட உன் பெயரே வெளியே தெரியாதபடி நான் பார்த்துக்கிறேன் என்றவனிடம் ரொம்ப தாங்க்ஸ் சார் என்றாள் இலக்கியா. வெயிட் வெயிட் இலக்கியா அவ்வளவு அவசரம் எதற்கு இதெல்லாம் நான் செய்யனும்னா ஒரு நாள் ஒரே நாள் என் கூட நீ இருக்கனும். ஒரு நாள் முழுக்க நீயும் , நானும் என் கெஸ்ட் ஹவுஸ்ல என்னோட பெட்ரூம்ல என்னோட பெட்ல என்று கூறி் அவன் அவளை  அணைத்திட அவனைப் பிடித்து தள்ளி அவன் கன்னத்தில் பளாரென்று அறைந்தாள் இலக்கியா.

ஏய் என்னடி கொழுப்பா என்றவன் அவளது கன்னத்தில் அறைந்து என்னடி பெரிய பத்தினி வேசம் போடுற இந்த ஆபிஸ்ல என்னை மீறி நீ வேலை பார்க்கிறதே கஷ்டம் அதனால கண்டிப்பா நாளைக்கு உன் முடிவை சொல்ற. இன்னைக்கு ராத்திரி முழுக்க யோசி நாளைக்கு உன் பதிலை சொல்லு. நளைக்கு ராத்திரி என் கூட படுக்குற இல்லை மவளே உன்னோட கெரியரையே காலி பண்ணிருவேன் என்று கூறி விட்டு எவ்வளவு திமிர் என்னையவே அடிக்கிற என்று அவளது கன்னத்தில் மீண்டும் அறைந்து விட்டு சென்றான்.

அவள் நடந்த நிகழ்வுகளை தன் மனக்கண்ணில் திரும்பத் திரும்ப யோசித்துக் கொண்டே இரவு தூக்கம் இன்றித் தவித்தாள்.

தன்னுடைய கற்பு தன் கணவனுக்கான சொத்து. தனக்கு திருமணம் என்ற ஒன்று நடக்காமல் கூட போகலாம் ஆனால் தன்னுடைய கற்பை ஒரு கயவனின் நயவஞ்சக சூழ்ச்சியில் இழக்க தயாராக அவள் இல்லை. தன்னுடைய நிலைமையை நினைத்து நினைத்து வருந்தினாள்.

கடவுளே ஏன் எனக்கு இப்படி ஒரு நிலை. ஒருவேளை அப்பா உயிரோடு இருந்திருந்தால் தனக்கு இப்படி ஒரு அவல நிலை ஏற்பட அவர் விட்டிருக்க மாட்டார் என்று புகைப்படமாக இருந்த தன் தந்தையிடம் கண்ணீர் விட்டு அழுதாள்.

அம்மா நான் பிறந்ததும் நீ இறந்து போனதற்கு பதிலாக நான் இறந்து போயிருக்கக் கூடாதா என்று வருந்தினாள்.

என்ன ஆனாலும் சரி அந்த பாஸ்கரின் எண்ணத்திற்கு எந்த சூழ்நிலையிலும் உடன் படக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள்.

இரவு உணவு கூட உண்ணாமல் அறைக்குள்ளேயே முடங்கிக் கிடந்தாள்.


பாஸ்கர் தன் வீட்டில் தன் படுக்கையில் படுத்திருந்தவன் அருகில் உறங்கும் மனைவியைக் கண்டு இவளை எல்லாம் கட்டிகிட்டு என்று நினைத்து சலித்துக் கொண்டவன் நாளை இரவு எப்படியாவது இலக்கியாவுடன் செலவழிக்க திட்டமிட்டான். அவளை தான் ஆராதிக்கும் விதத்தில் அவள் நிரந்தரமாக தன் ஆசை நாயகியாக இருக்க வேண்டும் என்று கற்பனை செய்து கொண்டிருந்த நேரம் அவனது செல்போன் ஒலிக்க அதில் கவனம் சிதறி எடுத்துப் பேசினான்.


இரவு எவ்வளவு நேரம் அழுதாளோ அப்படியே உறங்கிப் போயிருந்தாள் இலக்கியா. எழுந்தவள் மணியைப் பார்க்க ஏழு எனக் காட்டவும் அவசர அவசரமாக குளித்து விட்டு வேலைக்கு கிளம்பினாள்.

சகுந்தலா வைத்த இட்லியை பெயருக்கு பிய்த்துப் போட்டவள் மதிய உணவை வாங்கிக் கொண்டு பஸ் ஸ்டாப்பிற்கு ஓடிட பஸ் போய் விட்டது.

கடவுளே என்று நொந்து கொண்டவள் அடுத்த பஸ் பிடித்து அலுவலகம் வருவதற்குள் அரை மணிநேரம் தாமதம் ஆகி விட்டது.

