நின் கனல்விழிக் காதலில் கரைந்தேன் : 03

4.9
(10)

காதல் :03

கோபத்துடன் வீட்டிற்கு வந்த முத்துபாண்டி சகுந்தலாவை அழைத்தார். 

“என்னங்க…..?”

“என்ன என்னங்க…. இங்க என்ன நடக்குது என்று உனக்குத் தெரியுமா….?” 

“எதுக்கு இப்பிடி கோவமா பேசுறீங்க….?” 

“கோவப்படாம என்ன செய்ற….?” 

“கடவுளே, முதல்ல என்ன நடந்தது என்று சொல்லுங்க….. ” 

“சொல்றேன்… உன்னோட ரெண்டு காதும் குளிர நல்லாக் கேட்டுக்க.. உன்னோட அருமை மூத்த மகன் நம்மளோட வீட்டில வேலை செய்ற சரஸ்வதியோட மகள் சத்தியாவை கெடுக்கப் பார்த்தான்….. அப்போ அந்தப்பக்கம் போன ரகு அவனை அடிச்சி அந்த பொண்ணைப் காப்பாத்தியிருக்கிறான்…..” 

“என்ன சொல்றீங்க…… சக்தி அப்பிடி பண்ணியிருக்க மாட்டானுங்க….. யாரோ உங்களிட்ட தப்பா சொல்லிருக்காங்க…..”

“யாரும் சொல்லலை…. நான் என்னோட கண்ணால பார்த்தன்…..”

“எ… என்ன….. நீ… ங்…. க… பார்…த்தீங்களா…..?”

“ஆமா, என் கண்ணால பார்த்தேன்….”

“என்னங்க எனக்கு சக்தி அப்பிடி பண்ணியிருக்க மாட்டான் என்று மனசு சொல்லுதுங்க……”

“அப்போ நான் பார்த்தது என்ன….? இங்க பாரு நீ நம்பு….. நம்பாமல் போ ஆனால் நான் ஒரு முடிவு எடுத்திருக்கேன்….”

“என்னங்க முடிவு…. எதுக்கும் அவசரப்படாம விசாரிச்சி முடிவு எடுங்க…..”

“நான் முடிவு எடுத்தாச்சு.. வர்ற வெள்ளிக்கிழமை உன்னோட மூத்த மகனுக்கும் அந்த சத்தியாவுக்கும் கல்யாணம்…. “

“முடியாதுங்க……. என்ன சொல்றீங்க நீங்க……”

“நீதானே சொன்ன என்னோட பிள்ளைக்கு கல்யாணம் செஞ்சி வைங்க திருந்திருவான் என்று…..”

“அதுக்காக படிக்காத அந்த பிள்ளையையா…..?” 

“அடியே இப்ப விவசாயம் செய்றவங்களை யாரு கல்யாணம் செய்ய வருவாங்க….. அதோட இவரு நல்லா குடிக்கிறாரு பிறகு எப்பிடி…. இந்த விசயத்தை வச்சே பேசாம கல்யாணம் செஞ்சி வச்சிருவோம்….”

“சக்தியும் அந்த பிள்ளையும் ஒத்துப்பாங்களா……?”

“நீ சொன்னா அவன் கேட்பான்… அந்த பிள்ளைய சரஸ்வதியை வச்சி சம்மதிக்க வச்சிருவோம்……”

“சரிங்க…… மாமா என்ன சொல்லுவாருனு தெரியாதே…..”

“அப்பாட்ட நான் பேசுறேன்….”

“என்னவோ செய்ங்க…..”

“என்னடா அது சத்தம்…..?” என்றபடி வந்தார் சௌந்தர பாண்டி.

“அப்பா நம்ம மானமே போய்ட்டு… மூத்தவரு என்ன செஞ்சாருனு தெரியுமா….?” என்ற முத்துப்பாண்டி நடந்ததைக் கூற அவருக்கு கோபம் வந்தது.. 

“அவனை நீ வெட்டிப்போட்டு வரலையா நீ……?” 

“இல்லை அப்பா.. நான் கோபத்தில வந்திட்டேன்……” 

“இப்ப என்ன செய்யப் போறதா இருக்கிற…..?” 

“பேசாம அந்த சத்தியாவுக்கு கல்யாணம் செஞ்சி வச்சிருவம்…” என்றார். 

“அதுவும் சரிதான்…..”

“இங்க பாரு மருமகளே உன்னோட மகனுட்ட சொல்லு…. பிரச்சனை பண்ணாம அந்த பிள்ளையை கல்யாணம் பண்ணச் சொல்லி….” 

“சரிங்க…..”

“முத்து அந்த சரஸ்வதியை கூப்பிடு….” 

