அத்தியாயம் – 11
ஆஹித்தியாவின் கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த மஞ்சள் கயிற்றை வெறித்தவள் அவளின் வாடிய வதனத்தை பார்த்தாள்.
ஏனோ இதற்கு காரணமான அவன் மேல் ஆத்திரம் தலைக்கு ஏறியது.
அழுகை தொண்டையை அடைக்க, “நான் வீட்டுக்கு கிளம்புறேன் மா என்றவள் திரும்பி அக்கா நீயும் வர்றியா?” என்று கேட்டாள்.
“நீ போ… நான் அப்புறமா வரேன்” என்றவள் சுவரோடு சாய்ந்து விழிகளை மூடிக் கொண்டாள்.
திரும்பி நடந்தாள்.
அவனிடம் கேட்க வேண்டிய கேள்விகள் நிரம்பவே இருந்தன.
வெளியில் வந்தவள் சுற்றும் முற்றும் தன் விழிகளை சுழல விட்டாள்.
அவனோ, ஜீப்பில் தான் அமர்ந்து இருந்தான்.
அவனை நோக்கி வேகமாக சென்றவள் இதழ்கள் நடுங்க “மாமா” என்றழைத்தாள்.
சீட்டில் சாய்ந்து விழிகளை மூடி அமர்ந்து இருந்தவன் அவளின் அழைப்பில் சட்டென விழிகளைத் திறந்து அவளைக் கேள்வியாக நோக்க, அவளோ “என் அக்காவை லவ் பண்றீங்களா?” என நேரடியாக கேட்டு விட்டாள்.
அவளது கேள்வியில் சற்றே திகைத்தாலும் “லவ் பண்ணாமலா கல்யாணம் பண்ணிட்டு வந்து இருக்கேன்?” என்று அவளிடமே திருப்பிக் கேட்டு இருந்தான்.
அவளுக்கோ சுருக்கென்ற வலி இதயத்தில் பரவியது.
“அவளுக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லாமல்…”என்று அவள் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே “பிடிக்க வச்சிடுவேன்” என்றான்.
“நீங்க பண்றது தப்பு மாமா” என்றவள் குரல் ஈனமாக ஒலித்தது.
“எது தப்பு சரின்னு எனக்கு தெரியும் அதை நீ சொல்ல தேவையில்லை” என்று முகத்தில் அடித்தது போல பதிலளித்தான்.
தூங்குகின்றேன் என்ற பேர்வழியில் தூங்குவதைப் போல நடிப்பவர்களிடம் பேசி என்ன பயன்?
குரல் அடைக்க “அக்காவை நல்லா பார்த்துக்கோங்க மாமா என்றவள் மனதை அடைக்கும் துக்கம் தாழாமல் நான் கேக்குறது தப்பு தான் மாமா ஆனால் கேட்காம இருக்க முடியல ரொம்பவே வலிக்குது மாமா என்றவள் விழிகளில் இருந்து வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டே நான் உங்க மனசை கொஞ்சம் கூட பாதிக்கலையா?” என்று கேட்டே விட்டாள்.
அதற்கு அவன் என்ன சொல்வான்? அவனின் முழு நேர சிந்தனையே ஜெய் ஆனந்த்தை கஷ்டபடுத்த வேண்டும் என்பதே! அதில் எங்கனம் அவளைப் பற்றி யோசிப்பான்?
இருக்கும் தலைவலியில் இவள் வேறு என்ற எரிச்சலில் “என்னோட பொண்டாட்டியை எப்படி பார்த்துக்கணும்ன்னு எனக்கு தெரியும் என்ற ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் அழுத்தம் கொடுத்து சொன்னவன் அண்ட் மோரோவர் உன்னை பார்த்தாலே எரிச்சலா இருக்கு. எனக்கு உன்னை பார்க்க கூட இஷ்டம் இல்லை ஏதோ ஆஹித்யாவோட தங்கச்சின்னு பார்க்குறேன் இல்லைனா நீ பேசுற பேச்சுக்கு சாவடிச்சு இருப்பேன்” என்று கர்ஜித்தான்.
அவன் விட்ட வார்த்தைகள் அவளின் ஆழ் மனதில் ஆறாத ரணமாக பதிந்துப் போனது.
காதல் என்ற சொல்லுக்கு அர்த்தம் கூடத் தெரியாதவனிடம் பேசிக் கொண்டு இருக்கின்றோம் என அப் பேதைக்கு அப்போது புரியவில்லை.
