நளிர் 10,11
10…
கேட்டாதான் கமெண்ட் பண்ணுறீங்க. 🫢
இரவு அபிக்கும் சஜித்துக்கும் ப்ரூட்ஸ் கட் பண்ணி தட்டில் எடுத்து வைத்தவள், “கண்ணா ரெண்டு பேரும் வாங்க இங்கே… அம்மா ப்ரூட்ஸ் கட் பண்ணி வச்சிருக்கேன்” தாட்சா குரலை உயர்த்தி அவர்களை அழைக்க.
“இங்கேதான் மாம் இருக்கோம்…” குரல் கொடுத்தவாறே இருவரும் இருக்கையில் வந்து அமர்ந்து கொண்டார்கள்.
பொதுவாய் ரெஸ்ட்டாரெண்டில் மூலையில் உள்ள ஒரு டேபிளில் யாரையும் அமர விடுவதில்லை அவர்கள். ஏதேனும் அசதியாக இருக்கும் பொழுது தங்கள் யாரேனும் உட்காரவோ, அல்லது மாலை வேளைகளில் அபியும் சஜித்தும் ஹோம் ஒர்க் பண்ணட்டுமே என்று யோசித்த சகாயம் அந்த டேபிளுக்கு செல்லும் வழியில் ஒரு தடுப்பையும் போட்டிருந்தார்.
எத்தனை கூட்டம் வந்தாலும் சரி அங்கே யாருக்கும் அனுமதியில்லை என்று உறுதியாய் மறுத்துவிடுவார். அதில் தாட்சாவுக்குத்தான் வெகு நிம்மதி.
ஏனெனில் அதில் ஒரு இருக்கையில் அமர்ந்து கால்களை எதிரே உள்ள இருக்கையில் நீட்டிகொண்டே எந்த வேலையுமில்லாமல் அமைதியாய் வேடிக்கை பார்த்திருப்பாள். சிலசமயங்களில் யாரேனும் அவளோடு பேச்சுக்கொடுக்க வந்துவிடுவார்கள்.
சில நேரம் கீரைகளை சுத்தம் செய்வது, காய்கறிகளை நறுக்குவது என்று எல்லா வேலைகளையும் யாரிடமாவது பேசிக்கொண்டே செய்துவிடுவாள்.
“மாம்…! உங்களுக்கு இன்னும் கொஞ்சம் லாங் ஹேர் இருந்திருக்கலாம் அழகாய் இருக்கும். எங்க ஷீபா மேம் அழகாய் கிளிப் போட்டு ஜாஸ்மின்லாம் வச்சுட்டு வருவாங்க தெரியுமா…?” அபி ஆர்வமாய் கேட்கவே.
மகளைப் பார்த்து லேசாய் புன்னகைத்த தாட்சா, “லாங் ஹேர் பராமரிக்க முடியறதில்லையே அபி. அதுவும் தாத்தாவுக்கு ஜடை போட வராது, அதனால் நான் எட்டாம் வகுப்பு படிக்கற வரையில் கட் பண்ணி விட்டிருவாங்க. அப்புறம் எங்க மிஸ் உங்க தாத்தாவை கூப்பிட்டு திட்டிய பிறகுதான் தோள் வரைக்குமாவது வளர்க்க விட்டார்…” பழைய நினைவுகளில் ஆழ்ந்தவளுக்கு அத்தோடு தொடர்புடைய வேறு நினைவுகளும் எழுந்தது.
ஆம் சேனா கூட இப்படித்தானே சொல்வான். நீளமாய் வளர்க்காவிட்டாலும் கொஞ்சம் தோள் வரையாவது வளரட்டும் விட்டுடுங்க அங்கிள் என்று அப்பாவிடம் சண்டைக்கே போய்விடுவானே…
“மாம், என்னைப் பாருங்க…” அபி உழுக்கவே. தன் நினைவுகளில் இருந்து விடுபட்ட தாட்சா, “சொல்லுடாம்மா
என்ன?…” என்று கேட்கவே.
