தேக்கடியில் கடுமையான பனிப்பொழிவு நிலவும் தருணம் அது. எதிரே வரும் வாகனங்கள் கூட கண்களுக்குத் தெரியாது. எட்டு மணி ஆனாலும் இருட்டு கவிந்தது போலவே தோற்றம் அளிக்கும்.
அதிகாலை நான்கு மணி இருக்கும், ஸ்வெட்டர், மப்ளர் போன்ற பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொள்ளாது வீட்டை விட்டு வாசல்படியில் காலை வைத்தால் ஆளையே நின்ற இடத்தில் சிலையாய் நிற்கவைத்துவிடும்.
அந்த அளவிற்கு தேக்கடியில் கடும்குளிர் நிலவும் அக்டோபர் பிப்ரவரி மாத இடைவெளியில்.
கோடையில் இருந்து தப்பி ஓடிவரும்,சுற்றுலாபயணிகளுக்கும் புதிதாய் திருமணம் ஆன தம்பதிகளுக்கும், வேண்டுமானால் அது இதமான மாதங்களாகத்தான் இருக்கும். ஆனால் தேக்கடிவாசிகளுக்கு, இக்கரைக்கு அக்கரை பச்சை என்று சொல்வார்கள் இல்லையா அதுபோலத்தான். அவர்களைப் பொறுத்தவரை இந்த குளிர் எல்லாம் சாதாரண விஷயமாக இருக்கும், இதெல்லாம் ஒரு குளிரா என்பதுபோலக் கடந்துவிடுவார்கள்.
அப்படிப்பட்ட காலை நேரத்தில் ஒருவன் கண்மண் தெரியாத வேகத்தில் தன் காரை செலுத்திக்கொண்டிருப்பது மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பதாகவும் இருந்தது.
சிலரோ கார் ஓட்டுபவனை அடையாளம் கண்டுகொண்டு அவன் பிரபல்யத்தைப் பற்றி அருகில் இருப்பவர்களிடம் , “பணம் இருக்குன்னு இப்படியும் ஆடக்கூடாதுப்பா. போறது ஜெயராமன் சாரோட பையன். உனக்கு அவரைத் தெரியலையா?… நம்ம ஊரிலேயே அவர் குடும்பத்தில்தானே இந்த மாதிரி விலை அதிகமான கார் வச்சிருக்காங்க. பாவம் ஜெயராமன் சார். அவர் பையனுக்கு சின்ன வயசுதான் ஆகுது. இந்த வயசுல இந்த மாதிரி கெட்ட பழக்கம் இருக்கு… அப்பன் பேரை கெடுப்பான் போல…”
என்று அவரே அவன் குடித்துவிட்டு காரை ஒட்டுவதாக கற்பனை செய்து அதை மற்றவர்களுக்கு பரப்பவும் செய்தார்.
ஜெயராமன் குடும்பத்தின் மேல் அக்கறை உள்ள ஒருவர் அவன் தந்தைக்கு செய்தி அனுப்பினார்.
இப்படி பலரின் விமர்சனத்திற்கு ஆளாகிக்கொண்டே அப்படி ஆக்ரோஷமாக யாரைப் பார்க்கப் போகிறான் அவன்?…
உடலை உறைய வைக்கும் அந்தக் கடும்குளிரில் ஒற்றை ஜெர்கினை மட்டும் அணிந்து கொண்டு, தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று எதையும் பொருட்படுத்தாமல், ஒருவேளை குளிர் கூட உடம்பில் உரைக்காத அளவிற்கு யார்மீது கோபமோ அல்லது வெறுப்போ?…
லேட்டஸ்ட் லம்போர்கினி மாடல்களில் ஒன்றான ஹூராகேன் காரை தன் வலிமை வாய்ந்த கரங்களால் அசட்டையாக ஓட்டிக்கொண்டிருந்தான்.
அவனைப் பார்க்க அசட்டையாக இருப்பது போலத்தான் தெரியும். ஆனால் அவன் முகம், தாடை எல்லாம் உறுதி வாய்ந்த எக்கைப் போல இறுகிப் போய் இருக்க. விட்டால் காரின் ஸ்டியரிங்கை உடைத்துவிடுவான் போல இருந்தது. கைகளின் நரம்புகளெல்லாம் கோபத்தில் புடைத்து வெளியே தெரித்துவிடும் நிலையில் இருக்க. அத்தனை ஆக்ரோஷமாக அதை வளைத்து திருப்பியது வளைவுகளில்.