“சரிப்பா சரஸ்வதி… இங்க வா….”

“வர்றன் ஐயா…” என்றபடி சமையலறையில் இருந்து வந்தார் சரஸ்வதி.. 

“என்ன ஐயா…..?”

“இங்க பாரு உன்னோட பிள்ளைக்கும் மூத்தவருக்கும் வெள்ளிக்கிழமை கல்யாணம்.. சத்தியாவிடம் தயாராக சொல்லு…….”

“என்ன ஐயா இப்பிடி திடீர் என்று சொல்றீங்க…. என்னோட பிள்ளைக்கு போய் சக்தி ஐயாவை…. எதுக்கு ஐயா…..?”

“எதுக்காகவா….?” என்றவர் நடந்ததைக் கூறினார்.. இதைக் கேட்ட சரஸ்வதிக்கு என்ன சொல்லுவதென்று தெரியவில்லை… 

“இல்லை ஐயா சக்தி ஐயா அப்பிடி செஞ்சிருக்கமாட்டாரு…..”

“அப்போ நான் பொய் சொல்றேனா….?”

“இல்லை ஐயா…..”

“எதுவும் பேசாத வெள்ளிக்கிழமை கல்யாணம்…. உன் பொண்ணை தயாராகச் சொல்லு.. நீ இப்ப உன்னோட வீட்டுக்கு போகலாம்…..” 

பாவம் சரஸ்வதி என்ன செய்வார் சரி என்று தலையாட்டி விட்டு வீட்டிற்குச் சென்றுவிட்டார்..

“சத்தியா…. சத்தியா…..” 

“என்ன அம்மா….”

“அடியே என்னடி நடந்திச்சி? அங்க வீட்ல என்னவோ சொல்றாங்க…..”

“அம்மா சின்னையா எங்கிட்ட தப்பா நடந்துக்கப் பார்த்தாரு… அப்போ பெரியையா வந்து காப்பாத்திட்டாரு.. ஆனால் முதலாளி ஐயா அதை தப்பா புரிஞ்சிக்கிட்டு பெரியையாவ திட்டிட்டு போனாருமா…. நான் சொன்னதைக் கூட கேட்கவே இல்லை…..”

“கடவுளே… சக்தி ஐயாவுக்கு ஏன் இப்படி நடக்குதோ தெரியாது…..”

“என்னம்மா சொல்ற…..?”

“சத்தியா உனக்கும் சக்தி ஐயாவுக்கும் வெள்ளிக்கிழமை கல்யாணம் பண்ணணும்னு சொல்றாருமா…..”

“என்ன அம்மா சொல்றீங்க….? பெரியையாவுக்கும் எனக்கும் கல்யாணமா…..? அவரு எங்க நாம எங்க அம்மா….? செய்யாத தப்புக்கு அவருக்கு எதுக்கும்மா இந்த தண்டனை……?”

“எனக்கும் என்ன செய்றதுனு தெரியல்லை சத்தியா… முதலாளி ஐயாவை மீறி நம்ம செய்ய முடியும் சத்தியா….?”

“அதுக்காக அவரோட வாழ்க்கையில நான் எப்பிடி அம்மா….?”

“பார்ப்போம்மா… எல்லாம் அந்த கடவுள் விட்ட வழி…..”

“ம்.. அம்மா நான் வேணும்னா பெரியையாகிட்டப் பேசிப் பார்க்கட்டும்……?”

“என்னனு பேசுவ அவரு நம்ம மேல கோவமா இருந்தா என்னம்மா செய்றது…..?”

“அம்மா நான் ஒரு தடவைப் பேசிப் பார்க்கிறேன்…..”

“சரி சத்தியா……”

“ஐயா….. ஐயா……” என்றபடி வந்தான் கந்தன்… 

“என்ன கந்தா எதுக்கு இப்பிடி ஓடி வர்ற…..?”

“ஐயா உங்களை அம்மா கையோட கூட்டிட்டு வரச் சொன்னாங்க…..”

“அம்மாவா…. எதுக்கு வரச் சொன்னாங்க….?”

“தெரியாது ஐயா… கூட்டிட்டு வரச் சொன்னாங்க…..”

“சரி வா…..” 

“அம்மா….”

“வா சக்தி……”

“என்னம்மா எதுக்கு அவசரமா வரச்சொன்னீங்க……?” 

“அதுவந்து… முதல்ல சாப்பிடு சக்தி அப்புறம் சொல்றேன்……”

“இல்லை அம்மா.. நிறைய வேலை இருக்கு நான் போகணும் சொல்லுங்க…..”

“ஆமா… ஆமா… பெரிய கலெக்டர் உத்தியோகம் பார்க்கிறாரு சீக்கிரமா சொல்லு…..” என்றார் முத்து. 

