நின்னைச் சரணடைந்தேன் என் மன்னவனே…4

5
(1)

நீங்களா வாங்க அண்ணா என்றாள் வேல்விழி. என்ன பாப்பா அண்ணன் மேல கோபமா என்ற சுரேந்திரனிடம் ஆமாம் கோவம் தான் என்றவளின் கண்களைப் பொத்தியவன் அவளை அழைத்துச் செல்ல அண்ணா எங்கே கூப்பிட்டு போறிங்க என்றாள். வா பாப்பா என்றவன் அவளது கண்களைத் திறக்க அவளின் முன்பு பேசுகின்ற இரண்டு கிளிகளை பறக்க விட்டான் நரேந்திரன். சின்ன அண்ணா என்றவளிடம் எங்க பாப்பாவோட சந்தோசம் அண்ணன்களுக்கு தெரியாதா என்ன என்ற நரேந்திரனைக் கட்டிக் கொண்டவள் என் செல்ல அண்ணன் என்றாள். பாப்பா அப்போ நானு என்ற சுரேந்திரனிடம் என் செல்ல அண்ணன் என்று அவனையும் கட்டிக் கொண்டாள். எங்களோட செல்லத் தங்கச்சி என்றனர் இருவரும்.

அந்தக் கிழவி வந்து அப்பா, அம்மா கூட சண்டை போட்டுச்சா பாப்பா என்ற நரேந்திரனிடம் விடுங்க அண்ணா அவங்க குணமே அது தானே என்னைக்கோ ஓடிப்போனவளுக்காக இவங்க இன்னமும் அவங்களுக்கு மரியாதைங்கிற பேர்ல பம்மிகிட்டு என்றாள் வேல்விழி. சரி பாப்பா விடு என்ற நரேந்திரன் கிளி உனக்கு பிடிச்சுருக்கா என்றிட ரொம்ப ரொம்ப என்றவள் கிளிகளிடம் வேல்விழி சொல்லு என்றிட அவைகளும் வேல்விழி சொல்லு என்றன. அண்ணா பேசுது சூப்பரா என்றவள் இரண்டு கிளிகளுடன் தன்னறைக்குச் சென்றாள். கிளிகளை கூண்டில் வைத்து விட்டு சாப்பிட பழங்களைக் கொடுத்தாள்.

என்னம்மா சமையல் வேலை முடிஞ்சுருச்சா என்ற நரேந்திரனிடம் ஆச்சுப்பா என்றார் ராஜேஸ்வரி. நீங்க என்ன வேலைக்காரியா அம்மா சித்தி ஒருவேளையும் பார்க்க மாட்டேங்கிறாங்க நீங்க என்னடான்னா உட்காரக் கூட நேரம் இல்லாமல் அடுப்புலே வெந்து சாகுறிங்க என்றவனிடம் அதனால என்னப்பா என்றார் ராஜேஸ்வரி. நீங்க இப்படி இருக்கிறதால தான் என் தங்கச்சியை கண்டவங்க எல்லாம் பேசிட்டு போயிருக்காங்க என்றான் நரேந்திரன். தம்பி அதை விடுப்பா அவளை சாப்பிடக் கூப்பிடு என்றார். உங்க மகள் தானே நீங்களே சமாதானம் பண்ணி கூப்பிடுங்க என்ற நரேந்திரன் கிளம்பி விட்டான்.

