நின்னைச் சரணடைந்தேன் என் மன்னவனே…3

3.8
(4)

மகள் ரேணுகாவிடம் மருமகன் எங்கடி என்று விசாரித்தார் தெய்வானை. அவரு அந்தப்பக்கம் நிப்பாருமா. அப்பத்தா வாயை வச்சுகிட்டு சும்மா இருக்காமல் அத்தையை எதாச்சும் குத்தம் சொல்லும் அவருக்கும், சின்னவருக்கும் கோபம் வரும் அதான் அவரு தம்பி கூட ஏதோ வேலையா போயிருக்காரு என்றாள் ரேணுகா.

அத்தை எனக்கு இந்த ஐஸ்கிரீம் வேண்டும் என்ற விஷ்ணுவிடம் வேண்டாம் உனக்கு ஐஸ்கிரீம் ஒத்துக்காது சளி பிடிச்சுக்கிரும் வேணும்னா அங்கே பலகாரம் , பழஜூஸ் விக்கிறாங்க அதுனா வாங்கித் தரேன் என்றாள் வேல்விழி. பலகாரம் தான் நம்ம வீட்டிலே அப்பத்தா சுட்டுத் தராங்களே என்றவனிடம் உனக்கு பழஜூஸ் வேணும்னா அத்தை வாங்கித்  தரேன் ஐஸ்கிரீம் கிடைக்காது என்றிட நீ வாங்கித் தரவில்லைனா போ என் மாமா வாங்கித் தருவாங்க என்ற விஷ்ணு வெற்றிமாறனிடம் சென்றான்.

மாமா என்ற விஷ்ணுவைப் பார்த்து என்னடா வேண்டும் என்றான் வெற்றிமாறன். ஐஸ்கிரீம் என்ற விஷ்ணுவிடம் சரி வா என்றான் வெற்றி. அத்தான் அவனுக்கு ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுக்காதிங்க இவனுக்கு சளி பிடிச்சுருக்கு  சைனஸ் பிராப்லம் வேற இருக்கு சளி இன்னும் அதிகமானால் கொஞ்சம் கஷ்டம் என்ற வேல்விழியிடம் ஒரு ஐஸ் தானே வேலு என்றான் வெற்றி. சொன்னா கேளுங்க என்றவள் கோபமாக பார்த்திட சரி சரி நான் வாங்கி கொடுக்கலை என்றான் வெற்றிமாறன்.

நீங்க இரண்டு பேருமே மோசம் என்ற விஷ்ணு சின்னதாத்தா என்று வேலுவிடம் செல்ல என்னடா தங்கம் என்றான் வேலு. ஐயோ சித்தப்பா என்ற வெற்றியிடம் அத்தான் நான் சொன்னால் உங்க சித்தப்பா திட்டுவாரு நீங்களே சொல்லுங்க ப்ளீஸ் அவனுக்கு ஐஸ்கிரீம் ஒத்துக்காதுனு என்றவளிடம் விடு வேலு ஒரு ஐஸ்கிரீம் தானே என்ற வெற்றியை முறைத்து விட்டு வேலுவின் அருகில் சென்றாள் வேல்விழி. மாமா அவனுக்கு ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுக்காதிங்க என்றவளை முறைத்த வேலு ஏய் உனக்கு அறிவு இல்லை என்னை மாமானு கூப்பிடாதேன்னு சொல்லி இருக்கேன்ல என்றான். பரவாயில்லை என்னை திட்டிக்கோங்க ஆனால் இவனுக்கு ஐஸ்கிரீம் வாங்கி கொடுக்காதிங்க அவனுக்கு சளி பிடிச்சுருக்கு சைனஸ் பிராப்லம் வேற இருக்கு  ஐஸ்கிரீம் சாப்பிட்டால் இன்னும் முடியாமல் வரும் என்றவளை அடிச்சேன்னு வை முகரையப் பாரு இப்போ தான் பிள்ளையை பெத்தவ மாதிரி வந்துட்டாள். என் அண்ணனோட பேரன் இவன் நான் இவனுக்கு ஐஸ்கிரீம் வாங்கித் தரக்கூடாதா என்றவனிடம் மாமா இவன் என் அண்ணன் பையன் என்றாள் வேல்விழி.

