தன்னறையில் மெத்தையில் சரிந்து அழுது கொண்டே நடந்த்நிகழ்வுகளை அசை போட்டுக் கொண்டிருந்தாள் வேல்விழி.
அவள் குளக்கரையில் அமர்ந்திருக்க தன் பின்னால் ஏதோ நிழலாடுவதைக் கண்டு அவள் திரும்பிட யாரோ நான்குபேர் முகத்தில் துணியைக் கட்டிக் கொண்டு நின்றனர். அவர்களைக் கண்டு அதிர்ந்தவள் யார் நீங்க என்றிட டேய் சக்கரை குட்டி படு சோக்கா இருக்காடா என்றான் சின்னான். டேய் வந்த வேலையை மட்டும் பாரு என்ற காரையன் ஏய் பொண்ணு நகையை கழற்றி கொடு இல்லை உயிரை விட்டுருவ என்றான்.
யார் நீங்க எங்க ஊருக்கு வந்து என்னையவே மிரட்டுறிங்களா என் அண்ணன் யாருனு தெரியுமா இந்த ஊரு இன்ஸ்பெக்டர் அவர்கிட்ட மட்டும் சொன்னேன் உங்களை முட்டிக்கு முட்டி தட்டிருவாரு என்றவளிடம் ஓஓ உன் அண்ணன் கிட்ட சொல்லுவியா அப்போ இதையும் சொல்லு என்ற சின்னான் அவளது மார்பில் கை வைக்க வர அவனது கன்னத்தில் பளாரென்று அறைந்தவள் பொறுக்கி நாயே யார்கிட்ட உன் வேலையை காட்டுற என்றவள் அவன் முகத்தில் காரி உமிழ்ந்தாள்.
பார்த்திங்களாடா தனியா இருக்கும் போதே இந்த குட்டிக்கு திமிர என்றவன் எட்டி அவளது கூந்தலைப் பற்றி இழுத்திட விடுடா நாயே என்று அவனை அவள் அடித்திட என்னடி நாயா நானா இரு உன்னை இன்னைக்கு அம்மா ஆக்காமல் விடவே மாட்டேன்டி என்னையா காரி துப்புற என்றவன் அவளது புடவையை பிடித்து இழுத்திட டேய் என்னடா பண்ணப் போற தேவை இல்லாத வேலை பார்க்காதே என்ற காரையனை பிடித்து தள்ளிய சின்னான் இவளை சும்மாவே விட மாட்டேன்டா என்று அவளை இழுத்து செல்ல முயன்றான். டேய் பொறுக்கி விடுடா என்றவளை பிடித்து கீழே தள்ளி விட்டு அவளது புடவையை பிடித்து இழுத்து தூர எறிந்தான். அவளது உடல் வனப்பை பார்வையால் கற்பழித்தவனைக் கண்டு அருவருப்பாக உணர்ந்தவள் கையால் துலாவிட ஒரு செங்கல் தட்டுப்பட தன் மீது படர வந்தவனின் மண்டையில் கையில் தட்டுப்பட்ட செங்கல்லால் அடித்தவள் அவனது பிறப்புறுப்பில் எட்டி உதைத்து விட்டு எழுந்து ஓடிட நினைக்க மற்ற மூவரும் அவளை விரட்டினர். எங்கேடி எங்களில் ஒருத்தனை அடிச்சுட்டு ஓடிருவியா என்று அவளைப் பிடித்த இருவரில் ஒருவன் அவளை பிடித்து தள்ளினான்.
எதார்த்தமாக அந்தப் பக்கம் வந்த வேலு யாரோ ஒரு பெண்ணின் சத்தம் கேட்கவும் அங்கு வந்தான். திருடன் தள்ளிய வேகத்தில் கீழே விழப் போனவளைத் தாங்கிப் பிடித்த வேலு வேல்விழி நீயா என்றான். அவள் தன் கைகளால் தன் மானத்தை காத்திட முயல தன் சட்டையைக் கழற்றிக் கொடுத்தான் வேலு.
