நின்னைச் சரணடைந்தேன் என் மன்னவனே….8

5
(6)

யோவ் அத்தான் நில்லுங்க என்றவள் கலகலவென சிரித்திட கயல்விழி அவளை முறைத்துப் பார்த்தாள். ஏன்டி என்னை இப்படி முறைக்கிற நம்ம முறைப்பையன் ஓடிட்டாரு என்ற வேல்விழியிடம் என் மாமாவை இனிமேல் பெயர் சொல்லி கூப்பிடாதே வேலு என்றாள் கயல்விழி. அப்படித்தான் கூப்பிடுவேன் ரத்னவேலு, ரத்னவேலு , ரத்னவேலு என்று விடாமல் சொன்ன வேல்விழியின் கன்னத்தில் பளாரென்று அறைந்தாள் கயல்விழி. கொன்னுருவேன் அவர் வயசென்ன உன் வயசென்னடி இப்ப தான் பெயர் வச்சவ மாதிரி ஏலம் விட்டுட்டு இருக்காள் என்ற கயல்விழி கோபமாக சென்று விட்டாள். செல்பவளை பிடித்து நிறுத்திய வேல்விழி கயல் நான் சும்மா உன்னை வெறுப்பேத்த தான் என்றாள். என்னடி வெறுப்பேத்துற இல்லை இதெல்லாம் உனக்கு விளையாட்டா ஆமாம் உன் அக்கா பண்ணுன அசிங்கத்தால இன்னமும் என் மாமா தலை நிமிர முடியாமல் அவமானப் பட்டு இருக்கிறதால தான கண்டவள் எல்லாம் அவரை பெயரைச் சொல்லி அசிங்கப் படுத்துறாள் என்றாள் கயல்விழி. கயல் போதும் இனிமேல் உன் மாமா இருக்கிற திசை பக்கம் கூட போக மாட்டேன். நான் உனக்கு கண்டவள் தானே இனி இந்த கண்டவள் உன் மாமாவை பெயர் சொல்லி கூப்பிட மாட்டாள் அப்பறம் இன்னொரு விசயம் என் அக்காவுக்கும், உன் மாமாவுக்கும் என்ன பிரச்சனை எதனால என் அக்கா வீட்டை விட்டு போனாள்னு நமக்கு தெரிய வாய்ப்பில்லை. அந்த சம்பவம் நடந்தப்ப நீயும், நானும் பனிரெண்டு வயசு பொண்ணுங்க அதனால் என் அக்காவைப் பத்தி தப்பா பேசுறதை நிறுத்திக்கோ  என்ற வேல்விழி வீட்டிற்கு சென்று விட்டாள்.

வீட்டிற்கு வந்தவளின் மனம் ஆறவே இல்லை. எப்படி அவள் இப்படி ஒரு வார்த்தை சொல்லலாம். அந்த பாட்டி சொன்னாங்க, சித்தி சொன்னாங்க இப்போ கயல் நீயும் என் அக்கா அப்படி எங்கே தான் போனாளோ என்று நொந்து கொண்டவளின் கண்களில் இருந்து கண்ணீர் தான் வந்தது.

வேலும்மா என்று வந்த வடிவுடைநாயகியிடம் கண்களை அவர் அறியாமல் துடைத்து விட்டு சொல்லுங்க அப்பத்தா என்றாள். என்னடி கன்னம் இன்னமும் சிவந்து இருக்கு என்ற வடிவுடைநாயகியிடம் ஒன்றும் இல்லை நேற்றிலிருந்து ஒவ்வொருத்தரா அறைஞ்சுகிட்டே இருந்தால் கன்னம் பன்னு மாதிரி வீங்காமலா இருக்கும் என்று சொல்ல நினைத்த மனதை அடக்கியவள் ஒன்றும் இல்லை என்று சமாளித்தாள்.

சரி வாத்தா சாப்பிட என்றவரிடம் பசிக்கலை அப்பத்தா என்றாள் வேல்விழி. என்ன தங்கம் நீ சாப்பிடாமல் இருந்தால் அப்பத்தாவும் சாப்பிட மாட்டேன் என்ற வடிவுடைநாயகியின் கன்னம் கிள்ளியவள் என் வடிவு சொன்னால் வேலு சாப்பிடுவாள் என்று கூறி விட்டு தன் அம்மாவிடம் இட்லியை வாங்கி வந்தவள் தன் அப்பத்தாவிற்கு ஊட்டி விட அவளது அப்பத்தாவும் அவளுக்கு ஊட்டி விட்டார்.