“நாளைக்கு என்னோட பிரண்ட்ஸ் எல்லோரும் இங்கே வராங்களாம்… அவங்களுக்கு என்ன செய்யலாம் சாப்பிட?…” சஜித் ஆர்வமாய் தாட்சாவை பார்த்தான்.
“அம்மா நானும் அந்த பார்ட்டியில் கலந்துக்குவேன்…” அபி துள்ளிகுதிக்க.
“அபிம்மா நீயும் என்னோட பிரண்டுதானே. சோ நீயும் அந்த பார்ட்டியில் இருக்கே…” சஜித் அபியை அமைதிப்படுத்தினான்.
மகனை பார்த்தவளுக்கு வியப்பாய்த்தான் இருந்தது. ஆம் ஒன்பது வயதுதான் ஆகிறது இருந்தாலும், உயரமாய், வயதிற்கு மீறிய உடல்கட்டோடு இருந்தவனைப் பார்க்க அவளுக்கு அவன் தந்தையின் நினைவுதான் வந்தது.
சகாயம் கூட அவளுக்கு ஆலோசனை வழங்கினார், அவனை ராணுவ பள்ளியில் சேர்த்துவிடலாம் என்று.
தாட்சாதான் மகனை ராணுவபள்ளிக்கு அனுப்பமாட்டேன் என்று பிடிவாதமாக இருந்துவிட்டாள். மகன் விளையாட்டாய் வளரட்டுமே என்ற எண்ணம் அவளுக்கு.
மீண்டும் யோசனைக்கு சென்றவளை இழுத்து பிடித்த சஜித், “மாம் மஸ்ரூம் சப்பாத்தி ரோல் செய்திடுங்க அதில் லேசாய் பட்டரும் மிக்ஸ் பண்ணிடுங்க. வெஜிடபிள் தயிர்பச்சடி, சிக்கன் கிரேவி. ஐஸ்க்ரீம் சாலட். லாஸ்ட்டா கொஞ்சம் ஜூஸ் இதுவே போதும்மா…” சஜித் சொல்லவே.
அவன் தலையை லேசாய் கலைத்துவிட்ட தாட்சா, “கூடவே வெண்ணிலா கேக்கும் செய்துடறேன் சஜித், உன்னோட பிரண்ட் அன்வர்க்கு பிறந்தநாள்ன்னு சொன்னியே…” தாட்சா சொல்லவும்.
அம்மாவை கட்டிக்கொண்ட சஜித், “லவ் யூ ம்மா… நானே இதை யோசிக்கலை பாருங்க…” சஜித் அம்மாவின் கன்னத்தில் முத்தமிட, அபியும் இன்னொரு கன்னத்தில் கொடுக்கலானாள்.
அவர்கள் மூவருக்கும் சூப் எடுத்து வந்த சகாயம், “ரெண்டு பேரும் சமர்த்தா குடிச்சிட்டு அம்மாவையும் குடிக்க வைங்க பார்க்கலாம்…” என்று அகன்று விடவே.
“தாத்தா ரொம்ப சார்ப் பீசு மாம்…” சஜித் கேலி செய்யவும், அவனுக்கு ஹைபைவ் கொடுத்தாள் அபி.
“சரி சரி டைம் ஆகிடுச்சு, தாத்தாவை கேலி செய்தது போதும். வாங்க போய் படுக்கலாம்…” அவர்களை அழைத்துப் போனவள், படுக்கையில் படுக்க இருவரும் ஆளுக்கொருபுறம் அவளை கட்டி அணைத்துக்கொண்டு உறங்களானார்கள்.
*****
மறுநாள் வேலைக்கு கிளம்பியவளுக்கு நிறைய தடுமாற்றங்கள், எல்லாமே தப்பு தப்பாக செய்து கொண்டிருக்க.
எப்பொழுதும் ரெஸ்ட்டாரெண்டுக்கு தேவையான
ரெட்சட்னி, காரசட்னி, தேங்காய்ச்சட்னி, இப்படி ஏழுவகையான துவையல் வகைகளை தயார் செய்து விட்டுத்தான் செல்வாள். அடுத்து சப்பாத்திக்கு ஒரு குருமாவும் செய்துவிடுவாள்.