இவன் என்னடி உன்னை காப்பாற்ற போரானா என்ற திருடன் சக்கரையின் தாடை உடைந்த்து வேலு குத்திய குத்தில். ஏன்டா பொறுக்கி நாயே என் வீட்டுப் பொண்ணு மேலையே கை வைக்க துணிஞ்சிங்களா உங்களை உயிரோட விட்டா தானடா என்ற வேலு நால்வரையும் வர்ம அடி அடித்து இரண்டு நிமிடத்தில் வீழ்த்தி விட்டான்.
கயவர்கள் சுருண்டு விழுந்த பிறகு அருகில் நின்றிருந்த வேல்விழியை பார்த்திட அவள் அங்கு இல்லை. அவள் பக்கத்தில் வயல்காட்டில் உள்ள கிணற்றின் மீது நிற்பதைக் கண்டவன் ஓடி வருவதற்குள் அவள் குதித்து விட்டாள். நல்லவேளை படிக்கட்டுகள் இருக்கும் கிணறு என்பதால் கிணற்றில் குதித்த வேலு அவளைத் தூக்கிக் கொண்டு மேலேறி விட்டான்.
அவள் தண்ணீர் குடித்திருக்கவில்லை அதனால் தெளிச்சியாகவே இருந்தாள். என்னை ஏன் காப்பாத்துனிங்க இந்த அசிங்கத்திற்கு பிறகு நான் எப்படி வாழ்வேன் என்றவளின் கன்னத்தில் பளார் பளாரென அறைந்தவன் என்னடி காலையில் ஏதோ பாரதி கண்ட புதுமைப் பெண் போல பேசுன இப்போ இந்த சின்ன விசயத்துக்கே சாகத் துணிஞ்சுட்ட என்றான் வேலு. எது சின்ன விசயம் நாலு பேரு என் புடவையை பறித்து என்றவளிடம் புடவையை தானே இழுத்தானுங்க அதான் ஒருத்தனை அந்த அடி அடிச்சுருக்கியே அப்பறம் என்ன உனக்கு ஒன்றும் இல்லை எந்திரி வா என்றான். என்னை விடுங்க மாமா எனக்கு அருவருப்பா இருக்கு என்றவளின் கன்னத்தில் மீண்டும் அறைந்தவன் கொன்னுருவேன் ஏன் உங்க அம்மா அப்பா மானத்தோட வாழ வேண்டாமா. நீ செத்துப் போயிட்டினா ஊரு என்ன பேசும் அந்த நாலு பேரும் உன்னை கெடுத்துட்டானுங்க அந்த அவமானத்தால தான் நீ செத்துப்போனனு பேசும் இது தேவையா ஒழுங்கா என் கூட வா என்றவன் அவளை பைக்ல உட்காரு என்றான். அவள் அமைதியாக பைக்கில் அமர்ந்தாள்.
வெற்றிக்கு போன் செய்தவன் நடந்த நிகழ்வை சொல்லி அந்த நால்வரையும் செங்கல்சூளையில் வைக்குமாறு கூறினான்.
வெற்றிமாறனும் தன் நண்பர்களுடன் அந்த நால்வரையும் செங்கல்சூளையில் கட்டிப் போட்டு விட்டு தோப்பு வீட்டிற்கு வந்தான்.
என்னோட சேலை என்றவளிடம் அது முள்ளில் சிக்கி கிழிஞ்சுருக்கும் என்றவன் இந்தா இந்த புடவையை கட்டிக்கோ என்று ஒரு புடவையை அவளிடம் கொடுத்தான். இது யாரோடது என்றவளிடம் இது தோட்டத்து வீடு அதுவும் என்னோட அறையில் இந்த புடவை இருக்குதுனா யாரோடதா இருக்கும்னு உனக்கு தெரியாதா சொன்னதை மட்டும் செய் நான் வெளியில் இருக்கேன் என்றவன் கோபமாக வீட்டு வாசலுக்குச் சென்றான்.
புடவையைக் கட்டிக் கொண்டவள் ரொம்ப தாங்க்ஸ் என்றிட பரவாயில்லை என்றவன் வெற்றிமாறன் வரவும் அவனுங்க எங்கே என்றான். அவனுங்களை சூளையில் கட்டி வச்சுருக்கேன் சித்தப்பா என்ற வெற்றி வேல்விழியைப் பார்க்க அவள் கூனிகுருகி நின்றாள். இவளுக்கு நல்ல புத்தி சொல்லி கோவிலுக்கு அழைச்சுட்டு போடா என்ற வேலு வீட்டிற்குள் சென்றான்.