வேலுமா என்று வந்தார் ராஜேஸ்வரி. அவரைக் கண்டு கொள்ளாமல் கிளியை கொஞ்சிக் கொண்டு இருந்தாள் வேல்விழி.  வேலும்மா அம்மாவைப் பாருடி என் தங்கம் அம்மாவை மன்னிச்சுருடி என்றவரைப் பார்த்தவள் என்னை அடிக்கிறது என்ன கொலை பண்ண கூட உங்களுக்கு உரிமை இருக்கு ஆனால் என்னோட சுயமரியாதையை கெடுக்கிற உரிமை உங்களுக்கு இல்லைம்மா. யாரும்மா அந்த ஆளு என் அக்கா என்றவள் தன்னை கட்டுப்படுத்தி விட்டு அப்படி சொல்ல முடியாது தான் ஆனால்  அதைத் தவிர அவனுக்கும் எனக்கும் என்ன சம்மந்தம் இருக்கு. என்னைக் கை ஓங்குவான் அவன் கிட்ட அடி வாங்கிட்டு வரச் சொல்லுறிங்களா என்ற வேல்விழி என்னால முடியாதும்மா. இந்த வீட்டில் நீங்க எல்லா வேலையும் இழுத்துப் போட்டு பார்க்கிறிங்க நான் எதுவும் சொல்ல மாட்டேன். இது நம்ம வீடு் . அது மட்டும் இல்லை சித்தி ஒரு மாதிரி இருந்தாலும் சித்தப்பா அப்பா வார்த்தைக்கு மறுவார்த்தை பேச மாட்டாரு அதற்காக சித்தியை பொறுத்துக்கலாம் அவங்க தம்பியை பொறுத்துக்கனும்னு என்ன இருக்கு சொல்லுங்க என்றாள். வேலு எல்லாம் என்றவரிடம் போதும் என்கிட்ட தயவுசெய்து பேசாதிங்க ப்ளீஸ் என்றவள் அறையை விட்டு வெளியேறினாள்.

என்ன நடக்குது இந்த வீட்டில் என்ற ரேணுகாவிடம் என்னத்தா கோவமா வந்திருக்க என்றார் தில்லைநாயகி. கோவம் இல்லை கிழவி உன் மேலையும், உன் மகன் மேலையும் கொலைவெறியில் இருக்கேன் என்றாள் ரேணுகா. என்ன பேசுற ரேணுகா என்ற விஜயலட்சுமியிடம் அத்தை நான் என் அப்பத்தாகிட்ட பேசுறேன் உங்க கிட்ட இல்லை அதனால நீங்க அமைதியா இருங்க என்றவள் உங்களுக்கு என்ன சித்தப்பா பிரச்சனை எதற்காக ஒரு சின்னப் பொண்ணை உங்க எதிரியா நினைச்சு என்றாள் ரேணுகா. ரேணுகா அவன் உன் சித்தப்பா என்ற கதிரேசனிடம் இவரு சித்தப்பா தான் என் மாமனார், மாமியார் இவரை விட வயசுல மூத்தவங்க அவங்களை அப்பத்தாவும், சித்தப்பாவும் நடத்துற விதத்தை விட நான் ஒன்றும் தப்பா பேசிறலை என்றாள் ரேணுகா.

அவங்க பண்ணுன பாவம் அப்படி என்ற தில்லைநாயகியிடம் வாயை மூடு கிழவி அவங்க என்ன தப்பு பண்ணுனாங்க என்றாள். ஒரு ஓடுகாலியை மகளா பெத்தாங்களே என்ற தில்லைநாயகியை முறைத்தவள் இன்னும் எத்தனை நாளைக்கு தான் இதையே சொல்லுவிங்க நீங்கள் எல்லாம் மாறவே மாட்டிங்களா என்றாள். எல்லாம் இந்த சனியனால வந்தது. உனக்கு ஐஸ்கிரீம் சாப்பிடக் கூடாதுனு சொல்லி இருக்கேன்லடா அப்பறமும் ஒருத்தர் மாத்தி ஒருத்தர் ஐஸ்கிரீம் வாங்கித் தாங்கனு ஒவ்வொருத்தர்கிட்டையா கேட்டு ஒரு குட்டிக் கலாட்டாவையே பண்ணி விட்டுருச்சு என்று விஷ்ணுவைப் போட்டு அடித்தாள்.

ஏய் அவனை ஏன்டி அடிக்கிற இந்த வீட்டு ஆளுங்களுக்கு தான் என் அண்ணனை என்ன சொல்லி காலில் விழ வைக்கலாம்னு அழைஞ்சுட்டு இருக்காங்களே சின்ன வாய்ப்பு கிடைச்சாலும் விடுவாங்களா என்ன அதான் இந்த ஐஸ் பிரச்சனையை பெருசாக்கி அண்ணனையும்,
அண்ணியையும் அசிங்கப் படுத்தியாச்சு. மன்னிப்பு கேட்க வச்சாச்சு என்ற தெய்வானை இவன் ஐஸ் சாப்பிட்டு முடியாமல் படுத்தால் இவங்களுக்கு என்ன நஷ்டம் உனக்கு தானே பிள்ளை இல்லாமல் போகும் என்றார் தெய்வானை.

