அறைக்குள் வந்து கதவை மூடிக் கொண்டவளுக்கு இன்னுமே தன் முகச் சிவப்பு அடங்கிய பாடு தான் இல்லை.
தான் அருந்தி விட்டு கொடுத்த காஃபியை குடித்து விட்டானே!
“ஹையோ!” என்று வெட்கத்தில் சொல்லிக் கொண்டவள் சுவரில் சாய்ந்து நின்று கொண்டாள்.
இன்னும் இதழ்களில் புன்னகை மீதம் இருந்தது.
அதேநேரம், ஜெய் ஆனந்த் காலை உணவை சாப்பிட வந்தமர்ந்த போதே குரலை செருமிக் கொண்ட பிரதாபன் “ அடுத்து என்ன பண்ண போறதா ஐடியா?” என்று கேட்டார்.
“ஹாஸ்பிடல் மேனேஜ்மென்ட் அஹ் பார்த்துக்கணும் அப்பா” என்று சொல்லிக் கொண்டே சாப்பிட ஆரம்பித்து விட, சித்ராவோ பிரதாபனிடம் கண்களில் ஜாடை காண்பிக்கவும் “உனக்கும் விபீஷனுக்கும் கல்யாணம் பண்ணி வைக்கலம்னு முடிவு பண்ணி இருக்கோம் ஆனந்த்” என்ற விடயத்தை போட்டு உடைத்தார்.
இவ்வளவு சீக்கிரம் அவன் தன் திருமணத்தை எதிர் பார்க்க வில்லையே.
அதிர்ந்து தான் போனான்.
“அப்பா கொஞ்ச நாள் போகட்டுமே” என்று சொல்ல…
“அஞ்சு வருஷம் போச்சு டா இனிமேலும் தாமதிக்காம உங்க ரெண்டு பேரோட கல்யாணத்தையும் செஞ்சி வச்சிறணும்” என்று சொன்ன அடுத்த கணமே தன் முன் இருந்த தண்ணீரை மடமடவென பருகிய விபீஷன் “அப்பா எனக்கு பவ்யாவை பிடிச்சு இருக்கு” என்று தன் விருப்பத்தை போட்டு உடைத்து இருந்தான்.
அவன் சொல்லிய வேகத்தில் புரை ஏறியது என்னவோ ஜெய் ஆனந்த்திற்கு தான்.
இறுமிக் கொண்டே தலையை தட்டிக் கொண்டவன் விபீஷனை திரும்பி பார்க்க, அவனோ கூலாக அமர்ந்திருந்தான்.
அவன் கூறிய தொனியில் சித்ரா சிலை போல நின்றிருக்க, முதலில் சுயம் அடைந்த பிரதாபன் “நாங்க பார்த்த பொண்ணே அவ தான்டா” என்று சிறு புன் முறுவலோடு கூற, என்ன சொல்லப் போகிறார்கள் என்று உள்ளே எழுந்த மெல்லிய பதட்டத்துடன் முகத்தில் ஏதனையும் காட்டிக் கொள்ளாமல் அமர்ந்திருந்தவனுக்கு தன் தந்தை கூறிய விடயத்தில் இதழ் பிரித்து புன்னகைத்தான் ஆனால் அடுத்த கணமே சட்டென என்னவோ தோன்ற “அப்பா அண்ணா?” என முகத்தில் குழப்பத்துடன் கேட்க,
“ஆஹித்தியா தான் நம்ம வீட்டு மூத்த மருமகள்” என்று சித்ரா கூற,
“வாவ் சூப்பர்ல” என்று ஜெய் ஆனந்த்தின் தோளில் கையை போட்டுக் கொண்டான் விபீஷன்.
“முதல்ல உங்க ரெண்டு பேருக்கும் சம்மதமான்னு நாங்க கேட்க அவசியம் இல்லை போல இருக்கே” என்று சித்ரா கேலியாக கேட்க…
“புரிஞ்சா சரி தான்” என்று எழுந்து கொண்டான் விபீஷன்.
