நின்னைச் சரணடைந்தேன் என் மன்னவனே…5

5
(2)

ரேணுகா பேசியது, தெய்வானை பேசியது எல்லாவற்றையும் தனக்குள் போட்டு யோசித்துக் கொண்டு இருந்தான் வேலு. என்றோ தனக்கு நடந்த அவமானத்திற்கு தவறே செய்யாத மற்றவர்களை பழிவாங்குவதில் என்ன நியாயம் இருக்கிறது என்று யோசித்துக் கொண்டிருந்தவனின் அருகில் வந்தார் துரைப்பாண்டியன். வேலு என்று வந்தவரிடம் சொல்லுங்க அப்பா என்றான்.

இல்லைப்பா நீ கோவிலுக்கு கிளம்பலையா பாரி தூக்க நேரம் ஆச்சே என்றவரிடம் போகணும் அப்பா என்றவனிடம் உன் அம்மா என்ன சொன்னாலும் செய்வியா என்றவரை கேள்வியாக பார்த்தான். தப்பு வேலு தப்பு உன் அம்மா, அண்ணன், அக்கா மூன்று பேருக்கும் தான் ராஜசேகரனையும், அவரோட மனைவியையும் பிடிக்கலை அதனால எப்ப சந்தர்ப்பம் கிடைக்கும் குத்திக் கிழிக்கனும்னு அலையிறாங்க அதில் நீயும் சேர்ந்திராதப்பா என்னால முடியலடா. அவங்க பாவம் என்னைக்கோ நடந்த தப்புக்கு இன்னமும் பழிவாங்க துடிக்கிறது என்ன நியாயம் சொல்லு நீ ஊருப் பிரசரன்ட் உனக்கு மத்தவங்க புத்தி சொல்லக் கூடாது. நீ என் மத்த இரண்டு புள்ளைங்க மாதிரி இல்லைனு எனக்கு தெரியும் என்றவர் எனக்காக ராஜசேகரன் கிட்ட மதியம் நீயும், உன் அம்மாவும் நடந்துகிட்ட முறைக்கு மன்னிப்பு கேளுய்யா என்றார். அப்பா அது என்றவனிடம் நான் பண்ணுன தப்பு தான் எல்லாமே புரிஞ்சுக்கோ வேலு என்று துரைப்பாண்டியன் கெஞ்சிட சரிங்கப்பா உங்களுக்காக நான் மன்னிப்பு கேட்கிறேன் என்றவன் சரி நான் கோவிலுக்குப் போறேன் என்று கிளம்பினான்.

அரை நிலவை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த துரைப்பாண்டியனின் மனதில் பல கவலைகள். மௌனமாக மானசீகமாக யாரிடமோ மன்னிப்பு கேட்டு மன்றாடிக் கொண்டிருந்தார்.

என்னடி கும்மி கொட்ட போகலையா என்ற கலைவாணியிடம் நீ போயி கொட்டு என்றாள் வேல்விழி. வாங்கடி அந்தப் பக்கம் பசங்க ஒயில் ஆடுறாங்க என்ற கலைவாணியிடம் நான் வரவில்லை கலை நீங்க போங்க என்ற வேல்விழி கோவில் மண்டபத்தில் அமர்ந்து கொண்டாள். அவள் கிடக்கிறாள் நீ வா கலை நாம போகலாம் என்ற கயல்விழி , கலைவாணியுடன் சென்றாள்.

என்ன மேடம் ஒயில் பார்க்க வரலையா என்ற குரலில் நிமிர்ந்தவள் இப்போ என்ன வேண்டும் உங்களுக்கு என்றாள் வேல்விழி. சாரி வேல்விழி சித்தப்பா கூட நீ சண்டை போடும் போது என்றவனிடம் என்னது நான் சண்டை போட்டேனா நல்லா சொல்லுவிங்க அத்தான் உங்க சித்தப்பா தான் சண்டை போட்டாரு என்றவள் ப்ளீஸ் உங்களை கை எடுத்து கும்பிடுறேன் இனிமேல் அந்த விசயத்தை பத்தி பேசாதிங்க என்றவள் எழுந்து சென்று விட்டாள்.