தன் வலிமையான பாதங்களால் எஸ்கலேட்டரை விடாது அழுத்திப் பிடித்திருந்தவனுக்கு உயிரின் மேல் சிறிதளவேனும் பயம் இல்லை போலும்.
கடும் சினத்தில் தேக்கு மரத்தை ஒத்த தேகமெங்கும் அனல் பறக்க, அதை அப்படியே காரின் வேகத்தில் காட்டினான். கார் பறக்கிறதா அல்லது சாலையில் ஓடுகிறதா என்பதே தெரியாத அளவிற்கு படுவேகம்.
திறமையுள்ளவன் கார் டயரின் அடியில் குனிந்து பார்த்தால், ரோட்டிலிருந்து, கார் கால் இன்ச் மேலே பறப்பது போன்ற ஒரு மாயத்தோற்றத்தை நமக்குத் தரும்.
தேக்கடி ரோட்டில் அந்த வேகத்தில் ஒரு கார் செல்கிறது என்றால், அந்த காரின் டயர்கள் என்ன ஆகும் என்பது கேள்விக்கிடம்தான்.
உண்மையில் அவன் மனதில் எரிமலை வெடித்து சிதறிக்கொண்டிருந்தது. அத்தனை வஞ்சினம், கோபம், வெறுப்பு, அவன் மனதில் அலைஅலையாய் ஆர்ப்பரித்து அவனை நிதானம் கெட வைத்தது…
அதற்கு காரணமான பெண்ணவளை நேரில் பார்த்து தன் கையாலேயே கொலை செய்யவும் தற்போது தயாராகத்தான் செல்கிறான். தன்னை ஏமாற்றிவிட்டு இன்னொருவனுக்கு அவள் கிடைக்கவும் கூடாதென்பதில் உறுதியாய் இருந்தான் அவன்.
“என்னோடு அப்படியெல்லாம் பழகிட்டு, நெருக்கமாய் இருந்துட்டு உன்னால எப்படி இதைச் செய்ய முடிந்தது? துரோகி…” ஓங்கி போர்டின் மீது குத்தியவனுக்கு அவள் மீது வெறுப்புதான் வந்தது.
2…
கையாலேயே கொலை செய்யவும் தற்போது தயாராகத்தான் செல்கிறான். தன்னை ஏமாற்றிவிட்டு இன்னொருவனுக்கு அவள் கிடைக்கவும் கூடாதென்பதில் உறுதியாய் இருந்தான் அவன்.
“என்னோடு அப்படியெல்லாம் பழகிட்டு, நெருக்கமாய் இருந்துட்டு உன்னால எப்படி இதைச் செய்ய முடிந்தது? துரோகி…” ஓங்கி போர்டின் மீது குத்தியவனுக்கு அவள் மீது வெறுப்புதான் வந்தது.
அவன் அப்பாவின் நண்பர் சந்தனுவின் மகள் என்பதாலும், அவன் ஹோட்டலுக்கு எதிரே சந்தனுவின் வீடு இருப்பதாலும் அவளை நினைவு தெரிந்த நாளில் இருந்தே அவனுக்குத் தெரியும் எனலாம்.
அழகு குவியல்களாக இருக்கும் அவளைப் பிரியவே அவனுக்கு மனம் வராது. பார்பி பொம்மை போலவும். தன் விரல்களால் தொட்டுப் பார்க்க பஞ்சு போல இருப்பாள்.
அதற்குப்பின் பொம்மை என்ற மனப்பான்மை சிறிதுசிறிதாக மாறிப்போக, அன்பு, நட்பு, காதல், ஆளுமை மற்றும் அதற்கு மேலும் மனைவி என்று ஆழமாய் போய்விட்ட உறவு அவர்களுக்கிடையில்.