இதை தயார் பண்ணி வைத்துவிட்டு சென்றாளானால் சந்தனுவும் சகாயமும் மற்றதை செய்துகொள்வார்கள். அடுத்து மாலை 6 மணிக்கு வந்தால் ஸ்னேக்ஸ் ராகி அடை, போண்டா, பஜ்ஜி போன்றவற்றை அவளும் சந்தனுவும் சேர்ந்து செய்வார்கள்.
தாட்சா மிக்சியில் சட்னி அரைப்பதற்காய் எடுத்துவைக்கவும். முதல் தடவை அவள் மேலே தெறிக்கவும், இரண்டாவது தடவை செய்து அதுவும் தோல்வியே.
தன் மீது சிதறி இருந்த தேங்காய் துருவல்களை நீர் விட்டு சுத்தம் செய்தவள், மீண்டும் அறைப்பதற்காக செல்லவும்,
அவள் அருகில் நல்ல மனமுடன் சூடாக ஒரு பிளாக் காபி நீட்டப்பட்டது.
நிமிர்ந்து சகாயத்தைப் பார்த்தவளின் கண்கள் கலங்கிப்போய் இருந்தது. அந்த அளவிற்கு மனஉழைச்சலில் தவித்துக்கொண்டிருந்தாள்.
அதைப்பார்த்து மனம் வருந்தியவராய் அவளை இருக்கையில் அமரவைத்து தானும் அமர்ந்தவர், “புலி வருது வருதுன்னு பயந்து ஓடிப்போனா போய்கிட்டேதான் இருக்கணும் தாட்சா. ஆனால் அதுவே எதிர்த்து நின்னு திரும்பி பாரு, அது பயந்து போய் விலகிடும்…” அவர் அமைதியாய் சொல்லவே.
“ஒருவேளை வர்றது முரட்டுப்புலியாய் இருந்தா, எதிர்த்து நிக்குற ஆளை அடிச்சு சாப்பிட்டுடும் அங்கிள். அத்தோடு எதிர்த்து நிக்குற அளவுக்கு எனக்கு பலமும் இல்லை அங்கிள்…” எனவும்.
“முரட்டுப்புலின்னு எதுக்கு நினைக்கணும் தாட்சா. நமக்கு தெரிந்த புலிதானே அது?…” சகாயம் கேட்கவும்.
“ஆனால் அங்கிள் வர்றது புலி இல்லையே நான் எதிர்த்து நிற்க. என்னோட பலம் பலவீனம் எல்லாமே அவர்தான். இப்படியிருக்கையில் அவரை நான் எப்படி எதிர்த்து நிப்பேன்?…” அவர் தோளில் சாய்ந்து அழுதவளுக்கு தான் கடந்து வந்த இந்த பத்து வருடங்களும் மலைபோல தெரிந்தது.
“புலியோ சிங்கமோ எதுவோ ஒன்னு. வரட்டும் விடும்மா. அப்போதானே ஏன் எதுக்குன்னு நம்ம மனசை குடையர கேள்விகளுக்கும் விடை கிடைக்கும்…” ஒருவழியாய் சகாயம் அவளைத் தேற்றி அனுப்பிவைத்தார்.
11…
thank you so much dear honeys 💕
அன்று செவ்வாய்க்கிழமை என்பதால் கோவிலுக்கு செல்லும் பொருட்டு, கேரளாவின் ஸ்பெஷலான வெண்பட்டு புடவை கட்டியிருந்தவள், அதற்கு மேட்ச்சாக அழகாய் டைனி டைனி கிரிஸ்டல் கற்கள் எம்பிராய்டரி செய்யப்பட்டும். முதுகுப்புறம் நன்கு இறக்கி தைக்கப்பட்டு. அதை ஒற்றை கயிறு அழகாய் முடிச்சிடப்பட்டு இருந்தது.
