நின் கனல்விழிக் காதலில் கரைந்தேன் : 14

4.9
(14)

காதல் : 14

“சத்யா நீ இந்த பக்கம் வா…. என்னதான் இருந்தாலும் அவங்க பழகி இருக்கிறாங்க…. அதனால இந்தப் பொண்ணோட வாழ்க்கையே இப்போ கேள்விக்குறியாக இருக்கு… இந்தப் பொண்ணை அவனுக்கு கட்டி வைக்கலாம்…..” என்று கூறினார். சௌந்தர பாண்டியன் இப்படி சொன்னதும் சத்தியாவுக்கு தலையே சுற்றியது. எதுவும் பேசாமல் நிமிர்ந்து சக்தியை பார்த்தாள். சக்தி, “நீங்க சொன்னா இவளை நான் கல்யாணம் பண்ணிக்கணும் வேணாம்னா விட்டுட்டு போறதுக்கு நான் தயாராக இல்லை….. நான் சத்தியாவைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்…. உங்களால் என்ன செய்ய முடியும் பண்ணிக்குங்க….” என்றான். 

அப்போ ஜீவிதா, “ஏன் சக்தி இப்படி பேசுற…… உன்னைய நம்பி இருந்த என்னோட வாழ்க்கை அழிச்சிட்டு நீ இவகூட நல்லா இருப்பேன்னு நினைக்கிறாயா….. என்னோட பாவம் உன்ன சும்மா விடாது…..” என்று மேலும் கண்ணீர் வடித்தாள். சக்தி தனது முடிவில் இந்த மாறவில்லை. ஊர் மக்கள் எவ்வளவோ சொன்னார்கள் சத்தியாவை விட்டுவிட்டு அந்த ஜீவிதாவை கல்யாணம் செய்து கொள்ளும்படி. சக்தி எதுவும் பேசவில்லை. தன்னிடமிருந்து பிரிய நினைத்த சத்தியாவின் விரல்களையும் இறுக்கிப்பிடித்து அவளை தன்னிடமிருந்து நகர அனுமதிக்கவில்லை அவன். இறுதியில் நன்றாக யோசித்த முத்துப்பாண்டி ஒரு முடிவுக்கு வந்தார். “அப்பா நான் ஒரு முடிவெடுத்திருக்கிறேன்…. அதை சொல்றேன் சரியோ தப்போ நீங்க சொல்லுங்கப்பா….” என்றார். சௌந்தர பாண்டியனும் என்னவென்று கேட்க, “இவன் நம்ம குடும்ப மானத்தையே வாங்கிட்டான் நம்மளோட குடும்பம் ஒரு பொண்ணோட சாபத்தை வாங்கக் கூடாது…..” என்று அவர் சொல்லும் போது அவரை இழுத்து அறைய வேண்டும் என்ற கோபம் வந்தது சுமதிக்கு.

முத்துப்பாண்டி மேலும் பேசினார். “அதனால பேசாம இந்தப் பொண்ணை என் ரகுவுக்கு கட்டி வைக்கக்கூடாது….. ரகு நீ என்ன சொல்ற….. இந்தப் பொண்ணை கட்டிக்கிறியா….” என்று கேட்டார். உடனே ரகுவும், “அப்பா என்னப்பா சொல்றீங்க…… இந்தப் பொண்ணு பற்றி எனக்கு எதுவும் தெரியாது…. அப்பா முதல்ல அந்த பொண்ணு கிட்ட கேளுங்க…. அந்த பொண்ணுக்கு விருப்பம்னா மத்ததை யோசிக்கிறேன்…. எனக்கு நம்மளோட குடும்ப மானம் தான் முக்கியம்….. நம்மளோட குடும்பமானதுக்காக நான் என்ன வேணாலும் செய்வேன்…..” என்றான் ரகு.  

சகுந்தலாவிற்கும் முத்துப்பாண்டி சொல்வது சரி என்று பட்டது. ஒரு மகன் செய்த தவறினை மற்றைய மகனை வைத்து சரி செய்ய நினைத்தார் அவர். ஆனால் அவர் தன் மகன் இப்படி செய்வானா என்று கொஞ்சம் யோசிக்கவில்லை. ஜீவிதாவிடம் சென்று அவளது கைகளைப் பிடித்துக் கொண்டு, “சக்திதான் அந்த பொண்ணையே கட்டிப்பேன்னு ஒத்தக்கால்ல நிக்கிறான்….. இதுக்கு மேல எங்களுக்கு என்ன செய்றன்னு தெரியலை…. ஆனால் உன்னோட வாழ்க்கையே இவனால் கேள்விக்குறியா இருக்குது….. அதை சரி பண்றதுக்கு எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுமா…. என்னோட பையன் ரகு ஒரு டாக்டர் ரொம்ப நல்லவன்….. உன்னை ரொம்ப நல்லா பார்த்துப்பான்… அதஅதுமட்டுமல்ல நாங்க எல்லோரும் உனக்காக இருக்கிறம்…. உனக்கு ரகுவை கல்யாணம் பண்ணிக்கிறது சம்மதமா….. உன்னை யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க யோசிச்சு சொல்லுமா….” என்ற உடனே ஜீவிதாவும் சிறிது நேரம் எடுத்துக்கொண்டு பின் சரி என்று சொன்னாள். உடனே ரகுவுக்கும் ஜீவிதாவுக்கும் சக்தி சத்தியா மணமேடைக்கு அருகிலே மணமேடை போட்டு திருமணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இருவரும் மங்கலநாணை எடுத்து தமது அருகில் இருக்கும் பெண்களின் கழுத்தில் கட்டினர். 