என்ன உன் அம்மா சொல்லி விட்டுச்சா நாங்க எதுவும் வாங்கிக் கொடுத்தால் இவனை சாப்பிட விடக்கூடாதுனு என்று திட்டியவன் நீ சாப்பிடுடா என்று ஐஸ்கிரீமை விஷ்ணுவிடம் நீட்டினான் வேலு. விஷ்ணு அதை சாப்பிட ஆரம்பிக்க அந்த ஐஸ்கிரீமை பறித்து வீசினாள் வேல்விழி. ஏய் உனக்கு எவ்வளவு திமிரு என்று வேல்விழியின் கன்னத்தில் அறைய கை ஓங்கிய வேலுவின் கையைப் பிடித்தாள் வேல்விழி. இந்த கை ஓங்குற வேலை எல்லாம் என்கிட்ட வேண்டாம். உங்க வயசுக்கு மட்டும் தான் என்கிட்ட இருந்து மரியாதை கிடைக்கும் உங்களோட ஆம்பளைத் திமிரை என் கிட்ட காட்டாதிங்க நான் தான் சொல்லுறேன்ல அவனுக்கு சைனஸ் பிராப்லம் இருக்கு குளிர்ச்சி ஒத்துக்காது ஐஸ்கிரீம் சாப்பிடக் கூடாதுனு புரியாதா என்றவள் விஷ்ணுவை இழுத்துக் கொண்டு சென்று விட்டாள்.

என்னடா வெற்றி உன் ஆளு செம்ம மாஸ் காட்டுறாள். உங்க சித்தப்பா இந்த ஊரு பிரசரன்ட் அவரையே கையை பிடிச்சு தடுத்து செம மாஸ் தான் என்றான் மகேந்திரன். அவள் மாஸ் பண்ணிட்டு போயிட்டாள்னு சொல்லாதடா என் லவ்வை நாசம் பண்ணிட்டு போயிட்டாள். சும்மாவே அவளை எங்க வீட்டில் யாருக்கும் பிடிக்காது இந்த லட்சணத்தில் எங்க சித்தப்பனையே அசிங்கப் படுத்திட்டு போயிருக்காள் இனி என்ன கூத்து நடக்கப் போகுதோ என்ற வெற்றிமாறன் சோகமாக கோவிலுக்குள்  சென்றான்.

என்னடி இது ஒரு பொட்டப்புள்ளைக்கு கொஞ்சம் கூட அடக்கம் ஒடுக்கம் வேண்டாம் ஆம்பளை கையை பிடிச்சு தடுத்துருக்காளே என்று தில்லைநாயகி ஆரம்பித்தார். என்ன பொண்ணை பெத்து வளர்த்திருக்கிங்க மருமகனே என்றதும் அத்தை மன்னிச்சுருங்க  அவள் சின்னப்பிள்ளை என்ற ராஜசேகரிடம் அப்பா என்ன நடந்துச்சுனு முதல்ல கேட்டுட்டு நீங்க மன்னிப்பு கேளுங்க என்ற வேல்விழியிடம் வேலு வாயை மூடு அப்பா பேசிக்குவாரு என்றார் ராஜேஸ்வரி.

இல்லைம்மா விஷ்ணுவுக்கு என்று அவள் கூற வர அவளது கன்னத்தில் பளாரென அறைந்த ராஜேஸ்வரி விஷ்ணு மேல நமக்கு இருக்கிற மாரிரி தான் அவங்களுக்கும் உரிமை இருக்கு முதல்ல அதை புரிஞ்சுக்கோ உடம்பு முடியாமல் போனால் ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போக உன் அண்ணன் இருக்கான் நீ ஏன் முந்திரிக் கொட்டை தனமா நடந்துக்கிற என்றார் ராஜேஸ்வரி.