கழுத்தில் அதே தங்க நிறத்தில் சின்ன சின்ன மணிகளை கோர்த்து சரமாய் தொங்கும் ஒற்றை பாசியும் அலங்கறித்தது. காதுகளில் அதே வேலைப்பாடுகள் கொண்ட காதணியும் அவளை அப்சரசாக காட்டியது.
அவள் வேலைக்கு செல்வது பிரம்மாண்ட ஹோட்டலுக்கு. அந்த ஹோட்டலுக்கு வருபவர்கள் எல்லாமே கோடீஸ்வரர்களாக மட்டுமே இருக்க முடியும். பின்னே ஒரு நாளைக்கு பத்தாயிரம் வாடகை தருகிறார்கள் என்றால் அவர்கள் செல்வந்தர்களாக அல்லவோ இருக்க முடியும்?…
செல்லுமிடத்திற்கு தகுந்த அலங்காரம் தேவைதானே. அங்கே சாதாரணமான உடைகளை அணிவது முற்றிலும் தவிர்க்க கூடிய ஒன்றாகும்.
குறிப்பிட்ட தகுதிக்கு கீழ் உள்ளவர்களுக்கு சீருடையும் கொடுக்கப்பட்டிருந்தது அங்கே. ரிசப்ஷனிஸ்ட் உள்பட.
தாட்சா மட்டும் ஜெயராமனின் அனுமதியோடு தப்பிப் பிழைத்து அவள் விரும்பிய உடைகளை அணிகிறாள்.
செக்யூரிட்டி ராபர்ட் அவளுக்கு பெரிய சல்யூட் ஒன்றை வைக்க, அவரை கோபமாய் முறைத்தவள், “ராபர்ட் அண்ணா இந்த வணக்கம் எல்லாம் இங்கே வரும் பெரிய பெரிய தலைங்களுக்கு மட்டுமே பொருந்தும். நான் இங்கே உங்களைப் போலத்தான் ஒரு சாதாரண பணியாள். எதிர்ல இருக்குற குட்டி ஹோட்டல் முதலாளி மட்டுமே நான். அதனால இந்த வணக்கம் எல்லாம் இனிமேல் வேண்டாம் சரியா?…” அவள் சற்று கோபமாகவே கேட்க.
“அடப்போ தாயி. எனக்கு டபுள் ஸ்ட்ராங்கா சாய் போட்டு தர்ற நீதான் எனக்கு முதலாளியம்மாவாக்கும். உன்னால ஆதரவற்ற முதியவர்கள் எத்தனை பேர் பசியாருகிறாங்க தெரியுமா?… அதனால உனக்கு வேண்டாம்னா நீ திரும்பிக்கோ நான் அப்படித்தான் வைப்பேன்…” அவர் அசட்டையாக சொல்லவே…
தலையில் அடித்துக்கொண்டவள், “இந்த பெருசுங்ககிட்ட பேசி ஜெயிக்க முடியாது என்னால. எப்படியோ போங்க. சரி தலைவரை இன்னைக்கு கொஞ்சம் நேரத்தில வரச் சொல்லுங்க. நேத்தே லேட் ஆகிடுச்சு பார்த்தீங்களா?…” அவரை செல்லமாக கடிந்து கொண்டவளாக அங்கே இருந்து கிளம்பியும் விட்டாள்.
போகும் அவளையே கனிவாய் பார்த்திருந்தார் ராபர்ட். ஆம் தேக்கடியில் கை விடப்பட்ட முதியவர்கள் அங்கே உள்ள சத்திரத்தில் தங்கியிருப்பார்கள். சுற்றுலா வருபவர்கள் சாப்பாடு கொடுத்தால் அவர்கள் பசி அடங்கும். அன்றி அங்கே கடைகளில் கொடுக்கப்படும் சிறு சிறு வேலைகளையும் செய்வார்கள் .
