அழகான பௌர்ணமி நிலவு இருளை வெளிச்சமாக்கும் நேரம் நங்கை ஒருத்தியின் அலறல் சத்தத்தில் நிலவும் குலை நடுங்கி அஞ்சி மேகத்திற்குள் தஞ்சம் புகுந்து கொண்டது. காமக்கொடூரன் அவன் நாட்டியமாட வந்த பதினைந்து வயது நங்கை அவளை பலவந்தப் படுத்திக் கொண்டிருக்கிறான்.
அண்ணா என்னை விடுங்கள் அண்ணா என்று அவள் கெஞ்சுவது அந்த கயவனின் காதில் விழ வில்லையா இல்லை விழுந்தும் அது அவனது மூளைக்கு செல்ல விடாமல் அவனது காமவெறி, குடிவெறி இரண்டும் அவனை தடுக்கிறதா…
நங்கை அவளோ அண்ணா வலிக்குது விடுங்க வலிக்குது விடுங்க என்று அலறுகிறாள். அவளது உடை அந்த நடுக்காட்டில் அங்கங்கு தூக்கி எறியப்பட்டுக் கிடந்தது. அவளது மார்பகங்கள் கயவன் அவனது பற்தடங்கள் பட்டு சதை பிய்ந்து இரத்தம் வலிந்து கொண்டிருந்தது. அவளது பட்டுப் போன்ற மென்மையான கன்னங்கள் அவன் விடாது அறைந்ததில் சிவந்து கன்றிப் போயி இருந்தது. அவன் அடித்த அடியில் உதடு கூட லேசாக பல் பட்டு கிழிந்து இரத்தம் வலிந்தது. பாவம் நங்கை அவள் அவனிடம் சிக்காமல் ஓடிட நினைத்து ஓடும் போது பாவி அவன் கட்டையால் தலையில் அடித்திருப்பான் போல தலையிலும் அடி பட்டு இரத்தம் வலிந்து கொண்டிருந்தது. அவளது உடலோ கயவன் அவனது கட்டுக்குள் படாதாபாடு பட்டுக் கொண்டிருந்தது. இறைவா உனக்கு கருணை என்பதே இல்லையா ஊருக்குள் உத்தமன் வேடம் போடும் இந்த கயவன் நடுக்காட்டில் என்னை இப்படி வதைக்கிறானே என்னை காக்க மாட்டாயா என்று கல்லாய் போன கடவுளை நொந்து கொண்டிருந்த நங்கை அவளின் ஆசனவாயில் கயவன் அவன் தன் ஆண்மையை செலுத்தி அவளை அரக்கனாக மாறி புணர ஆரம்பித்தான். நங்கை அவளோ உயிர் போகும் வலியில் துடிக்க ஆரம்பித்தாள். அவளது அபயக் குரல் அந்த காடு முழுவதும் எதிரொளித்தது. அம்மா ஆஆஆ என்று அவளது அலறலைக் கேட்ட நிலவு மகளும் கயவனின் வெறிச் செயலில் பயந்து விட்டாள். நங்கை அவளின் ஆசனவாய் கிழிந்து அவள் துடிப்பதைக் கண்ட இயற்கை அன்னையும் வேதனை கொண்டு மழையாக கண்ணீர் வடித்தாள். நங்கை அவளை வெறி கொண்டு புணர்ந்ததில் திருப்தி அடைந்த கயவன் அவன் த்தூ ஜிகிடி ரொம்ப துள்ளாதடி வேசி தானடி நீ என்று அவள் முகத்தில் காரி உமிழ்ந்து விட்டு வந்த வேலை முடிந்த திருப்தியில் அவளை கந்தலாக்கி போட்டு விட்டு தன் உடையை அணிந்து கொண்டு கிளம்பினான்.
இருள் சூழ்ந்த காட்டில் தனியாக முழு நிர்வாணமாக கந்தலாகிப் போனவள் தன் மானத்தை மறைக்க உடையை கைகளால் துலாவினாள். நங்கை அவளால் எழக்கூட முடியவில்லை காமக் கொடூரன் அவன் நடத்திய காமவேட்டையினால். அவளது நேரம் அவளது துணி எதுவும் கைக்கு எட்டிய தூரத்தில் இல்லை. ஆண்டவா ஏன் இப்படி என்னை வதைக்கிற என்று நினைத்தவளால் எழ முடியவில்லை. அம்மா அம்மா என்று இருந்தும் இல்லாமல் போன அன்னையை அழைத்துக் கதறினாள். இரவு முழுவதும் வலியிலும் வேதனையிலும் அணத்திக் கொண்டிருந்தவள் அப்படியே மயங்கிப் போனாள்.
அம்மா இப்போ நாம எங்கே போறோம் என்றாள் சுபஸ்ரீ. நம்மளோட கெஸ்ட் ஹவுஸ்க்கு போறோம் சுபா என்றாள் அவளது அன்னை மகாலட்சுமி. அப்படியா ரொம்ப ஜாலி என்று குதித்த சுபா தன் செல்ல நாய் சீசரிடம் சீசர் நாம அங்கே இருக்கிற காட்டில் விளையாடுவோம் என்றாள். சுபா குட்டி காட்டுக்குள்ள ரொம்ப விளையாடக்கூடாது என்றார் அவளது தந்தை தனஞ்செயன். சரிங்க அப்பா என்ற சுபா கெஸ்ட் ஹவுஸ் வந்த வுடன் காரை விட்டு இறங்கி நேராக காட்டிற்குள் ஓடினாள்.