அண்ணி என்ன பேசுறிங்க அவன் நம்ம வீட்டுப் பேரன் என்றான் வேலு. அப்படியா தம்பி அந்த நினைப்பு இருந்திருந்தால் அந்த புள்ளை இவன் உடம்புல உள்ள பிரச்சனை பத்தி சொல்லியும் உங்க வீம்பைக் காட்ட ஐஸ் வாங்கி கொடுத்திருப்பிங்களா  என்றார் தெய்வானை. அண்ணி அது என்றவனிடம் உங்களுக்கும் காலகாலத்தில் கல்யாணம் நடந்து குழந்தை குட்டினு இருந்திருந்தால் புள்ளையோட அருமை புரிஞ்சுருக்கும் என்ற தெய்வானையின் கன்னத்தில் அறைந்தார் கதிரேசன். என்னடி பேசுற நீ என்ற கதிரேசனிடம் நீங்க அடிச்சாலும், ஏன் என்னை கொலையே பண்ணுனாலும் நான் தப்பா பேசலை என்ற தெய்வானை கிட்சனுக்குள் சென்று விட்டார்.

கண்கலங்கிய வேலு சத்தியமா அண்ணி சொல்லுற மாதிரி நான் நினைகலை ரேணு இவன் என் அண்ணன் பேரனா இருந்தாலும் எனக்கும் பேரன் தானம்மா என்ற வேலுவிடம் அம்மா ரொம்ப அதிகமாவே பேசிட்டாங்க சித்தப்பா அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன். உங்களை கையெடுத்து கும்பிடுறேன் நானும் அந்த வீட்டில் தான் வாழனும் அந்த மரியாதைக்காகவாச்சும் என் மாமியார், மாமனாருக்கு மரியாதை கொடுங்க ப்ளீஸ் சித்தப்பா என்ற ரேணுகா தன் மகன் விஷ்ணுவை அழைத்துக் கொண்டு தன் வீட்டிற்கு சென்று விட்டாள்.

என்ன அண்ணா இது அண்ணி என்னமோ தம்பியை இவ்வளவு பேசிட்டு போறாங்க நாம பார்த்து வளர்ந்த கழுதை இந்த ரேணுகா அவள் என் தம்பியை இவ்வளவு பேச்சு பேசுறாள் எல்லாம் அந்த வேல்விழியால வந்த வினை அவளை என்று பற்களைக் கடித்தார் விஜயலட்சுமி.

விஜி பொறுமையா இரு அந்த வேல்விழியை என்ன பண்ணனும்னு எனக்கு தெரியும் என்ற கதிரேசன் அவளை நம்ம வெற்றி மாறனுக்கு பொண்ணு கேட்கலாம்னு இருக்கேன் என்றார் கதிரேசன். என்ன பேசுறிங்க அண்ணன் அவளையா அப்போ கயல்விழி என்ற விஜயலட்சுமியிடம் தன் மனதில் இருந்த திட்டத்தை கூறினார் கதிரேசன்.

அண்ணா இதற்கு தம்பி ஒத்துப்பானா என்ற விஜயலட்சுமியிடம் அவனை சம்மதிக்க வைக்கிறது என்னுடைய பொறுப்பு என்றார் தில்லைநாயகி. அந்த வேல்விழியோட திமிரை அடக்கின மாதிரியும், காலத்திற்கும் அந்த ராஜசேகரும், அவரோட பொண்டாட்டியும் நம்ம கைக்குள்ளேயே இருக்கனும் என்ற கதிரேசன் சிரித்திட விஜயலட்சுமியும் சிரித்தார்.

என்ன மாப்பிள்ளை யோசனை என்ற நரேந்திரனிடம் என்னத்த சொல்ல மச்சான் உன் தங்கச்சி என் சித்தப்பா கூட போட்ட சண்டையால இனி அவளை எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க எங்க அப்பா சம்மதிப்பாரானு தான் ஒரே குழப்பம் என்றான் வெற்றிமாறன். அட விடு மாப்பிள்ளை என் தங்கச்சிக்கு மட்டும் உன்னை பிடிச்சுருந்தால் உங்க கல்யாணம் நடக்கும் அதற்கு நான் கியாரண்டி என்றான் நரேந்திரன்.  உன் தங்கச்சிக்கு பிடிக்கலைனாலும் எனக்கு அவளை கட்டி வச்சுருங்கடா ப்ளீஸ் என்ற வெற்றிமாறனைப் பார்த்து சிரித்தான் நரேந்திரன்.