இதோ பாரு வேல்விழி நடந்தது எல்லாம் கெட்ட கனவு அவ்வளவு தான் என்றவன் நம்ம வீட்டில் இந்த விசயம் தெரிந்தால் என் அப்பத்தாவும், அத்தையுமே போதும் உன்னை அசிங்கப் படுத்தி உன் அம்மாவை சாவடிச்சுருவாங்க என்றவன் மறந்திரு உன்னை ஒரு நாய் கடிக்க வந்துட்டு கடிக்க முடியாமல் பிராண்டிட்டு போயிருச்சு அவ்வளவு தான் என்றான். அவள் மௌனமாகவே அமர்ந்திருந்தாள்.
நடந்தவற்றை நினைத்துப் பார்த்தவளின் கண்கள் குளமானது. அழுது அழுது கரைந்தவள் அப்படியே உறங்கிப் போனாள்.
என்னடா சொல்றானுங்க இந்த நாயிங்க என்ற வேலுவிடம் என்ன சொல்லுவானுங்க சித்தப்பா திருவிழாவில் களவாங்க வந்தோம்னு சொல்லுறானுங்க. ஏன்டா களவாங்க வந்தவனுங்க எங்க வீட்டு பொண்ணு மேல கை வைப்பிங்களா என்ற வேலு அவர்கள் நால்வரையும் சாட்டையை வைத்து வெளுத்து எடுத்தான். அவர்கள் நால்வருக்கும் சதை பிய்ந்து இரத்தம் சொட்டிட நால்வரும் மயங்கி சரிந்தனர். இந்த நாயிங்களை இதோட விடக்கூடாது. உன் மச்சானுக்கு போன் பண்ணி நடந்த விசயத்தை சொல்லு அவரும் அவரோட தங்கச்சிக்கு அண்ணனா இவனுங்களை உரிச்சு உப்புக்கண்டம் போடட்டும் என்ற வேலு வேற யாருக்கும் தெரியாமல் பார்த்துக்கோ என்று கூறி விட்டு கிளம்பினான்.
சுரேந்திரனிடம் விசயத்தை கூறினான் வெற்றிமாறன். அவனது இரத்தம் கொதிக்க அந்த நான்கு பேரையும் திருட்டுக் கேஸில் பிடித்து லத்தி உடையும் அளவிற்கு அடித்து நொறுக்கினான். அவர்களின் உடலில் உயிர் மட்டுமே மிஞ்சியது.
என்னப்பா இப்போ தான் வர என்ற ராஜேஸ்வரியிடம் ஸ்டேசன்ல கொஞ்சம் சின்ன வேலைம்மா என்ற சுரேந்திரன் வேல்விழி சாப்பிட்டுச்சா என்றான். எங்கப்பா காலையில் இருந்து சாப்பிடலை என் கூட வேற கோவிச்சுட்டு போயி படுத்துட்டாள் என்றார் ராஜேஸ்வரி. நீங்க சாப்பாடு எடுத்து வைங்க நான் தங்கச்சியை கூட்டிட்டு வரேன் என்றவன் அவளது அறைக்கதவைத் தட்டினான்.
கதவு தட்டப்படும் சத்தத்தில் கண் விழித்தவள் எழுந்து கதவைத் திறக்க சுரேந்திரன் அறைக்குள் வந்து கதவை சாத்தி விட்டான். சொல்லுங்க அண்ணா என்றவளின் கன்னத்தை பார்த்தவன் என்னடா கன்னம் இப்படி கன்றிப்போயிருக்கு என்றதும் தான் தன் கன்னத்தை பார்த்தாள். வேலுவின் கைரேகை மொத்தமும் வேல்விழியின் கன்னத்தில் இருந்தது. அண்ணா என்று அவள் ஏதோ கூற வர எல்லாமே எனக்கு தெரியும் பாப்பா என்றான் சுரேந்திரன்.