அவளது நாய் சீசர் வேகமாக ஓட அதை விரட்டிக் கொண்டே சுபஸ்ரீ ஓடினாள். சீசர் ஓரிடத்தில் நின்று குரைக்க அங்கு இரத்த வெள்ளத்தில் கிடக்கும் நங்கை அவளைக் கண்ட சுபஸ்ரீ அப்பா என்று கத்திட தனஞ்செயன் ஓடிவந்து பார்த்தார். நங்கை ஒருத்தி கொடூரமாக கற்பழிக்கப் பட்டு நிர்வாணமாக கிடப்பதைக் கண்டவர் பதறிட மகாலட்சுமி தன்னுடைய துப்பட்டாவை வைத்து நங்கை அவளை போர்த்தினார். தனஞ்செயன் நங்கை அவளை தூக்கிக் கொண்டு கெஸ்ட் ஹவுஸிற்கு ஓடியவர் அவளுக்கு முதலுதவி செய்ய ஆரம்பித்தார். முதலுதவியை செய்து முடித்தவர் அவளை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்று தன்னுடைய நண்பனின் மருத்துவமனையில் அவளை அனுமதித்து மருத்துவம் பார்த்தார். நங்கை அவளுக்கு தலையில் அடிபட்டதில் இரத்தம் அதிகம் வெளியேறியதால் தலையில் ஒரு சிறிய அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருந்த்து. மகாலட்சுமி தன்னுடைய இரத்தத்தை அவளுக்கு அளித்தாள். இரண்டு நாட்களுக்குப் பிறகு கண் விழித்த நங்கை அவளிடம் அவளைப் பற்றி விசாரித்தனர் தனஞ்செயன், மகாலட்சுமி தம்பதியர்.
பத்து வருடங்களுக்குப் பிறகு….
என்ன நளன் சோகமா இருக்க என்ற ரகுநந்தனிடம் இந்த கல்யாணம் எனக்கு தேவை தானா சொல்லு நானும் அகிலாவும் வாழ்ந்த வாழ்க்கைக்கு அடையாளமா தான் ஐஸு இருக்காளே அப்பறம் எதுக்குடா எனக்கு இந்த கல்யாணம் என்ற நண்பன் நளனிடம் நளன் நீயே சொல்லுற ஐஸு இருக்கானு உனக்கு மனைவி தேவை இல்லாமல் இருக்கலாம் ஐஸுக்கு ஒரு அம்மா நிச்சயம் தேவை அவள் பெண்குழந்தை அவளோட எல்லா தேவைகளையும் அப்பன் உன்கிட்ட அவளால சொல்ல முடியாது புருஞ்சுக்கோ நளன் என்றான் ரகுநந்தன். சரி் ஆனால் ஒரு டிவோர்ஸ் ஆன பொண்ணோ இல்லை விதவை பொண்ணையோ கல்யாணம் பண்ணிக்கிறேனு தானே நான் சொன்னேன். சுபஸ்ரீ க்கு இது முதல் கல்யாணம். அவளுக்கு என்று உணர்வுகள் இருக்கும் அவள் எப்படி என் கூட இந்த மாதிரியான ஒரு வாழ்க்கை வாழ்வாள். பொதுவா கணவன் மனைவிக்குள்ள தாம்பத்யம் நடக்காதுனு சொன்னா எந்த பொண்ணு திருமணத்துக்கு ஒத்துக்குவாள் என்னால அகிலா இடத்தில் சத்தியமா சுபஸ்ரீயை வைத்து பார்க்க முடியாது என்றான் நளன். எல்லாம் சரியாகும் என்று கூறிய ரகு நண்பனை மணமேடைக்கு அழைத்து வந்தான்.
தங்கையின் திருமண வேலையை ஓடி ஓடி கவனித்தாள் தமயந்தி. மூத்தவள் இருக்கும் போது இளையவளுக்கு திருமணம் செய்ய என்ன அவசரம் என்று கூட்டத்தில் ஒரு பெண் கூறிட தமயந்தி என்ன மகாலட்சுமி பெத்த பொண்ணா எங்கேயோ கண்டெடுத்து வளர்த்த பொண்ணு தானே என்றாள். என்னை பெத்தவங்க எங்கே இருக்காங்க எப்படி இருக்காங்கனு எனக்கு தெரியாது ஆனால் அவங்களை விட பாசம் காட்டி என் மேல உயிரையே வச்சுருக்கிற என் அம்மாவை தப்பா பேசாதிங்க சுந்தரி அத்தை என்றாள் தமயந்தி. அது வந்து தமயந்தி என்று இழுத்த அந்த பெண்மணியிடம் எனக்கு கல்யாணத்து மேல நம்பிக்கை இல்லை அதனால் தான் என் தங்கைக்கு அப்பா அம்மா கல்யாணம் பண்ணி வைக்கிறாங்க சரியா தயவுசெய்து அடுத்தவங்களை பத்தி தெரியாமல் தவறாக பேசாதீர்கள் என்று கூறி விட்டு தமயந்தி தன் தங்கை சுபஸ்ரீயை மணமேடைக்கு அழைத்து வரக் கிளம்பினாள். மணமகள் அறையில் தயாராகிக் கொண்டிருந்த தங்கையை அழைக்கச் சென்ற தமயந்தி அதிர்ந்து போனாள். மேஜையில் ஒரு கடிதம் இருந்தது. சுபஸ்ரீ க்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்று எழுதி இருந்தது. அவள் இரண்டாம் தாரமாக ஒருவனுடன் வாழ விருப்பம் இல்லை என்று எழுதி வைத்து விட்டு மண்டபத்தை விட்டு கிளம்பி இருந்தாள்.
