அவளது அண்ணனிற்கு போன் செய்தவள் அண்ணா என்றிட என்ன பாப்பா இந்த நேரத்தில் போன் பண்ணி இருக்க ஏதும் பிரச்சனையா என்றான் நரேந்திரன். பிரச்சனை எல்லாம் எதுவும் இல்லை அண்ணா அப்பா எப்படி இருக்காங்க என்றிட அப்பாவுக்கு ஆஞ்சியோ பண்ணி ஸ்டண்ட் வச்சுருக்காங்க நீ பயப்படாதே அப்பா காலையில் கண் முழிச்சுருவாரு என்றான். நீங்க எல்லோரும் சாப்பிட்டிங்களா அண்ணா என்றவளிடம் சாப்பிட்டோம் பாப்பா என்றான் நரேந்திரன். சித்தப்பாவை எதுவும் நீங்களும் , பெரிய அண்ணாவும் பேசிடலையே என்றவளிடம் அவர் நம்ம சித்தப்பா பாப்பா அவரை நாங்க என்ன சொல்லிடப் போறோம். அவருக்கும், நடந்த கூத்துக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது என்றவன் நீ அழாதம்மா என்றவன் நிம்மதியா தூங்கு என்று போனை வைத்தான்.
அத்தானுக்கு இப்போ எப்படி இருக்காம் என்ற ரத்னவேலுவிடம் அப்பாவுக்கு இப்போ பரவாயில்லையாம் என்றவள் படுத்துக் கொள்ள அவனும் படுத்துக் கொண்டான்.
ஹாலில் ஏதோ உடையும் சத்தம் கேட்கவும் இருவரும் எழுந்து விட்டனர். என்ன சத்தம் அது என்ற வேல்விழியிடம் தெரியலையே இரு பார்த்துட்டு வரேன் என்ற ரத்னவேலு எழுந்திருக்க அவளும் அவன் பின்னே சென்றாள்.
கயல்விழியை அலங்கரித்த விஜயலட்சுமி என் மகள் எப்பவும் தேவதை தான் என்றார். போங்கம்மா அந்த வேல்விழியை விட நான் நல்லா தனே இருக்கேன் அப்பறம் ஏன்மா இந்த வெற்றி அத்தானுக்கு என்னைப் பிடிக்கவில்லை. என்னை எப்படி கழுத்தை நெறிச்சாரு தெரியுமா எனக்கு இன்னமும் வலிக்குது. அந்த வேல்விழி முன்னாடி என் கன்னத்தில் பளார்னு அறைஞ்சு எவ்வளவு பெரிய அவமானம் எனக்கு என்றவளிடம் அதை விடுடி அவனும் பாவம் தானே என்ற விஜயலட்சுமி எப்படிடி அவன் உன்னை கல்யாணம் பண்ணிகிட்டான் என்றார். ஏன் உங்களுக்குத் தெரியாதா நீங்களும் , மாமாவும் பண்ணின ஏற்பாடு தானே என்ற கயல்விழியிடம் இருந்தாலும் உன் வாயால ஒரு தடவை சொல்லேன் என்றார். கயல்விழியும் சொல்ல ஆரம்பித்தாள்.
சுகுமாறனின் சட்டையைப் பிடித்த வெற்றிமாறன் என்ன எளவைடா நேற்று எனக்கு கொடுத்த உண்மையை சொல்லப் போறியா இல்லையா என்றிட என்னை மன்னிச்சுரு மாப்பிள்ளை என்ற சுகுமாறன் நடந்தவற்றைக் கூற ஆரம்பித்தான்.