அவன் முன் வெடித்து அழுது விடுவோமோ என அச்சம் கொண்டவள் வாயை இறுக மூடிக் கொண்டு வீட்டை நோக்கி ஓடி இருந்தாள்.
போகும் அவளை சலிப்பாக பார்த்தவன் “ஷிட்… இவ வேற” என்று சொல்லிக் கொண்டே மீண்டும் விழிகளை அழுந்த மூடிக் கொண்டான்.
உணர்வுகளை அடக்கும் வழி அறியாமல் அறைக்குள் வந்தவள் வெடித்து அழுதாள்.
அவன் செய்த செயலை விட அவன் பேசும் வார்த்தைகள் தான் அவளை வதைத்தன.
உயிரை வதைக்கும் இந்த கொடிய வலியைத் தாங்கிக் கொள்வதை விட தன்னைத் தானே மாய்த்துக் கொள்ளலாமா? என்று நொடியில் தோன்றிய எண்ணத்தை அடியோடு அழித்தவள் சுருண்டு கட்டிலில் படுத்துக் கொண்டாள்.
வலியை மறக்க மதுவை நாடும் ஆண்களின் மத்தியில் சாதாரண பெண் அவளும் என்ன தான் செய்வாள்?
இங்கோ, ஜெய் ஆனந்தின் நிலைமையோ படு மோசமாக போயிருந்தது.
முழு போதையில் அதுவும் தன்னைத் தானே அடித்துக் கொண்டு நிலத்தில் வீழ்ந்து கிடந்தவனை சமாளித்து எழுப்பி காயபட்ட கரத்திற்கு மருந்திட்டு முடிப்பதற்குள் நவீனுக்கு போதும் போதுமென்று ஆகிவிட்டது.
அவனைக் கைத் தாங்கலாக கூட்டிச் சென்று கட்டிலில் படுக்க வைத்தவன் இழுத்து ஒரு பெரு மூச்சை விட்டுக் கொண்டே அவனின் குழறலான பேச்சை செவிமடுக்க ஆரம்பித்தான்.
அவனோ, “தி… தியாயா என்று சொல்லிக் கொண்டே இட்ஸ் ஹர்டிங் டி ” என்று அந்த போதையிலும் தன் இடது மார்பை சுட்டிக் காட்டியவன் விழிகளில் இருந்து கண்ணீர் வழிந்தது.
“ஆனந்த்…. ஆனந்த்” என்றழைத்து அவனை உலுக்கினான்.
ஆனால், அதனை எல்லாம் உணரும் நிலையையே அவன் கடந்து விட்டு இருந்தான்.
மீண்டும் தன்னைத் தானே காயப்படுத்தும் நோக்கில் அறைந்து கொள்ள ஆரம்பித்தவனின் கரங்களை கட்டிலோடு சேர்த்து அழுத்தி பிடித்தவன் “டேய்… குடிக்கவே மாட்டியே டா என்னாச்சு டா? எனக்கு நீ பேசுறது ஒண்ணுமே புரியல ப்ளீஸ் ஏதாச்சும் புரியிற போல சொல்லுடா” என்றான்.
“தியா…விபீ…ஷன்” என்று நா குழற சொல்லிக் கொண்டே ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றிருந்தான்.
“வாட்?” என கேட்ட படி அவனின் கன்னத்தை தட்டி அவனை சுய நினைவுக்கு கொண்டு வர முயற்சி செய்தான்.
ஆம், அவனால் முயற்சி மாத்திரமே செய்ய முடிந்தது.
அதற்குள் போதை தலைக்கு ஏற முழு மயக்க நிலைக்கே சென்று இருந்தான்.
“ஓஹ் மை கோட்” என்று சொல்லிக் கொண்டே அவனின் நாடித் துடிப்பை ஆராய்ந்தவன் அவசமாகச் சென்று ஃப்ரிட்ஜ்ஜில் இருந்த எலுமிச்சப் பழச் சாற்றினை எடுத்து வந்து அவனுக்கு புகட்டி இருந்தான்.
கிட்டத்தட்ட ஆறு மணி நேரமாக என்னென்னவோ செய்து அவனோடு போராடியவன் அவனை சுய நினைவுக்கு வர வைக்கவே, இரவு 6.30 மணியைக் கடந்து இருந்தது.
நெற்றியை அழுத்தி விட்டபடி எழுந்தவனுக்கு தலையை சம்மட்டியால் அடித்தது போல வலித்தது.