“டேய், எங்கடா போற இன்னைக்கே நல்ல நாள் தான் தள்ளி போடாமல் கிளம்புங்க ரெண்டு பேரும் போய் பொண்ணு பார்த்திட்டு வந்துடலாம்” என்று சித்ரா சொல்ல,
“வாட் இன்னைக்கா?” என்று ஜெய் ஆனந்த் மற்றும் விபீஷன் ஒரே நேரத்தில் அதிர்ந்து போய் ஒருவர் முகத்தை ஒருவர் மாறி மாறி பார்த்துக் கொண்டனர்.
“பின்ன, இன்னைக்கு விட்டா இனி அடுத்த வாரம் தான் நல்ல நாள் வருது அது வரையும் எதுக்கு டா பார்த்திட்டு இருக்கணும்? சீக்கிரம் உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி பார்த்திடணும்ன்னு எங்களுக்கு ஆசை இருக்காதா?” என்று ஆதங்கமாக கேட்க,
“சித்ரா” என்ற பிரதாபனின் அழைப்பில் அவரோ அமைதியாகி விட, “என்னப்பா இன்னைக்கு என்ன?” என்று தன்மையாக கேட்டார்.
“ நான் ஆஹித்யா கூட பேசணும் அப்பா” என்று சொல்ல.
“அதுக்கு தானே போறோம் அங்க போய் பேசிக்கலாம்” என்று சித்ரா ஆரம்பித்து விட,
“சித்ரா நீ உள்ள போ” என பிரதாபன் கூற,
“அப்பாவும் மகனும் என்னவோ பண்ணுங்க” என்று நொடித்துக் கொண்டு சமையல் கட்டுக்குள் நுழைந்து கொள்ள,
போகும் அவரை பெரு மூச்சுடன் பார்த்து விட்டு திரும்பிய பிரதாபன் “உனக்கு ஆஹித்யாவை பிடிக்கலையா ப்பாஹ்?” என அவன் தயங்குவதை பார்த்து கேட்க,
அவசரமாக “அப்பா அப்படி எல்லாம் இல்ல. எனக்கு ஓகே தான். பட் இந்த ஒன் வீக்ல நிறைய வொர்க் இருக்கு சோ நெக்ஸ்ட் வீக் சரியா வரும் பாஹ்” என்றவன் திரும்பி விபீஷனை ஒரு பார்வை பார்த்து விட்டு “விபீஷனை கூட்டிட்டு போங்களேன்” என்று கோர்த்து விட,
‘ நாசமாபோச்சு’ என்று மனத்தில் சொல்லிக் கொண்டவன் “நானும் நெக்ஸ்ட் வீக் பார்த்துக்கலாம்னு இருக்கேன்” என்று சொல்ல…
இருவரையும் புரியாமல் பார்த்துக் கொண்டு நின்ற பிரதாபனோ “ அப்போ அடுத்த வாரம் பார்த்துக்கலாம்” என்று சொன்ன பிரதாபன் வாயில் வரை சென்று மீண்டும் திரும்பியவர் “ மில் ல எதுவும் வேலை விட்டு வச்சுட்டியா என்ன?” என்று விபீஷனிடம் கேட்டு விட,
அவனோ, ‘ஓஹ் கோட் இவர் வேற, அவளை கரெக்ட் பண்ண டைம் கிடைக்கும்னு பார்த்தா கேள்வி கேட்டே ரவுண்ட் கட்டுறாங்க’ என்று சொல்லிக் கொண்டவன் “இல்ல ப்பாஹ் என்றவன் பிடரியை வருடிக் கொண்டு சம்பந்தமே இல்லாமல் “அண்ணா கூட ஹாஸ்பிடல் கிளம்புறேன்” என்றான்.
இதழ் குவித்து ஊதிக் கொண்டே இருக்கையை விட்டு எழுந்த ஜெய் ஆனந்த் “நெக்ஸ்ட் வீக் பேசலாம் ப்பாஹ்” என்று சொன்னவன் திரும்பி ஃப்ரெஷ் ஆகிட்டு வரேன் வெயிட் பண்ணு” என விபீஷனிடம் சொன்னவன் தன் அறையை நோக்கி சென்றிருந்தான்.
