நின் கனல்விழிக் காதலில் கரைந்தேன் : 11

5
(13)

காதல் : 11

ஜீவிதா சக்தியை கோபப்படுத்திவிட்டு போனை வைத்து விட்டாள். நம்மளோட சத்தியாவின் கெட்ட நேரமோ என்னவோ அவளும் சுமதியும் சக்தியிடம் வந்து கொண்டு இருந்தனர். 

ஏற்கனவே கோபத்தில் இருந்த சக்தி தான் அவ்வளவு சொல்லியும் தனது பேச்சை கேட்காமல் சுமதியை வெளியே கூட்டிட்டு வந்த சத்தியாவின் மீது அவனது கோபம் திரும்ப அவள் அருகில் வந்ததும் அவளை அறைந்தான். 

சக்தி சத்தியாவை அறைந்ததும் சத்தியா “மன்னிச்சிடுங்க பெரியையா….” என்றாள். 

சுமதிக்கு எதுவும் புரியவில்லை. ‘அண்ணா எதுக்கு அண்ணியை அடிச்சாரு…? அண்ணி எதுக்கு மன்னிப்பு கேட்டாங்க…’ என யோசித்தவள் சக்தியை அழைத்தாள். 

“ஏன் அவங்களை அடிச்சீங்க…..?” 

“ஏன் சுமதி நீ இங்க வந்த….?” 

“பெரியையா வீட்ல யாரும் இல்லை…. தனியாக விட்டுட்டு வர முடியாதுனு கூட்டிட்டு வந்திட்டேன்… சுமதி உன்னை வெளியே கூட்டிட்டு வர வேண்டாம்னு சொன்னாங்க.. நான் அவங்க சொன்னதை கேட்காமல் கூட்டிட்டு வந்ததால்தான் பெரியையா என்னை அடிச்சாங்க…” என்றாள். 

தான் எதுவும் சொல்லாமல் தன்னை புரிந்து கொண்ட சத்தியாவைப் பார்த்தான்.

“உங்ககிட்ட நான் கொஞ்சம் பேசணும்…..” என்றாள் சத்தியாவைப் பார்த்து,

“சுமதி பெரியையாவுக்கு சாப்பாடு கொடுத்திட்டு வந்த பிறகு பேசலாமா…..?”

“சரி……” 

“நான் போய் தட்டை எடுத்துட்டு வர்றன் பெரியையா….” என்றவள் உள்ளே சென்றாள்.

“சுமதி அவகிட்ட என்ன சொல்லப்போற….?” 

“நான் யாருனு சொல்லப்போறன் அண்ணா… எல்லா உண்மையையும் சொல்லிடலாம்…..”

“ஏன் இப்போ அவசரப்படுற….? அவ உன்னை புரிஞ்சிக்கலனா…..”

“அவங்க உன்னை அவ்வளவு புரிஞ்சிவச்சிருக்கிறாங்க. நிச்சயம் என்னையும் புரிஞ்சிப்பாங்க….” 

“என்னவோ பண்ணு சுமதி.. ஆனால் நான் கோபப்படுற மாதிரி ஏதாவது பண்ணா.. அப்புறம் நடக்கிற எதுக்கும் நான் பொறுப்பு இல்லை….” 

“தப்பா எதுவும் நடக்காது அண்ணா…..”

“நடக்கலனா சந்தோசம்தான்….”

“இல்லை அண்ணா வேற யாராவது தப்பா பேசும் முன்னாடி நாம சொல்லிட்டா நல்லது…..”

“என்னவோ பண்ணுமா…..”

“வாங்க பெரியையா சாப்பிடலாம்….”

“சரி.. சுமதி நீயும் வா சேர்ந்து சாப்பிடலாம்…”

“இல்லை நான் இவங்ககூட அப்புறமா சாப்பிடுறேன்…..”

“பரவாயில்லை சுமதி அதுதான் பெரியையா உங்களை சேர்ந்து சாப்பிட கூப்பிடுறாருல வாங்க சாப்பிடுங்க…..”