இரண்டு மாதத்தில் இருவரும் திருமணம் செய்துகொள்ளலாம் என்று முடிவு செய்த நிலையில், இப்படி ஒரு செய்தியை அவனால் சிறிதும் நம்ப இயலவில்லை.
அவளாக இருக்காது என்று அவன் மனது உறுதியாய் சொல்கிறதுதான். ஆனாலும் தன்னிடம் விஷயத்தை சொன்னவரின் வார்த்தைகளை அவனால் அலட்சியம் செய்யவும் முடியவில்லை.
அவன் மனதில் அவளோடு இருந்த அந்த நாட்களின் நினைவுகள் திரும்பத் திரும்ப எழவே, அதன் கணம் தாங்காதவனாய் அதுவரை ஒரு லாவகமாக ட்ரைவ் பண்ணியவாறு இருந்தவனின் கரங்கள் பலவீனமாக. ஒரு நிமிடம் நிலை தடுமாறியவன் அருகே வந்த வாகனத்தில் மோத இருந்தான்.
அவனின் நல்லநேரமோ. அல்லது எதிரில் வந்தவனுக்கு ஆயுசு கெட்டியோ தெரியவில்லை. அவன் பதறிப்போய் சுதாரித்து விலகியிருக்காவிடில், கேரளாவின் ஒன்வே ரோட்டில் வேகம் ஒன்றையே தாரக மந்திரமாய் கொண்டு சென்று கொண்டிருக்கும் வாகனங்கள் ஒன்றை ஒன்று மோத பெரும் விபத்தே நடந்திருக்கும்.
எப்படியோ கடவுள் அருளால் நூலிலையில் உயிர் தப்பித்தான் அல்லது பல உயிர்கள் தப்பித்தது என்றே சொல்ல வேண்டும். ஆனால் அதெல்லாம் அவன் மனதில் உரைக்கவே இல்லை போலும், மேலும் ஆக்ரோஷமாகவே முன்பை விட வேகமாய் செலுத்தினான் காரை.
கார் கோவிலின் முன் பெரும் க்ரீச் என்ற சத்தத்துடன் நிற்க. அதில் இருந்து வேகமாய் இறங்கியவன், அதே வேகம் குறையாது கோவிலின் படிகளில் ஏறலானான்.
அன்று விசேஷமான முகூர்த்த நாள் என்பதால் கோவில் நன்கு அலங்கரிக்கப்பட்டு இருந்தது… கோவிலில் மாவிழைத்தோரணங்கள், வாழைமரங்கள், பூமாலைகள் கொண்டு அழகு செய்திருந்தது.
அதில் எல்லாம் அவனது கவனம் செல்லவேயில்லை. கொக்குக்கு மீன் ஒன்றே மதி என்பதுபோல, அவளை மட்டுமே அவனது கண்கள் தேடியது.
அடிக்கடி அவனது கைகள் தன் சர்ட் பாக்கெட்டையும் தொட்டுப் பார்த்தது. தூரத்தில் அவனைப் பார்த்துவிட்ட சகாயம் வேகமாய் அங்கே வந்தார், அவனை நோக்கி.
கோவிலில் உள்ளே செல்வதற்காய் கடைசி படியில் கால் வைக்கப்போனவன் அப்படியே காலை உள்ளிழுத்துக்கொண்டான். ஏற்கனவே தெரிந்ததுதான் என்றாலும், அந்த காட்சியை நம்ப இயலாமல் அவன் உள்ளம் தவித்தது. கண்கள் தானாய் சிவந்தன.
ஆம் தேவதையின் அலங்காரத்தில் அவள் அமர்ந்திருக்க, அவள் கழுத்தில் திருமாங்கல்யத்தை கட்டி தன் மனைவியாக்கியிருந்தான் அவன்.
ஆனால் விக்ரம் கண்களுக்கு அவள் அப்படியொன்றும் அழகாய்த் தெரியவில்லை. ஏனோ அவன் கண்களுக்கு எப்பொழுதும் பேரழகியாய்த் தெரிபவள் இன்று அதில் ஒரு மாற்று குறைந்தது போலவே இருந்தது.
காமாலைக்காரனுக்கு பார்ப்பது எல்லாம் மஞ்சள் நிறமென்பார்கள். அதுபோல மனதெங்கிலும் வெறுப்பே நிறைந்திருப்பதால் அவளே ஒரு குறையாக தெரிந்தாள் போல.
