நளிர்மலர்

4.6
(5)

 

முன்னோட்டம். மக்களே எழுத்து சைஸ் ஓகேவான்னு சொல்லுங்க. இல்லைன்னா கொஞ்சம் பெருசு பண்ணி அப்டேட் பண்ணுறேன். and கதையை படிக்கறீங்கன்னு தெரியுது. பட் பெரிதாக எந்த பிரதிபலிப்பும் உங்களிடம் இல்லை. நன்றி மக்களே…

 

நிஜமறிய மறுப்பதேனோ!… அழகான கருஞ்சிவப்பு நிற பட்டில் அரக்கு நிற பட்டு ரவிக்கை அணிந்து, அதற்கேற்ப கூந்தல்  அலங்காரம் செய்து, நீண்ட ஜடையை முன் புறம் போட்டிருந்தாள். எல்லோரும் அட்சதை பூக்களை போட்டிருந்ததால், தலையெங்கும் மஞ்சள் சிவப்பு நிற பூக்கள் சிதறியிருந்தது. காதில் பெரிய ஜிமிக்கி, கழுத்தில் நீண்ட ஆரம் போன்ற அணிகலன்களும் அணிந்து தேவதையாய் மின்னியவாறு அவன் எதிரே நின்றிருந்தாள்.

 

அவளையே ஆராய்ந்து கொண்டிருந்தவனின் பார்வை

அவள் தன்னை எப்பொழுதும் பார்க்கும் அந்த பிரத்தியேகமான காதல் பார்வையை பார்த்ததுடன்.

 

“நான் அழகாயிருக்கேனா?” என்றவள் அவனை ஆவலுடன் மயக்கும் பார்வை ஒன்றையும் பார்த்து வைக்கவும்.

 

அதை கண்டவனின் மனமெங்கும் அடுத்த நிமிடமே அருவருப்பு பரவ, அவளையே வெறித்திருந்தான், ‘எப்படிடி ஒருவாரமாய் என்னோடு அப்படியெல்லாம் இருந்துட்டு, கொஞ்சம் கூட வெட்கமேயில்லாம இன்னைக்கு வேற ஒருத்தன் மனைவியாகிட்டு இப்போ திரும்பவும் என்னைக் காதலோடு பார்க்கிறே?… ச்சீ நீயெல்லாம் ஒழுக்கமான பெண்ணா?…” வார்த்தைகளை கடித்து துப்பியவாறே அவளையே அசூசையாக பார்த்திருந்தான் அவன்.

 

அவன் பார்வையில் இருந்த உணர்வு அவளுக்கு புரிந்து விட்டதோ என்னவோ, எதுவும் பேசத்தோன்றாதவளாய் அதிர்ந்து அவனைக் கேள்வியாகப் பார்த்தாள்.

 

அவள் அதிர்ந்த பார்வையில் தன்னை சமன் செய்ய முயன்றவனாய், “திருமண வாழ்த்துக்கள் யவனதாட்சாயினி…” அவளை உறுத்துப் பார்த்து அவன் கூறவே. அவளோ அவன் கோபம் எதற்காக என்பது போல அவனையே நோக்கிக்கொண்டிருந்தாள் ஒன்றும் புரியாமல்.

 

அப்பொழுது, “தாட்சா இங்கே வா…” என்று மாப்பிள்ளை அவளை அழைத்தான்.

 

அதில் கொஞ்சம் அணைந்து போனது போல இருந்த நெருப்பு மேலும் கொழுந்து விட்டு எரிய, அவளது கையைப்பிடித்து அங்கே சற்று மறைவாக இழுத்துச் சென்றான்.

 

தன்னிடம் உள்ள செக்கை எடுத்து அதில் பல லட்சங்களை நிரப்பி, அவள் கையில் அதை வைத்தான்.

 

அதை வாங்கிப் படித்துப் பார்த்தவள் அப்பொழுதும் அவனை குழப்பமாகவே பார்த்தாள். இப்போது இது எதற்கு என்பதுபோல அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

 

அவன் தோள் வரை மட்டுமே உயரம் அவள்.  அவள் அப்படி லேசாய் நிமிர்ந்து பார்ப்பது அவனுக்கு சுவாரசியமான ஒன்றாக இருக்கும் எப்போதும். அவளை அந்த சமயங்களில் எல்லாம் “குள்ளச்சி” என்று கேலி செய்து அவளை கோபப்படவும் வைப்பான்.

 

இன்றும் அதுபோலவே இளகத் துவங்கிய மனதை கட்டுப்படுத்தி அடக்கியவாறே அவளை வார்த்தைகளால் வதைக்கத் தயாரானான்.

 

“இது அந்த ஒருவாரத்திற்கான சம்பளம். எதையும் இலவசமாய் வாங்கி எனக்குப் பழக்கம்  இல்லை. சோ எதற்கும் ஒரு விலை உண்டு அல்லவா?…” இயல்பாக சொல்வது போலச் சொல்லிவிட்டு அவள் முகத்தை அவன் பார்க்க.

 

அவனையே பார்த்திருந்தவளின் கண்களில் அவன் பேசிய வார்த்தைகளுக்கான பிரதிபலிப்பு இல்லை, அருகில் வந்து போய்க்கொண்டிருந்த உறவினர்களின் பொருட்டு அடக்கிக்கொண்டாள் போலும்.

அவன் விரலில் போட்டுவிடு… நான் கொடுத்தேன்னு மறக்காம சொல்லு ரொ..ம்ம்ப்ப்ப சந்தோசப்படுவான்… அப்படியே எதுக்கு தந்தேன்னும் சொல்லு… அதுக்கப்புறம் உன் நிலை கேள்விக்கிடம்தான்” என்றவன் அங்கே இருந்து போயே விட்டான், வஞ்சக சிரிப்புடன்.

 

ஒரு பெண் கிடைக்காவிடில் இப்படியும் பாதகம் செய்யலாமா?…

 

அதற்குள் மணமகன் கிருஷ் அவள் அருகே வந்து, “ஹேய் தாட்ச்சா. எவ்வளவு நேரமா கூப்பிட்டுகிட்டு இருக்கேன் நான்?… ஆமாம் யாரு அவரு?…” ஆர்வமாய் கேட்டான்.

 

அவன் கேள்விக்கு என்னவென்று பதில் சொல்வாள்?… சட்டென்று தன் முகபாவனையை அவனுக்கு தெரியாமல் மறைத்துக்கொண்டு  அவனுக்கு முன்னே நடந்து சென்றவள் மோதிரத்தில் இருந்து சுருக்கென்று ஏதோ கடிக்க அப்படியே மயங்கி சரிந்தாள்…

 

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.6 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!