நேற்று அவள் தொலைத்ததாக பாஸ்கர் கூறிய பைல் அவளது டேபிள் ட்ராயரில் இருக்க அவளுக்கு ஆச்சர்யம் தாங்க வில்லை.

அதை சரி பார்த்து எம்.டி அறைக்குள் நுழைந்தவள் அதிர்ந்தாள். அவள் உதடு மெதுவாக எதிரில் இருந்தவனின் பெயரை முனுமுனுத்தது கா..ர்..த்..தி..க்..

இவன் எப்படி இங்கே என்று நினைத்தவள் தன்னை சமாளித்துக் கொண்டு  தயக்கத்துடன் அவன் முன்பு நிற்க அவளை அலட்சியமாக பார்த்தவன் இது தான் ஆபிஸ் வரும் நேரமா மிஸ் ஆர் மிஸஸ் என்றிட மிஸ்.இலக்கியாரவீந்திரன் என்றாள் அவள்.

பச்ச் என்றவன் இது தான் வேலைக்கு வரும் நேரமா என்று எரிந்து விழுந்தவனிடம் சாரி சார் பஸ் மிஸ் பண்ணிட்டேன் என்றாள். நீ சாரி நீங்க பஸ்ல தான் வரிங்களா என்றவனின் குரலில் ஒரு ஏளனத்தை உணர்ந்தவள்  அமைதியாக நிற்க பை த வே மிஸ்.இலக்கியாரவீந்திரன் நான் தான் இந்த ஆபிஸோட புது எம்.டி. எனக்கு பஞ்சுவாலிட்டி ரொம்ப முக்கியம். இன்னைக்கு ஏதோ உங்களை விட்டுட்டேன். இதே போல தொடர்ந்து லேட்டா வந்திங்கனா உங்களை டெர்மினேட் பண்ணிட்டு போயிட்டே இருப்பேன் போங்க மேடம் போயி உங்க வேலையைப் பாருங்க என்று அவன் எரிச்சலாக் கூற அமைதியாக தன் டேபிளுக்கு வந்து வேலையை கவனித்தாள்


அவளுக்கு அவனை அங்கு பார்த்ததும் அவளது நினைவலைகள் சில வருடங்களுக்கு முன்னால் நடந்த சில கசப்பான சம்பவங்களை நினைத்துப் பார்க்க கண்கள் கரித்துக் கொண்டு வந்தது. தன்னைக் கட்டுப் படுத்திக் கொண்டவள் கண்ணை மூடி தன்னைத் தானே ஆசுவாசப் படுத்திக் கொண்டிருந்தாள்.

கடவுளே என் வாழ்க்கையில் யாரை நான் பார்க்கவே கூடாது என்று நினைத்தேனோ அவனை நான் தினமும் ஒரு முறையாவது பார்த்து ஆக வேண்டிய கட்டாயம் ஏன் எனக்கு இந்த நிலைமை என்று வருந்தியவள் தன் வேலையை பார்த்துக் கொண்டிருந்தாள்.


இவளை என்ன பண்ணலாம் என்று சிந்தித்துக் கொண்டிருந்தவன் சரி என்று அவளை தன் கேபினுக்கு அழைத்தான். எஸ் சார் என்றவளை ஏற இறங்க பார்த்தான். அவளோ அவன் பார்வையை கண்டு கொண்டு தன் உடையை பார்க்க எல்லாம் சரியாக தானே இருக்கு பொறுக்கி எப்படி பார்க்கிறான் பாரு என்று மனதிற்குள் அவனை வசை பாடிக் கொண்டிருந்தாள்.

அவளது எண்ண ஓட்டத்தை உணர்ந்தவன் சிரித்து விட்டு ஆமாம் இலா என்றவன் சாரி இலக்கியா உங்களுக்கு வயசு என்ன என்றான். உங்களை விட இரண்டு வயசு கம்மி தான் சார் என்றாள். ஓஓ ட்வென்ட்டிசிக்ஸ் சரி சரி ஆமாம் உனக்கு கல்யாணம் ஆகலையா இல்லை வசதியா எவனும் கிடைக்கலையா என்றவனை முறைத்துக் கொண்டு நின்றாள்.

என்ன முறைப்பு உண்மையைத் தானே கேட்கிறேன் என்றவனைப் பார்த்து மிஸ்டர் கார்த்திக் மைன்ட் யுவர் வேர்ட்ஸ் ஐ யம் ஜஸ்ட் யுவர் ஸ்டாஃப் நாட் ஸ்லேவ் நீங்க என்ன பேசுனாலும் கேட்டுட்டு அமைதியா போக முடியாது என்றவளைப் பார்த்து டேபிளைத் தட்டி விட்டு எழுந்தான்.