சாப்பிட்டு முடித்தபிறகு பேத்தியின் கழுத்தில் ஒரு செயினை மாட்டி விட்டவர் இது இனி என் வேலுக் குட்டிக்குத் தான் என்றார். எதற்கு அப்பத்தா என்றவளிடம் அதான் உன் அப்பன் உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கப் போறானே அப்பறம் என்ன என்றவரிடம் இந்த கல்யாணம் நடந்தால் மட்டும் எல்லாம் மாறிடுமா அப்பத்தா. அந்த வீட்டில் அந்த பாட்டிக்கு என்னைக் கண்டாளே பிடிக்காது என்றாள். நீ என்ன அவங்க மகனையா கல்யாணம் பண்ணிக்கப் போற உன் அத்தை தெய்வானை தானே உன்னோட மாமியார் அதனால நீ கவலைப் படாதே தங்கம் என்றவர் சரி நீ சீக்கிரம் ரெடியாகு கோவிலுக்கு போகனும். பாரி தூக்கி கொட்டனும் இல்லையா என்றவர் கிளம்பிட வேல்விழி தயாராகினாள்.

கன்றிப்போன முகத்தில் பவுண்டேசன் தடவி முகத்தை சரி செய்தவள் பட்டுப்புடவை கட்டிக் கொண்டு நகை எல்லாம் அணிந்து தலை சீவிக் கொண்டிருக்க கயல்விழி வந்தாள்.

வேலு சாரிடி என்றவளைப் பார்த்து சிரித்தவள் எதற்கு சாரி என்றிட இல்லை நான் என்று கயல்விழி இழுத்திட இதோ பாரு கயல் கண்டவள் கிட்ட எல்லாம் வந்து நீ சாரி கேட்க வேண்டிய அவசியமே கிடையாது என்ற வேல்விழி தலையில் பூ வைத்து விட்டு கோவிலுக்கு நேரம் ஆச்சு கயல் என்று சென்று விட்டாள்.

ஏய் ரொம்ப பண்ணாதடி என்ற கயல்விழியிடம் ப்ளீஸ் கயல் நாம சண்டை போட்டது வீட்டில் யாருக்கும் தெரிய வேண்டாம்னு நான் நினைக்கிறேன் நீ சொல்லனும்னு பிரியப் பட்டால் தாராளமா சொல்லிக்கோ என்றவள் அண்ணி ரெடியா என்றாள்.ரெடி வேலு என்ற ரேணுகா வந்திட கயல் வாடி கிளம்பலாம் என்றாள் ரேணுகா. இல்லை அண்ணி நீங்க முன்னே போங்க நான் அம்மா கூட வரேன் என்றாள் கயல்விழி. சரிமா உன்னோட பிரியம் என்ற ரேணுகா வேலு வாடி என்று தன் நாத்தனாருடன் சென்று விட்டாள்.

அண்ணி உங்க கிட்ட ஒரு விசயம் கேட்கனும் என்ற வேல்விழியிடம் என்னடி கேளு என்றாள் ரேணுகா. என் அக்காவுக்கும், உங்க சித்தப்பாவுக்கும் ரிலேசன்சிப் எப்படி இருந்துச்சு என்றாள் வேல்விழி. ஏன்டி உனக்கு இப்போ இந்த சந்தேகம் என்ற ரேணுகாவிடம் சொல்லுங்களேன் என்றாள் வேல்விழி. அதை எதுக்கு இப்போ பேசிகிட்டு உன் அக்காவுக்கு என் சித்தப்பாவை சுத்தமாவே பிடிக்காது என்ற ரேணுகா நல்ல நாள் அதுவுமா ஏன்டி தேவையில்லாத பேச்சு பேசிகிட்டு இருக்க என்றாள். சாரி அண்ணி என்ற வேல்விழியிடம் வேலு நம்ம குடும்பமே அவள் செத்துப் போயிட்டாள்னு தலை முழுகிருச்சு இனி அவளைப் பத்தி பேச வேண்டாமே ப்ளீஸ் என்றாள் ரேணுகா.