“சரி….”

இருவருக்கும் சாப்பாட்டை எடுத்து பரிமாறினாள் சத்தியா. சாப்டு முடித்த பின்னர் சத்தியா எல்லாவற்றையும் எடுத்து வைத்தாள்.. 

“நான் உங்ககிட்ட ஒண்ணு சொல்லணும்னு சொன்னேன்…..”

“சொல்லு சுமதி.. இங்க பேசலாமா…. இல்லை வீட்டிற்கு போய் பேசலாமா…?”

“இல்லை இங்கேயே பேசலாம்….” 

“சரி சொல்லு…..” 

“அதுவந்து… அதுவந்து…” 

“ஏன் நீ பதற்றப்படுற சுமதி.. உனக்கு சொல்ல கஷ்டமா இருக்குனா நீ சொல்ல வேண்டாம் சுமதி….”

சக்தியை பார்த்தாள் சுமதி.. பின் சத்தியாவைப் பார்த்தவள். 

“இல்லை நான் சொல்றேன்….” என்றவள் அவளைப் பற்றி சத்தியாவிடம் சொல்ல ஆரம்பித்தாள். 

“என்னோட ஊரு பூம்பொழில்.. என்னோட அம்மா பேரு வேணி… அம்மாக்கு ரெண்டு அண்ணனுங்க.. எங்க அம்மா ரொம்ப அழகு.. இவங்க குடும்பம் ஓரளவு வசதியானவங்க.. ஆனால் அம்மாவோட அண்ணனுங்களுக்கு பணத்து மேல ரொம்ப ஆசை… 

ஒரு நாள் ஒருத்தரு எங்க ஊருக்கு ஏதோ வேலை விசயமாக வந்திருக்கிறாரு.. அவரோட கண்ல எங்க அம்மா பட்டதுதான் எங்க அம்மா பண்ண தப்பு.. இதை கவனிச்ச மாமனுங்க அவங்களுக்கு சாதகமா அதை பயன்படுத்திக்க நினைச்சு அவர்கூட பேசினாங்க….

“என்ன ஐயா அந்த பொண்ணை பிடிச்சிருக்கு…. ?” 

“ம்.. ரொம்ப ஆமா அது யாரு….?” 

“எங்களோட தங்கச்சிதான்…. ” 

“என்ன உங்களோட தங்கச்சியா…. ?” 

“ஆமா ஐயா எங்க தங்கச்சிதான்.. உங்களுக்கு பிடிச்சிருந்தா கல்யாணம் பண்ணிக்கோங்க..”

“இல்லை எனக்கு கல்யாணமாகி பசங்க இருக்கிறாங்க…. ” 

“அப்போ ஒண்ணும் பண்ண முடியாதே ஐயா….”

“ஆனால் எனக்கு அவளை பிடிச்சிருக்கு….” 

“சரி வேணும்னா இப்பிடி பண்ணலாம்…..”

” எப்பிடி…”

“நாங்க சொல்ற மாதிரி நீங்க நடந்துக்கணும்…..”

வேணியின் அழகில் மயங்கிய அவரு என்ன வேணும்னாலும் பண்ணலாம்னு நினைச்சாரு.. 

“சரி நீங்க சொல்ற மாதிரி நான் நடந்துக்கிறன்……”

“எங்களை இந்த ஊர்ல பெரியமனுசனாக்கணும்…..”

“புரியலை…..”

“நாங்களும் ஓரளவு வசதியானவங்க தான்.. ஆனால் இன்னும் இன்னும் வசதியில உயரணும்.. அதுக்கு நீங்க உதவி பண்ணணும்…” 

“சரி அவ்வளவு தானே……” 

“அடுத்தது உங்களுக்கு கல்யாணம் நடக்கலனு பொய் சொல்லணும்…..”

“சரி.. அவ்வளவு தானே….”