இங்கோ, வித்யா கூறிய விடயத்தில் இன்ப அதிர்ச்சியில் அமர்ந்திருந்தாள் ஆஹித்யா.
இவ்வளவு சீக்கிரத்தில் தன் எண்ணம். தன் காதல் கைகூடும் என்று விளையாட்டிற்கு கூட அவள் நினைக்கவில்லையே!
ஜெய் ஆனந்த்துடன் தான் திருமணம் என்று சொன்னதும் இதோ இன்னுமே அவளால் நம்ப முடியாத அதிர்ச்சியிலிருந்தாள்.
சிந்தனையில் இருந்தவளை பார்த்துக் கொண்டே அவளின் அறைக்குள் கோபமாக உள்ளே வந்த பவ்யா “ கடுப்பா இருக்கு” என்று சொல்லிக் கொண்டே வந்து கட்டிலில் அமர்ந்தாள்.
தன் எண்ண ஓட்டங்களில் இருந்து மீண்ட பெண்ணவளோ “ஏன் டி என்னாச்சு?” என்று கேட்க,
“இப்போ எனக்கு கல்யாணம் பண்ணிக்க இஷ்டம் இல்லை” என்று அவள் தலையில் இடியை இறங்கினாள் பவ்யா.
“விபீ பின்னாடியே சுத்தி லவ் பண்ணி அழுது கரைஞ்ச, இப்போ என்ன கசக்குதோ?” என்று தன் வாயில் வந்ததை உலற, “வாட்? என்ன சொல்ற?” என புரியாமல் கேட்டாள் பவ்யா.
ஆஹித்யாவோ “ஹி ஹி சும்மா” என்று சமாளிக்க முயல…
“நீ என்ன சொன்னனு எனக்கு நல்லாவே கேட்டுச்சு” என்றவள் முறைத்துக் கொண்டே “நான் எப்போ அந்த அடக்கவடக்கமான பையனை லவ் பண்ணேனு சொன்னேன்? என்ன கனவு ஏதும் கண்டுட்டு உளருறியா?” என்று வேறு அவளே அடியெடுத்து கொடுக்க,
‘ ஆத்தி உஷார் ஆஹி உஷார், எல்லாம் சொல்லி பைத்தியகாரி பட்டம் மட்டும் வாங்கிடாத’ என தனக்குத்தானே சொல்லிக் கொண்டவள் “எப்படி டி கரெக்டா கண்டு பிடிச்ச? லைட்டா குட்டி கனவு கண்டேன் அந்த அப்பெக்ட்ல தான் ஒரு புளோல சொல்லிட்டேன்” என்றாள் பாவமாக…
உள்ளேயோ அவள் மனம், அவளுக்கே காரி உமிழ்ந்தது என்னவோ உண்மை தான்.
“எதுக்கு இப்போ முகத்தை பாவமா வச்சிட்டு இருக்க? உனக்கு ஹேப்பி தானே வெட்டிங் அதுவும் உனக்கு பிடிச்ச ஆள் கூட என்றதும் “ஹேய் உனக்கு எப்படி?” என்று வியப்பாக கேட்டாள் ஆஹித்யா.
“மாமாவை பார்த்ததும் உன் முகம், தௌசண்ட் வால்ட் பல்ப் போல பிரகாசமா மாறவும் கெஸ் பண்ணேன் பட் என்னை பத்தி நீ கனவு கண்டது தான் தப்பு கணக்கா போச்சு” என்றாள்.
‘ ஆமா டி ஆமா எல்லாமே தலைகீழா நடந்துட்டு இருக்கு’ என்று மனதில் அலறியவள் குரலை செருமிக் கொண்டே “ பவ்யா நீ வேற யாரையும் லவ் பண்றியா?” என்று பதட்டமாக கேட்டாள்.
