அலுவலகம் விட்டு அவள் கிளம்பிக் கொண்டிருந்த நேரம் எம்.டி யின் அறையில் இருந்து அழைப்பு வர அவளும் அங்கு சென்றாள்.
என்ன இலா கிளம்பிட்ட போல என்றவனை அவள் முறைக்க பச் பழக்கதோஷம் சாரி மிஸ்.இலக்கியா கிளம்பிட்டிங்க போல என்றவனிடம் டைம் ஆச்சுல சார் என்றாள். நீ சாரி் நீங்க என்னோட பர்சனல்செகரட்ரி உங்க பாஸ் நான் இன்னும் வேலை முடியாமல் உட்கார்ந்துட்டு இருக்கும் போது நீங்க எப்படி கிளம்பலாம் என்றவன் அவளிடம் ஒரு பைலை நீட்டி இதை கரைக்ட் பண்ணி கொண்டு வாங்க என்றான்.
அவள் சார் டைம் ஆச்சு நான் நாளைக்கு சீக்கிரமே வந்து இந்த பைலை கரைக்சன் பண்ணி தரேனே என்றவளை முறைத்தவன் இந்த ஆபிஸோட பாஸ் நானா இல்லை நீங்களா மிஸ்.இலக்கியா நான் சொல்ற வேலையை செய்ங்க எனக்கு ஆர்டர் போடாதிங்க என்று அவன் கூறிட கடவுளே என்று நொந்து கொண்டவள் அந்த பைலை கரைக்சன் செய்து கொண்டிருந்தாள்.
பொறுக்கி படுத்தி எடுக்கிறானே என்று நினைத்துக் கொண்டே அவன் கொடுத்த பைலில் கரைக்சன் செய்து முடித்து மணியை பார்க்க ஒன்பதரை என்று காட்டவும் நொந்து போனாள். அட ஆண்டவா கடைசி பஸ் இந்நேரத்திற்கு போயிருக்குமே இப்போ எப்படி வீட்டுக்கு போறது என்று நினைத்தவள் தன் தம்பி தீபக்கிற்கு போன் செய்ய அவனோ நன்றாக மூக்கு முட்ட குடித்து விட்டு கவுந்திருந்தான்.
போனை அட்டன் செய்த சகுந்தலா என்ன இலா இன்னும் நீ வீட்டுக்கு வரக் காணோம் என்று கேட்டிட அம்மா எனக்கு வேலை முடிய நேரம் ஆச்சு பஸ் போயிருக்கும் கொஞ்சம் தீபக்கை வரச் சொல்லுங்கம்மா என்றாள். அச்சோ இலா அவன் வேலை கிடைக்குமா கிடைக்காதாங்கிற துக்கத்தில் நல்லா குடிச்சுட்டு வந்து இவ்வளவு நேரமா அழுது புலம்பி இப்போ தான் தூங்குறான். அக்கா காசு பிரட்டி எனக்கு வேலை வாங்கித் தருவாளா மாட்டாளானு அழுது புலம்பி ஆர்ப்பாட்டம் பண்ணி இப்போ தான்மா படுத்துருக்கான் என்று சகுந்தலா கூறிட சரிங்கம்மா என்று போனை வைத்தவள் பைலை எம்.டி யின் அறைக்கு எடுத்துச் சென்றாள்.
என்ன இலக்கியா வேலை முடிஞ்சதா என்றவனிடம் முடிஞ்சுருச்சு சார் என்றவள் அவசர அவசரமாக ஓடினாள் பஸ் ஸ்டாப்பிற்கு.
அங்கு சென்று பார்த்தால் கடைசி பஸ்ஸும் சென்று விட நொந்து போயி பஸ் ஸ்டாப்பில் அமர்ந்து விட்டாள். ஆட்டோ கூட கிடைக்கவில்லை. ஆட்டோவில் தனியாக செல்ல வேறு பயம் அவளுக்கு. என்ன செய்வதென்று தெரியாமல் தலையில் கை வைத்து அமர்ந்திருந்தாள்.