தன் தாய் தந்தையிடம் தங்கை எழுதி வைத்த கடிதத்தை தமயந்தி காட்டிட தனஞ்செயன், மகாலட்சுமி இருவரும் அதிர்ந்து போயினர். மணமேடையில் நளன் அமர்ந்திருக்க மணமகள் சுபஸ்ரீ எங்கோ சென்று விட்டாள். நளன் சுற்றத்தினரின் கேலிப் பொருளாக தான் இருப்பதை நினைத்து எழப் போக அவனது அன்னை ராஜலட்சுமி நளன் எழாதே என்றவர் தனஞ்செயனின் அருகில் வந்து அண்ணா உங்க இளைய பொண்ணு தானே ஓடிப்போனாள். மூத்தவள் இங்கே தானே இருக்காள் மணமேடையில் அமர்ந்த மாப்பிள்ளை மனையை விட்டு எழக்கூடாது அது குடும்பத்திற்கு ஆகாது அதனால் உங்க பொண்ணு தமயந்தியை என் மகனுக்கு கல்யாணம் பண்ணி வைங்க அப்போ தான் நம்ம தொழிலிலும் பிரச்சனை இல்லை என்றார். அவர் கூறுவது சற்று மிரட்டலாக இருந்தாலும் தனஞ்செயனுக்கு வேறு வழி இல்லை ஆனால் தமயந்தியை எப்படி நளனுக்கு திருமணம் செய்து வைப்பது மகளின் முகத்தை வேதனையுடன் பார்த்தார் தனஞ்செயன். ராஜலட்சுமி தமயந்தியின் சம்மதம் கூட கேட்காமல் அவள் கழுத்தில் மாலையை அணிவித்து மணமேடையில் அமர வைத்தார். அவளை பேசவே விடவில்லை. ராஜலட்சுமி அவளை மட்டும் இல்லை மகாலட்சுமி , தனஞ்செயன் இருவரையும் கூட ஏன் அவரது கணவர் ராஜரத்தினத்தை கூட பேசவிடவில்லை. வலுக்கட்டாயமாக தமயந்தி மணவறையில் அமர வைக்கப்பட்டு நளனின் கையால் தாலி வாங்கிக் கொண்டாள். நளனிற்கும் தாயின் செயல் பிடிக்கவில்லை ஆனால் அன்னையின் பேச்சை மீறாத மகன் என்பதால் அமைதியாக தமயந்தியின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டான்.
தமயந்தி ஆற்றாமையுடன் அமர்ந்திருந்தாள். சடங்குகள் முடிந்த பிறகு மணமக்களை வீட்டிற்கு அழைத்துச் செல்லும் முன் தமயந்தியை கட்டிக் கொண்டு அழுதனர் தாய் தந்தை இருவரும். எங்களை மன்னிச்சுரு தமயந்தி என்ற மகா, தனஞ்செயன் இருவரிடமும் அப்பா , அம்மா என்கிட்ட போயி நீங்க மன்னிப்பு கேட்கலாமா ஆனால் என்னை பத்தின உண்மை இவங்களுக்கு தெரிந்தால் என்ன என்ன விளைவுகள் வருமோனு பயமா இருக்குப்பா என்று அழுத மகளின் தலையை தட்டிக் கொடுத்தவர் எதுவாக இருந்தாலும் நாம சமாளித்து தான் அம்மு ஆகனும் என்றார் தனஞ்செயன். மகாலட்சுமியோ என்னை மன்னிச்சுரு தமயந்தி என்று அழுதிட அம்மா ப்ளீஸ் அழாதிங்க என்று அன்னையை சமாதானம் செய்தாள்.
மணமக்கள் நளனும் தமயந்தியும் மணமகனின் வீட்டிற்கு அழைத்து வரப் பட்டனர். அவர்களுக்கு பால், பழம் எல்லாம் கொடுத்து இரவு சடங்குகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் நடக்க தமயந்தியின் உடல் நடுங்க ஆரம்பித்தது. ஆண்டவா ஏன் என் வாழ்க்கையில் இந்த சோதனை எல்லாம் தருகிறாய் என்று இறைவனின் முன்பு நின்று கண்ணீர் வடித்தாள்.
உறவுக்காரப் பெண்கள் சிலர் தமயந்தியை தயார் படுத்த வர நானே தயாராகிக்கிறேன் என்றவள் புடவை கட்டிக் கொண்டு வர அவளை அமர வைத்து நளனின் தங்கை சுலக்சனா தமயந்திக்கு அலங்காரம் செய்து விட்டாள். இடைவரை நீண்ட கூந்தலை அழகாக வாரி பின்னலிட்டு தலை நிறைய மல்லிகை பூ சூட்டி அளவான ஒப்பனையுடன் தமயந்தியை அலங்கரித்த சுலக்சனா தமயந்தியின் கையில் பால் சொம்பை கொடுத்து நளனின் அறைக்குள் தள்ளி விட்டுச் சென்றாள்.