குளக்கரைக்கு சென்றவள் சோகமாக குளத்தில் கல்லை வீசிக் கொண்டு அமர்ந்திருந்தாள். எதையோ யோசித்துக் கொண்டு அமர்ந்திருந்தவளின் பின்னால்  நிழலாட திரும்பியவள் அதிர்ந்து போனாள்.

என்னடா இந்த ஊருத் திருவிழாவில் எதுனாலும் தேரும்னு பார்த்தால் ஒன்றுமே தேரலையே என்ற கங்கன் மாப்பிள்ளை அங்கே பாருடா ஒரு குட்டி கழுத்து நிறைய நகையோட தனியா போறாள் என்றான் சக்கரை. டேய் காரையா குட்டியும் நல்லா தான் இருப்பாள் போல என்ற சின்னானை முறைத்த காரையன் நகையை களவாண்டுட்டு இடத்தை காலி பண்ணுறதை விட்டுட்டு பொண்ணு மேல கை வைக்க நினைக்காதே பொம்பளைப் புள்ளைங்க பாவம் பொல்லாதது என்றான் . உனக்கு வேண்டாம்னா நீ மூடிகிட்டு நில்லு என்ற சின்னான் வாங்கடா குட்டி தனியா தான் இருக்கு என்று அந்த பெண் சென்ற திசையில் சென்றனர்.

என்ன ராஜேஸ்வரி நீ கோவிலுக்கு வரவில்லையா என்ற விஜயலட்சுமியிடம் நீ முன்னே போ விஜி கொஞ்சம் வேலை இருக்கு முடிச்சுட்டு வரேன் என்றவர் தன் வேலையை பார்த்திட விஜயலட்சுமி கோவிலுக்கு கிளம்பினார்.

வீட்டின் கதவு தட்டப்படவும் யாரு என்று வந்த ராஜேஸ்வரி வாசலில் வேலு நிற்பதைக் கண்டு வாங்க தம்பி உள்ளே வாங்க என்று வரவேற்றார். அத்தான் இருக்காரா என்றவனிடம் இருங்க தம்பி என்ற ராஜி என்னங்க என்றிட என்ன ராஜி என்று வந்தார் ராஜசேகரன். வேலுவைப் பார்த்தவர் வாங்க மாப்பிள்ளை என்றதும் ஆமாம் அத்தான் என்றவன் மதியம் அம்மாவும், நானும் உங்க கிட்ட நடந்துகிட்ட முறை ரொம்ப தப்பு எங்களை மன்னிச்சுருங்க அத்தான் என்றான் வேலு. அட விடுங்க மாப்பிள்ளை அதனால என்ன என்ற ராஜசேகரிடம் இல்லை அத்தான் வேல்விழி சொன்னுச்சு விஷ்ணுவுக்கு ஐஸ்கிரீம் ஆகாதுனு ஆனாலும் என்னோட தலைக்கணம் என்றவன் தப்பு என் மேல தான் என்னைக்கோ நடந்த ஒரு விசயத்திற்காக இன்னமும் உங்களை காயப் படுத்துறது எந்த வகையிலும் நியாயம் இல்லை என்றவன் மன்னிப்பு கேட்டிட உங்களோட நல்ல குணம் புரியாமல் வேல்விழியும் கூடக் கூட பேசி உங்களை காயப் படுத்தி இருந்துச்சு என் மகளை நீங்க என்றவரிடம் பரவாயில்லை அத்தான் என்றவன் நான் கிளம்புறேன் என்று எழுந்திருக்க தம்பி சாப்பிட்டு போங்க என்றார் ரஜேஸ்வரி. இன்னொரு நாள் வந்து சாப்பிடுறேன் என்றவன் கிளம்பினான்.

என்ன ராஜி இப்போ உனக்கு நிம்மதியா என்ற ராஜசேகரனிடம் ரொம்ப நிம்மதிங்க  இதை முதல்ல உங்க வாயாடி பொண்ணுகிட்ட சொல்லனும் அப்போ தான் அவள் இனிமேல் தம்பியை பத்தி தப்பா பேச மாட்டாள் என்றார் ராஜேஸ்வரி. சரிமா வா கோவிலுக்கு கிளம்பலாம் என்ற ராஜசேகரனுடன் கோவிலுக்கு கிளம்பினார் ராஜேஸ்வரி.

