நயமொடு காதல் : 03

4.2
(9)

காதல் : 03

சந்தையில் இருந்து வீட்டுக்கு வந்த வேலுச்சாமி, “அன்னம்… அன்னம்…” என்றவாறு வந்தார். தந்தையின் குரல் கேட்டதும் சமையல் அறைக்குள் நின்றிருந்த அன்னம், “இதோ வந்துட்டேன்பா..” என்று குதித்தோடி வந்தாள்.

“மெல்ல மெல்ல விழுந்திட போற..” என்ற வேலுச்சாமியிடம், “அதெல்லாம் விழ மாட்டேன் அப்பா.. அப்பிடி விழுந்தாலும் என்னை பாத்துக்க தான் நீங்க இருக்கீங்களே..” என்று ஓடிவந்து அவர் கையை பிடித்துக் கொண்டு, “அப்பா இன்னைக்கே சந்தையில இருந்து வரும்போது எனக்கு என்ன வாங்கிட்டு வந்தீங்க?” என்று ஆவலுடன் சிறு பிள்ளை போல கண்களை உருட்டிக்கொண்டு கேட்டவள் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தார், “அப்பா என்னப்பா என்னையே பாத்துட்டு இருக்கீங்க.. சொல்லுங்கப்பா எனக்கு என்ன வாங்கிட்டு வந்தீங்க? பொரி உருண்டை வாங்கிட்டு வந்தீங்களா?” என்றவளிடம், “உனக்கு இல்லாமலா வாங்கிட்டு வந்திருக்கேன்மா..” என்று அந்த பையை அவளிடம் நீட்டினான். அவளும் சமத்து குழந்தை போல் அதை வாங்கிக்கொண்டு, “ரொம்ப நன்றிப்பா.. சரி உட்காருங்க நான் குடிக்க மோர் கொண்டு வரேன்..” என்றாள். 

அவரும், “சரி ஆத்தா..” என்று அங்கிருந்த கதிரையில் அமர்ந்தார். அன்னலட்சுமி வேகமாக சென்று தந்தைக்கு மோரை எடுத்துக் கொடுத்துவிட்டு நின்று கொண்டிருக்கும் போது வெளியே அவளது செவத்தால் அழும் சத்தம் கேட்டது. “என்ன நம்ம செவத்தால் சத்தம் போடுது.. பசியோ தெரியல.. புல்லு ஏதும் போட்டியா இல்லையா?” என்று கேட்டார். 

அதற்கு அன்னம், “அவ என்னோட கோபம்பா நான் சொல்ற பேச்சை அது கேட்கல.. அதுக்கு நான் திட்டிட்டேனா அந்த கோவத்துல சாப்பிடாம இருக்குது.. சரி இருங்க நான் அத பாத்துட்டு வந்திடுறன்..” என்றவளிடம், “சரிமா நீ அத பாத்து அதுக்கு புல்லை போடு.. நான் நம்ம புரோக்கர் வீடு வரைக்கும் போயிட்டு வந்துடறேன்..”

“அப்பா நான் எத்தனை தடவை சொல்றது எனக்கு உங்கள விட்டு போக விருப்பம் இல்லப்பா.. எனக்கு கல்யாணமே வேணாம்பா.. நான் உங்க கூட இருந்திடுறேனே..” என்றாள். 

“எம்மாடி நீ சின்ன புள்ள மாதிரி பேசிட்டு இருக்காதா.. காலாகாலத்துல உனக்கு ஒரு நல்லது நடக்கணும்.. இந்த அப்பன் கண்ணை மூடுறதுக்கு இடையில உன்னை யார் கையிலேயாச்சும் பிடிச்சு குடுத்துட்டன்னா நிம்மதியா போய் சேர்ந்துடுவேன்..” என்றவர் அன்னத்தை நிமிர்ந்து பார்க்க அதில் இப்பவே கொட்டட்டுமா என்பது போல கண்களில் கண்ணீர் அருவி போல நிறைந்திருந்தது. 