தான் விரும்பியவளின் கழுத்தில் இன்னொருவன் மாங்கல்யம் கட்டுவதை கண்கொண்டு பார்த்தவனுக்கு நம்ப முடியவேயில்லை, மனமெல்லாம் ஆறாத ரணமாய் வலிக்க, வைத்த கண் வாங்காமல் அவர்களையே வெறித்தவண்ணம் நின்றிருந்தான்.
அவனது உள்ளங்கையில் பொதித்து வைத்திருந்த வைரமோதிரம், அது ஒருபக்கம் அவன் உள்ளங்கையை குத்திக் கிழித்து ரணமாக்கியது…
எத்தனை நேரம் அப்படியே இருந்தானோ தெரியவில்லை, அவன் தோளை யாரோ ஒருவர் தொட திடுக்கிட்டு விழித்தவன் எதிரே பார்த்து அதிர்ந்தான்.
ஆம் அவளேதான். அவனால் சிறிதும் நம்பவே முடியவில்லை சற்று முன் வேறு ஒருவனுக்கு மனைவியாகிருந்தவள் இப்பொழுது தன் கண் முன்னே நின்றிருக்க, அவளை லேசாய் தொட்டுப் பார்க்கப் போனவன் குழம்பினான். ஒருவேளை நடந்ததெல்லாம் பொய்யோ என்று.
அழகான கருஞ்சிவப்பு நிற பட்டில் அரக்கு நிற பட்டு ரவிக்கை அணிந்து, அதற்கேற்ப கூந்தல் அலங்காரம் செய்து, நீண்ட ஜடையை முன் புறம் போட்டிருந்தாள். எல்லோரும் அட்சதை பூக்களை போட்டிருந்ததால், தலையெங்கும் மஞ்சள் சிவப்பு நிற பூக்கள் சிதறியிருந்தது. காதில் பெரிய ஜிமிக்கி, கழுத்தில் நீண்ட ஆரம் போன்ற அணிகலன்களும் அணிந்து தேவதையாய் மின்னியவாறு அவன் எதிரே நின்றிருந்தாள்.
அவளையே ஆராய்ந்து கொண்டிருந்தவனின் பார்வை
அவள் தன்னை எப்பொழுதும் பார்க்கும் அந்த பிரத்தியேகமான காதல் பார்வையை பார்த்ததுடன்.
“நான் அழகாயிருக்கேனா?” என்றவள் அவனை ஆவலுடன் மயக்கும் பார்வை ஒன்றையும் பார்த்து வைக்கவும்.
அதை கண்டவனின் மனமெங்கும் அடுத்த நிமிடமே அருவருப்பு பரவ, அவளையே வெறித்திருந்தான், ‘எப்படிடி ஒருவாரமாய் என்னோடு அப்படியெல்லாம் இருந்துட்டு, கொஞ்சம் கூட வெட்கமேயில்லாம இன்னைக்கு வேற ஒருத்தன் மனைவியாகிட்டு இப்போ திரும்பவும் என்னைக் காதலோடு பார்க்கிறே?… ச்சீ நீயெல்லாம் ஒழுக்கமான பெண்ணா?…” வார்த்தைகளை கடித்து துப்பியவாறே அவளையே அசூசையாக பார்த்திருந்தான் அவன்.
அவன் பார்வையில் இருந்த உணர்வு அவளுக்கு புரிந்து விட்டதோ என்னவோ, எதுவும் பேசத்தோன்றாதவளாய் அதிர்ந்து அவனைக் கேள்வியாகப் பார்த்தாள்.
அவள் அதிர்ந்த பார்வையில் தன்னை சமன் செய்ய முயன்றவனாய், “திருமண வாழ்த்துக்கள் யவனதாட்சாயினி…” அவளை உறுத்துப் பார்த்து அவன் கூறவே. அவளோ அவன் கோபம் எதற்காக என்பது போல அவனையே நோக்கிக்கொண்டிருந்தாள் ஒன்றும் புரியாமல்.