“அம்மா என்னோட வேலை எனக்கு பெரிசுதான்…நீங்க இப்போ சொல்ல வந்ததை சொல்லுங்க.. இல்லைனா நான் போறேன்…. “

“சீக்கிரம் சொல்லுடி இல்லைனா துரைக்கு கோவம் வந்திரும்….”

“கொஞ்சம் இருங்க நான் சொல்றேன்.. சக்தி உனக்கு கல்யாணம் பண்ணலாம்னு உங்க அப்பா முடிவெடுத்திருக்கிறாரு….” 

“எனக்கு எதுக்கு கல்யாணம்.. நான் இவங்ககிட்ட எனக்கு கல்யாணம் பண்ணி வைங்கனு கேட்டேன்…..?”

“அது இல்லப்பா….” 

“எனக்கு கல்யாணம் வேண்டாம் அம்மா…..”

“ஓ… கல்யாணம் வேணாம்.. ஆனால் பொண்ணு கேட்குதோ…..”

“இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசினா.. மரியாதை கெட்டிடும்….”

“ஏற்கனவே மரியாதை கெட்டதாலதான் இவருக்கும் இவரு தப்பு பண்ண நினைச்ச அந்த வேலைக்காரியோட பொண்ணுக்கும் கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு முடிவெடுத்திருக்கு… ஒழுங்கா அவ கழுத்தில தாலியை கட்டச் சொல்லு….”

“அப்போ எல்லோரும் நான் தப்பு பண்ணிருப்பன்னு நினைக்கிறீங்க.. அப்படித்தானே……” 

“……….”

“சக்தி நீ அந்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்கலனா நான் உயிரோடவே இருக்க மாட்டேன்….. இப்போ முடிவெடுக்க வேண்டியது நீதான்….”

“நீங்க கூட என்னை நம்பவில்லை தானே.. ரொம்ப சந்தோசம்… என்னோட மனசு நிறைஞ்சு போயிட்டு….. நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்….. ஆனால்… “

“ஆனால் என்ன சக்தி…..?” 

“இனிமேல் நீங்க என்கூட பேசவே கூடாது….. இந்த வீட்டுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. நான் இங்க வரவே மாட்டேன்… கல்யாணத்துக்கு கோயிலுக்கே வந்திர்றேன்…. “

“என்ன சக்தி இப்பிடி சொல்ற……?”

“என்னை நம்பாத உங்ககூட நான் பேசவோ இருக்கோ தயாரா இல்லை…..” என்றவன் வெளியே சென்றுவிட்டான். 

“பாருங்க…. சக்தி என்ன சொல்லிட்டு போறான்னு…..”

“அதை விடு… முதல்ல கல்யாண வேலைய பார்க்கலாம்……” 

“ம்…” 

இங்கே கோபத்துடன் தோட்டத்துக்கு வந்த சக்தி.. அங்கிருந்த கட்டிலில் இருந்தான். அப்போது அவன் அருகே ஒரு மெல்லிய கொலுசு சத்தம் கேட்டது.. திரும்பிப் பார்த்தான்.. அங்கே கலைந்த கூந்தலுடன்… ஓடிவந்ததால் மூச்சு வாங்கியபடி தனது புடவை முந்தானையை திருகியபடி நின்றிருந்தாள் சத்தியரூபா… 

இவன் எதுவும் பேசாது அவளைப் பார்த்தான். அவள் “பெரியையா….” என்றாள். 

“என்ன……” 

“ஐயா இந்தக் கல்யாணத்தை நிறுத்திடுங்க….” 

“ஏன்…..?” ஒற்றை வார்த்தையில் கேட்டான் அவளிடம்.

“ஐயா உங்களுக்கு நான் பொருத்தமானவை இல்லை…. நீங்க வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்குங்க ஐயா….” 

“ஏன் அப்பிடி சொல்ற…..?” 

“இல்லை ஐயா… நீங்க ரொம்ப படிச்சிருக்கிறீங்க.. நான் எதுவும் படிக்கலை… நீங்க அழகா இருக்கிறீங்க.. நான் அழகா இல்லை… அதுமட்டுமல்ல நீங்க செய்யாத தப்புக்கு எதுக்கு கல்யாணம் பண்ணணும்…..?”

“நீ வேற யாரையாவது விரும்புறியா….?”

“ஐயோ… இல்லை பெரியையா…. அம்மா வெளக்குமாத்தாலே அடி பொழந்திரும்….”

“அப்பிடியா…..?” என்ற சக்தி கூறியதைக் கேட்ட சத்தியா அதிர்ச்சி அடைந்தாள்… 

சத்தியா அதிர்ச்சியடையக் காரணம் என்ன???? 

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 10

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!