இதையெல்லாம் அறிந்த தாட்சா, அந்த ஹோட்டலுக்கு வேலைக்கு சென்ற தினத்தில் இருந்து, அங்கே வீணாகும் உணவு வகைகளை, அம்முதியவர்களுக்கு கொடுத்து சாப்பிட வைத்துவிடுவாள்.
அவளுக்கு யாராவது நன்றி சொல்ல விரும்பினால், “ஜெயராமன் அங்கிளோட ஹோட்டல் இது. அதனால
அவருக்கு பிரே பண்ணிக்கோங்க. அவர் நல்லாயிருந்தால்தானே நாமும் நல்லாயிருக்க முடியும்?…” என்று தவிர்த்துவிடுவாள்.
மொத்தத்தில் அங்கே உள்ள அனைத்து பெரியவர்களுக்கும் செல்லப்பெண் தாட்சா. சந்தானம் முதற்கொண்டு சகாயம் ஜெயராமன் இன்னும் பட்டியல் நீளும்.
உள்ளே நுழைந்தவளிடம் பன்னீர் ரோஜா மணக்க அத்தோடு குங்குமப்பூவையும் கலந்த ரசகுல்லா நீட்டப்பட்டது செஃப் ஸ்டீபன் மூலம்…
“வாவ் ரசகுல்லா…ஆனால் நாலே நாலுதான் இருக்கு. இருந்தாலும் இத்தனை கஞ்சத்தனம் ஆகாது செஃப் உங்களுக்கு…” தனக்கு ஆசையாய் கொண்டு வந்து தருபவனிடம் போலியாய் சண்டையிட்டவாறு, சாப்பிட்டவள்.
“ஹவ் ஸ்வீட். உங்க கைக்கு வைரம் கூட ஈடாகாது செஃப். அவ்ளோ டேஸ்ட் யம்மி…” ரசித்து சாப்பிட்டவள் சிரிக்க.
“வழக்கம் போல அதே டயலாக்தானா அழகி?… நாளைக்கு கொஞ்சம் மாத்தி சொல்லு பார்க்கலாம்…” அவன் கேலி செய்தவாறு தட்டை வாங்கி சென்றுவிட்டான்.
ஏனோ ரசகுல்லா சாப்பிட்டதால் குதூகலமாக ஜெயராமனை தேடி சென்றவள், அவர் தன்னுடைய கோட்டை கூட கழட்டாது. இவள் வந்ததையும் கவனிக்காது கப்போர்டில் எதையோ பார்த்துக்கொண்டிருக்கவும்.
வேகமாய் அவர் அருகே சென்றவள், அவர் கோட்டை கழட்ட முயன்று கொண்டே, “ம்ஹும்! என்னாச்சு அங்கிள். உங்க மகன் வந்துட்டார்ன்னு, இந்த தாட்சாவை டீல்ல விட்டுட்டீங்க போலவே?… கோட் கூட கழட்ட நேரம் இல்லை உங்களுக்கு…” என்றவாறே அவரைத் தன் புறம் திருப்பவும், அங்கே வேறு ஒருவனை கண்டு அதிர்ந்தாள்.
அங்கே நின்றிருந்தவனை அவளுக்கு அடையாளம் தெரியவில்லை, “சாரி. நீங்க?…” கேட்டவளாய் அவனிடம் இருந்து வேகமாய் விலகினாள் பதற்றத்துடன். அவளுக்கு பதட்டமாகிப்போனது, பின்னே அறிமுகமற்ற ஆணின் ஆடையில் கைவைத்த தன்னை என்ன நினைப்பான்?.
அவளது நினைவுகளில் இருந்தது எல்லாம் பத்து வருடத்திற்கு முந்தைய நினைவுகளே. இப்போதைய கம்பீரமான ஆண் மகனை அவளுக்கு சரியாக அடையாளம் தெரியாமல் போய்விட. முன்ன பின்ன தெரியாதவனை தொட்டு பேசிவிட்டோமே என்று சங்கடமும்பட்டாள்.
“ஆஹான்… வெரிகுட்…!” இகழ்வாய் அவளை பார்த்து லேசாய் சிரித்தவன்.