தன் அண்ணனின் தோளில் சாய்ந்து அழ ஆரம்பித்தாள் வேல்விழி. பாப்பா என்னைப் பாரு உனக்கு ஒன்றுமே இல்லை சரியா. உன்னை ஒரு நான்கு நாய்கள் கடிக்க வந்துச்சு. கடிக்க முடியாமல் பிராண்டிட்டு போயிருக்கு அவ்வளவு தான். அதான் உனக்கு எதுவும் ஆகாமல் மாமா வந்து காப்பாத்திட்டாரே பாப்பா என்றவன் நீ இப்படி அழுதுட்டு இருந்தால் நடந்த விசயம் எல்லோருக்கும் தெரிய வரும். எல்லோருக்கும் தெரிய வந்தால் என்னலாம் நடக்கும்னு நான் சொல்லி தான் உனக்கு தெரியனுமா நம்ம சித்தி ஒருத்தங்களே போதும் என்றவன் நீ சாப்பிடாததால அம்மாவும் சாப்பிடவே இல்லைடா என்று கூறி தங்கையை அழைத்துச் சென்றான்.
மகளின் முகம் வீங்கி இருப்பதைக் கண்ட ராஜி துடித்து விட்டார். என்னாச்சு வேலு கன்னம் இப்படி கன்றிப் போயிருக்கு என்ற ராஜி அம்மாவை மன்னிச்சுரும்மா நான் வேண்டும்னு உன்னை அடிக்கலை மதியம் அடிச்சது பாரு இன்னமும் இப்படி சிவந்து போயிருக்கு என்று வருந்தினார் ராஜி.
நீங்களும் என்னை மன்னிச்சுருங்கம்மா யார் மேலையோ உள்ள கோவத்தை உங்க கிட்ட காட்டிட்டேன் என்றவளிடம் அது பரவாயில்லடா என்றவர் மகளுக்கு சாப்பாடு ஊட்டி விட்டார். அவளும் தன் அன்னைக்கு உணவினை ஊட்டி விட்டாள்.
எங்கம்மா வீட்டில் யாரையும் காணோம் என்ற வேல்விழியிடம் எல்லோரும் வள்ளிதிருமணம் நாடகம் பார்க்க போயிருக்காங்க. உங்க அப்பத்தா தூங்குறாங்க என்றார். பாப்பா நீயும் வா நாடகம் பார்க்க போகலாம் என்ற சுரேந்திரனிடம் இல்லை அண்ணா எனக்கு தூக்கம் வருது என்றாள் வேல்விழி. சரிடி நீ புடவை கூட மாத்தலையா என்ற ராஜி இந்த புடவை யாரோடது என்றார். சூழ்நிலை அறிந்தவன் ஆனதால் நான் தான்மா தங்கச்சிக்கு ஹாஸ்டல்ல இருக்கும் போது வாங்கிக் கொடுத்தேன். போன மாசம் தங்கச்சியை பார்க்க போனேன்ல அப்போ வாங்கிக் கொடுத்தேன் என்றான் சுரேந்திரன். சரி அந்த பழைய புடவை என்ற ராஜியிடம் அது கால் முளைச்சு நடந்து போயிருச்சு என்ற வேல்விழி எனக்கு தூக்கம் வருதும்மா என்று எழுந்து தன்னறைக்குச் சென்றாள்.
அந்த புடவையை அவிழ்த்தவள் பத்திரமாக மடித்து வைத்தாள். அவளுக்கு வேலுவைப் பிடிக்காது தான் ஆனால் தன் மானத்தைக் காப்பாற்றியதால் அவன் மீது மரியாதை வந்தது. அவளைக் காப்பாற்றியதால் மட்டும் மரியாதை வரவில்லை என்றோ விட்டுச் சென்றவளின் நினைவுகளை இன்னும் தனக்குள் சுமந்து கொண்டு அவளது பொருட்களை கூட பத்திரமாக வைத்திருக்கிறானே என்பதை நினைத்தவளுக்கு அழுகை தான் வந்தது. தன் அக்காவின் மீது கோபமும் வந்தது.
….தொடரும்….