ஆஹான் பொட்டப்புள்ளையை வளர்க்கத் தெரியாமல் வளர்த்துட்டு இப்போ நல்லா நாடகம் போடுற ராஜேஸ்வரி என்றார் தில்லைநாயகி். என் மகன் ஊரு பிரசரன்ட் அவனை உன் மகள் ஊரு முன்னுக்க வச்சு மரியாதை இல்லாமல் பேசி அசிங்கப் படுத்தி இருக்காள் என்ற தில்லைநாயகியிடம் தப்பு தான் அத்தை அவள் சின்னப் பொண்ணு மன்னிச்சுருங்க என்ற ராஜசேகரன் மாப்பிள்ளை நீங்களும் அவளை மன்னிச்சிருங்க என்று வேலுவிடம் சொன்னார். விடுங்க அத்தான் நம்ம குடும்பத்து இரத்தம் மட்டும்னா மரியாதை தெரிஞ்சுருக்கும் உங்க பொண்ணுகிட்ட மரியாதை எதிர்பார்த்தது என்னோட தப்பு தான் என்றான். என்ன சொன்னிங்க என்ற வேல்விழியை முறைத்த வேலு பாருங்க இப்போ கூட பெரியவங்க பேசிட்டு இருக்கோம்னு கொஞ்சம் கூட மரியாதை இல்லை என்றான். வேல்விழி என்ற ராஜசேகரனிடம் அப்பா அவங்க என்று அவள் ஏதோ கூற வர வாயை மூடு என்று கத்தினார். நம்ம அம்மாவை என்றவளிடம் உன்னை பேசாதேன்னு சொன்னேன் வாயை மூடு மாப்பிள்ளை கிட்ட நீ மன்னிப்பு கேளு என்றார். நான் எந்த தப்புமே பண்ணலை அப்பா என்றவளிடம் இப்போ மன்னிப்பு கேட்கப் போறியா இல்லையா என்ற ராஜசேகரனிடம் சத்தியமா நான் கேட்க மாட்டேன் அப்பா. என் மேல எந்த தப்பும் இல்லை விஷ்ணுவுக்கு சையனஸ் பிரச்சனை இருக்கு தானே அதை சொல்லுறேன் கொஞ்சம் கூட புரிஞ்சுக்காம வீம்புக்கு ஐஸ்கிரீம் வாங்கி கொடுக்கிறாரு என் அண்ணன் பையனுக்கு எதாவது ஆச்சுனா யாரு பொறுப்பு என்றாள் வேல்விழி. உன் அண்ணனுக்கு மட்டும் அவன் பையன் இல்லை அவங்களுக்கு பேரன் என்ற ராஜசேகரன் மன்னிப்பு கேளு வேல்விழி என்றார். என்னால முடியாது என்றவளிடம் என் பொறுமையை ரொம்ப சோதிக்கிற வேல்விழி என்றார் ராஜசேகரன். தப்பு பண்ணாமல் நான் ஏன் மன்னிப்பு கேட்கனும் என்றவளின் கன்னத்தில் மீண்டும் அறைந்த ராஜேஸ்வரி உனக்கு என்னடி அவ்வளவு திமிரு அப்பா சொல்றாருல ஒழுங்கா மன்னிப்பு கேளு என்றதும் தன் அம்மாவையும், அப்பாவையும் முறைத்து விட்டு என்னை மன்னிச்சுருங்க மாமா என்று வேலுவிடம் மன்னிப்பு கேட்டு விட்டு அழுது கொண்டே தன் அறைக்குச் சென்று விட்டாள் வேல்விழி.

பொம்பளைப் புள்ளையை இனியாவது புத்தி சொல்லி வளருங்க இப்படியே ராங்கி பண்ணிகிட்டு இருந்தாள்னா கட்டிக்கொடுக்கிற வீட்டில் எப்படி வாழுவா போற மாதிரி போயி புதன்கிழமை திரும்பி வந்த கதையாகிரும் என்ற தில்லைநாயகி வாய்யா வேலு நம்ம வீட்டுக்கு போகலாம் என்று மகனுடன் கிளம்பி விட்டார்.

தன் மொத்த கோபத்தையும் அடக்கிக் கொண்டு அமர்ந்த ராஜசேகர் அவர்கள் சென்ற பிறகு தன் கையை சுவற்றில் குத்திக் கொண்டார். என்னங்க என்ன பண்ணுறிங்க என்றவரிடம் என் பொண்ணு மேல கோபத்தை காட்ட வேண்டியதா போச்சே என்று புலம்பினார். பாரேன் எவ்வளவு பேச்சு பேசுறாங்கனு என்றவரிடம் அவங்க அப்படித் தான்னு நமக்கு தெரியாதா என்ன என்ன பண்ணுறது எல்லாம் நம்ம நேரம் என்றார் ராஜேஸ்வரி. என்னை மன்னிச்சுரு ராஜி இன்னும் எத்தனை காலத்துக்கு தான் இவங்களுக்கு மரியாதை கொடுக்கனும்ங்கிற ஒரே காரணத்திற்காக உன்னை நான் தண்டிச்சுட்டு இருக்கப் போறேனோ என்றார் ராஜசேகர். என்னங்க பண்ணுறது நம்ம பொண்ணு பண்ணிட்டு போன காரியம் அப்படி. அன்னைக்கு அவள் அப்படி ஒரு காரியம் பண்ணாமல் இருந்திருந்தால் இன்னைக்கு நம்ம வேல்விழியை அவங்க பேசுனப்போ வேடிக்கை பார்த்துட்டு இருந்திருப்போமா என்ற ராஜேஸ்வரி நல்லவேளை அத்தையும், உங்க தம்பியும், நம்ம பசங்களும் வீட்டில் இல்லை இருந்திருந்தால் வார்த்தை தடிச்சுருக்கும் என்ற ராஜேஸ்வரி நான் போயி சமைக்கிற வேலையை பார்க்கிறேன் என்று அடுப்பங்கரைக்கு சென்றார்.