“ம்கும் அதெல்லாம் இல்ல. பட் அந்த மகா நல்லவன் வேண்டாம்” என்றாள் தெளிவாக…
“உனக்கு என்ன கிறுக்கு பிடிச்சிருக்கா அதுவும் நல்லவன்னு சர்டிபிகேட் கொடுத்திட்டு வேண்டாம் சொல்ற, என்னடி காமெடி பண்றியா?”
“ஆஹி, என் வாழ்க்கை விஷயத்துல நான் ஏன் காமெடி பண்ண போறேன்? அண்ட் எனக்கெல்லாம் ஆன்டி ஹீரோ போல இருந்தா தான் பிடிக்கும்” என்றவளை அதிர்ந்து பார்த்த ஆஹித்யா “எதே ஆன்டி ஹீரோவா?” ‘கிறுக்கி, அவன் ஆன்டி ஹீரோவையே விழுங்கிருவான் டி’ என வழக்கம் போல அவள் மனம் கவுண்டர் கொடுக்க, “விழிகள் மின்ன, நான் தான் அவன் மேல லவ் ல விழணும் அதுவும் லோ லோனு அவன் பின்னாடி சுத்தணும் பட் அவன் என்னை சுத்தமா கண்டுக்க கூடாது. எப்ப பார்த்தாலும் வாய்க்குள்ள காரத்தை வச்சுட்டு சுத்துற போல சிடு சிடுன்னு இருக்கணும் பட் நான் மட்டும் லவ் பண்ணிட்டு பின்னாடியே வழிஞ்சிட்டு அவன் பின்னாடி போகணும்” என்று அடுக்கிக் கொண்டே போக, எதிரே விழிகள் இரண்டும் பிதுங்கி போய் அமர்ந்திருந்த ஆஹித்யாவுக்கோ ‘அல்டிமேட் உல்ட்டாவா இருக்கே என்று மனதில் சொல்லிக் கொண்டவள் அவன் அப்படி தான்’ என்று தொண்டை வரை வந்த வார்த்தைகளை விழுங்கிக் கொண்டவள் “அப்போ உன் ஆன்டி ஹீரோ கூட எப்ப வாழுறதா ஐடியா?” என்று கேட்க,
“திருந்தின பிறகு தான்” என்று பவ்யா சொல்ல,
அதுக்கு வாய்ப்பே இல்லையே என்று யோசித்தவளுக்கு இப்போது நிதர்சனம் உரைக்க, “நானே சொல்றேன், சும்மா ஆன்டி ஹீரோ அது இதுன்னு சொல்லிட்டு சுத்தாம அந்த சொக்க தங்கத்தை இல்லை இல்லை பியூர் டயமண்ட்டை கட்டிக்கோ” என்றாள் அழுத்தம் திருத்தமாக….
“யோசிப்போம், எப்படியும் அவனுக்கு தானே என்னை நேந்து விட்டு இருக்காங்க கட்டி தொலைக்கிறேன் பட் கொஞ்ச நாளா என்னை குறுகுறுனு பார்த்திட்டு சுத்துறான் அதை மட்டும் கொஞ்சம் நிறுத்த சொல்லு. பத்திட்டு வருது” என்று சொன்னவள் எழுந்து அறையை திறந்து கொண்டு வெளியில் சென்றாள்.
“என்னவோ கோமா ஸ்டேஜ் போன போல ஒன்னுமே ஞாபகத்துல இல்லையே. அதுவும் விபீஷனோட சைலண்ட் கேரக்டர் தெரிஞ்ச எனக்கு ஏன் தான் இவ்வளவு மோசமான கனவு வந்துச்சோ தெரியல” என புலம்பிக் கொண்டே எழுந்து ஹாலுக்குள் வந்தவள் திகைத்து நின்றாள்.
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர். அப்படி தலைகீழா மாத்திட்டீங்களே. இது உங்களுக்கே ஓவரா இல்ல? ஆவலாக வெயிட்டிங் அடுத்த பதிவிற்காக.👌👌👌👌👏👏👏🤩🤩🤩🥰🥰😍😍
Super jeeshu sis