எங்கே போனாள் இந்த வேல்விழி என்று தன் நாத்தனாரைத் தேடினாள் ரேணுகா. என்ன தேடிட்டு இருக்க ரேணு என்ற தெய்வானையிடம் வேல்விழியைக் காணோம் அம்மா என்ற ரேணுகா பதறிட ஏய் அவள் என்ன சின்னப்பிள்ளையா இங்கே தான் எங்கேயாவது இருப்பாள் என்றவர் எனக்கென்னமோ என் மருமகள் என் மகன் ஒயிலாடுற அழகை ரசிச்சுட்டு இருப்பாள்னு தோனுது என்றார். நல்லா தோனுது உன் மகனை உன் மருமகள் ரசிக்கிறாளாக்கும் உன் மகன் தான் அவளை காணோம்னே என் கிட்ட சொன்னுச்சு கயலும், கலைவாணியும் மட்டும் தான் ஒயிலாடுற இடத்தில் நிற்கிறாளுங்களாம். அண்ணனும் அவளைத் தேடி தான் போயிருக்கு என்றவள்  நான் கும்மி கொட்ட போயிட்டேன் அம்மாச்சி  பாரிக்கு விளக்கேத்த போயிருக்காங்க இந்தப் பொண்ணு எங்கே போனாள்னு வேற தெரியலையே என்றாள் ரேணுகா.

ஆமா விஷ்ணு எங்கே என்ற தெய்வானையிடம் அவங்க அப்பா, சித்தப்பா கூட சேர்ந்து தலைவரும் ஒயில் போடுறாரு என்றவள் இருங்கம்மா நான் அந்தப்பக்கம் போயி பார்க்கிறேன் என்ற ரேணுகா கிளம்பினாள்.

ரேணு என்ன தேடுற என்ற ராஜி வேல்விழி எங்கே என்றார். அவளை தான் அத்தை நானும் தேடிட்டு இருக்கேன் என்று கூறினாள் ரேணுகா. என்ன சொல்லுற ரேணு கரகம் எடுக்க போயிட்டாங்களே அவங்க வந்த்தும் பாரி தூக்கனும் இந்தப் பொண்ணு இந்த நேரத்தில் எங்கே போனாள் என்று பயந்த ராஜேஸ்வரி ஐயோ இந்தப் பொண்ணோட  என்று நொந்து போயி திரும்பிட வெற்றிமாறனுடன் வேல்விழி வந்தாள்.

அவள் வேறு புடவை அணிந்திருப்பதைக் கண்ட ராஜி என்னடி வேற சேலை கட்டி இருக்க என்றிட மன்னிச்சுருங்க அத்தை நான் தான் தெரியாமல் பைக்ல வரும் போது வேல்விழி புடவையில் சேற்றை அடிச்சுட்டேன் அதான் வீட்டுக்கு கூட்டிட்டு போயி வேற புடவை கட்டச் சொல்லி அழைச்சுட்டு வந்தேன் என்றான் வெற்றிமாறன்.

ஐயோ எதுக்கு மருமகனே மன்னிப்பு எல்லாம் கேட்டுகிட்டு என்ற ராஜி அவள் உங்க கிட்ட எதுவும் வம்பு பண்ணிடலையே என்றிட இல்லை அத்தை என்றவன் கரகம் வந்துருச்சு என்று அங்கிருந்து கிளம்பினான். வேல்விழி எதுவுமே பேசவில்லை. அமைதியாகவே இருந்தாள். என்னடி வாயாடி நீ எதுவும் நம்ம வெற்றிகிட்ட வம்பு பண்ணிடலையே என்ற ராஜியிடம் இல்லை அம்மா என்றவள் எதுவுமே பேசாமல் முளைப்பாரி தூக்கும் இடத்திற்கு சென்றாள்.