என்ன அண்ணா சொல்லுற வேல்விழி சித்தப்பா கையை பிடிச்சு தடுத்தாளா ஐய்யய்யோ அதான் போல அப்பத்தா, சித்தப்பா, அத்தை, மாமா யாரையும் காணோம். இந்நேரம் வீட்டில் என்னன்ன ஆர்ப்பாட்டம் பண்ணுறாங்களோ வா அண்ணா என்ற ரேணுகா தன் அண்ணன் வெற்றிமாறனுடன் வீட்டிற்கு கிளம்பினாள்.

வேலுமா கதவைத் திற என்ற ராஜசேகரனின் குரலில் கதவைத் திறந்தாள் வேல்விழி. வேலு அப்பாவை மன்னிச்சுருடா என்றவரிடம் போதும்பா இந்த டிராமாவை நிறுத்துங்க என்னைக்கோ எட்டு வருசத்துக்கு முன்னாடி அக்கா  ஓடிப்போனதால இன்னும் எத்தனை காலத்துக்கு தான் அவங்களுக்கு அடிமையா இருக்கப் போறிங்களோ ச்சை என்றவளிடம் அடிமைனு இல்லடா என்றவர் ஏதோ கூற வர அப்போ என்னப்பா பேரு இதுக்கு அந்த ஆளு என்னை அடிக்க வந்தான். நான் என்ன அவன் பொண்டாட்டியா என்னை கை நீட்டி அடிக்க அவன் யாரு அதான் தடுத்தேன் அவன்கிட்ட நான் அடி வாங்கிட்டு வந்திருந்தாள் உங்களுக்கு சந்தோசம் அப்படித் தானே என்றவள் போதும் சாமி போதும் இந்த வீட்டில் மகளா பிறந்ததுக்கு அதுவும் உங்களுக்கும், அம்மாவுக்கும் மகளா பிறந்ததுக்கு இன்னும் என்னன்ன கொடுமை அனுபவிக்கனுமோ.

நல்லவேளை என் அக்கா இவன் வேண்டாம்னு ஓடிப் போயிட்டாள் இல்லைனா அவளை என்ன பாடு படுத்திருப்பானோ என்ற வேல்விழியிடம் என்ன பேசுற வேலு அந்த ஓடுகாலி பண்ணுன காரியத்தினால தான் அவன் இப்படி இருக்கான் அதை முதல்ல புரிஞ்சுக்கோ என்றவர் ஏன்மா என்னைக்கோ ஓடிப் போனவளைப் பத்தி பேசி நல்ல நாள் அதுவுமா என்றவர் சாப்பிட வா என்றிட எனக்கு பசி இல்லை என்னை கொஞ்ச நேரம் தனியா விடுங்கப்பா ப்ளீஸ் என்ற வேல்விழி ஜன்னலோரம் போய் நின்று கொண்டாள். ராஜசேகரனும் எழுந்து சென்று விட்டார்.

என்னங்க சொல்லுறாள் என்ற ராஜேஸ்வரியிடம் அவள் என்ன சொல்லப் போறாள் கோபமா இருக்காள் விடு ராஜி சின்னப் பொண்ணு எல்லாம் புரிஞ்சு நடந்துக்குவாள் என்ற ராஜசேகர் அம்மா வராங்க கண்ணைத் துடைச்சுக்கோ என்றிட கண்ணைத் துடைத்துக் கொண்டார் ராஜேஸ்வரி.

தன்னறையில் சோகமாக அமர்ந்திருந்த வேல்விழி அந்த பழைய ஆல்பத்தை புரட்டினாள். அதில் இருந்த புகைப்படத்தை தொட்டுப் பார்த்தவள் கதவு திறக்கும் சத்தம் கேட்டு அதை மறைத்து வைத்தாள்.

…..தொடரும்….

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 3.8 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!