“அடையாளம் தெரியவில்லை போலவே. என் யவனராணிக்கு?…” என்று அவன் அழுத்தமாய்க் கேட்கவே.
அவனை அதிர்ந்து பார்த்தவளுக்கு சத்தியமாய் அடையாளம் தெரியவில்லை. அப்போதைய மிருதுவான குரலுக்கும், இப்போதைய ஆண்மை மிகுந்த அழுத்தமான குரலுக்கும் இடையில்தான் குழப்பம் வந்தது அவளுக்கு. ஆனாலும் அந்த யவனராணி என்ற அழைப்பு?…
அவன்தானா என்று மீண்டும் அவனை ஆழ்ந்து பார்த்தாள். முன்னே இருந்த சேனா உருவமும் குரலும் முற்றிலும் வேறாக இருக்க. இப்பொழுது இருந்தவனின் தோற்றமும் குரலும் சுத்தமாக மாறிபோய் இருந்தது.
எதிர்பார்த்ததுதான் என்றாலும் அவனைப் பார்த்த அதிர்ச்சியில் அவளுக்கு லேசாய் மயக்கம் வருவது போலவும் இருக்க, அருகில் இருந்த இருக்கையில் கையூன்றி நின்றவள், அப்பொழுதும் அவனை அடையாளம் தெரிவதற்காய் மீண்டும் அவனையே பார்த்தாள், இம்முறை பார்த்தவளுக்கு அவன் பார்வையில் சற்று பயமும் வந்தது.
ஒரு மனிதனின் பார்வை இப்படியும் சினம் கொண்டு பார்க்குமா?… பயத்தில் உடல் சிலிர்த்தவளாய் தன்னிலைக்கு வந்தவள், அந்த அறையில் இருந்து போக முற்பட்டாள்.
ஆனால் அதற்கு அவன் விட வேண்டுமே. அவளை ஒருவழி செய்தாக வேண்டும் என்றே வந்திருப்பவன் அவளை சும்மா விடுவானா என்ன?…
தாட்சா அந்த அறையில் இருந்து வெளியே செல்வதற்காக கதவைத் திறக்க முயலவே, அது முடியாமல் போனது.
திரும்பி அவனைப் பார்த்தவள், “ப்ளீஸ்… ஓபன் த டோர்…” என்று அவள் குரல் தடுமாறலாய் ஒலித்தது.
அவன் புருவங்கள் வியப்பாக உயர, அவள் அருகே வந்தவன், “யவனதாட்சாயினிக்கு ஒருகாலத்தில் ஆங்கிலம் பேசுவது பிடிக்காது. ஆனால் இப்போ சரளமாக ஆங்கிலம் பேசுறாங்களே…” அவன் கேலியாகப் பேசவே.
அவள் திகைத்து நின்றாள், ஏனோ அவன் பார்வையும் பேச்சும் அவளுக்கு தற்பொழுது ஒவ்வாமை உணர்வையே கொடுத்தது.
அவன் அவள் அருகே வரவும் வேகமாய் அவனிடம் இருந்து விலகியவள், “இதோ பாருங்க நீங்க எனக்கு பாஸ் மட்டும்தான். சோ ப்ளீஸ் லீவ் மீ …” என்றவளாய் அவனை தன்னிடம் இருந்து தள்ளிப்போகுமாறு எச்சரிக்கை செய்தாள்.
“எதற்கு தள்ளி நிற்கணும் யவனதாட்சாயினி? நமக்கிடையில்தான் நல்ல பழக்கம் இருக்கே?…” என்றவனாய் மேலும் நெருங்க.
அவன் அருகாமை அவளை ஏதோ செய்யும் போல இருக்கவே, வேகமாய் விலக்கியவாறே, “இதோ பாருங்க. என்கிட்டே இந்த தப்பான பேச்சு எல்லாம் வேண்டாம். எனக்கும் உங்களுக்கும் இடையில் எதுவுமே இல்லை இப்போ. அதனால பழசை கிளற வேண்டாம். இப்போ என்னவோ அதை மட்டுமே பேசுங்க…” என்றவளை.