மெத்தையில் நளன் அமைதியாக அமர்ந்திருந்தான். அவனருகில் சென்ற தமயந்தி அவனிடம் பால் சொம்பை நீட்டிட அதை வாங்கி ஓரமாக வைத்து விட்டு தமயந்தியின் கை பிடித்து தன்னருகில் அமர வைத்தான். காளையவனின் கை அவள் கை மீது படவும் நங்கை அவளுக்கு ஏதோ போல் இருந்தது. அவளது உடல் நடுங்க ஆரம்பித்தது. அவளது உடல் நடுங்கவும் அவளை அணைத்துக் கொண்ட நளன் அவளிடம் தமயந்தி ரிலாக்ஸ் பயப்படாதே சத்தியமா உன்னை நான் எதுவும் செய்ய மாட்டேன் என்று அவளது பயத்தை போக்க முயன்றான். அவளது நடுக்கம் குறைந்தவுடன் தமயந்தி என்னை மன்னிச்சுரு சத்தியமா என்னால் உனக்கு எந்த சுகத்தையும் கொடுக்க முடியாது. என்னோட முன்னாள் மனைவி அகிலா இறந்து போயிட்டாள் . அவளோட வாழ்ந்த வாழ்க்கையை என்னால் சத்தியமா மறக்க முடியாது. அவள் கூட மட்டும் தான் நான் தாம்பத்யம் வைத்துக் கொள்ள வேண்டும் என்று அவள் என்னிடம் எங்களோட முதல் இரவில் சத்தியம் செய்யச் சொன்னாள். நானும் அவளுக்கு சத்தியம் செய்து கொடுத்தேன். என்னால உன்னோட உணர்வுகளை புரிஞ்சுக்க முடியும் ஒரு பெண்ணோட வாழ்க்கையில் திருமணத்திற்கு பிறகு கணவன் மனைவிக்கு இடையிலான மிகப்பெரிய பந்தம் அவர்களுடைய தாம்பத்தியம் தான் அது இல்லாமல் எப்படி ஒரு வாழ்க்கை என்று நீ யோசிப்பது எனக்கு புரியுது ஆனால் என்னால் சத்தியமா உன் கூட தாம்பத்யம் வைத்துக் கொள்ள முடியாது என்னை மன்னிச்சுரு தமயந்தி ஒரு வருடம் பல்லைக் கடித்துக் கொண்டு பொறுமையா இரு உன் அப்பாவோட பிசினஸ் லாஸ் எல்லாத்தையும் நான் சரி பண்ணி கொடுத்துடுறேன். உன் தங்கச்சி இந்த கல்யாணம் வேண்டாம்னு போக காரணமே நான் தான். நான் தான் சுபஸ்ரீ கிட்ட மண்டபத்தை விட்டு போக சொன்னேன். நான் எதிர்பார்க்காத ஒரு விசயம் அம்மா உன்னை மணமேடையில் உட்கார வைப்பாங்கனு என்னை மன்னிச்சுரு தமயந்தி என்றவன் அவளை கையெடுத்துக் கும்பிட்டான். உங்களோட பிசினஸ் லாஸ் வச்சு மிரட்டி தான் என் அம்மா இந்த கல்யாணத்தை நடத்தினாங்க அது பெரிய தப்பு அதுக்கும் என்னை மன்னிச்சுருமா என்றான் நளன். அவனிடம் என்ன பதில் சொல்லுவாள் நங்கை. தன்னை பற்றிய உண்மை தெரிந்தால் தன் குடும்பமே இவனை ஏமாற்றியதாக தூற்ற மாட்டானா என்று பயந்தாள். என்ன செய்வது என்று தெரியாதவள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு உங்க கிட்ட என்று ஏதோ கூற வர நீ ஒன்றும் சொல்ல வேண்டாம் தமயந்தி நீ தூங்கு என்றவன் மெத்தையின் ஒரு புறம் படுத்துக் கொண்டான். மறுபுறம் தமயந்தி படுத்துக் கொண்டாள். தமயந்தியின் மனம் முழுவதும் குற்றவுணர்வே வியாபித்து இருந்தது. கணவன் அவன் தன்னைப் பற்றி அனைத்தும் கூறி விட்டான். ஆனால் தன்னுடைய நிலையை அவனிடம் கூற முடியாமல் நங்கை அவள் தவித்துக் கொண்டிருந்தாள்.
பொழுதும் விடிந்தது. தமயந்தி எழுந்தவள் குழந்தை போல் உறங்கும் கணவன் அவனின் முகத்தைக் கண்டாள். இவன் தன்னைப் பற்றிய உண்மை தெரிந்தால் என்ன செய்வான் இந்த அசிங்கம் பிடித்தவள் தனக்கு வேண்டாம் என்று முகத்தில் காரி உமிழ்ந்து வீட்டை விட்டு விரட்டி விடுவானோ தன் தாய் தந்தையின் தொழிலையும் அவர்களிடம் இருந்து பறித்து அவர்களையும் நடுத்தெருவில் நிறுத்தி விட்டான் என்றாள் சுபஸ்ரீயின் நிலை என்று பலவாறு சிந்தித்தவளின் கணகள் கண்ணீரைச் சிந்தியது மெல்ல எழுந்தவள் குளியலறைக்குச் சென்றாள்.
குளித்து முடித்து உடை மாற்றி வந்தவள் அறைக் கதவை திறந்து கொண்டு வெளியில் வர அவளது மாமியார் ராஜலட்சுமி அவளது கையில் அழகான பூக்குவியல் போன்றதொரு பிறந்து மூன்று மாதம் ஆன பெண் குழந்தையைக் கொடுத்தார். தமயந்தி இது ஐஸ்வர்யா உன் புருசனோட பொண்ணு இனி இவள் உன்னோட பொண்ணு என்றார். தமயந்திக்கு அந்த குழந்தையை கையில் வாங்கியவுடனே இதயத்தில் இருந்து தாய்மை உணர்வு பெருக்கெடுத்தது. அவள் அந்தக் குழந்தையை மார்போடு அணைத்தாள். ஏனோ தமயந்தியின் வாழ்வின் பிடிமானமாக அந்த குழந்தை இருப்பதாக அவளுக்கு ஒரு எண்ணம் தோன்றியது. ஐஸ்வர்யாவின் கன்னக்குழி விழும் சிரிப்பில் தன்னைத் தொலைத்த தமயந்தி குழந்தையை கொஞ்சி் தீர்த்தாள். குழந்தையின் சிரிப்புச் சத்தம் கேட்டு எழுந்த நளன் தமயந்தியிடம் குழந்தை ஒட்டிக் கொண்டதைக் கண்டு ஆச்சர்யப் பட்டான். அவன் குழந்தையை வாங்கி கொஞ்சி விட்டு குளிக்கச் சென்றான். குளித்து முடித்து உடை மாற்றி வந்தவன் தயாராகி அலுவலகத்திற்கு கிளம்பினான். தமயந்தி நீயும் என் கூட ஆபிஸ் வருகிறாயா உன் அப்பாவோட தொழிலை நீ தானே பார்த்துட்டு இருந்த என்றவனிடம் இல்லை பரவாயில்லை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் நான் குழந்தையை பார்த்துக்கிறேன் என்றாள் தமயந்தி. அவனும் சிரித்து விட்டு வேலைக்கு கிளம்பினான். குழந்தையை பெற்றுக் கொள்ளும் தகுதி இல்லாத தனக்கு இறைவனே நளன் மூலம் இந்த குழந்தையை வளர்க்க ஒரு வாய்ப்பை கொடுத்திருக்கிறான் இந்த குழந்தையை நல்ல முறையில் வளர்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு குழந்தைக்கு பால்மாவை கலக்கி பால் புட்டியில் அடைத்து குழந்தையை பருகிட செய்தாள். பாலை குடித்த குழந்தை உறங்கிட அவளை தட்டிக் கொடுத்து உறங்க வைத்தாள்.