எழுந்து அமர்ந்து இருந்தவனை வெறித்த படி சுவற்றில் சாய்ந்து மார்புக்கு குறுக்கே கைகளைக் கட்டிய படி பார்த்துக் கொண்டு நின்று இருந்தான் நவீன்.
மதியத்தில் இருந்து அவன் பட்ட பாடு அவனுக்குத் தானே தெரியும்.
தன் மேல் அடித்த மதுவின் நெடியில் “ஷிட்…” என்று சொல்லிக் கொண்டே சுற்றும் முற்றும் பார்த்தான்.
“என்னோட வீடு தான்” என்ற குரலில் அப்போது தான் தலையை உயர்த்திப் பார்த்தான்.
கேசம் கலைந்து போட்டிருந்த ஷர்ட்டும் கசங்கி புயலின் அடிபட்டவன் போல நின்றிருந்த நவீனின் கோலத்தைப் பார்த்து திகைத்தவன் “நீ எப்போ வந்த என்றவன் ஞாபகம் வந்தவனாய் சிசேரியன் பண்ணியாச்சா?” என்று கேட்டான்.
“வாவ்… சூப்பர்…கேட்ப டா. நல்லா கேட்ப ஏன் நான் சாகலைன்னு கேளு?” என்றவனிடம் “சாரி என்றவன் சட்டென கோபம் தலைக்கு ஏற என்ன கருமத்தை வாங்கி வச்சு இருக்க?” என்று சீறினான்.
“அஹான்… சாருக்கு அந்த கருமத்தை குடிக்கிறப்போ மட்டும் ஜிவ்வுன்னு இருந்துச்சு போல” என்றான் நக்கலாக…
ஷர்ட்டினை கழற்றிக் கொண்டே “ஓகே லீவ் தட் . நான் கேட்டதுக்கு பதிலை சொல்லு” என்றவன் கழுத்தில் நெட்டி முறித்துக் கொண்டு கட்டிலில் இருந்து எழுந்தான்.
“சிசேரியன் எல்லாம் சக்சஸ் தான் பட் ஏன் திடீர்னு குடிகாரன் ஆயிட்ட?” என்று கேட்க….
சுயம் அடைந்து எழுந்தவனுக்கு அவளின் நினைவுகள் வராமல் இல்லையே!
மீண்டும் மதுவை நாடி விடுவோமோ என்ற அச்சத்தில் இதழ் கடித்து தன் உணர்வுகளை அடக்கிக் கொண்டவன் “நவ் ஷி இஸ் மேரிட்” என்றான்.
முதலில் இருந்து ‘தியா…தியா’ என்று தானே புலம்பி கொண்டு இருந்தான். ஆக அவளுக்கு திருமணம் ஆனதால் தான் குடித்தானா? அப்படியென்றால் அவள் யாரை திருமணம் செய்து இருக்கக் கூடும்? என்ற கேள்வி எழ, அதற்குள் அவனின் சிந்தையே ஜெய் ஆனந்த் போதையிலேயே ‘விபீஷன்’ என்று நா குழற சொன்னதும் நினைவுக்கு வர அதிர்ந்து தான் போனான்.
அதே அதிர்ச்சி மாறாமல், நீ காதலை கூறி விட்டாயா?என தன்னை மீறி அவனிடம் கேட்க வந்த வார்த்தைகளை விழுங்கிக் கொண்டவன் “எப்போ கல்யாணம் ஆச்சு?” என்று கேட்டு இருந்தான் .
அவனின் கேள்வியில் குளியலறைக்குள் செல்லப் போனவன் திரும்பி “இப்போ நான் ரெப்ரஷ் ஆகட்டுமா வேணாமா?” என்று கேட்டவன் குரலில் என்ன இருந்தது என்று அவனாலேயே கணிக்க முடியவில்லை.
ஒரு சில நிமிடங்களில் தன்னை சுத்தப் படுத்திக் கொண்டு வந்தவன் “சாரி நவீன் என்னால உனக்கு” என்றவனை இடை மறித்தவன் “உனக்கு அங்கள் நிறைய கால் பண்ணிருக்கார்” என்றதும் “ஓஹ் ஷிட் என்றவன் அலைபேசியில் இருந்த பத்துக்கும் மேற்பட்ட தவறிய அழைப்புகளை பார்த்தவன் உன்னோட ஒயிட் ஷர்ட் இருந்தால் தா” என்றான்.