மிக அருகில் நெருங்கியிருந்தவன், அவளை தன்னருகே இழுத்து அவள் இதழ்களை சிறைபிடித்திருந்தான். அவள் சற்று முன் சுவைத்திருந்த குங்குமப்பூ கலந்து செய்திருந்த பன்னீர் குலாப்ஜாமுனின் சுவை அவனை மயக்கியது.
அவள் இதழ்களில் இன்னும் ஆழ்ந்து போனவன், “இன்னும் இந்த குலாப்ஜாமுனை மட்டும் நீ விடுறதாயில்லேடி…” என்றவன் அவள் கழுத்தில் தன் உதடுகளைப் பதிக்க. அதில் சிலிர்த்தவளாய் அவனை தன்னோடு இறுகக்கட்டிக்கொள்ள.
தன் கைகளை அவன் முதுகில் வைக்கப்போனவள், அவன் பற்கள் லேசாய் கழுத்தில் அழுந்த கடிக்கவும், தன் உணர்வுக்கு வந்தவளாய் அவனை வலுக்கட்டாயமாக தன்னிடம் இருந்து பிரித்தாள்.
அவனை கோபமாய் முறைத்தவள், “ச்சீ கொஞ்சமும் வெட்கமாயில்லை உங்களுக்கு?…” அவள் ஆக்ரோஷமாகக் கேட்கவும்.
அவளுக்கு பதில் சொல்ல முற்பட்டவன், அவன் தந்தை வருவதை அங்கே இருந்த திரையில் பார்த்து, ரிமோட்டை எடுத்து கதவின் லாக்கை எடுத்துவிட்டான்.
வேகமாய் அவளிடம் இருந்து விலகியவன் தன் இருக்கையில் கம்பீரமாய் அமர்ந்து கொண்டான்.
அவளோ அவசரமாய் தன்னை திருத்தியவளாய் கண்ணீரை அடக்கிக்கொண்டு நின்றிருந்தாள். ஜெயராமனுக்கு இதை தெரியப்படுத்த அவள் விரும்பவில்லை. எதற்கு அவரை வீணாய் வருந்தச்செய்ய வேண்டும் என்றுதான்.
அவனை திரும்பியும் பார்க்க அவள் விரும்பவில்லை. ஜெயராமனின் இருக்கையின் அருகே நின்றுகொண்டாள்.
அறைக்குள் வந்த ஜெயராமன், “ஹாய் கைஸ் குட் மார்னிங்…” என்றவாறே அவனுக்கு எதிரே இருந்த இருக்கையில் அமர்ந்து கொள்ள.
“அங்கிள் உங்களோட இருக்கையில் அமரலாமே நீங்க…” ஜெயராமனின் இருக்கையில் அவன் அமர்ந்து கொள்ளவும், அதைக்கண்ட தாட்சா கடுப்போடு சொன்னாள்.
அவள் மனநிலையை புரிந்து கொள்ளாமல், “இருக்கட்டும்மா, இளையவர்களுக்கு வழிவிடலாமே…” என்றவர் அவளைப் பார்த்து புன்னகையோடு, “அதுமட்டும் இல்லைம்மா இனிமேல் விக்ரம்தான் இங்கே உள்ள கிளைகளை பார்த்துக்கப் போறார். சோ நீ அவருக்கு ஹெல்ப் பண்ணிடு…” அவர் விவரம் சொல்லிக்கொண்டிருக்கும் பொழுதே. அவருக்கு தொலைபேசி அழைப்பு வரவும், “சரி நீங்க பாருங்க நான் கிளம்பறேன்…” என்றவர் அங்கே இருந்து அகன்றார்.
“சோ மிசஸ் யவனதாட்சாயினி எனக்கு ஹெல்ப் பண்ணப் போறாங்களா என்ன?…” அவளை கேலியாய் பார்த்தவாறே அவன் கேட்டவாறே அடுத்து அவனின் செயலில் அதிர்ந்துதான் போனாள்.