“ஊருக்காக அவளுக்கு ஒரு தாலிய மட்டும் கட்டிடுங்க…”

“சரி அப்பிடியே பண்ணிடலாம்… “

“நாளைக்கு காலையில எங்க வீட்டுக்கு வாங்க மீதிய வீட்ல பேசிக்கலாம்…..”

“சரி ” என்றார். 

அன்றிரவு வேணி வீட்டில்……….

“என்னங்க சொல்றீங்க…..”

“ஆமா நாம எப்படியாவது வேணிக்கு இந்த கல்யாணத்தை பண்ணி வச்சிட்டம்னா பெரிய பணக்காரவங்களாயிடலாம்…..”

“சரிங்க இந்த கல்யாணத்தை சிறப்பா நடத்திடுவம்….”

“வேணி.. வேணி……”

“என்ன அண்ணா….”

“உங்கிட்ட ஒரு முக்கியமான விசயம் சொல்லணும்மா….”

“என்ன அண்ணா….”

“அது ஒன்னும் இல்லை வேணி நாளைக்கு உன்னை பொண்ணு பார்க்க வர்றாங்க…..”

“என்ன அண்ணி இப்போ கல்யாணத்துக்கு என்ன அவசரம்…..” 

“எல்லாம் காலா காலத்தில செய்யணும் வேணி..” 

“அண்ணா அதில்லை…. ” 

“வேணி நீ இருக்கும் போது நாங்க கல்யாணம் பண்ணதே எங்களை உறுத்திட்டு இருக்குமா.. தயவு செய்து இந்த கல்யாணத்திற்கு ஒத்துக்கொள்ளுமா…. “

“சரி அண்ணா….”

மறுநாள் பெண்பார்க்கும் படலம் சிறப்பாக நடந்தேறியது… 

“பொண்ணை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு……”

“எங்களுக்கும் உங்களை பிடிச்சிருக்கு…. அப்போ கல்யாணத்தை வர்ற திங்கட்கிழமை வச்சிக்கலாமா…..?”

“சரி அன்னைக்கே வச்சிடலாம்…..”

குறித்த நாளில் வேணிக்கும் அவருக்கும் கல்யாணம் நடந்தேறியது… முதல்ல அம்மாக்கு அவரு மேல கொஞ்சமும் சந்தேகம் வரல.. அப்போதான் அம்மாவோட ரெண்டாவது அண்ணாக்கு பெண் குழந்தை பிறந்தா.. அம்மாதான் அவங்களை ரொம்ப பார்த்துக்கிட்டாங்க.. 

அம்மாவை அவரு நல்லாத்தான் பார்த்துக்கிட்டாரு…. அம்மாவோட அண்ணன்ங்க அவருக்கிட்ட இருந்து நிறைய பணம் வாங்கி எடுக்க ஆரம்பிச்சாங்க.. அதை வச்சி மில் வச்சாங்க… நிறைய நிலம் வாங்கினாங்க.. இப்பிடி ஊர்ல பெரியாளாயிட்டாங்க.. 

ஒரு நாள் அம்மா தண்ணீர் எடுக்கும் போது மயங்கி விழுந்திட்டாங்க.. அப்போ மருத்துவிச்சி ஒருத்தங்க வந்து நாடி பிடித்து பார்த்திட்டு அம்மா மாசமா இருக்கிறதா சொல்லியிருக்கிறாங்க.. வீட்ல எல்லோருக்கும் சந்தோசமாக இருந்தது.. அவரு வந்த அப்பறம் அம்மா சந்தோசமா இந்த விசயத்தை சொல்லியிருக்கிறாங்க.. 

ஆனால் அவரு இப்போதைக்கு குழந்தை வேண்டாம்னு சொல்லிட்டாரு.. அம்மா கேட்கல இந்த குழந்தை வேணும்னு சொல்லிட்டு இருந்தாங்க.. அப்போ அவரு “உனக்கு குழந்தை வேணுமா நான் வேணுமானு கேட்க, அம்மா “எனக்கு ரெண்டு பேரும் வேணும்ங்க….” என்று அழுதிருக்கிறாங்க.. 