“நீ அங்க போயே தான் ஆகணுமா?”
“எஸ்… ஆஃப் கோர்ஸ்”
“எதுக்காக அங்க போய் மறுபடியும் நீ கஷ்டப்படுறதுக்கா சோ நைட் டியூட்டின்னு சொல்லிடு” என்றவனை பார்த்து விரக்தியாக சிரித்தவன் “எவ்வளவு நாளைக்கு நான் ஓடி ஒளியிறது?” என்று கேட்டானே பார்க்கலாம்.
இப்படி ஒரு கேள்வி அவன் கேட்பான் என சற்றும் அவன் எதிர்ப் பார்க்கவில்லை.
“யூ ஸ்டில் நாட் ஸ்டேபல் சோ இங்கேயே ஸ்டே பண்ணிக்கோ” என்றவனிடம் “பிளீஸ் நவீன் ஐ ஹேவ் டூ மூவ் ஒன் இதெல்லாம் நான் இங்க இருந்தா போல எல்லாம் மாறிட போறது இல்லடா” என்றவன் தொடர்ந்து சென்று நவீனின் ஷர்ட்டைப் போட்டுக் கொண்டு வீட்டை நோக்கிக் கிளம்பி இருந்தான்.
அவன் வீட்டை அடைந்த போது நேரம் எட்டைக் கடந்திருக்க, வாசலில் கார் வந்து நின்றதும் சத்தம் கேட்டு வெளியில் ஓடி வந்த சித்ரா “என்னடா ஃபோன் கூட எடுக்காமல்…” என்று குரல் தழுதழுக்க பேசியவரை இடை மறித்தவன் “கிரிடிகல் ஆபரேஷன் மா அதான் கால் ரிசீவ் பண்ண முடியல” என்று முதன் முறை பொய் உரைத்து இருந்தான்.
“அதுக்காக இப்படியா பண்றது எப்படியாச்சும் சொல்லி இருக்கலாம்ல… நீ பேசலைனதும் துடிச்சு போய்ட்டேன் டா” என்றார் நெஞ்சம் பதைபதைக்க…
“ஏன் அவளுக்கு கல்யாணம் ஆனது தாங்க முடியாமல் செத்துட்டேன்னு நினைச்சீங்களா மா?” என்று கேட்டவனை அதிர்ந்து போய் பார்த்தார் சித்ரா.
அவரின் திகைத்த தோற்றத்தில் தான் கூறிய பதிலை உணர்ந்து தன்னைத் தானே நொந்துக் கொண்டவன் “எனக்கு டைம் வேணும்மா. சீக்கிரம் எல்லாமே மறந்திட்டு கல்யாணம் பண்ணிக்குவேன்” என்று அவரை சமாதானம் செய்தவன் திரும்பி தன்னையே ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்த பிரதாபன் அருகில் சென்று அமர்ந்தவன் “சாரிபா” என்றான்.
அதில் எத்தனையோ அர்த்தங்கள் பொதிந்து இருந்ததை அவன் மட்டுமே அறிவான்.
ஆதூரமாக அவனின் தலையை வருடி விட்டவர் “போய் ப்ரெஷ் ஆகிட்டு வா சாப்பிடலாம்” என்று சொல்ல ஒரு பெரு மூச்சை இழுத்து விட்டவன் எழுந்து நேரே தனது அறையை நோக்கி விரைந்து இருந்தான்.
அறைக்குள் நுழைந்தவனுக்கு தான் அன்னையிடம் பேசிய வார்த்தைகள் அவனுக்கே அதிக படி என்று தோன்றியது.
கண்ணாடியினால் வெட்டப்பட்டு தோலைக் கிழித்த காயங்கள் மருந்தின் வீரியத்தால் காய்ந்து இருந்த கரத்தையே மீண்டும் ஓங்கி சுவற்றில் குத்தி இருந்தான்.
மீண்டும் தன்னை ஆழி சுழலுக்குள் இழுக்கும் அவளின் நினைவுகள் தானே இதற்கு காரணம் என்ற ஆற்றாமையில் “டேமிட்” என்று சொல்லிக் கொண்டவன் பார்வை ஓரிடத்தில் நிலைக் குத்தி நின்றது.
Super sis 💞
Feelings sad dr…. Bavya avana thittitavathu poyirukalam 😌😌😌.. paavam en hero jai.. avana romba aluga vaikatha ma.. kashtama Iruku….