என்ன சுகுமாறா ஏன் சோகமா உட்கார்ந்திருக்க என்ற கதிரேசனிடம் அதெல்லாம் ஒன்றும் இல்லைங்க மாமா என்றான் சுகுமாறன். இல்லையே உன்னோட காதல் கைகூடவில்லைனு கவலையா என்ற கதிரேசன் தெரியும் சுகுமாறா நீ வேல்விழியை தானே விரும்புற என்றார் கதிரேசன். ஆமாம் மாமா ஆனால் அவள் இப்போ வெற்றிக்கு நிச்சயம் பண்ணுன பொண்ணு என்றவனிடம் அவளை கல்யாணம் பண்ணிக்க உனக்கு ஒரு வாய்ப்பை நான் உருவாக்கிக் கொடுத்தால் வேண்டாம்னு சொல்லுவியா என்றார் கதிரேசன். கண்டிப்பா அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்குமா மாமா என்றவனிடம் அதற்கு நீ ஓரு காரியம் பண்ணனும் என்றவர் ஒரு மருந்தைக் கொடுத்து இதை எப்படியாவது என் மகன் வெற்றிக்கு எதிலாவது கலந்து கொடுத்திரு என்றார் கதிரேசன். சுகுமாறனும் அவர் சொன்னது போலவே ஒரு கூல்டிரிங்க்சில் கலந்து வெற்றிமாறனுக்கு கொடுத்து விட்டான். வெற்றிமாறன் அது போதைமருந்து கலந்த கூல்டிரிங்க்ஸ் என்று தெரியாமல் குடித்து விட்டு மயங்கினான்.
மற்ற நண்பர்கள் மட்டையாகி விட சுகுமாறன் வெற்றிமாறனை தோப்பு வீட்டில் கொண்டு போயி விட்டான். அங்கு வெற்றிமாறனுக்காக காத்துக் கொண்டிருந்த கயல்விழி அவன் வந்தவுடன் அவனை தன் தோளில் சாய்த்தபடி அழைத்துக் கொண்டு அறைக்குள் சென்று கதவை சாத்திக் கொண்டாள்.
போதையில் இருந்தவனுக்கு அவள் வேல்விழியின் நிச்சயதார்த்தப் புடவையை கட்டி இருக்கவும் வேலு என்றிட ஆமாம் உன்னோட வேலு தான் வெற்றி என்றவள் அவனை அணைத்துக் கொண்டாள். தன்னவள் தான் என்று நினைத்தவன் அவளைக் கட்டிக் கொண்டான்.
காலையில் கண்விழித்தவனுக்கு தான் இருக்கும் கோலத்தைக் கண்டு அதிர்ந்தவன் எதிரில் கயல்விழி அழுது கொண்டிருக்க நடந்ததை அவனால் யோசிக்க கூட முடியவில்லை.
என்னோட வாழ்க்கையையே கெடுத்துட்டிங்களே அத்தான் என்று அழுது நடித்தாள் கயல்விழி. ஐயோ கயல் என்றவன் இப்போ என்ன பண்ணுறது என்று யோசிக்க ஆரம்பித்தான். அவனது மூளையை சிந்திக்க விடாமல் செய்தது கயல. விழியின் கண்ணீர். சிறு வயதில் இருந்து கனவு கண்ட காதல் கை கூடும் நேரத்தில் கயல்விழிக்கு இவ்வளவு பெரிய அநியாயத்தை செய்து விட்டோமே என்ற குற்றவுணர்ச்சியில் அவளையே திருமணம் செய்ய நினைத்தவன் தன் நண்பர்களுடன் சென்று மலைக்கோவிலில் வைத்து கயல்விழியை திருமணம் செய்து கொண்டான். கழுத்தில் தாலி ஏறிடும் வரை அழுது நாடகம் போட்டவள் திருமணம் முடிந்தவுடன் அத்தான் வாங்க மண்டபத்திற்கு என்றாள்.
இல்லை கயல் என்னால வேல்விழியை பேஸ் பண்ண முடியாது. அவள் பாவம் நாம ஒரு வாரம் கழிச்சு நம்ம வீட்டுக்கு போகலாம் என்றவனிடம் வாய்ப்பே இல்லை நான் என்ன எவனோ ஊர் பெயர் தெரியாதவனையா கல்யாணம் பண்ணி இருக்கேன் என்றவள் அந்த வேல்விழி முன்னே உங்களோட மனைவியா உங்க கை பிடிச்சு நிற்கனும் என்றதும் தான் அவளது நாடகம் வெற்றிமாறனுக்கு புரிந்தது.