அவள் அமர்ந்திருந்த பஸ் ஸ்டாப்பின் முன் ஒரு கார் வந்து நிற்கவும் நிமிர்ந்து பார்த்தாள். என்ன இலா பஸ் மிஸ் பண்ணிட்டியா என்றவனை முறைத்தாள். இப்படி முறைச்சா என்ன அர்த்தம் என்றவனிடம் ப்ளீஸ் மிஸ்டர் கார்த்திக் தயவுசெய்து கிளம்புங்க நானே நொந்து போயிருக்கேன் என்றாள் இலக்கியா.
சரி ஓகே உன் வீடு எங்கே இருக்குனு சொல்லு ட்ராப் பண்ணிடுறேன் என்னால தானே பஸ் மிஸ் பண்ணுன என்றவனிடம் தாங்க்ஸ் பார் யுவர் கன்சர்ன் ஐ வில் மேனேஜ் என்றாள். இலா என்று ஏதோ கூற வந்தவனை முறைத்து விட்டு அந்த வழியாக வந்த ஆட்டோ ஒன்றை மறைத்து அதில் ஏறி கிளம்பினாள்.
அவனது கார் அந்த ஆட்டோவை சிறிது இடைவெளி விட்டு பின் தொடர்ந்து கொண்டே வந்தது. என்ன கெட்ட நேரமோ ஆட்டோ ஒரு வளைவில் வளைய அவன் ஆட்டோவை மிஸ் பண்ணி விட்டான்.
ஹலோ என்ன இந்த சந்து வழியா போறிங்க நான் சொன்ன அட்ரஸ்க்கு இந்த வழியா போகக் கூடாதுங்க என்றவளிடம் கம்முனு வாமா சும்மா சும்மா நொய்னுங்காம என்று ஆட்டோகாரன் திட்டவும் அவள் பயந்தே போனாள்.
எத்தனை செய்திகளில் கேட்டிருக்கோம் ஆளில்லாத இடத்தில் வைத்து தன்னை எதுவும் செய்து விட்டாள். கடவுளே என் உயிர் போனால் கூட கவலை இல்லை மானம் போய் விட்டாள் ஐயோ முருகா என்று அவள் பதறிப் போயி அண்ணா ஏன் அண்ணா இப்படி பண்றிங்க நான் சொன்ன அட்ரஸ் என்றவளிடம் வாயை மூடிகிட்டு வாமா என்றவன் ஓரிடத்தில் நின்றிருந்த இன்னொருவனையும் தன் ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு செல்ல பாவம் இலக்கியா அடுத்து தன் வாழ்வில் என்ன எல்லாம் நடக்குமோ என்று கற்பனைக் குதிரையை ஓட விட்டு பதறிக் கொண்டிருந்தாள். நம்மை இவர்கள் எதாவது செய்து விடுவார்களோ என்ற பயத்தில் அவளது இதயம் பந்தையைக் குதிரை ஓடுவது போல் பட படவென துடித்தது.
அவள் எண்ணியது போல் ஓரிடத்தில் ஆட்டோ நின்றது . அதுவரை ஆட்டோ ஓட்டிய நபர் இறங்கி இலக்கியாவின் அருகில் அமர்ந்தான். அந்த இன்னொருவன் ஆட்டோவை ஓட்ட ஆரம்பித்தான். ஆட்டோவின் இருபுறமும் இருந்த ஸ்கீரீனை இறக்கி விட்ட அந்த நபரிடம் டேய் என்னடா பண்ணப் போறிங்க என்னை விடுங்கடா என்று கதறினாள் இலக்கியா. ஏய் வாயை மூடு என்ற அந்த நபர் அவளது வாயை தன் கைகளால் பொத்தினான். அடுத்து நடந்ததோ…
எங்கே போச்சு இந்த ஆட்டோ என்று கார் ஸ்டேரிங்கை குத்தியவன் எப்படி மிஸ் பண்ணினேன். அச்சோ இலா ஏன்டி ஒழுங்கா என் கூட வந்திருக்கலாம்ல திமிரு உன்னோட திமிரு பாரு எங்கே கொண்டு போய் விடப் போகுதோ என்று நினைத்தவனின் செல்போன் ஒலிக்க சொல்லுடா என்றான்.