என்னடி சின்ன மாமா கூட சண்டை எல்லாம் போட்டுருக்க போல என்ற கயல்விழியிடம் ப்ளீஸ் கயல் அது பத்தி பேசாதே என்ற வேல்விழி கிளிகளை கொஞ்சிக் கொண்டிருக்க சாரிடி என்றாள் கயல்விழி. பரவாயில்லை கயல் இனி அதைப் பத்தி பேச வேண்டாம் இங்கே பாரு கிளிகள் என் அண்ணன்கள் எனக்கு கொடுத்தாங்க என்றிட அழகா இருக்கு ஆனால் பயமா இருக்கு என்றாள் கயல்விழி. ஏய் கொத்தாதுடி என்ற வேல்விழி உன் டர்க்கீஸ் மட்டும் என் ரூம்க்குள்ள விட்டுராதடி ப்ளீஸ் என்றாள் வேல்விழி.

அவனுக்கு இப்போ தான் சிக்கன் வச்சுட்டு வந்தேன் என்றவள் கிளிக்கும் , பூனைக்கும் ஆகாதுனு எனக்கு தெரியும். டர்க்கீஸ் இந்த பக்கமே வர மாட்டான் என்றாள் கயல்விழி. தாங்க்ஸ் கயல் என்றவளிடம் லூசு நமக்குள்ள என்னடி தாங்க்ஸ் என்ற கயல்விழி வா சாப்பிட என்றாள். இல்லைடி பசிக்கலை அப்பறமா சாப்பிடுறேன் நீ சாப்பிடு என்ற வேல்விழி தன்னறைக்குள்ளே அடைந்து கொண்டாள்.

என்னாச்சு ராஜி ஏன் சோகமா இருக்க என்ற வடிவுடைநாயகியிடம் என்னத்த சொல்ல அத்தை இந்த பொண்ணு வேல்விழி கொஞ்சம் கூட புரிஞ்சுக்க மாட்டேங்கிறாள். காலையில் பருத்திப்பால் குடிச்சது அதற்குப் பிறகு பச்சத் தண்ணி கூட குடிக்கலை. இனி கோவிலுக்கு கிளம்பனும் என்ன பண்ண காத்திருக்காளோ என்று வருந்தினார் ராஜேஸ்வரி.

அட விடுத்தா கோவிலுக்கு போயிட்டு வந்த பிறகு அவளே சாப்பிடுவாள் நான் பார்த்துக்கிறேன் என்ற வடிவுடைநாயகி வேல்விழி என்றிட என்ன அப்பத்தா என்று வந்தாள் வேல்விழி. வேலு அழகுச் சிலை என் பேத்தி என்ற வடிவுடைநாயகி பேத்திக்கு திருஷ்டி கழித்தார்.

என்னடி பட்டுச்சேலை ,நகை எல்லாம் போட்டுருக்க என்ற ரேணுகாவிடம் எனக்கு பிடிக்கலைனால் கூட மத்தவங்க என் அம்மாவை நக்கலா பேசாமல் இருக்கனுமே அதற்குத் தான் என்றவள் கோவிலுக்கு போகலாமா என்றாள். சரிடி வா என்ற ரேணுகா அத்தை நீங்களும் வாங்க என்றிட நான் வேலையெல்லாம் முடிச்சுட்டு வரேன்மா என்றார் ராஜேஸ்வரி.

வேல்விழி செம்மையா இருக்கடி இந்த கோல்டன்கலர் புடவை உனக்கு நச்சுனு இருக்கு என்ற கயல்விழி நான் எப்படி இருக்கேன் என்றாள். உனக்கென்னடி குறைச்சல் நீ விஜயலட்சுமியோட பொண்ணு நீ எப்பவுமே அழகுச் சிலை என்றார் விஜயலட்சுமி. அதான் சித்தியே சொல்லிட்டாங்களே கயல் நீ அழகு தேவதை என்ற வேல்விழி வா கோவிலுக்கு போகலாம் என்றாள்.  சரி வாங்கடி என்ற ரேணுகா தன் நாத்தனார் இருவரையும் கோவிலுக்கு அழைத்துச் சென்றாள்.

…..தொடரும்….

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!