சுபஸ்ரீ தன் தாய் தந்தையிடம் மண்டபத்தில் தன்னை சந்தித்த நளன் இந்த திருமணம் பிடிக்கவில்லை என்று மண்டபத்தை விட்டு வெளியேற சொன்னதை கூறினாள். பிறகு அவளது தோழன் தருணை திருமணம் செய்து கொண்டதாகவும் கூறினாள். அவர்களும் பெற்ற மகளை ஒதுக்க முடியாமல் ஏற்றுக் கொண்டனர்.
நாட்கள் அழகாக கடந்தது. தமயந்தி எப்பொழுதும் குழந்தை ஐஸுவே கதியென்று கிடந்தாள். பெறாத அந்த குழந்தைக்கு அன்னையாகவே மாறிப் போனாள். அவள் குழந்தையை கவனித்துக. கொள்ளும் அழகைக் கண்ட நளனின் இதயம் அகிலாவின் நினைவை கொஞ்சம் கொஞ்சமாக மறந்து தமயந்தியின் பக்கம் சாய ஆரம்பித்தது. அவனும் அவளிடம் அன்பாகவும் அனுசரனையாகவும் நடந்து கொள்ள ஆரம்பித்தான்.
தனஞ்செயனின் தொழிலில் இருந்த அனைத்து பிரச்சனைகளையும் ஆறே மாதத்தில் சரி செய்து கொடுத்தான் நளன். எல்லாம் நல்லபடியாக சென்று கொண்டிருந்த நேரத்தில் தான் ஐஷ்வர்யாவின் முதல் பிறந்த நாள் வந்தது. அன்று காலையே நளன் தன் முதல் மனைவி அகிலாவிற்கு திதி கொடுத்து விட்டு மனைவி, மகளுடன் கோவிலுக்குச் சென்றான். இந்த ஒன்பது மாத காலத்தில் நளனிற்கு தமயந்தியின் மீது ஒரு வித அன்பு உருவாகி இருந்தது. அதை காதல் என்று உணர்ந்து கொண்டவன் தன் முதல் மனைவி அகிலாவிற்கு செய்து கொடுத்த சத்தியத்தை மறந்தவன் தனக்காகவும், தன் குழந்தைக்காகவும் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த பெண் தமயந்தியை தன் மனைவியாக ஏற்றுக் கொள்ள நினைத்தான்.
அதனால் மகளின் பிறந்த நாளான இன்று தன் காதலை அவளிடம் கூறி அவளுடனான தன் வாழ்வை தொடங்கிட நினைத்தான். அவனைப் பார்த்து விதி சிரித்தது.
கோவிலில் நளன், தமயந்தி , ஐஸு மூவரும் அர்ச்சனை செய்த பிறகு ஓரிடத்தில் அமர்ந்திருந்தனர். தமயந்தி என்ற நளனின் அழைப்பில் ஒரு வித்தியாசத்தை உணர்ந்தாள் தமயந்தி ஆனால் அதைப் பற்றி அவள் பெரிதாக யோசிக்க வில்லை. அவன் அவளிடம் உன் கிட்ட ஒரு முக்கியமான விசயம் பேசனும் என்ற நளனிடம் என்ன விசயம் என்றாள் தமயந்தி. அவன் ஏதோ கூற வந்தவன் வீட்டுக்கு போனதும் சொல்றேன் என்றவன் அவளை அழைத்துக் கொண்டு வீட்டிற்குச் சென்றான்.
குழந்தையை ராஜலட்சுமியிடம் கொடுத்த நளன் மனைவியுடன் தன்னறைக்குச் சென்றான். அறைக்குள் நுழைந்தவுடன் அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டான். அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. அவனது செயல் அவளுக்கு ஏதோ விபரீத்த்தை உணர்த்த அவனை விட்டு விலக திமிறினாள். அவனது அணைப்பு இறுகியது அவளது தோளில் முகம் புதைத்தவன் ஐ லவ் யூ தமயந்தி என்று கூறிவிட்டு அவள் இதழில் தன் இதழைப் பதித்தான். அதில் அதிர்ந்தவள் அவனைப் பிரிய நினைக்க அவனோ தன்னவளை பிரிய மனமில்லாமல் அவள் இதழை தன் இதழுக்குள் சிறை பிடித்து அவள் இதழ் தேனை உறிஞ்சினான். அவனது இதழ் முத்தம் நங்கை அவளுக்கு தன் சூன்யமான எதிர்காலத்தை கண்ணில் காட்டிட அவனிடம் எல்லா உண்மையையும் கூறிட நினைத்தவள் அவனைப் பிடித்து தள்ளினாள். அவளை விலகியவன் தமயந்தி என்னாச்சுமா பிடிக்கலையா என்றவனிடம் என்னை மன்னிச்சுருங்க நளன் நீங்க நினைக்கிறது மாதிரி நான் ஒரு பொண்ணு கிடையாது. நான் ஒரு திருநங்கை என்றாள். நளன் ஆடிப் போய் விட்டான்.