“இல்லை உனக்கு நான் வேணுமா குழந்தை வேணுமா சொல்லு…..” 

“கருவில இருக்கிற உயிரை அழிக்கிறது பாவம்ங்க.. அந்த பாவத்தை நான் செய்ய மாட்டேன்….” என்று சொன்னதும் 

“சரி அப்போ உனக்கு நான் தேவையில்லை.. நான் போறன்னு….” சொல்லிட்டு அவரு போயிட்டாரு.. அம்மாவும் கோபத்தில போறாரு வந்திடுவாருனு காத்திட்டு இருந்திருக்கிறாங்க.. அவரு வரவேயில்லை.. நான் பொறந்ததுக்கு அப்புறம் வந்து பார்த்தாரு.. “பொண்ணாணு…” சொல்லிட்டு போயிட்டாரு.. பிறகு அப்போ அப்போ அவரு வந்திட்டு போவாரு.. ஒருநாள் அவருக்கும் மாமாக்களுக்கும் பயங்கர சண்டை அன்னைக்கு போனவரு போனவருதான்…. 

சின்ன மாமா அவரோட பொண்ணை வெளியூருக்கு அனுப்பி படிக்க வச்சாரு.. பெரிய மாமவோட பையன் ஊர்லதான் அவங்களோட மில் நிலம் அதுகளை பார்த்திட்டு இருந்தான்… 

இப்பிடியே நாள் போனது.. நான் காலேஜ் படிச்சிட்டு இருந்தேன்..  

ஒருநாள் பெரிய மாமவோட பையன் எங்கிட்ட தப்பா நடந்துக்க பார்த்தான்.. இதைப் பார்த்த என்னோட அம்மா அவனுக்கு அடிச்சி மாமாக்கிட்ட சொல்லிட்டாங்க.. அதுக்கு மாமா “வயசு பையன் கொஞ்சம் அப்படி இப்படிதான் இருப்பான்.. அவனுக்கு அவ கட்டிக்கிற முறைதான்….” என்றார்.

அம்மாக்கு கோபம் வந்தது.. “அதுக்காக இப்பிடியா…. இல்லை அண்ணா அது சரிபட்டு வராது.. என் பொண்ணை இவனுக்கு கட்டி வைக்க மாட்டேன்…..” 

“அவனை விட்டா யாரும் உன்னோட பொண்ணை கட்டிக்க மாட்டாங்க….”

“அவ அழகா இருக்கா படிக்கிறா அவளை கல்யாணம் பண்ண நிறைய பேரு வருவாங்க….” 

“நீ கனவுதான் காணணும்.. அவளுக்கு நல்ல சம்பந்தத்தில கல்யாணம் பண்ணி வைக்க அப்பா வேணும்ல…. “

“அவளுக்கு அப்பா இருக்கிறாருதானே……”

“ஆனால் சபைக்கு முன்னாடி அவரு வரமாட்டாரே…..”

“என்ன அண்ணி சொல்றீங்க…..?”

அத்தைங்க கோபத்தில நடந்த எல்லாவற்றையும் சொன்னதும் அம்மா உடைந்து போய்டாங்க.. தன்னை தன்கூட பிறந்தவங்களே இப்பிடி ஏமாற்றினதை அவங்களால தாங்கிக்க முடியலை.. அதுமட்டுமல்ல இன்னொரு பொண்ணுக்கு அவங்க துரோகம் பண்ணிட்டமேனு குற்ற உணர்ச்சி அவங்களை கொன்று… 

எல்லாவற்றையும் யோசித்துப் பார்த்த அம்மா ஒரு முடிவு எடுத்தாங்க…. அதைக் கேட்ட வீட்ல உள்ளவங்க அதிர்ச்சி அடைந்தாங்க… 

வேணியின் முடிவு என்ன????? 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 13

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!