முளைப்பாரி தூக்கிக் கொண்டு அவள் கோவிலைச் சுற்றி வரும் போது என்னடி வேலு வேற புடவை கட்டி இருக்க என்ற கயல்விழியிடம் சும்மா தான் என்றாள் வேல்விழி. ஏய் இங்கே பாருடி சின்னமாமாவும் ,நீயும் ஒரே கலர்ல டிரஸ் என்றாள் கயல்விழி. என்ன கயல் என்ற கலைவாணியிடம் பாரேன் சின்ன மாமாவும் மெருன் கலர் சட்டை என்றாள் கயல்விழி. அங்கே பாரு வெற்றி அண்ணா கூட மெருன்கலர் சட்டை தான்.

எனக்கு என்னமோ வெற்றி அண்ணா பார்வை வேல்விழியைத் தான் சுத்துது என்றாள் கலைவாணி். அவர்களின் பேச்சை சிறிதும் காதில் வாங்காமல் ஏதோ சிந்தனையில் சென்றாள் வேல்விழி. ஆனால் அப்போ அப்போ வேலுவை கோபமாக முறைத்துக் கொண்டிருந்தாள். அவன் அவளைக் கண்டு கொள்ளவில்லை.

முளைப்பாரியை அம்மன் சன்னதியில் இறக்கி வைத்த பிறகு அனைவரும் தீபாராதனை பார்த்து விட்டு வீட்டிற்கு சென்றனர். எங்கேடி வேலு அந்த சேரு பட்ட புடவை என்ற ராஜேஸ்வரி இந்தப் புடவை புதுசா இருக்கு இது நான் எடுத்துக் கொடுத்த புடவை இல்லையே என்றார் ராஜேஸ்வரி.  என்னம்மா உங்க பிரச்சனை ஏன் நொய் நொய்யினு என் உயிரை வாங்குறிங்க என்றாள் வேல்விழி. என்னடி கேட்டுட்டேனு இப்படி கத்துற என்ற ராஜேஸ்வரியிடம் கொஞ்ச நேரம் என்னைத் தனியா விடுங்களேன் ப்ளீஸ் என்றவள் தன்னறைக்குள் அடைந்து கதவை சாத்திவிட்டாள்.

என்னாச்சு ராஜி என்ற வடிவுடைநாயகியிடம் என்னத்த சொல்ல அத்தை பெத்த பொண்ணு கூட என்னை புரியாமல் காயப்படுத்துறாள் என்றவர் வாங்க சாப்பிட நீங்கள் மாத்திரை போடனும் என்று மாமியாருக்கு உணவை பரிமாறினார் ராஜேஸ்வரி.

என்னடி கயலு வீட்டுக்கு போகலாமா என்ற கலைவாணி இந்த வேல்விழிக்கு என்னாச்சுடி பாரி இறக்கினதுமே ஆளைக் காணோம் எப்பவும் கடைத் தெருவை ஒரு அலசு அலசாமல் நகரவே மாட்டாளே என்றாள் கலைவாணி. ஆமாம்டி என்னனு தெரியலை ரொம்ப டல்லாவே இருந்தாள் பாரி தூக்கும் போது கூட என்ற கயல்விழி வா நாமலும் வீட்டுக்கு போகலாம் என்று கிளம்பினாள்.

என்னங்க இன்னும் இந்த வெற்றியையும், வேலுவையும் காணோம் என்றார் தில்லைநாயகி. அவனுங்க என்ன சின்னப் பிள்ளைகளா எல்லாம் வருவானுங்க என்றார் துரைப்பாண்டியன். அதானே உங்க கிட்ட போயி சொன்னேன் பாரு என்ற தில்லைநாயகி தெய்வானை என்றிட சொல்லுங்க அத்தை என்று வந்தார் தெய்வானை. வெற்றி இன்னமும் சாப்பிடாமல் இருக்கான். வேலுவும் சாப்பிடவே இல்லை அவங்க இரண்டுபேரும் இன்னமும் வீட்டுக்கு வரக்காணோம் எங்கேனு கொஞ்சம் போன் பண்ணி கேளு என்றார்.சரிங்க அத்தை என்ற தெய்வானை மகன் வெற்றிமாறனின் எண்ணிற்கு போன் செய்திட போன் ஓரிடத்தில் அனாதையாக அடித்துக் கொண்டிருந்தது. இரத்தம் சொட்டிடும் கையை உதறி விட்டு போனை அட்டன் செய்தான் அவன்.

…..தொடரும்….

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!