என்ன சொல்ற தமயந்தி என்ற நளனிடம் ஆமாம் நளன் நான் ஒரு திருநங்கை. என்றவள் தன்னுடைய கதையை அவனிடம் கூற ஆரம்பித்தாள்.
என்னோட கிராமம். கொடைக்கானல் பக்கத்தில் உள்ள பூம்பாறை. என்னோட அப்பா பெயர் சுந்தரம். அம்மா பெயர் மணிமேகலை. எனக்கு ஒரு அக்கா அவங்க பெயர் தங்கலட்சுமி. என் பெயர் தங்கராசு. அப்பா அம்மா இரண்டு பேரும் கூலி வேலை பார்த்து எங்களை படிக்க வச்சாங்க. எங்க வாழ்க்கை அழகா தான் போயிட்டு இருந்துச்சு. எனக்கு ஒரு பதிமூன்று வயது இருக்கும் என் உடம்புல சில மாற்றங்கள் வர ஆரம்பித்தது. என்னோட மார்பகங்கள் வளர்ச்சி அடைய ஆரம்பித்தது. என்னோட குரல் மிகவும் இனிமையான ஒரு பெண் குரலாக மாற ஆரம்பித்தது. என்னுடைய உடலில் ஒரு ஆணுக்குண்டான கம்பீரம் போயி பெண்ணுக்குண்டான நலினம் ஏற்பட்டது. அனைவரும் என்னை அலி, உஷ் என்று கேலி செய்ய ஆரம்பித்தனர். நானும் என் உடலில் தோன்றிய பெண் உணர்வுகளால் பொட்டு வைப்பது துப்பட்டா அணிவது என்று பெண்பிள்ளையாக மாற ஆரம்பித்தேன். அதனால் ஆரம்பத்தில் என்னை புரிந்து கொள்ளாத அம்மாவும் அப்பாவும் என்னை திட்டினார்கள், அடித்தார்கள் போகப் போக என்னை ஒரு சாபமாக பார்க்க ஆரம்பித்தனர். அதனால் வீட்டில் இருக்கப் பிடிக்காமல் வீட்டை விட்டு ஓடி வந்து திருநங்கைகள் கூட்டத்தில் சேர்ந்து விட்டேன். அங்கு இருந்த தலைவி சரோஜா அம்மா எனக்கு பரதம் கற்றுக் கொடுத்து கிராமங்களில் நடக்கும் திருவிழாவில் ஆட வைத்தார்.
அன்றும் அப்படித் தான் ஒரு நடன நிகழ்ச்சியில் பரதம் ஆடிய என்னை ஒரு பெரிய இயக்குனர் புரட்சி படம் எடுக்கும் இயக்குனர் ஒருவன் பார்த்து விட்டான். அவன் என்னை யாருக்கும் தெரியாமல் கடத்திக் கொண்டு நடுக்காட்டிற்கு தூக்கி வந்தான். அந்த ராத்திரி ஏன் என் வாழ்வில் வந்தது என்று இன்றும் நான் நொந்து கொண்டு இருக்கிறேன். அவன் என் உடைகளை கிழித்து நாலா பக்கமும் வீசி எறிந்து என்னை நிர்வாணமாக்கினான். அவனிடம் தப்பிக்க முயன்ற போது தலையில் கட்டையால் அடித்தான். என் நிர்வாண உடலைக் கண்டவன் அடியே உஷ் நீ பொம்பளைனு நினைச்சு ஏமாந்துட்டேன்டி ஆனாலும் பொட்டச்சிகளை விட நீ அழகா இருக்கேடி என்று கூறினான். பொட்டச்சியா இருந்தினா உனக்கு என்று அசிங்கமாக கூறியவன் நீ தான் திருநங்கையாக போயிட்டியே அழகா வேற இருக்க விட முடியாது வா என்று என் ஆசனவாயில் என்ற தமயந்தி திக்கித் திணறி கூறினாள். அவன் என்னோட ஆசனவாயில் அவனோட பிறப்புறுப்பை வைத்து என்னை வெறி பிடிச்ச மிருகம் மாதிரி வேட்டையாடினான். என்னை வேட்டையாடி முடிச்சதும் அடியே தே*** நீ திருநங்கையா இருந்தாலும் செம பீஸ்டி என்று என் முகத்தில் காரி துப்பி விட்டு எழுந்து சென்று விட்டான். என்னால எழும்ப கூட முடியலை. மறுநாள் அந்த காட்டுக்கு பக்கத்தில் இருந்த பண்ணை வீட்டுக்கு தனஞ்செயன் அப்பா, மகாலட்சுமி அம்மா, சுபா மூன்று பேரும் வந்தாங்க அவங்களோட நாய் சீசர் என்னை பார்த்து குரைக்கவும் வந்து பார்த்த அப்பாவும் அம்மாவும் தான் என்னை காப்பாத்தி எனக்கு ஒரு வாழ்க்கை கொடுத்தாங்க. என்னை அவங்களோட பொண்ணா வளர்த்து படிக்க வச்சாங்க. பெத்த அம்மா அப்பா என்னை புரிஞ்சுக்காத போது அவங்க என்னை பெத்த பொண்ணை விட அதிகமான பாசம் காட்டி வளர்த்தாங்க. சுபாவும் என் மேல உயிரையே வச்சுருந்தாள் . சத்தியமா இந்த கல்யாணத்தை என் அம்மா அப்பா கூட எதிர்பார்க்கலை நளன் நம்ம முதல் இரவு அன்னைக்கே நான் இதை சொல்ல வந்தேன் நீங்க கேட்க விரும்பலை என்னை மன்னிச்சுருங்க என்று கூறி்முடித்தாள் தமயந்தி.