சத்தியாவின் கண்ணில் இருந்து வந்த ஒருதுளி கண்ணீர் சக்தியின் கைகளில் பட்டது. நிமிர்ந்து தன்னவள் முகத்தைப் பார்த்தவன், தனது பெருவிரலினால் அவளது கண்ணீரை மென்மையாக துடைத்து விட்டான். கல்யாணத்திற்கு வந்த அனைவரும் நன்றாக விருந்து சாப்பிட்டு விட்டு அவர்கள் வீட்டிற்குச் சென்றனர். மண்டபத்தில் சௌந்தரபாண்டியன் குடும்பமும் சரஸ்வதி, ராகுல், சுமதி, வாசு மட்டும் நின்றிருந்தனர். சௌந்தரபாண்டியன் சக்தியைப் பார்த்து, “சக்தி நீ இதுவரை காப்பாத்திட்டு வந்த நம்மளோட குடும்ப மானத்தையே ஊர் முன்னாடி வாங்கிட்ட…. இதுக்கு பிறகு எங்க மூஞ்சிலே நீயும் சரி உன்னோட பொண்டாட்டியும் சரி முழிக்கவே கூடாது….. ஜீவிதா இப்போ எங்க வீட்டு மருமக…. ரகுவோட பொண்டாட்டி… அவ இருக்கிற இந்த ஊர்ல நீ இருந்தா தேவையில்லாத பிரச்சனைதான் வரும்… இந்த வீட்டில நீ பொறந்த பாவத்துக்கு உனக்கு சேரவேண்டிய சொத்தை பிரிச்சி தர்றேன்…. எடுத்தூட்டஎடுத்திட்டு இந்த ஊரை விட்டே போயிடு…” என்றார். 

இதைக் கேட்டவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சக்தியோ,” ரொம்ப சந்தோசம்… நீங்க சொன்னாலும் சொல்லலைனாலும் நான் இங்க இருக்கப் போறதில்லை… உங்களோட சொத்து எனக்கு தேவையும் இல்லை… என்என் பொண்டாட்டியை பார்த்துக்கிற அளவுக்கு எனக்கு வலிமை இருக்கு… ஆனால் ஒண்ணு பல உண்மைகள் தெரியாமலே பேசுறீங்க…. உண்மைஉண்மை நெருப்பு மாதிரி…. அதை எப்பவும் மறைச்சு வைக்கவே முடியாது….” என்றவன் சத்தியாவின் கைகளை பிடித்து அழைத்துச் சென்றான். அவன் பின்னாலேயே சரஸ்வதி, சுமதி, ராகுல், வாசுவும் சென்றனர். எல்லோரும் சக்தியின் தோட்ட வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். 

இங்கே ரகு தனது மனைவியுடன் அவர்கள் வீட்டிற்கு வந்திருந்தான். சகுந்தலா ஆர்த்தி எடுத்து அவர்களை வரவேற்றார். ஜீவிதாவை பூஜை அறையில் விளக்கேற்றச் சொல்ல, அவளும் நல்லவளாக நடந்துகொண்டாள். பின்னர் அனைவரையும் ஓய்வெடுக்க சொல்லிவிட்டு அவரும் அறைக்குள் சென்றார். 

தங்கள் அறைக்கு வந்த ஜீவிதா ரகுவை அணைத்துக் கொண்டாள். பதிலுக்கு ரகுவும் அவளை அணைத்துக் கொண்டாள். “ரகு நான் ரொம்ப ஹாப்பி…. எப்படியோ நாம நினைச்சது நடந்திடுச்சி…..” 

“ஆமா பேபி… எனக்கும் ரொம்ப ஹாப்பியாக இருக்கு…” 

“பேபி நாம ரெண்டு பேரும் போய் சக்தியை பார்த்திட்டு…. அவனை இன்னமும் அவமானப்படுத்திட்டு வரலாம்….”

“சூப்பர் பேபி…. வாவா இப்பவே போகலாம்…… மண்டபத்தில ஆளுங்க இருந்ததனால் என்னாலேயும் எதுவும் பேச முடியவில்லை…. போகலாமா…?” என்றவன் அவளையும் அழைத்துக் கொண்டு சக்தியின் தோட்ட வீட்டிற்கு சென்றான். 

சரஸ்வதி அவர்கள் வீட்டிற்குச் செல்லாமல் சக்தியின் தோட்ட வீட்டிற்கே வந்திருந்தார். எல்லோரும் ஒவ்வொரு திசையில் மௌனமாக நின்றிருந்தனர். வாசுதான் அங்கே நிலவிய மௌனத்தை கலைத்தான். அவன் சொன்னதைக் கேட்ட சக்திக்கு அடுத்து தான் செய்ய வேண்டியது என்ன என்று புரிந்தது.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 14

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!