மகளின் தலையை தடவி, “யதார்த்தத்தைப் புரிஞ்சுக்கோணும் தாயி.. சரி நீ போய் செவத்தால பாரு நான் வந்துடறேன்..” என்றவர் அங்கிருந்து சென்றார். அன்னமும் தனது தாயின் புகைப்படத்திற்கு முன் நின்றவள், “அம்மா கேட்டீங்களா அப்பா என்ன வார்த்தை சொல்றாங்க.. நீயும் சின்ன வயசுல என்னை விட்டுட்டு அவசரமா போயிட்ட.. அப்பா தனியா என்னை வளர்த்தாரு.. இப்போ அப்பாவும் இல்லைனா நான் எப்படிமா இருப்பேன்? அம்மா அப்பா இல்லாத வாழ்க்கையை என்னால நினைச்சு கூட பாக்க முடியாதும்மா.. நீ தான் இந்த கல்யாணம் ஏதும் நடக்காம என்னை காப்பாத்தணும்..” என்று தன் அன்னையிடம் ஒரு வேண்டுதலை போட்டு விட்டு, புல்லு கட்டை எடுத்துக்கொண்டு செவத்தாள் அருகில் வந்தாள். 

அதுவும் இவளைக் கண்டதும் தலையை ஆட்டி கொண்டிருக்க, “என்ன பாக்குற பாவமேனு தான் புல்லக் கொண்டு வந்தேன்.. நீ எதுக்கு அந்த காளியண்ணன் வயல்ல போய் மேய்ஞ்சிட்டு வந்தே? அவர் பாவம்ல.. அதனாலதான் உனக்கு நான் தட்டினேன்.. இனிமே இப்படி எல்லாம் பண்ணிட்டு இருக்காத என்று செவத்தாளுடன் பேசிக் கொண்டிருந்தாள். 

அந்த நேரத்தில் காரில் வந்து கொண்டிருந்த பார்வதி கிருத்திஷிடம், “நம்ம வீட்டோட சாவி வேலுச்சாமி அண்ணன் கிட்ட தான் இருக்கும்.. அவங்க வீட்டுக்கு போய் கீயை வாங்கிட்டு அதுக்கு அப்புறம் வீட்டுக்கு போலாம்..” என்றார். 

“வாட் அம்மா? நம்ம வீட்டுக்கு தானே போகணும்.. நம்ம வீட்டோட கீ இவங்ககிட்ட எப்பிடி?”

“இல்ல கண்ணா நாங்க அமெரிக்கா போகும்போது அண்ணன்கிட்ட வீட்டை பார்த்துக்க சொல்லி கொடுத்துட்டு போனோம்.. அதுதான் அவங்ககிட்ட இருக்கும், போற வழியில தான் வாங்கிட்டு போயிடலாம்..” என்றார். 

“என்னவோ செய்யுங்க..” என்று சத்தம் போட வந்த கிருத்திஷ் முன்னால் டிரைவர் தங்களை பார்ப்பதை உணர்ந்து, “ஓகே மா..” என்று பேசி அத்துடன் நிறுத்திக் கொண்டான். பார்வதியும் டிரைவரிடம் அவர்களது வீட்டின் இடத்தை சொல்ல டிரைவரும் வேலுச்சாமி வீட்டிற்கு முன்னால் காரை கொண்டு வந்து நிறுத்தினார். 

“ராஜா என் கண்ணுல எனக்கு முட்டி வலியா இருக்குப்பா.. கொஞ்சம் நீ போய் இறங்கி கீயை வாங்கிட்டு வந்திடுபா ப்ளீஸ் கண்ணா..” கிருத்திஷ் தனது அம்மாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு, “ஓகே” என்றவன் அங்கிருந்து இறங்கி வீட்டுக்கு சென்றான். 

‘வீட்ல ஹாலிங்பெல் கூட இல்லையா’ என்றவாறு, “ஹலோ யாராவது இருக்கீங்களா?” என்று கேட்க வீட்டின் உள்ளே இருந்து எந்த சத்தமும் வரவில்லை. ‘என்னடா இது வீடு ஓபன்ல இருக்கு பட் யாரையும் காணோம்..’ என்று நினைத்தவன், ‘சரி வீட்டின் பின்பக்கம் பார்க்கலாம்’ என்று வீட்டின் பின்னால் வரும்போது பேச்சு சத்தம் கேட்டது. 