அனைத்தையும் கேட்டு முடித்தவனால் எதையுமே ஜீரணிக்க முடியவில்லை. அப்படியே தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டான். அவனால் தன் மனைவி ஒரு திருநங்கை என்பதை எப்படி வெளியில் சொல்ல முடியும் தன் அம்மா அப்பா எப்படி இதை ஏற்றுக் கொள்வார்கள் நாளை தன் மகள் எப்படி இதை ஏற்றுக் கொள்வாள் என்று பலவாறு குழம்பினான். அவனை தொந்தரவு செய்யாமல் அமைதியாக அமர்ந்திருந்தாள் தமயந்தி. எதுவாக இருந்தாலும் பிறந்த நாள் கொண்டாட்டம் முடிந்தவுடன் பார்க்கலாம் என்று நினைத்த நளன் அமைதியாக எழுந்து சென்றான். அன்று மாலை குழந்தையின் பிறந்த நாள் விமர்சையாக கொண்டாடப் பட்டது.
நளன் தமயந்தியை இந்த ஒன்பது மாதங்களாக கவனித்துக் கொண்டு தான் வருகிறான். அவள் ஐஸுக்குட்டியின் மீது காட்டும் தாய்ப்பாசம் அதற்கு ஈடு இணை இந்த உலகிலே இல்லை. அகிலா உயிருடன் இருந்திருந்தால் கூட இப்படி ஐஸுவின் மீது அன்பு செலுத்தி இருக்க மாட்டாள். ஏன் செக்ஸ் மட்டும் தான் வாழ்க்கையா அது இல்லாமல் வாழ முடியாதா தமயந்தியும் நானும் உடலுறவு வைத்துக் கொண்டால் தான் கணவன் மனைவியா என்ன அவள் இந்த ஒன்பது மாதத்தில் ஒரு மனைவியாக தனக்கு செய்த பணிவிடைகளை நினைத்தவன் தன் மனதில் நீ திருநங்கையாவே இருந்தாலும் என்னோட மனைவி தமயந்தி நான் உன்னை இப்ப தான் அதிகமா நேசிக்கிறேன் என்று நினைத்துக் கொண்டான்.
அந்த பிறந்த நாள் விழாவிற்கு ஒரு சிறந்த புரட்சி இயக்குனர் ஒருவர் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். அந்த இயக்குனரைக் கண்ட தமயந்தியின் உடல் நடுங்க ஆரம்பித்தது ஆம் அவனே தான் தமயந்தியை சீரழித்த அந்த கயவன் அவனைக் கண்டவளின் உடல்நடுக்கம் கொள்ள நளனின் கையை இறுக்கமாக பிடித்துக் கொண்டாள். நளன் அவளது உடல் நடுக்கத்தை உணர்ந்து என்னவென்று கேட்க அவள் அந்த இயக்குனனைக் காட்டினாள். நளன் புரிந்து கொண்டு தமயந்தியை ஓய்வு எடுக்கச் சொல்லவும் அவள் தன் அறைக்குச் சென்றாள். அறையின் கதவை திறந்து கொண்டு வந்த கயவன் அடியே அழகி நீ இங்கே என்னடி பண்ற என்ற அந்த கயவன் அவளிடம் நீ இந்த வீட்டு மருமகளாமே என்று கூறி விட்டு நீ ஒரு திருநங்கைனு இங்கே யாருக்கும் தெரியாது போல நான் போயி சொல்லட்டுமா என்றான். ஐயோ வேண்டாம் என்னை விட்டுருங்க என்று கெஞ்சிய தமயந்தியின் உடலை ஏற இறங்க பார்த்து பெருமூச்சு விட்டான். தமயந்திக்கு அவனது இந்த செயல் அறுவறுப்பாக இருந்தது. அப்ப விட இப்போ செமையா செக்ஸியா இருக்கடி நீ திரும்ப எனக்கு வேண்டும் நீ என் கூட ஒரே ஒரு நைட் இரு அப்பறம் உன்னை தொல்லை பண்ண மாட்டேன் இல்லை நீ யாருனு இந்த வீட்டில் எல்லோருகிட்டையும் சொல்லிருவேன் என்றான். அவள் பயத்தில் நடுங்கிட வா என்று அவளை அணைத்துக் கொண்டான். அந்த நேரம் அங்கு வந்த நளன் அவனை எட்டி உதைத்தான். ஏன்டா எச்சப்பொறுக்கி யாரு மேல கை வைக்கிற நீ என்ன என்ன பேசுனியோ எல்லாமே நான் கேட்டுட்டு தான்டா இருந்தேன் என்று தன் மொபைலைக் காட்டினான். தமயந்தியின் மொபைலில் நளனிற்கு போன் செய்து இவன் பேசிய அனைத்தையும் அவள் நளனை கேட்க வைத்திருந்தாள். அவனை அடித்து துவம்சம் செய்த நளனிடம் அவனை விட்டுருங்க நளன் என்றாள் தமயந்தி. இவனை கொல்லாமல் விடச் சொல்றியா தமயந்தி என்ற நளனிடம் இவனைக் கொலை பண்ணுனா என்னைப் பத்தின உண்மை எல்லோருக்கும் தெரிய வரும் நளன் என்றாள் தமயந்தி. தெரியட்டும் தமயந்தி அதனால என்ன தமயந்தி. யார் என்ன சொன்னாலும் இந்த தமயந்தி என்னோட மனைவி அது மாறாது என்றவன் அந்த கயவனை அடிக்க அரம்பிக்க நளனைத் தள்ளி விட்டு அவன் ஓடி விட்டான்.