அந்த நாயை உறிச்சு எடுத்துட்டியா நான் சொன்ன மாதிரி தானே செஞ்ச என்றவன் இதோ பத்து நிமிசம் நான் அங்கே இருப்பேன் என்றான்.
என்னங்க நம்ம ப்ரேம் ஏங்க இப்படி பண்ணிட்டு இருக்கான் நிதமும் குடிச்சுட்டு அவன் படுற வேதனையை தாங்க முடியலங்க என்ற சீதாலட்சுமியிடம் விடு சீதா எல்லாம் நாம வாங்கி வந்த வரம் என்றார் ராமச்சந்திரன்.
அப்படி சொல்லாதிங்க டாடி அண்ணனோட கஸ்டம் அவருக்கு மட்டும் தான் புரியும் அதனால அவரை அவரோட போக்குலையே விடுங்க எல்லாம் சரியாகிடும் என்றாள் அர்ச்சனா. சரி அர்ச்சனா உன் வாய் முகூர்த்தம் பழிச்சு உன் அண்ணன் குடிக்காமல் இருந்தால் போதும் என்ற சீதாலெட்சுமி கடும் கோபத்துடன் வீட்டிற்குள் நுழையும் மகனைக் கண்டவர் ப்ரேம் என்னாச்சுப்பா என்றிட ஒன்றும் இல்லைம்மா என்று அவன் வாய் சொன்னாலும் அவன் முகத்தில் இருந்த கடுமை அவன் ஏதோ கோபமாக இருக்கிறான் என்பதை உணர்த்தியது.
அவன் பின்னாலே கிஷோர், வினய் இருவரும் வந்தவர்கள் சீதாவிடம் அம்மா ப்ரேம் எங்கே என்றிட இப்போ தான் கோபமா மேலே போறான் என்றார் சீதா.
அவர்களும் நண்பனின் அறைக்குச் சென்று பார்த்தால் அங்கு பொருட்கள் எல்லாம் அந்தரத்தில் பறந்து கொண்டிருந்தன. டேய் ஏன்டா உனக்கு இவ்வளவு கோபம் அங்கே ஒருத்தனை இப்போ தான் ஆத்திரம் தீர அடிச்சுட்டு வந்த என்ற கிஷோரிடம் ஆத்திரம் தீரலைடா. என்னோட ஆத்திரம் தீராது ஆஆஆஆஎன்று கத்தியவன் அந்த பொறுக்கி நாயை கொல்லாமல் விட்டுட்டேனே என்றவனிடம் டேய் என்று அவனை சமாதானம் செய்தனர் நண்பர்கள் இருவரும்.
அவர்கள் என்ன சமாதானம் சொன்னாலும் அவன் மனம் அமைதி அடையவில்லை. ஒரு வழியாக அவனிடம் சிறிது நேரம் பேசி சமாதானம் செய்த பிறகு நண்பர்கள் இருவரும் கிளம்பினர்.
என்னடி இது இவளை இன்னும் காணோம் எனக்கு பயமா இருக்குடி போன் வேற சுவிட்ச் ஆப்னு வருது என்றாள் சகுந்தலா. அம்மா அதெல்லாம் அக்கா வந்துருவாள் என்ற பிரதீபாவிடம் காலம் கெட்டு கிடக்குதுடி அவள் வயசுப் பொண்ணு என்று பதறிய சகுந்தலாவைப் பார்த்த பிரதீபா என்னம்மா அக்கா மேல திடீர் பாசம் என்றாள்.
சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் இலக்கியா இருந்தால் தான் உன் கல்யாணமும் நடக்கும். அந்த குடிகார நாய்க்கு வேலையும் எந்த பிரச்சனையும் இல்லாமல் கிடைக்கும். பொறுக்கி பொறுக்கி இன்னைக்கு இந்த நாதாரி குடிக்கலைனு யார் அழுதா ஒழுங்கா இருந்திருந்தான்னா இந்நேரம் அக்காவை போயி கூட்டிட்டு வாடானு அனுப்பிச்சுருப்பேன் இந்த பொண்ணை வேற இன்னும் காணோமே என்று புலம்பித் தவித்தாள் சகுந்தலா.
அங்கே இலக்கியாவின் நிலைமை என்னவாக இருக்குமோ…