வேல்விழியும் அதன் பிறகு ரேணுகாவிடம் அது பற்றி எதுவுமே கேட்டிட வில்லை. அழகாக வளர்ந்திருந்த அம்மன் பாரியை தூக்கி தலையில் சுமந்து சென்று தண்ணீரில் கரைத்து விட்டு வீட்டிற்கு வந்து சேர மதியம் ஆகி விட்டது. வேல்விழி அசதியில் நன்றாக உறங்கி விட்டாள்.

அவசரப் பட்டு வார்த்தையை விட்டுட்டியே கயலு அவள் இனி பேசவே மாட்டாளே என்று தன்னைத் தானே நொந்து கொண்டாள் கயல்விழி. நம்ம மாமாவை பெயர் சொல்லி கூப்பிட்டால் கோபம் வரத் தானே செய்யும் அவள் மேல தான் தப்பு இனி அவளாவே வந்து பேசட்டும் என்று இன்னொரு மனம் சொல்லிட கயல்விழி  எதையும் யோசிக்காமல் படுத்து விட்டாள்.

அடுத்த பத்து நாட்களுக்குப் பிறகு அந்த வீடே பரபரப்பாக இருந்தது. அன்று வெற்றிமாறனுக்கும் , வேல்விழிக்கும் நிச்சயதார்த்தம். அதனால் வீட்டில் எல்லோருமே சந்தோசமாக இருந்தனர். வேல்விழி கயல்விழியுடன் பேசி பத்து நாட்கள் கடந்து விட்டது.

என்னடி வேலு இன்னுமா ரெடியாகுற என்ற கலைவாணியிடம் ஏன்டி நான் தான்டி பொண்ணு அப்போ நிறைய டைம் எடுத்து கிளம்ப வேண்டாமா என்றவள் தலையில் மல்லிகை சூடிக் கொண்டாள்.

கொஞ்சமா வைடி அப்பறம் உன் மாமியார் வீட்டில் இருந்தும் பூ நிறைய வரும் என்றாள் கலைவாணி. மாமியார் வீட்டில் இருந்து எவ்வளவு பூ வந்தாலும் என் தலை தாங்கிக்கிரும்டி என்றாள் வேல்விழி. அதானே இவ்வளவு முடியில் இருபது முழம் கூட அசால்ட்டா வைக்கலாம் என்ற கலைவாணியிடம் வாயை முடுடி எப்போ பாரு என் முடியை கண்ணு வச்சுகிட்டு என்றாள் வேல்விழி.

ஏய் சும்மா சொன்னேன்டி என்ற கலைவாணி என் வேலு அழகு என்றிட உனக்கு ஐஸ்கிரீம் வேணும்னா கேளேன்டி ஏன் எனக்கு ஐஸ் வைக்குற என்றாள் வேல்விழி.

ஏய் வாயாடிகளா ரெடியா என்று வந்த ரேணுகா வேலு செம்மையா இருக்கடி என் அண்ணன் இப்பவே தாலி கட்டச் சொன்னாலும் கட்டித் தூக்கிட்டு போயிரும் என்றாள் ரேணுகா. போங்க அண்ணி என்று சினுங்கியவளின் நெற்றி வலித்து திருஷ்டி கழித்த ரேணுகா வா உன்னை சபைக்கு அழைச்சுட்டு வரச் சொன்னாங்க என்று வேல்விழியை அழைத்துச் சென்றாள்.