தமயந்தி அமைதியாக நளனைப் பார்க்க நாயி ஓடிட்டான் என்றான் நளன். அவன் போகட்டும் நளன் நீங்க என்ன பேசுறிங்க நான் எப்படி உங்க மனைவி இந்த உண்மை உங்க அம்மா அப்பா தங்கைக்கு தெரிந்தால் என்ற தமயந்தியிடம் இந்த உலகத்துக்கே தெரியட்டுமே தமயந்தி அதனால என்ன என்னை இந்த சமுதாயம் தப்பா பேசுமா இல்லை ஒதுக்கி வைக்குமா ஒதுக்கட்டுமே அதில் என்ன எனக்கு கஷ்டம் வரப்போகுது ஆனால் இந்த சமுதாயத்துக்கு பயந்துகிட்டு உன்னை ஒதுக்கினேன்னா என்னோட மனசாட்சியே என்னை கொன்னுரும் தமயந்தி வெறும் செக்ஸ் இல்லை தமயந்தி வாழ்க்கை. காதலுக்கு அடையாளம் காமம் இல்லை ஆத்மார்த்தமான அன்பு உன்கிட்ட அந்த அன்பை நான் ஒவ்வொரு நிமிசமும் உணர்ந்துட்டு தான் இருக்கேன் தமயந்தி. நம்ம ஐஸு இருக்காள் நமக்கான குழந்தையா . நம்ம இரண்டுபேரோட அன்பையும் கொட்டி நம்ம பொண்ணை வளர்க்கலாம் தமயந்தி ஐ லவ் யூ ஐ லவ் யூ சோமச் தமயந்தி என்று தன் மனைவியின் இதழில் தன் இதழைப் பதித்தான் நளன். கணவன் அவனின் காதலையும் முத்தத்தையும் முழு மனதுடன் ஏற்றுக் கொண்டாள் தமயந்தி.
….சுபம்…
இந்த ஆண்டுக்கான சிறந்த படத்திற்கான விருதைப் பெற்றுள்ள படம் நளதமயந்தி என்று அந்த தொகுப்பாளினி அறிவிக்க ஒரு பெரிய இயக்குனர் ஒருவரின் கையால் விருதை வாங்கினாள் நளதமயந்தி படத்தின் இயக்குனர் நளாயினி . விருதை வாங்கிய நளாயினியிடம் தொகுப்பாளினி கவிதா ஓரிரு வார்த்தைகள் பேச சொல்லவும் பேச ஆரம்பித்தாள் நளாயினி.
வணக்கம் . இந்த விருது கிடைத்தமைக்கு ரொம்ப நன்றி. இது ஒரு உண்மைக் கதை. இன்னும் சொல்லப் போனால் என் அம்மாவோட வாழ்க்கை தான் இந்தக் கதை. என் அம்மா தான் அந்த தமயந்தி. நான் ரொம்ப ரொம்ப பெருமையாக சொல்லிக் கொள்கிறேன் என் அம்மா தமயந்தி ஒரு திருநங்கை. ஒரு பெண் என்னை வளர்த்திருந்தால் கூட நான் இவ்வளவு பெரிய ஆளா ஆகிருப்பேனானு தெரியாது. ஆனால் என்னோட அம்மா தமயந்தியோட வளர்ப்பு நான் அதை ரொம்ப பெருமையாக சொல்லிக் கொள்கிறேன்.
திருநங்கை என்பவள்.. “மங்கையானவள் திருநங்கையானவள் நிழலின் இருளில் சிரிப்பவள் அன்பின் ஊற்றாய் பிறந்தவள் வலியின் வலியை தாங்கியவள் திறமைகளை தீர்க்கமாய் பெற்றவள் ஆணாகி பெண்ணாகி யாதுமானவள்”
ஆயிஷா பாரூக் அவர்கள் சொன்ன இந்த வரிகள் சத்தியமானவை. என் அம்மாவோட வாழ்க்கை எப்படிப் பட்ட வலிகள் நிறைந்தது என்பதை நீங்கள் இந்த படத்தில் கண்டது குறைவு. நிஜத்தில் அதிகம்.
கடவுளால் படைக்கப்பட்ட எந்த உயிரும் கேவலம் இல்லை. ஆண், பெண் என்பது போல தான் திருநங்கைகளும். அவர்களை நாம் ஏன் ஒதுக்க வேண்டும். இந்த சமுதாயம் அவங்களை ஒதுக்க ஒதுக்க தான் அவங்களும் ஒடுங்கி பிச்சை எடுக்கிறது, பாலியல் தொழில் செய்றதுனு தங்களை ஒரு சின்ன வட்டத்துக்குள்ளேயே வைத்துக் கொள்கிறார்கள். அவங்க வெளியில் வரணும்னா இந்த சமுதாயம் அவங்களை மதிக்கனும் சமுதாயம் மதிக்கிறதை விட பெத்தவங்க முதலில் அவர்களை மதிக்கனும் நம்ம பெத்த பிள்ளை அப்படினு அவங்க நினைத்து மதித்து அவர்களுடைய முன்னேற்றத்திற்காக போராடினாளே போதும் சமுதாயமும் அவர்களை மதிக்கும் . ஒரு பெண்ணை கற்பழிக்கிறது எவ்வளவு பெரிய குற்றமோ அப்படித் தான் ஒரு திருநங்கையை கற்பழிக்கிறதும் பெரிய குற்றம் என்று அவளுக்கு விருது வழங்கிய புகழ்பெற்ற இயக்குனரை பார்த்து கூறிய நளாயினி நன்றி கூறி விட்டு மேடையை விட்டு இறங்கினாள். ஐஸுக்குட்டி எவ்வளவு அழகா பேசுறடா என்ற தமயந்தியை அணைத்தவள் நான் நளதமயந்தியோட நளாயினி அம்மா என்று கூறி விட்டு தந்தை நளனையும் தாய் தமயந்தியையும் அணைத்துக் கொண்டாள்.
….முற்றும்….