அவளின் கழுத்தைப் பிடித்தவன் என்னடி ஓவரா சவுண்ட் விடுற நீ இப்பவும் என் கிட்ட வேலை பார்த்துட்டு இருக்க நான் நினைச்சா உன்னை வேலையை விட்டு தூக்குறது மட்டும் இல்லை வேற எங்கேயுமே உன்னை வேலையே பார்க்க முடியாத அளவுக்கு செய்ய முடியும் புரிஞ்சதா என்றவன் அவள் கழுத்தை விட்டான். அவள் இரும ஆரம்பிக்க அப்பொழுது தான் தான் செய்த காரியத்தை உணர்ந்தவன் சாரி இலா என்றிட ச்சீய் என்றவள் இருமிக் கொண்டே தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டாள்.

சரி மிஸ் இலக்கியா உங்களை நான் ஏன் இங்கே வரச் சொன்னேன்னா இனி நீங்க தான் என்னோட பர்சனல் செகரட்ரி சோ உங்களுக்கு என் ரூம்லையே ஒரு கேபின் ரெடி பண்ணச் சொல்லிருக்கேன் அதற்கான அப்பாயின்மென்ட் ஆர்டர். நாளையில் இருந்து என்னோட ரூம்ல என் கண்ணு முன்னாடி தான் உனக்கு வேலை சாரி உங்களுக்கு வேலை என்றவன் சிரித்துக் கொண்டே அவளருகில் வந்து அவள் இடையில் கை வைக்க வருவது போல் வர அவள் பயந்து விலக அவளுக்கு பின்னால் இருந்த வாட்டர் பாட்டிலை எடுத்தான்.

அவளது பயத்தை ரசித்தவன் மவளே மாட்டினியா என் கிட்ட என்று நினைத்தவன் சிரித்து விட்டு தன் இருக்கையில் அமர்ந்தான். அவளது கண்கள் கண்ணீரை சிந்துவதற்கு தயாராக இருக்க அவளை மேலும் சீண்ட விரும்பாதவன் சரி போங்க போயி உங்க வேலையை பாருங்க என்றான். அவள் அமைதியாக தன் வேலையை பார்க்க அவளிடத்தில் சென்று அமர்ந்தாள்.

தன் வேலையில் கஷ்டப் பட்டு தன் கவனத்தை திருப்பி வேலையைக் கவனித்தாள். கடவுளே இத்தனை வருசமா இவன் முகத்திலே முழிக்காமல் எப்படியோ இருந்துட்டோம். இவன் ஏன் திரும்ப வந்தான். அவனைப் பற்றிய பழைய நினைவுகள் மனதில் தோன்றிட கஸ்டப்பட்டு அதை நினைவுகளில் இருந்து மீண்டு வந்தவள் தன் வேலையை பார்த்தாள்.


என்ன அம்மா ஏன் டல்லா இருக்கிங்க என்ற பிரதீபாவிடம் இல்லடி உன் அக்கா ஆபிஸ்ல லோன் போடுவாளா? மாட்டாளா? என்ற கவலை தான்டி என்றாள் சகுந்தலா.  அம்மா அதான் உன்கிட்ட சேவிங்க்ஸ் இருக்குல அப்பறம் என் கல்யாணத்துக்கு சேர்த்து வைத்த பணத்தில் எடுத்துக் கொடுத்து அண்ணாக்கு வேலை வாங்களாமே என்றாள் பிரதீபா. ஏன்டி முட்டாளா நீ நம்ம பணத்தை பத்திரப் படுத்தினால் தான் பிற்காலத்தில் நமக்கு உதவும் அவளை நான் வளர்க்கிறதே நமக்கு உழைச்சு கொட்டனும்னு தான். அதனால் தான் அவளோட மனசுல நீ பொண்ணு இல்லை பையன் மாதிரி உன் தம்பி, தங்கச்சிக்கு உன்னால தான் நல்ல எதிர்காலத்தை உருவாக்கித் தர முடியும்னு கொஞ்சம் கொஞ்சமா அவளோட மனசை மாத்தி வச்சுருக்கேன் என்றாள் சகுந்தலா.

அப்போ அக்காவுக்கு கல்யாணம் என்ற பிரதீபாவிடம் அதெல்லாம் பண்ணி வைக்க மாட்டேன். அவளோட உழைப்பு நான் சாகும் வரை எனக்கும், அதற்கு பிறகு உங்களுக்கும் வேண்டும் என்ற சகுந்தலாவைப் பார்த்து அவள் மகள் பிரதீபாவிற்கே ஏன் தான் இந்த அம்மாவுக்கு இப்படி ஒரு கெட்ட எண்ணமோ என்று தான் தோன்றியது.

 

 

… தொடரும்…

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.6 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!