அதுதான் நமது அன்னம் செவத்தாலுடன் பேசிக் கொண்டிருப்பது கேட்க, ‘என்ன இவ அனிமல்ஸ் கூட பேசிகிட்டு இருக்கா? என்ன இவக்கிட்ட மாட்டி விட்டீங்களே’ என தனது தலையில் அடித்துக் கொண்டவன், “ஹலோ ஏங்க” என்று இவன் சத்தம் போட திடீர்னு கேட்ட சத்தத்தில் பயந்த அன்னம் ஒரு அடி பின்னால் நின்றாள். 

“பயப்படாதீங்க எங்க வீட்டோட கீயை கொடுங்க..” என்ற அவனைப் பார்த்தாள். 

‘இந்த உள்ளூர்காரவங்க மாதிரி தெரியல’ என்று நினைத்துக் கொண்டு, பார்க்க பளபளனு இருக்கும் அவன் முகத்தை பார்த்து, “யாருங்க நீங்க இப்படி படத்துல பாக்குற நடிகர் மாதிரி இம்புட்டு அழகா இருக்கீங்க?” என்று கையை நாடியில் வைத்து அவனை ஆச்சரியத்துடன் பார்த்து கேட்க, கிருத்திஷ்க்கு வெட்கம் வருவதற்கு பதிலாக எங்கே போய் முட்டிக் கொள்ளலாம் என்று இருந்தது. “என்ன கிண்டல் பண்றீங்களா?” “இல்லைங்க நிஜமாவே சொல்றன்.. ரொம்ப அழகா இருக்கீங்களா அதான் கேட்டேன்.. சார் நீங்க யாரு எதுக்கு என்கிட்ட வந்து உங்க வீட்டு சாவியை கேட்டுட்டு இருக்கீங்க?” என்று அவனிடம் கேட்டாள். நேரமாச்சு இன்னும் கிருத்திஷைக் காணலேயே என்று பார்வதியே காரிலிருந்து இறங்கி வந்தார். 

பார்வதியும் காரிலிருந்து வீட்டுக்கு வர வேலுச்சாமியும் புரோக்கரடம் பேசிவிட்டு வந்திருந்தார். வீட்டின் முன்னால் கார் நிற்பதைப் பார்த்து வேகமாக அவ்விடம் வர, அங்கே ஒரு பெண் நிற்பதைப் பார்த்து, “யாரும்மா அது?”என்று கேட்க, திரும்பிய பார்வதி, “அண்ணே என்னை தெரியலையா? நான் தான் பார்வதி” என்றார். 

“அமெரிக்காவில் இருக்கிற பார்வதியா? எப்போம்மா வந்த? ஏன் வெளியில நின்னுட்டு இருக்க உள்ளே வாம்மா உள்ளே வா.. வீட்ல எல்லோரும் நல்லா இருக்காங்களா? நீ மட்டுமா வந்த? பயணம் சௌகரியமா இருந்துச்சா?” என்று பார்வதியை எதுவும் பேச விடாமல் வேலுச்சாமி கேள்விகளை அடுக்கிக் கொண்டு போக பார்வதிக்கு சிரிப்பு வந்தது. 

“அண்ணே நீங்க இன்னும் மாறவே இல்ல.. அப்படியேதான் இருக்கீங்க.. ஒவ்வொரு கேள்வியா கேளுங்க பொறுமையா பதில் சொல்றேன்.. இப்போதான் வந்தேன்.. எல்லாரும் நல்லா இருக்காங்க.. அவரும் என்னோட இரண்டாவது பையனும் வரல.. நானும் என் மூத்த பையனும் நம்ம குலதெய்வம் கோயிலுக்கு ஒரு பூஜை பண்ணிட்டு போலாம்னு வந்தோம்.. அப்போதான் எங்க வீட்டோட சாவி உங்ககிட்ட இருக்குன்னு ஞாபகம் வந்துச்சு அதுதான் வாங்கிட்டு போலாம்னு என் மகனை அனுப்பினேன்.. அவனை காணோம் அதான் நானே கார்ல இருந்து இறங்கிட்டேன்..”