வண்டியும் சரியாக அந்த நேரம் மண்டபத்திற்குள் நுழைந்திட அவனால் அவளை ஏதும் செய்ய முடியவில்லை. மண்டபத்தில் அத்தனை பிரச்சனை நடக்கும் போதும் தன் அத்தை விஜயலட்சுமி, அப்பா கதிரேசன், அப்பத்தா தில்லைநாயகி மூவரின் முகத்தில் ஏதோ திருப்தி தெரிய இவர்கள் எல்லாரும் சேர்ந்து தான் ஏதோ தகடுத்தத்தம் செய்திருக்கிறார்கள் என்பதை உணர்ந்தான். இரவு அவன் தண்ணி அடிக்கவில்லை கூல்டிரிங்க்ஸ் மட்டும் தான் குடித்தான். தோப்பு வீட்டுக்கு கயல்விழி வர வேண்டிய அவசியம் என்ன என்று யோசித்தவனுக்கு தன் குடும்பத்தார் செய்த சூழ்ச்சி விளங்கியது.
எத்தனை பெரிய துரோகம் என்னோட வேல்விழி என் சட்டையைப் பிடிச்சு என்னை காரி துப்பாத குறையா நடந்துக்கிட்டாளே. என்னை துரோகினு சொல்லிட்டாளே என்று மருகியவன் வீட்டிற்கு வந்தவுடன் சொல்லுடி என்ன நடந்துச்சு என்று கயல்விழியிடம் கேட்டிட அவள் அலட்சியமாக பதில் கூறவே அவன் கோபமடைந்து அவளது கழுத்தை நெறித்தான்.
ஒரு வழியாக நடந்தவற்றை அம்மாவும் ,மகளும் பேசி முடித்தனர். சரி சரி வா இந்தா பால் சொம்பு என்று மகளிடம் பால் சொம்பைக் கொடுத்து அழைத்து வர முழு போதையில் வீட்டிற்குள் வந்தான் வெற்றிமாறன்.
கையில் என்னடி என்றவனிடம் அத்தான் பால் என்றாள் கயல். அதைப் பிடிங்கி அவன் தூக்கி அடித்ததில் அருகில் இருந்த கண்ணாடி ஜாடி மீது சொம்பு பட்டு கண்ணாடி ஜாடி உடைந்து விழுந்தது.
ஏன்டி உனக்கு என்னடி பாவம் பண்ணுனேன் உன் ஆத்தாளும், என் அப்பனும், நீயும் சேர்ந்து என்னோட வாழ்க்கையையே கெடுத்துட்டிங்களேடி ஏன்டி இப்படி பண்ணுன என்றவன் கயல்விழியின் கன்னத்தில் அறைந்திட விஜயலட்சுமி வெற்றி என்ன பண்ணுற என்று வர ஏய் உன் வயசுக்கு மரியாதை கொடுத்து தான் அமைதியா இருக்கேன் இல்லை உன் மகளுக்கு விழுந்த அறை உனக்கு விழுந்திருக்கும். நீயெல்லாம் ஒரு பொம்பளையா பெத்த மகளை கூட்டிக் கொடுத்திருக்க த்தூ என்று காரி உமிழ்ந்தான் வெற்றி.
டேய் என்னடா பேசுற என்ற கதிரேசன் கையை ஓங்கிட அவரது கையைப் பிடித்தவன் நீயெல்லாம் ஒரு அப்பனாய்யா உன் தங்கச்சி கூட சேர்ந்து இந்த கேவலப் பட்டவளை எனக்கு கூட்டிக் கொடுக்க எவன்கிட்டையோ போதை மருந்தை கொடுத்திருக்க த்தூ என்றவன் வேல்விழியின் அருகில் சென்று என்னை மன்னிச்சுரு வேல்விழி. சத்தியமா உன்னை அசிங்கப் படுத்தனும்னு நான் இவளை கல்யாணம் பண்ணிக்கலை என்னை ஏமாத்திருக்காங்க வேல்விழி என்று அழுதான்.
அவளோ தன் கணவனின் முதுகிற்கு பின்னால் சென்று நின்று கொண்டாள். வெற்றி என்ன பேசுறதா இருந்தாலும் காலையில் பேசிக்கலாம் இப்போ போயி் தூங்கு என்றான் ரத்னவேல். யோவ் தள்ளுயா என் மாமா மகள் கிட்ட என்னை பேசக்கூடாதுனு சொல்லிகிட்டு நீயும், உன் அண்ணன், அக்கா கூட கூட்டா என்றவன் என் வேல்விழியை என்கிட்ட இருந்து மொத்தமா பறிச்சுகிட்டியே பாவி என்று உளற ஆரம்பித்தான்.