மனம் முழுவதும் சந்தோசமாக வெற்றிமாறன் சபையில் அமர்ந்திருந்தான். கதிரேசன், தெய்வானை தம்பதி தாம்பூலம் தட்டை ராஜசேகரன், ராஜேஸ்வரி தம்பதியிடம் கொடுத்து தட்டு மாற்றிக் கொண்டனர். நாத்தனார் என்பதால் ரேணுகா வேல்விழிக்கு மாலை அணிவித்து விடப் போக. ரேணும்மா நீ இரு அத்தை மாலை போட்டு விடட்டும் என்றார் கதிரேசன். ஏன் மச்சான் ரேணுகா தானே மாலை போடனும் என்ற விஜயசேகரனிடம் விஜயலட்சுமி தானே எங்க வீட்டோட முதல் மகாலட்சுமி அதனால எல்லாமே என் தங்கச்சி கையால தான் நடக்கனும் என்றார் கதிரேசன். சரியென்று அனைவரும் சம்மதிக்க விஜயலட்சுமி வேல்விழியின் கழுத்தில் மாலை இட்டு அவள் தலையில் பூச்சூட்டினார். நிச்சயதார்த்தம் நல்லபடியாக முடிந்து அனைவரும் விருந்து சாப்பிட்டனர்.

என்ன வேல்விழி உனக்கு என்னைப் பிடிச்சுருக்கா என்ற வெற்றிமாறனிடம் பிடிக்காமல் தான் உங்க அத்தை வச்சுவிட்ட பூவை இன்னமும் தலையிலே வச்சுருக்கேனாக்கும் என்றாள். என்ன இரண்டு பேரும் தனியா வந்து நிற்கிறிங்க எதுவும் ரொமான்ஸ் சீனா நான் தான் டிஸ்டர்ப் பண்ணிட்டேனா இருங்க உங்களை மாமாகிட்ட சொல்லித் தரேன் என்ற கயல்விழியிடம் அப்படிலாம் எதுவும் இல்லையே என்றான் வெற்றிமாறன். என்ன இல்லை என்றவளிடம் வேலு இல்லை என்று வெற்றி ஏதோ கூற வர இப்போ நமக்கு கல்யாணம் நிச்சயம் ஆகிருக்கு என் கிட்ட பேசுறதுக்கு இன்னமும் நீங்க உங்க அப்பாவுக்கு பயப்பட வேண்டிய அவசியம் என்ன என்றாள். வேல்விழி என்றவனிடம் இது தான் எனக்கு புரியவே இல்லை எப்போ என்ன பிரச்சனை வந்தாலும் ஓடிப் போயிடுறிங்க அன்னைக்கு உங்க சித்தப்பாவை பார்த்து ஓடிட்டிங்க இன்னைக்கு அவள் மாமாகிட்ட சொல்லித் தரேன்னு சொன்னது ஒன்னுமே இல்லைங்கிறிங்க இது எனக்கு சத்தியமா புரியலை. உங்களுக்கு கொஞ்சம் கூட தைரியமே இல்லையா என்றாள். என்ன வேல்விழி சின்ன விசயம் என்றவனிடம் சின்ன விசயமா அவள் கிட்ட என் வருங்கால பொண்டாட்டிகிட்ட தானே பேசிட்டு இருக்கேன் அப்பாகிட்ட சொன்னா சொல்லிக்கோனு சொல்லி இருக்கனும் ஆனால் ச்சை என்றவள் கோவித்துக் கொண்டு சென்று விட்டாள்.

சாரி அத்தான் நான் ஏதோ விளையாட்டுக்கு சொல்லப் போயி வினையாகிருச்சு என்றாள் கயல்விழி. ஏய் கயல் விடு அவள் கோபம் எல்லாம் சரியாகிரும் என்றவன் கிளம்பினான்.

என்னடி உன் பிரச்சனை ஏன் அத்தான் கூட சண்டை போட்ட என்ற கயல்விழியிடம் நான் உன் மாமா மகன்  கூட சண்டை போடவில்லை கயல் என்னை கல்யாணம் பண்ணிக்கப் போற மாப்பிள்ளை கிட்ட தான் சண்டை போட்டேன் என்ற வேல்விழி என்னுடைய பர்சனல் அதில் நீ தலையிடாமல் இருக்கிறது நல்லது என்றாள். என்ன வேலு உன் இஷ்டத்திற்கு பேசுற இது என்ன புதுசா பர்சனல் என்ற கயல்விழியிடம் பர்சனல் தான் அதை உருவாக்கினது யாரு. இதோ பாரு நான் உன்கிட்ட சண்டை போடுற மனநிலையில் இல்லை புரிஞ்சுக்கோ என்ற வேல்விழி கிளம்பினாள்.

…..தொடரும்….

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!