“அப்டியாம்மா சரி உள்ள வா..” என்று அவரை உள்ளே அழைத்து சென்று உட்கார வைத்து, “அன்னம்.. அன்னம்..” என்று குரல் கொடுத்தார். 

குரல் சத்தத்தை கேட்டு பேசுவதை நிறுத்தி விட்டு, அன்னம் உள்ளே வந்தாள். அவள் உள்ளே வர, அவளைத் தொடர்ந்து கிருத்திஷும் உள்ளே வந்தான். 

அவனைப் பார்த்து, “யாருமா இது?” என்று வேலுச்சாமி கேட்க, “இவன்தான் என் மகன் கிருத்திஷ்.. சாவிய வாங்கிட்டு வரச் சொல்லி அனுப்பினேன்.. ஆமா இது யாரு உங்க பொண்ணா?”

“ஆமா பார்வதி, இது என் பொண்ணு அன்னலெட்சுமி..” என்று இருவரும் தங்களது பிள்ளைகளை ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் செய்து வைத்தனர். “அன்னம் இது யார் தெரியுமா? உன் பார்வதி அத்தை.. நீ சின்ன வயசுல இருக்கும்போது பார்த்தது.. அவங்க அதுக்கப்புறம் அமெரிக்கா போயிட்டாங்க இப்பதான் வந்திருக்காங்க..”

“அப்படியா அப்பா?” என்ற அன்னம் உடனே பார்வதியின் காலில் சட்டென்று விழுந்து, “ஆசீர்வாதம் பண்ணுங்க அத்தை..” என்றாள். அன்னத்தைப் பார்த்ததும் பார்வதி மனதில் அவளுக்கென்று ஒரு தனி இடம் ஒதுக்கப்பட்டது. கள்ளம் கபடம் இல்லாத பச்சை குழந்தை போல இருந்தது அவளது முகம். “சந்தோஷமா தீர்க்காயுளோட நல்லா இருமா..” என்று அவளை ஆசீர்வதித்து எழுப்பினார். 

“அந்த ரூம்ல இருக்கிற லாக்கர்ல இவங்களோட வீட்டு சாவி இருக்குல்ல அதை எடுத்து கொண்டு வந்து அத்தைக்கிட்ட கொடும்மா..” “சரிங்க அப்பா..” என்று உள்ளே சென்று அவருடைய வீட்டு சாவியை எடுத்து வந்து பூஜை அறைக்குள் பார்வதியை அழைத்து, அவரிடம் கீயை கொடுத்தாள். 

“அத்தை நீங்க வீட்டுக்கு போங்க.. நான் இங்க இருக்கிற வேலையை முடிச்சிட்டு சீக்கிரமா அங்க வந்துடறேன்..” என்றாள். 

“சரி மா.. அண்ணே போயிட்டு வரேன்.. இங்கதானே இருக்க போறோம் அப்புறமா வந்து பார்க்கிறேன்..” என்றவர் கிருத்திஷை அழைத்துக் கொண்டு சென்று விட்டார். வெளியே வாசல் வரை வந்து இருவரும் அவர்களை அனுப்பி வைத்தனர். 

வீட்டுக்கு வந்த பார்வதி, “பரவாயில்லையே எப்படி விட்டுட்டு போனோமோ அப்படியே இருக்கு.. ரொம்ப எல்லாம் தூசில்ல.. அண்ணா நல்லா பாத்துக்கிறாங்க போல..” என்று பேசிக் கொண்டிருக்க, கிருத்திஷ், “மாம் எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு.. பஸ்ட் நான் குளிச்சிட்டு தூங்கணும்..” என்றான். “இருப்பா நான் வந்து கிச்சன் கிளீன் பண்ணிட்டு அதுக்கப்புறம் உனக்கு சமைக்கிறன். சாப்பிட்டு தூங்கு..” என்றவரிடம், “நோ அம்மா எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு நான் தூங்குறேன்.. தூங்கி எழும்பி அப்புறமா சாப்பிடுகிறன்…” என்றார்.