அவனை பளாரென்று அறைந்த தெய்வானை இழுத்துச் சென்று கிணற்றடியில் அமர வைத்து ஒரு குடம் தண்ணீரை அவன் தலையில் ஊற்றினார். மாமா இவனுக்கு கொஞ்சம் துணி மாத்தி விடுங்களேன் என்று தன் மாமனாரிடம் கூறி விட துரைப்பாண்டியன் தன் பேரனுக்கு உடை மாற்றி அவனது அறையில் படுக்க வைத்தார்.
அய்யா என்னோட வேல்விழி இப்போ என் சித்தப்பா மனைவி என்னால முடியலை ஐய்யா எல்லாம் உங்க மகளும், மகனும் , பேத்தியும் பண்ணுன சதி என்று அவன் அழுதிட ஒன்றும் இல்லை சாமி நீ எதையும் யோசிக்காமல் தூங்குப்பா என்று அவனை சமாதானம் செய்து படுக்க வைத்தார்.
வேல்விழி தன்னறையில் நகத்தைக் கடித்துக் கொண்டு அமர்ந்திருக்க அங்கு வந்தான் ரத்னவேல். ரத்னவேல் என்றவளை என்ன என்பது போல பார்த்தான். அவனது சட்டையைப் பிடித்தவள் எனக்கு ஒரு உண்மையை சொல்லுங்க வெற்றி அத்தான் சொன்னது போல நடந்த எல்லாத்துக்கும் உங்களுக்கும் பங்கு இருக்கா என்றாள். ஏய் என்ன பேசுற நான் நேற்று நைட் முழுக்க கல்யாண மண்டபத்தில் தானே இருந்தேன் என்றான். உனக்கு நம்பிக்கை இல்லை என்றால் உன் அண்ணன்கள் கிட்ட கேளு என்றவன் என் தேன்மொழி மேல சத்தியம் உன்னோட வாழ்க்கையை கெடுக்க நான் நினைக்கவே இல்லை என்றவன் என்னை நம்பு. உன் அக்காவுக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் அப்படி இருக்க உன்னோட வாழ்க்கையை நான் போயி கெடுப்பேனா என்றான் ரத்னவேல்.
என்ன சொல்லுறிங்க என் அக்கா மேல சத்தியமா என்றவனின் பட்டன் விலகிட சட்டையை கொஞ்சம் விலகிட ஏதோ ஒரு பெயர் பச்சை குத்தப்பட்டு இருக்க அவனது சட்டையை விலக்கி பார்த்தாள். தேன்மொழி என்று பச்சை குத்தி இருக்க அவனது சட்டையை விட்டவள் அமைதியாக சென்று படுத்து விட்டாள்.
என்ன இந்த மனிதன் அக்கா அவரை விட்டுட்டு போன அப்பறம் கூட அவள் மேல சத்தியம் பண்ணுறாரு தன் உடம்பில் அக்காவோட பெயரை பச்சை குத்தி வச்சுருக்காரு. அப்போ அக்கா கூட சந்தோசமா தான் வாழ்ந்தாரா அப்போ அக்கா ஏன் என்று பலவாறு யோசித்தபடியே அவள் உறங்கினாள்.
தன் மார்பில் இருந்த பெயரை வருடியவன் கண்களை மூடிட என்ன பண்ணி இருக்க ரத்னவேலு உன்னை யாரு என் பெயரை பச்சை குத்த சொன்னது என்றாள் தேன்மொழி. என்னோட பொண்டாட்டியோட பெயரை பச்சை குத்த எவன்டி என்னை கேட்கனும் என்றவனின் மார்பில் முத்தமிட்டவள் ஐ லவ் யூ ரத்னவேல் என்றாள். அவளது நெற்றியில் முத்தமிட்டவன் அவளைத் தன் மார்போடு அணைத்துக் கொள்ள இருமல் சத்தம் கேட்டு கண்விழித்தான் ரத்னவேல்.
அறையில் தேன்மொழி இல்லை வேல்விழி தான் இருமிக் கொண்டு இருந்தாள். அவளுடன் வாழ்ந்த நாட்களின் நினைவில் இருந்து நிகழ்காலத்திற்கு வந்தான் ரத்னவேல்.
…..தொடரும்….