அப்பொழுது, “தாட்சா இங்கே வா…” என்று மாப்பிள்ளை அவளை அழைத்தான்.
அதில் கொஞ்சம் அணைந்து போனது போல இருந்த நெருப்பு மேலும் கொழுந்து விட்டு எரிய, அவளது கையைப்பிடித்து அங்கே சற்று மறைவாக இழுத்துச் சென்றான்.
தன்னிடம் உள்ள செக்கை எடுத்து அதில் பல லட்சங்களை நிரப்பி, அவள் கையில் அதை வைத்தான்.
அதை வாங்கிப் படித்துப் பார்த்தவள் அப்பொழுதும் அவனை குழப்பமாகவே பார்த்தாள். இப்போது இது எதற்கு என்பதுபோல அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
அவன் தோள் வரை மட்டுமே உயரம் அவள். அவள் அப்படி லேசாய் நிமிர்ந்து பார்ப்பது அவனுக்கு சுவாரசியமான ஒன்றாக இருக்கும் எப்போதும். அவளை அந்த சமயங்களில் எல்லாம் “குள்ளச்சி” என்று கேலி செய்து அவளை கோபப்படவும் வைப்பான்.
இன்றும் அதுபோலவே இளகத் துவங்கிய மனதை கட்டுப்படுத்தி அடக்கியவாறே அவளை வார்த்தைகளால் வதைக்கத் தயாரானான்.
“இது அந்த ஒருவாரத்திற்கான சம்பளம். எதையும் இலவசமாய் வாங்கி எனக்குப் பழக்கம் இல்லை. சோ எதற்கும் ஒரு விலை உண்டு அல்லவா?…” இயல்பாக சொல்வது போலச் சொல்லிவிட்டு அவள் முகத்தை அவன் பார்க்க.
அவனையே பார்த்திருந்தவளின் கண்களில் அவன் பேசிய வார்த்தைகளுக்கான பிரதிபலிப்பு இல்லை, அருகில் வந்து போய்க்கொண்டிருந்த உறவினர்களின் பொருட்டு அடக்கிக்கொண்டாள் போலும்.
அவன் விரலில் போட்டுவிடு… நான் கொடுத்தேன்னு மறக்காம சொல்லு ரொ..ம்ம்ப்ப்ப சந்தோசப்படுவான்… அப்படியே எதுக்கு தந்தேன்னும் சொல்லு… அதுக்கப்புறம் உன் நிலை கேள்விக்கிடம்தான்” என்றவன் அங்கே இருந்து போயே விட்டான், வஞ்சக சிரிப்புடன்.
ஒரு பெண் கிடைக்காவிடில் இப்படியும் பாதகம் செய்யலாமா?…
அதற்குள் மணமகன் கிருஷ் அவள் அருகே வந்து, “ஹேய் தாட்ச்சா. எவ்வளவு நேரமா கூப்பிட்டுகிட்டு இருக்கேன் நான்?… ஆமாம் யாரு அவரு?…” ஆர்வமாய் கேட்டான்.
அவன் கேள்விக்கு என்னவென்று பதில் சொல்வாள்?… சட்டென்று தன் முகபாவனையை அவனுக்கு தெரியாமல் மறைத்துக்கொண்டு அவனுக்கு முன்னே நடந்து சென்றவள் மோதிரத்தில் இருந்து சுருக்கென்று ஏதோ கடிக்க அப்படியே மயங்கி சரிந்தாள்…
ஆம் அந்த மோதிரத்தில் விஷபூச்சியை தேர்ந்த நிபுணர்களின் உதவியோடு வைத்திருந்தான். அதில் ஒரு குறிப்பிட்ட இடத்தை அழுத்திப்பிடித்தால் மட்டுமே கடிக்கும் வகையில்.
சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமப் புணையைச் சுடும்.
சினம் என்பது யாரிடம் இருக்கிறதோ அவர்களை அழித்து விடுவதோடு அவருக்கு வாழ்வில் பேருதவியாக இருக்கும் அருநட்பையும் கெடுத்து விடும் என்று எடுத்துக் கூறுகிறது இக்குறள்.
பார்ப்போம் சினத்தால் இவர்கள் வாழ்க்கை என்ன ஆகிறது என்று.