“கிருத்திஷ் அந்த றூம் எல்லாம் கிளீன இல்லப்பா.. இரு நான் கிளீன் பண்ணதுக்கு அப்புறமா நீ தூங்கு..” என்று சொல்லும்போதே, 

“அத்தை நீங்க எதுக்கு கிளீன் பண்றீங்க? அதுக்குத்தான் நான் வந்து இருக்கேன்ல்ல.. நான் பண்றேன்..” என்றவாறு கையில் பாத்திரங்களுடன் வந்தாள் அன்னலெட்சுமி. 

“அன்னம் வா வா… என்னம்மா நீ எதுக்கு கஷ்டப்படுற நானே கிளீன் பண்றேன்..”

“இதுல என்ன அத்தை கஷ்டம்? ஒவ்வொரு மாசமும் நான்தான் இந்த வீட்டிற்கு வந்து கிளீன் பண்ணி வச்சுட்டு போவேன்.. நீங்க வரன்னு எங்களுக்கு தகவல் சொல்லி இருந்தா எல்லாத்தையும் முன்னாடியே சுத்தம் செய்து வச்சிருப்பேன்.. சரி பரவாயில்லை நீங்க இதுல உட்கார்ந்து சாப்பிடுங்க நான் அதுக்கு இடையில கிளீன் பண்ணிடுறேன்…” என்று பாத்திரத்தை அங்கே இருந்த டைனிங் டேபிளில் வைத்து விட்டு, “அத்தை நீங்க வந்து இருக்கீங்க.. நீங்க வருவீங்கன்னு தெரியாது.. அதனால விசேஷமா எதுவும் சமைக்கலாம்.. இப்போ கருவாட்டு குழம்பு வச்சி, சாதம் தான் வடிச்சேன் பரவாயில்லையா அத்தை?”

“ஐயோ அதெல்லாம் சாப்பிட்டு எவ்வளவு நாளாச்சு கொண்டு வா..” என்று அதை வாங்கி, வாசம் பார்த்தவர், “அன்னம் வாசனையே ஆளைத் தூக்குது..” என்றவர் மகனைப் பார்க்க, “மாம் எனக்கு உடம்பு எல்லாம் ஒரே கசகசன்னு இருக்கு.. குளிக்காம சாப்பிட மாட்டேன்..” என்றான்.  

“மாமா ஒரு அஞ்சு நிமிஷம் தாங்க நான் அதுக்குள்ள ஒரு அறையை சுத்தம் செஞ்சுட்டு சொல்றேன்..” என்று தாவணியை இடுப்பில் சொருகிக் கொண்டு, துடப்பத்தை எடுத்துக்கொண்டு ஓர் அறையை சுத்தம் செய்ய கிளம்பிவிட்டாள். 

அவள் சொன்ன மாதிரியே ஐந்து நிமிடத்திற்குள் அறையை சுத்தம் செய்து விட்டு வெளியே வந்தவள், “இப்போ நீங்க இந்த றூமை பயன்படுத்திக்கலாம்..”

“அன்னம் எப்படிமா? இவ்வளவு வேகமா வேலை செய்த?”

“அத்தை அதெல்லாம் பெரிய விஷயமே இல்லத்தை..” வென்றவள் ஏனைய அறைகளையும் சுத்தம் செய்யச் செல்ல, “நானும் ஹெல்ப் பண்ணவா?”

“என்ன ஹெல்ப் பண்ணனுமா? அத்தை நீங்களே எவ்வளவு தூரம் இருந்து வந்து இருக்கீங்க? நீங்க உக்காருங்க நான் கொஞ்ச நேரத்துக்குள்ள எல்லா வேலையையும் முடிச்சுடுவேன் என்று வேகம் வேகமாக தனது வேலையை ஆரம்பித்தாள். 

கிருத்திஷ் குளித்துவிட்டு வரும் போது வீட்டை நன்றாக சுத்தம் செய்து சமையலறையில் இருந்த பாத்திரங்களையும் கழுவி அடுக்கி வைத்து விட்டாள். 

‘பார்டா இவ்வளவு வேகமா எல்லா வேலையும் முடிச்சுட்டா பரவாயில்ல..’ என்று மனதுக்குள் நினைத்தான் கிருத்திஷ். 

(தொடரும்….)

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.2 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!